2009 ஆம் ஆண்டு ஈழ போரின் பொழுது 1,80,000 தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசாங்கம், 1948- ல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இனப்படுகொலை நாடான இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று 8 கோடி தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக சட்டமன்ற தீர்மானத்தை அமல்படுத்தாத இந்திய அரசாங்கத்தினை கண்டிக்கின்றோம் .
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் இலங்கை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தங்கள் வணிகர் பேரவையை சேர்ந்த 6000 வணிகர் சங்கங்களை சேர்ந்த 50 லட்சம் கடைகளில் 'தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொருட்களை விற்கமாட்டோம் என்று ' தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைக்கும் அதன் தலைவர் வெள்ளையன் அய்யா அவர்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .
இனபடுகொலை இலங்கை பொருட்களை இந்த கடையில் விற்கமாட்டோம்' என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர் ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் ஒட்டப்படும் .
வரும் 26.10.2014 அன்று சென்னையில் உள்ள இலங்கை வர்த்தக நிறுவனமான 'டம்
ரூ பர்னிச்சர்'ன் ஆறு கிளைகள் முன்பும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெரும்.
சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் கத்தி திரைபடத்தை தமிழர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள இந்திய இலங்கை உடனான கிரிக்கெட் போட்டியை பிசிசிஐ உடனே ரத்து செய்ய வேண்டும் . அப்படி ரத்து செய்யாத பட்சத்தில்
2013. 2014 ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளின் பொழுது எப்படி தொடர் போராட்டத்தினால் இலங்கை வீரர்களை தடை செய்தோமோ அதே போல் செய்ய நேரிடும் என்பதை BCCI நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம் .
பாதிக்க பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழக மக்களை ஒன்று திரட்டி இலங்கை புறக்கணிப்பை முழுமையாக சாத்தியப் படுத்துவோம் .
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு