BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

10 செக்ஸ் உண்மைகள்...


1) 19ம் நூற்றாண்டில் வைப்ரேட்டர்கள் பெண்களின் ஹிஸ்டிரியா நோயை குறைக்க மருத்துவரீதியாக பயன்படுத்தப்பட்டது

2) ஆணின் விந்துவில் துத்தநாகமும் கால்ஷியமும் உள்ளது, இரண்டுமே பற்சிதைவை தடுப்பவை

3) ஆண் குறி சாதாரண நிலையில் சராசரியாக 3 அங்குலமும் விறைப்படைந்த நிலையில் 5 அங்குலமும் தான் இருக்கும், அதனால் நீலப்படங்களை பார்த்து ஏங்கவோ, ஏமாறவோ வேண்டாம்
 
4) செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்படுத்தி பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக், டிவிட்டர் பார்த்துக்கொண்டு பிரவுசிங் செய்கிறார்களாம், ஆனால் 1 சதவீத ஆண் கூட செக்ஸின் போது வேறு வேலை செய்வதில்லையாம்.

5) செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் அவர்கள் செக்ஸ் வாழ்வில் பெரும்பாலும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்

6) 30 நிமிடம் ஆக்டிவாக செக்ஸ் உறவு கொள்வது 200 கலோரிகளை எரிக்கும், இது ஒரு மணி நேரம் ஜிம்மில் வெயிட் அடிப்பதற்கும், ஒரு மணி நேரம் அறையில் பெயிண்ட் அடிப்பதற்கும் சமம்.

7) ஆண்களின் உச்சகட்டம் 6 செகண்டுகளும், பெண்களின் உச்சகட்டம் 20 செகண்டுகளும் நீடிக்கும்

8) ஆண்களை விட பெண்கள் 17% அதிகமாக செக்ஸ் உறவு கொள்கிறார்கள்

9) ஆரோக்கியமான ஆண் உச்சகட்டத்தில் வெளியிடும் விந்து அளவு ஒரு டீஸ்பூன், அதில் 300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன, அதில் ஒன்றே ஒன்று தான் பெண் கருமுட்டையை அடைந்து கர்ப்பமாகிறது.

10) ஆண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறதாம், பெண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது கூடிக்கொண்டே வருகிறதாம். பெண்கள் உஷாராகிக்கொண்டுள்ளார்கள்.

தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் மற்றும் திருமாவளவனுக்கு தருமபுரியில் நுழைய தடை


ஜூலை 4ம் தேதி தருமபுரி இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகின்றது, அன்று மாற்று சமுதாய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் போட்டதாகவும் துப்பாக்கி, வெடிகுண்டு உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக நத்தம் காலனியை சேர்ந்த 7 பேரை போலிசார் கைது செய்தனர், இதனால் மேலும் பரபரப்பு கூடியது, இதையடுத்து தருமபுரியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்காரர்கள் தருமபுரியில் கூட்டம் போடுவதை தடுக்கும் முயற்சியில் போலிஸ் உள்ளது, தடையை மீறி தான் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த போவதாக திருமாவளவன் கூறியுள்ளார், அதே ஜூலை 4 அன்று தனக்கு வெற்றியளித்த தருமபுரி மக்களுக்கு நன்றி செலுத்தவும் மேலும் சில திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தருமபுரி எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அனுமதி கோரியிருந்தார், ஆனால் போலிசார் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.

கால்பந்து போட்டி பார்த்து டிவியை உடைத்த ரசிகர் : வீடியோ காட்டு தீ யாக பரவுகிறது !!

பிரேசில் சிலி அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்த ரசிகர் உண்ர்ச்சிவசப்பட்டு டிவியை உடைத்து விட்டார். இவர் பிரேசில் ரசிகர் ஆவார். தனது உறவினர்களுடன் இந்த போட்டியை பிளாட் டிவியில் பார்த்து வந்தார். ஆட்டம் பெனால்டி ஷொட் அவுட் முறைக்கு சென்றதால் பரபரப்படைந்தார். பிரேசில் அணியின் கீப்பர் 2 பந்துகளை தடுத்த போது டிவி அருகில் சென்று அவரை முத்தமிட்டார். பின்னர் சிலி அணி வீரர் சான்சஸை காண்பித்தவுடன் கோபமாகி விட்டார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு டிவியை உடைத்து விட்டார்.



இந்த வீடியோ தான் இப்போது பேஸ்புக் யூடியுபில் பரவி வருகிறது. பேஸ்புக்கில் இதனை 34 முறையும், யூடியுபில் 36 ஆயிரம் முறையும் இதனை பார்த்து உள்ளார்கள்.



இது குறித்து அந்த வாலிபரிடம் கேட்ட போது, அவர் டிவி உடைந்தது பற்றி கவலைபட வில்லையாம். ஆனால் பிரேசிலின் அடுத்த ஆட்டங்களை பார்ப்பதற்கு டிவி தேடி அழைய வேண்டும் என்று கூலாக சொல்கிறார்.

அமைச்சருக்கு குட்டை பாவாடை அனுப்புகிறது காங்கிரஸ் !!

கோவாவில் அமைச்சராக இருப்பவர் சுதின் தவலிகர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்தார் அதில் , கோவாவில் உள்ள பெண்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு வெளியே செல்வதை தவிர்க்கவும் .இது நமது கலாசாரத்திற்கு ஒத்து வராது என்று கூறி இருந்தார். இந்த கருத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் , இதில் எப்படி ஒரு அமைச்சர் தலையிடுவது என கேட்க தொடங்கினார்கள்.



காங்கிரஸ் வழக்கம் போல் புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்துக்கொண்டு, அந்த அமைச்சருக்கு குட்டை பாவாடையை அனுப்ப முடிவு செய்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இதன் மூலம் குட்டை பாவாடை கலாசாராத்தை பாதிக்காது என கூற விரும்புகிறார்களாம்.

இப்போது நமது நாட்டில் சில புத்தி கெட்டவர்கள் ,தவறான மனதுடன் பெண்களை பார்க்கிறார்கள் என்பதால் உடையில் சிறிது கட்டுபாட்கள் இருப்பதில் தவறு இல்லை.

தல அஜித் பேஸ்புக் வந்தார் ,ரசிகர்கள் கொண்டாட்டம் !!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை வைத்து இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைப்பார்கள். நிஜ வாழ்க்கையிலும் ஒருவன் ஹீரோ என்றால் அது தல தான். தான் என்று சுயநலத்துடன் இருக்காமல் தன் ரசிகர்களின் வாழ்க்கையையும் எண்ணி பார்ப்பவர் அஜித். இவர் இப்போது பேஸ்புக் வந்து உள்ளது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆகும். அவரது பக்கத்திற்கு இன்று தான் வெரிஃபைடு கொடுத்தார்கள். அந்த பக்கத்தின் முகவரி https://www.facebook.com/actorajithfans.



விஜய் ஏற்கனவே பேஸ்புக்கில் உள்ளதால்  இனி இங்கும் தல தளபதி போட்டிகள் இருக்கும். எல்லா நடிகர்களும் சமூக வலைதளங்களை தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவதற்க்கு பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
தலயும் தளபதியும் இனி பேஸ்புக்கில் மாஸு தான்.

சிக்கன் 65 யை கண்டுபிடித்தது யாரு ??

நாம் அனைவருக்கும் சிக்கனில் மிகவும் பிடித்த உணவு சிக்கன் 65 ஆகும் . இதனை கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா. இதனை கண்டுபிடித்தவர் புஹாரி ஹோட்டல் உரிமையாளரான ஏ.எம்.புஹாரி ஆகும். அவர் இதனை 1965 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். புஹாரி ஹோட்டல் என்றாலே நம் நினைவிற்கு வருவது அசைவ உணவு தான். இது 1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டது. இது மிகவும் பிரபலமானது, அதனை தொடர்ந்து சிக்கன் 78 ,82,90 என அறிமுகபடுத்தினார்கள் . ஆனால் அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.



அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியில் கூட சிக்கன் 65 யை அறிமுகபடுத்தியவர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

பாஜகவை உளவு பார்த்த அமெரிக்கா , உண்மை வெளிவருகிறது !!

நமது நாட்டில் ஆட்சியை பிடித்து அரசாங்கத்தை நடத்தி வரும் பாஜக வை அமெரிக்காவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்தாக தகவல்கள் வந்து உள்ளது. அவர்கள் பாஜகவை 2010 ஆம் ஆண்டு முதல் உளவு பார்த்து வருகிறார்கள் என்னும் அதிர்ச்சிகுள்ளான தகவலை வெளியிட்டது அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையான வாஷிங்க்டன் போஸ்ட் ஆகும்.இதனை அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடன் கூறியதாக இருக்கிறது. நம் நாட்டை போலவே மேலும் சில நாடுகளில் உள்ள சில முக்கிய கட்சிகளை உளவு பார்த்து உள்ளார்கள். இதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறுகிறார்கள். பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உளவு பார்க்காமல் இருக்க அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளார்களாம்.



இது அமெரிக்காவின் கேவலமான செயல் ஆகும். நம்மை உளவு பார்க்க அவன் யார், தட்டி கேட்க வேண்டிய ஐ.நா என்ன செய்கிறது என்று தெரியவில்லை. போகிற போக்கில் நாம் எல்லாரும் அமெரிக்காவிற்கு அடிமை ஆகிவிடுவோம் போல.

மோடி குற்றவாளி தான் : நீதிமன்றம் தீர்ப்பு !!

குஜராத் மாநிலத்தில் 2012 இல் நடைபெற்ற தேர்தலின் போது மோடி வேட்பு மனு செய்யும் போது மனைவி என்னும் இடத்தை நிரப்ப வில்லை. ஆனால் 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தனது மனைவியின் பெயரை குறிப்பிட்டார். அவரின் பெயர் யசோதா பெண் ஆகும். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் என்று ஆம் ஆத்மி குஜராத் மாநில தலைவர்களில் ஒருவரான நிஷாந்த் ஷர்மா வழக்கு பதிவு செய்து இருந்தார்.



இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மோடி செய்தது சட்டப்படி குற்றம் தான் .ஆனால் இந்த புகாரை அந்த செயல் நடந்து 1 ஆண்டுகளுக்குள் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அவர் வழக்கு பதிவு செய்தது 1 ஆண்டு 4 மாதங்கள் கழித்து ஆகும் . எனவே இந்த புகாரை எடுத்து கொள்ள முடியாது அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பார்க்காதே படிக்காதே பேசாதே : தேமுதிக வினருக்கு விஜயகாந்த் அதிரடி கட்டளை !!

தேமுதிக நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட 14 தொகுதிகளிளும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்பது தான். எனவே அவர் தனது ரசிகர்களை சந்திக்கும் முடிவில் இறங்கினார். முதல் கட்டமாக ஒவ்வொரு ஊராக சென்று அங்கு உள்ள தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைபடம் எடுத்து வருகிறார்.



அதில் அவர் தேமுதிக தொண்டர்களுக்கு இன்று அதிரடி உத்தரவை பிறபித்து உள்ளார். அதாவது கேப்டன் டிவி தவிர அனைத்து தொலைகாட்சிகளும் தவறான செய்திகளை ஒளிபரப்புகின்றன ,அதனால் மற்ற தொலைகாட்சிகளை பார்க்காதே . அனைத்து பத்திரிக்கைகளும் தேமுதிக வுக்கு எதிராக உள்ளார்கள் ,அதனால் எந்த செய்தியையும் படிக்காதே. மற்ற கட்சிகளை பற்றி பேசாதே. நம் எண்ணம் எல்லாம் 2016 தேர்தலை நோக்கி தான் இருக்க வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிசை வென்று சாம்பியன் ஆன சாய்னா நேவால்


ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில்  சாய்னா நேவால் ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் மோதினார், ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சாய்னா நேவால் அதிரடியாக ஆடி 21-18, 21-11 என்ற புள்ளிகணக்கில் வென்றார்.

இந்த சீசனில் சாய்னா வென்றுள்ள‌ இரண்டாவது பட்டம் இது, இதன் மூலம் $7,50,000 பரிசை வென்றுள்ளார்.

ஊழல் நிறைந்து நோஞ்சானாக இருக்கும் இந்திய விளையாட்டுத்துறையில் சொந்த முயற்சியில் இவ்வாறாக ஏதோ ஒரு சிலர் தான் வெற்றிபெறுகின்றனர்.

சாய்னாவுக்கு ஒரு லைக் போட்டு வாழ்த்துவோம்

கட்டிட விபத்து, பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு !!

சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை அன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இன்று நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஒரு பெண் உள்பட 6 உடல்கள் கண்டு எடுக்க பட்டு உள்ளது. மழை காரணமாக மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு உள்ளது.

மோடியின் 56 இன்ச் மார்பு சுருங்கி விட்டதா ?? - காங்கிரஸ் கிண்டல் !!!



மோடி ஒருமுறை பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தனக்கு 56 இன்ச் மார்பு இருக்கிறது , அதனால் சிறந்த ஆளுமையை வெளிபடுத்த முடியும் என குறிப்பிட்டடிருந்தார் .

இதனை இப்போது காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது . சீனா இந்தியாவின் ஒரு பகுதியை தன் பகுதி என் குறிப்பிட்டு ஒரு வரைபடத்தை வெளியிட்டு இருந்தது . இதனை எதிர்த்து பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடாததால் காங்கிரஸ் தலைவர் , ஷகில் அஹமது கூறுகையில் , " சீனாவின் தாக்குதலினாலும் , பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டினாலும் , மக்கள் 56 இஞ்ச் மார்பு கொண்ட அண்ணனை தேட ஆரம்பித்துள்ளனர் . இந்த பிரச்சனைகளுக்கு டிவிட்டரிலாவது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இப்போது நான் கேட்கிறேன் அவரின் 56 இஞ்ச் மார்பு சுருங்கி விட்டதா ?? என்றார் .

டிவிட்டருக்கு வரும் முதல் ஜனாதிபதி : பிரணாப் முகர்ஜி !!


நமது நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டிவிட்டர் இணையதளத்தில் இணைய உள்ளார். டிவிட்டருக்கு வரும் முதல் இந்திய ஜனாதிபதி இவர் தான். இவர் ஏற்கனவே பேஸ்புக்கில் உள்ளார் ,அந்த பக்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இன்று காலை டிவிட்டரில் இணைய உள்ளார்.



நமது நாட்டின் தலைவர்கள் அதிகம் சமூக வலைதளத்திற்கு வருவது வரவேற்கவேண்டிய செயலாகும். இதன் மூலம் நாம் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளலாம். "அம்மா" எப்போது டிவிட்டருக்கு வருவாரோ என்று தமிழர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் .அவ்வாறு வந்துவிட்டால் அம்மா மலிவு விலையில் அம்மா இன்டர்நெட் என்று ஒன்று தொடங்கி விடுவார்.

பெட்ரோல் , டீசல் விலை உயர்வு : மக்கள் கவலை !!


பெட்ரோல் டீசல் விலை உயர்வு  நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை ரூ.1.69 ம் ,டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதனுடன் உள்ளுர் வரி,வாட் வரிக்கு ஏற்ப விலை உயர்வில் மாற்றம் இருக்கும்.



பெட்ரோல் டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி இன்னும் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்க போகும் முதல் திருநங்கை !!


தமிழகத்திலேயே இன்ஜினியரிங் படிப்பிற்கு சீட் கிடைத்த முதல் திருநங்கை என்னும் பெருமையை பெற்று உள்ளார் திருநங்கை கிரேஸ் பானு. இவர் பிளஸ் 2 படிக்கும் போது தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டார். இப்போது கண்ணி அறிவியலில் டிப்ளமோ படித்து உள்ளார். அழகப்பா செட்டியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைகழக இடங்களை பெறுவதற்கான கவுன்சிலிங்கில் அவர், அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி என்னும் தனியார் கல்லூரியில் மின்னணு பொறியியல் (EEE) படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.



தனக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இவர் டிப்ளமோ படிப்பில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்.
ஜாதியை வைத்து இட ஒதுக்கீடு தருவதை விட இவர்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை ஒதுக்குவது என்பது தவறான செயல் ஆகும்.

பிரான்சிடம் ரூ.8,200 கோடி கடன் வாங்க உள்ளது இந்தியா !!


வெளிநாட்டு சுற்றுப் பயணமாக பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் பேபியஸ் இந்தியா வந்துள்ளார் . அப்போது அவர் இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு பில்லியன் யுரோக்கள் ( ரூ.8,200 கோடி ) கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார் .

பருவநிலையில் அதிக மாற்ற்ங்கள் ஏற்படுவதால் அந்த மாற்றத்தை தடுத்து கட்டுப்படுத்தவும் , இந்தியாவின்  ஊரக மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த கடனை வழங்குவதாக தெரிவித்தார் .

மேலும் இந்த பருவநிலை மாற்றம் விவகாரத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார் .

கருகலைப்பிற்கு 90 ஆண்டுகள் கழித்து அனுமதி கொடுத்தது பெரு நாடு !!



கடந்த 90 ஆண்டுகளாக கருவை கலைப்பதை ஒரு குற்றமாக பெரு நாட்டில் கருதி வந்தனர் .

ஆனால் இப்போது 90 ஆண்டுகள் கழித்து கரு கலைப்பதற்கு பெரு அரசு அனுமதி அளித்துள்ளது . அந்த அனுமதிக்கும் சில விதிமுறைகள் உண்டு . அதிகபட்சமாக 22 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க மட்டுமே அனுமதி உண்டு . அதுவும் தாயின் உடல் நலன் தாயின் உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தாலே கருவை கலைக்க அந்த சட்டத்தில் அனுமதி உண்டு .

லத்தீன் அமெரிக்க நாடுகளில் சில நாடுகள் க்யுபா , கயனா , உருகுவே போன்ற நாடுகளை தவிர அனைத்து நாடுகளிலும் கரு கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது .

தனி நாட்டை உடுவாக்கியது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு !!



ஈராக் மற்றுல் சீரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இஸ்லாமிய போராளிகள் அமைப்பு . ஈராக்கில் உள்ள பலுஜா , மொகல் உள்ளீட்ட பத்து பகுதிகளை சேர்த்து , மேலும் சிரியாவில் உள்ள சில பகுதிகளை சேர்த்து , தனி இஸ்லாமிய நாடு என்று அறிவித்துள்ளனர் . 

கடந்த 2002 முதல் ஈராக்கில் உள்நாட்டு கலவர்ங்கள் நடைபெற்று வருகின்றனர் . சதாம் உசேனின் ஆதரவாளர்களான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பல வெளிநாட்டு அமைப்பிகளின் உதவி பெற்று வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் . 

உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சன்னி முஸ்லிம்களின் ஆட்சியைக் கொண்டு வருவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது . ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர அல்பாக்தாதி கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவராக இருப்பார் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு முகமது அல் அதனானி கூறினார் 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media