skip to main
|
skip to sidebar
டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றியை அடுத்து தேசிய அளவிலும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி, இக்கட்சியின்
தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ், ராகுல் காந்தியை எதிர்த்து,
உத்தரப்பிரதேச தொகுதி அமேதியில் இருந்து போட்டியிடுவதாக முடிவு
எடுக்கப்பட்டது.
இன்னும் இரண்டுவாரங்களில் ஆம் ஆத்மி கட்சியின்
முதல் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று ஆம் ஆத்மி
கட்சி தெரிவித்துள்ளது. மே 2014 நடக்கவிருக்கும் தேர்தலில், ஹரியானா,
மஹாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம், கர்நாடகா, குஜ்ராத் போன்ற மாநிலங்களிலும்,
வலுவான ஆதரவை பெற ஆம் ஆத்மி கட்சி எதிர் நோக்கி உள்ளது.
டெல்லியில் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற கேஜ்ரிவால், காங்கிரஸ், பி.ஜே.பி
உள்ளிட்ட எந்த கட்சியை சார்ந்தவராயினும் 'நேர்மை'யாக பணியாற்றுபவர்கள்,
லஞ்சத்தை எதிர்த்து போராட நினைப்பவர்கள், தனது ஆம் ஆத்மி கட்சியில் சேர
வலுயுறுத்தி உள்ளார்.