BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 20 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍வேண்டுமாம் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/what-women-think-about-men-characters.html

உகாண்டா நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக எஞ்சினியர்
http://www.satrumun.net/2014/09/tamilnadu-engineer-married-uganda-gilr.html

இளம் நடிகைக்கு ‘லிப் டூ லிப்’ கிஸ் : ரகசிய கேமராவில் சிக்கிக் கொண்ட சிம்பு!
http://goo.gl/28d3KW

மீண்டும் நடிக்க வந்தார் விஷாலின் அண்ணி ஷ்ரேயா ரெட்டி
http://goo.gl/xHtQVc

இடஒதுக்கீடு கேட்டு ராஜஸ்தானில் மீண்டும் போராட்டத்தை தொடங்கும் குஜ்ஜார்கள்
http://www.satrumun.net/2014/09/1987-5.html

தங்கம் வென்றது இந்தியா - ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்நாளே கலக்கல்
http://www.satrumun.net/2014/09/india-won-gold-medal-in-asian-games-in.html

மிரட்டல் மெயில் அனுப்பியதாக தவறான புகார், இந்திய வம்சாவளி மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்டஈடு வழங்குகிறது நியூயார்க்.
http://www.satrumun.net/2014/09/kirthika-biswas-getting-136-crores-from.html

வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயம்
http://www.satrumun.net/2014/09/blog-post_747.html

அம்மா உணவகத்துக்கு ஆந்திர அமைச்சர் குழு பாராட்டு
http://www.satrumun.net/2014/09/blog-post_12.html

2100- ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும்
http://www.satrumun.net/2014/09/2100-1100.html

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்
http://www.satrumun.net/2014/09/blog-post_552.html

மோடி தொடங்க இருக்கும் " மேக் இன் இந்தியா " ( இந்தியாவில் உருவாக்குவோம்) திட்டம் !!
http://www.satrumun.net/2014/09/modi-to-start-his-make-in-india-campaign.html

தமிழ் சொற்கள் கிரேக்க நூல்களில்
http://www.satrumun.net/2014/09/blog-post_876.html

ராஜபக்சே நண்பரின் லைக்கா மொபைல் நிறுவனம் ஞானம் அறக்கட்டளை நிறுவி உதவி செய்வதன் பின்னணி என்ன?
http://www.satrumun.net/2014/09/blog-post_108.html

இந்திய கோடிஸ்வரர்களின் பட்டியல்
http://www.satrumun.net/2014/09/blog-post_26.html

உகாண்டா நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக எஞ்சினியர்

ஃபேஸ்புக்கில் ஸ்பேம் மெசேஜ்கள் ஆப்ரிக்க இன பெண்கள் பெயரில் வருவதுண்டு, அதனால் அடிக்கடி ஆப்ரிக்க அழகிகள் தொல்லை என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவார்கள். ஆனால் தமிழக எஞ்சினியர் ஒருவர் உகாண்டா நாட்டு பெண்ணை காதலித்து தமிழகத்திற்கு அழைத்து வந்து மணந்துள்ளார்

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்த தம்பதிகள் மணி - ராதா,   விளாப்பாக்கத்திலேயே இவர்கள் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

இவர்களது மகன்  30 வயதான கலாநிதி (30). "லெதர் டெக்னாலஜி" மற்றும் "பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன்" படித்தவர். அவர், கடந்த ஆண்டு உகாண்டாவுக்கு வேலைக்கு சேர்ந்தார், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உகாண்டாவை சேர்ந்த இசன்யூஆரியட் என்ற பெண்ணுடன் கலாநிதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களின் காதலை இசன்யூஆரியட்டின் பெற்றோரும், சகோதரிகளும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கலாநிதியின் பெற்றோரும் இந்த காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கலாநிதி இந்தியா திரும்பியுள்ளார், ஆனாலும் செல்போனில் காதல் தொடர்ந்துள்ளது, கடந்த 2 நாட்களுக்கு முன் இசன்யூ ஆரியட் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கலாநிதியை திருமணம் செய்து கொள்ள விளாப்பாக்கத்திற்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆற்காட்டை கலாநிதி– இசன்யூ ஆரியட் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் மணமக்கள் உகாண்டா செல்லாமல் இங்கேயே வசிக்கப் போவதாக தெரிவித்தார்கள். 

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍வேண்டுமாம் தெரியுமா?

ஒரு ஆணுடன் ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவது பற்பல காரணங்களால் இருக்கும், இது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனாலும் பொதுவான‌ சில விஷயங்களான நிறம், முக தோற்றம், மீசை, பேச்சுதிறன் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என இதில் பார்க்கலாம்

சிவந்த நிறம்

ஒரு ஆண் சிவந்த நிறமாக(ஃபேர்) இருக்க வேண்டும் என பெண்கள் யாரும் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் செக்ஸ் அப்பீல் அவன் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

மீசை

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட ஆண்களின் "மீசை"க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். "மீசை" ஒருஆணுக்கு அழகு, அதுவே கம்பீரம் என்பது பெண்களின் கருத்து. ஆனால் மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ "தாடி" பிடிப்பதில்லை. நம் நாட்டு ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பது தான் காரணமாம்.

உடை அலங்காரம்

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுப்பதால் அதே போன்ற டிரெஸ்சிங் சென்சை ஆண்களிடமும். பேண்டின் நிறத்திற்கு சம்பந்தமே இல்லாத கலரில் சட்டை அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல் , தொள தொளவென சட்டை அணிவ து, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஆண்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது தான் பெண்களுக்கு பிடிக்கும்.

பேச்சு திறன்

முதல் முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொடவென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடா து. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றிய சொந்த விவகாரங்களை களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. முக்கியமாக பெண்கள் கேட்க விரும்புவதை விட பேச விரும்புவதே அதிகம்.  பெண்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் சில வார்த்தைகளில் இருந்து  உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு கேட்டு ராஜஸ்தானில் மீண்டும் போராட்டத்தை தொடங்கும் குஜ்ஜார்கள்

தமிழ்நாட்டில் வன்னியர்கள் 1987ம் ஆண்டு தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியதை போல ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் தங்கள் சமூகத்துக்கு 5 சதவீத தனி இட‌ ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தியுள்ளனர். சென்ற முறை மிகப்பெரிய அளவில் நடந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடஒதுக்கீடு வழங்குவோம் என்று பாரதிய ஜனதா அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதை மாநில பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றாததால், வரும் 28-ம் தேதி கராவ்லி மாவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக குஜ்ஜார் சமூக உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய குஜ்ஜார் போராட்ட தலைவர்கள் எங்கள் சமூகத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதாக சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிரவேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்ததால்தான் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக 4ல் 3 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கம் வென்றது இந்தியா - ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்நாளே கலக்கல்

ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட்டது, போட்டியின் முதல் நாளான இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜித்துராஜ் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் ஸ்வேதா சவுத்ரி பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று கணக்கை துவங்கினர்.


அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 10,000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான போட்டிகள் நடைபெறும்.

இந்தியா 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது, மல்யுத்தம், பலுத்தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், டென்னிஸ், இறகுப்பந்து போன்ற பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டல் மெயில் அனுப்பியதாக தவறான புகார், இந்திய வம்சாவளி மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்டஈடு வழங்குகிறது நியூயார்க்.

தூதரக அதிகாரி மகள் மிரட்டல் மெயில் அனுப்பியதாக தவறான புகார், இந்திய வம்சாவளி மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்டஈடு வழங்குகிறது நியூயார்க்.

நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவசிஷ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா (18) அந்நகரில் உள்ள குயின்ஸ் ஜான் பிரவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி மிரட்டல் விடுத்தாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார், இந்த வழக்கில் கிருத்திகா நிரபராதி என்றும் இந்த மிரட்டலை விடுத்தது வேறு ஒரு மாணவர் என்றும் தெரிய வந்தது, மிரட்டல் விடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பெண் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் இருந்தது வீடியோ ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதற்கு 1.5மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நஷ்ட ஈடு வழங்க கோரி நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கிருத்திகாவுக்கு 2.25 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் முன்வந்தது. அதை கிருத்திகா ஏற்றுக்கொண்டார். நகர நிர்வாகம், கல்வி வாரியம், காவல்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மீது தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கிருத்திகா ஒப்புக்கொண்டார்.

இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கை முடித்து வைப்பதாக மாவட்ட நீதிபதி அறிவித்தார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயம்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) அனுமதி பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலர் எஸ். ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சில பல்கலைக்கழகங்களும், இணைப்புக் கல்லூரிகளும் நேரடியாகவும், முகவர்கள் மூலமாகவும் தங்களுடைய கல்வித் திட்டங்களில் வெளிநாட்டினரைச் சேர்த்து வருகின்றனர்.

இந்த நடைமுறைகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இதுபோன்ற மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பல்கலைக்கழகங்கள் இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதோடு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது யுஜிசி-யிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளது.

அம்மா உணவகத்துக்கு ஆந்திர அமைச்சர் குழு பாராட்டு

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை ஆந்திர அமைச்சர் குழு வெள்ளிக்கிழமை பார்வையிட்டது. அம்மா உணவகம் செயல்படும் விதம் குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். ஆந்திர மாநில விலைக்கட்டுப்பாடு, உணவு, நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் பரிட்டாலா சுனிதா, நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி.நாராயணா, வேளாண்மைத் துறை அமைச்சர் பிரத்திபட்டி புல்லா ராவ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர். அங்கு வழங்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு, அவை தரமாகவும் சுவையாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், சுவை, சுகாதாரம் குறித்து ஆந்திர அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கிறது.
ஏழை மக்கள் மட்டுமன்றி, அனைத்துப் பிரிவினர்களும் இந்த உணவகத்தில் சாப்பிடுவதைக் காண முடிந்தது. விரைவில் தங்களது மாநிலத்திலும் முக்கியமான மாநகராட்சிகளில் இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆந்திர அமைச்சர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இந்தக் குழுவினர் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோரைச் சந்தித்தனர். அப்போது அம்மா உணவகம் செயல்படும்விதம் குறித்து ஆந்திர குழுவினருக்கு ஆணையர் விளக்கினார்.

2100- ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும்

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "சைன்ஸ்' அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், வரும் 2,100-ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட இது 200 கோடி அதிகமாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆப்பிரிக்க மக்கள் தொகை 510 கோடி வரை அதிகரிக்க 80 சதவீத வாய்ப்புள்ளது. தற்போது 440 கோடியாக உள்ள ஆசிய நாடுகளின் மக்கள் தொகை, 2050-ஆம் ஆண்டில் 500 கோடியாக உயர்ந்து, அதன் பிறகு சரியத் தொடங்கும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்

கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸின் நேற்று (19-09-2014) அன்று காலமானார் அவருக்கு வயது 45, இவரின்  மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media