Tuesday, 20 August 2013
வாரிசுக்கு வேலை கட்டாயமில்லை
ராஸ்தான் மாநில வங்கியொன்றில் பணி புரிந்த ஊழியர் ஒருவர் உடல்நல குறைபாட்டால் மரணமடைந்தார், அவரது மகன் சக்கரவர்த்தி சிங் அந்த வங்கிக்கு கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என கடிதம் எழுதினார், அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.
இதை தொடர்ந்து சக்கரவர்த்தி சிங் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ராஜஸ்தான் நீதிமன்றம் சக்கரவர்த்தி சிங்கிற்கு வேலை வழங்குமாறு தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த நீதிமன்றம் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியில் இருக்கும் போது இறந்தவர் குடும்ப பிண்ணணி அறிந்தே வேலை கொடுப்பதா வேண்டாமா என தீர்மானிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு எனவும், பணிக்கு தேர்தெடுக்கப்படும் வாரிசிற்கு போதிய கல்வி தகுதி இல்லையென்றால் அவரது மனுவை நிராகரிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டென்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
# வாரிசுக்கு பதவி அரசியலில் மட்டும் தான் போல

அடப்பாவிகளா, மசுரை கூட விடமாட்டிங்களா?
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது வேண்டுதல்களில் முக்கியமான ஒன்று. பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படும் முடிகாணிக்கைகள் அருகில் இருக்கும் குடோனில் பாதுகாக்கப்பட்டு வருடம் ஒருமுறை ஏலம் விடப்படும்.
இந்த முடி கருப்பு சாயம் தயாரிக்க மற்றும் பல வண்ண கலவைகள் செய்ய பயன்படுவதால் பலர் இதை ஏலம் எடுத்து செல்வார்கள், இந்த வருடம் ஏலம் விடுவதற்கு முன்னாள் குடோனை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் பத்து லட்சம் மதிப்புள்ள முடி காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதை தொடர்ந்து கோவில் பணியாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்புரமணி. லட்சுமணன் மற்றும் ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்!
இன்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ஜ் பகுதியில் இந்திய ராணிவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நடப்பு ஆண்டில் மட்டும் 82 முறைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து மக்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தாலும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் மத்திய அரசு முன்னெடுத்து செல்வதாக தெரியவில்லை.
பாகிஸ்தான் அரசோ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து இரண்டு தீவிரவாதிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது, இது பாகிஸ்தான் அரசு சுயமாக மக்கள் நலனை குறித்து எந்த முடிவும் எடுப்பதில்லை என்றே காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பாகிஸ்தான் அரசு, அவர்கள் தூண்டுதலின் பேரிலே இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை ஊக்குவித்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போலவே தோன்றுகிறது.
இன்னும் மத்திய அரசு மெளனம் காத்தால் இந்தியாவின் பெரும் பகுதியை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
ஆசிட் வீச்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
காரைக்காலை சேர்ந்த விநோதினி என்ற சாஃப்ட்வேர் இஞ்சினியர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், அவரை ஒருதலையாக காதலித்து சுரேஷ் என்ற கட்டிடதொழிலாளி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார், அவரது காதலை ஏற்க மறுத்த விநோதினி மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சுரேஷ் ஆசிட் ஊற்றினார்
பலத்த காயமடைந்த விநோதினி மதுரை மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சிகிச்ச பலனின்றி இறந்தார்
சுரேஷின் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது, இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி சுரேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஒரு லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார், மேலும் ஆசிட் விற்பனையில் அரசு சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மரணதண்டனையை நிறுத்திய பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் கடந்த 2004 ஆம் ஆண்டு லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காசிம் மற்றும் முகமது ஆசாம் என்ற இருவரும் சேர்ந்து டாக்டர் ஒருவரை கொடூரமாக கொன்றனர். அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது பாகிஸ்தான் அரசு.
இவர்கள் மேல் பல்வேறு கொலை மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதை அறிந்து நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது, இவர்களது தண்டனை அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில் இன்று அவர்களது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிஃபிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவர்களது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நவாஸ் செரிஃப் அந்த அமைப்புகள் யாரென்று குறிப்பிடவில்லை.
# தமிழகத்திலும் மூவர் தூக்குக்கு ஒரு முடிவு வர வேண்டும்.

Subscribe to:
Posts
(
Atom
)