BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 9 June 2014

இந்த உலகக் கோப்பைக் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய பத்து விடயங்கள் !!!

1) உலகக்கோப்பை எப்போது தொடங்கி எப்போது முடிகிறது ??

இந்த உலகக்கோப்பை ஜுன் 12 தொடங்கி ஜுலை 13 நிறைவு பெறுகிறது . முதல் போட்டியில் உலகக்கோப்பையை நடத்தும் நாடான பிரேசில் க்ரோஷியா அணியைச் சந்திக்கிறது . இது 20 ஆம் உலகக்கோப்பைத் தொடர் . இதுவரை நடைப்பெற்ற அனைத்து தொடர்களிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் . பிரேசில் அணி ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது .



2) யார் கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு ??

தனது சொந்த நாட்டில் விளையாடும் பிரேசில் தான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது . இவர்களைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படுவது அர்ஜென்டினா அணி . அடுத்த இடத்தில் ஜெர்மனியும் , அதைத் தொடர்ந்து சென்ற முறை கோப்பை வென்ற ஸ்பெயின் அணி

3) இவர்கள் அல்லாமல் வேறு யாரை எதிர்பார்க்கலாம் ??

பெல்ஜியம் அணி பல புக்கிகளைக் கவர்ந்துள்ளது . பிரான்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ள அணிகள் வரிசையில் 6 ஆம் இடத்தில் உள்ளது .

4) யார் சிறந்த வீரராக இருப்பார் ??

கண்டிப்பாக தனது சொந்த நாட்டில் விளையாட உள்ளதால் அனைவரின் பார்வையும் பிரேசிலின் நெய்மர் மீது உள்ளது . இதுவரை தனது நாட்டிற்காக பெரிய அளவில் சாதிக்காத மெஸ்ஸி இம்முறை சாதிப்பார் என நம்பலாம் . மேலும் நாம் எப்போதும் ரொனல்டோவை  சாதரணமாக விட்டு விட முடியாது

 .
5) இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் நிறைய கோல்களை எதிர்பார்க்கலாமா ??

ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரின் போதும் கோல் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது . 1994 இன் உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் சராசரி கோல்கள் 2.71 ஆக இருந்தது . 2010 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் போது அது 2.27 ஆகக் குறைந்துள்ளது




6) எந்த எந்த சாதனைகள் முறியடிக்கப் படும் என எதிர்பார்க்கலாம் ??

ஜெர்மனி அணியின் முன்கள ஆட்டக்காரர் மிரஸ்லாவ் க்லோஸ் இன்னும் ஒரு கோல் அடித்தால் உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் ரொனல்டோவின் சாதனையை சமன் செய்யலாம் . ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் காசில்லஸ் இன்னும் மூன்று போட்டிகளில் கோல் விடாமல் இருந்தால் 15 போட்டிகளில் கோல் விடாமல் இருந்த பார்த்தோஸ் மற்றும் பீட்டர் ஷில்டன் சாதனையை சமன் செய்யலாம் .




7) எத்தனை மைதானங்கள் தயாராக உள்ளனர் ??

மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது . ஆறு மைதானங்கள் சென்ற வருடமே தயாராகி விட்டது . மற்ற ஆறு மைதானங்களில் சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்து கொண்டு இருக்கின்றனர் . மைதானத்தின் உள்ளே மற்றும் வேளியே இன்டெர்நெட் வசதி உள்ளது .

8) முக்கிய வீரர்கள் யார் யார்  காயத்தால் வெளியேறி உள்ளனர் ??

மார்கோ ரியஸ் (ஜெர்மனி )

பிராங்க் ரிபெரி (பிரான்ஸ்)

தியோ வால்காட் (இங்கிலாந்து )

ராடமெல் பால்கோ (கொலாம்பியா )
தியகோ அல்கான்ட்ரா ( ஸ்பெயின் )


பென்டெக்கே (பெல்ஜியம்)
கெவின் ஸ்ட்ருட்மன் (நெதர்லாந்து )
ரிக்கார்டோ மோண்டோலிவோ (இத்தாலி )

9) பிரேசிலில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கும் ??

குளிர்ந்த வானிலை கொண்டதாக இருக்கும் . எனவே குளிரைச் சமாளித்து தான் வீரர்கள் விளையாட வேண்டும் . வடக்கு பகுதிகள் கொஞ்சம் வெப்பம் நிறைந்ததாக இருக்கும்

10) சென்ற வருடம் கான்பெடரேசன் கோப்பைப் போல மக்களிடையே போராட்டம் வெடிக்குமா ??

இந்த சமயத்தில் கூட மக்கள் ஆங்காங்கே போராட்டம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர் . தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்து மக்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர் .




எதிர் கட்சி தலைவர் இல்லாத நாடாளுமன்றம் !!



நமது  16 வது  நாடாளுமன்றத்தில்  எதிர் கட்சி தலைவரே கிடையாது என்று முடிவு செய்து உள்ளார் அவை தலைவர் சுமித்ரா மஹாஜன் . இந்த முடிவை அவர் கடந்த  கால நடைமுறைகளை வைத்து எடுத்து உள்ளார் .ஒரு கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற நாடாளுமன்ற விதிகளின் படி மொத்த உள்ள 543 இடங்களில் 10 சதவீத இடங்களை பெற வேண்டும் , அதாவது 54 இடங்கள். இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி பெற்று இருப்பதோ 44 இடங்கள் . அதனால் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலைக்கு தள்ளபட்டு  உள்ளோம்.

இது காங்கிரஸின் மிக மோசமான தோல்வி. இதற்கு முன்பும் இது போல் நடந்து உள்ளது ஆனால் அப்போது காங்கிரஸ் ஆளும் கட்சி இப்போது  எதிர்க்கட்சி. இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் கடந்த முறை எதிர் கட்சி தலைவராக இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றாலும் 67 உறுப்பினர்களுடன் ராஜ்ய சபாவில் எதிர் கட்சி தலைவர் பதவியை பெற்று உள்ளது காங்கிரஸ். இப்பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாப் நபி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர்  கடந்த  முறை சுகாதார துறை அமைச்சராக இருந்தவர்.

எதிர் கட்சி தலைவர் என்று ஒருவர் இருந்தால் தான் அது சிறந்த ஜனநாயகம் ஆகும்.

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய திட்டம் !!

"ஒரு இந்தியா , ஒரே விலை " என்னும் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்த திட்டத்தின் மூலம் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் . ரோமிங் இன்கமிங் கால்களுக்கு கட்டணம் கிடையாது . தன்னுடைய லோக்கல் அழைப்பிற்கு எவ்வளவு கட்டணம் எடுக்கப்படுகிறதோ , அதே கட்டணம் தான் வெளியூர் அழைப்புகளுக்கும் வசூலிக்கப்படும் .

இந்த திட்டம் பீரிபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர் இருவருக்கும் பொருந்தும் .

10 இலட்சம் செக்ஸ் தொழிலாளிகள் ஸ்பெசல் கோர்ஸ், கிரெடிட் கார்டு என உலககோப்பை கால்பந்து போட்டிக்கு ரெடி

10 இலட்சம் செக்ஸ் தொழிலாளிகள் ஸ்பெசல் கோர்ஸ், கிரெடிட் கார்டு என உலககோப்பை கால்பந்து போட்டிக்கு ரெடி

ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது, இதை உலகெங்கிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் நேரில் காண பிரேசில் நோக்கி படையெடுத்துள்ளார்கள், பிரேசிலில் கால்பந்து நடைபெறும் நகரில் 12,000க்கும் மேற்பட்ட உணவங்கங்கள் தயார் நிலையில் உள்ளனர், இது மட்டுமின்றி பிரேசிலில் 10 இலட்சம் செக்ஸ் தொழிலாளர்கள் உலகக்கோப்பை கால்பந்தை முன்னிட்டு குவிந்துள்ளனர்.

பிரேசிலில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. உலக்கோப்பையை முன்னிட்டு வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் போது லாங்க்வேஜ் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று பெலோ ஹரிசான்டோ நகரில் பல செக்ஸ் தொழிலாளிகள் ஆங்கிலம் பேச ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகளுக்கு சென்றும், செக்ஸ்க்கான பணத்தை கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டும் ஏற்பாடுகளையும் செய்து தயார் படுத்திக்கொண்டுள்ளார்கள்.

அணையில் தண்ணீர் திடீரென திறந்து விடப்பட்டதால் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம் !!!

தெலுங்கானாவில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் இருந்து , 48 மாணவர்கள் ஹிமாச்சல்பிரதேசம் மணலிக்கு கல்வி சுற்றுலா சென்றனர் . இந்த சுற்றுலா பத்து நாட்கள் என முடிவு செய்து இருந்தனர் .

சுற்றுலாவிற்கு சென்று இருந்தவர்களில் ஒரு 23 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர்  மட்டும் பீஸ் நதிக்கரையில் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர் . அப்போது அந்த நதியில் அமைந்து இருந்த அணை எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்டது . இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் .

இந்த கவனமற்ற நடவடிக்கைக் காரணமாக அங்கு வேலைப் பார்த்த அனைவரையும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

இந்த கொடுர நிகழ்விற்கு பின் மூன்று மாணவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார் .

கராச்சி விமான நிலையம் தாக்குதல் - பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றது !!

நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த துப்பாக்கிச்சூடு முடிவடைந்தது . இந்த தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 24 பேர் பலியாயினர் .

இன்று காலை தாக்குதல் முடிவடைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தீடீரென்று மறைந்து இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் . இதனால் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்களின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான ஹகிமுல்லா மேஹ்சத் என்பவரை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர் .

அடுத்த ஐந்து ஆண்டுகள் மோடி அரசு என்ன செய்ய உள்ளது ???

இன்று நடந்த இரு அவைகளின் கூட்டுத் தொடரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய வேலைகளை பற்றி உரை ஆற்றினார் . அந்த உரையின் சில முக்கியமான அங்கங்களை கீழ்க் காணலாம் .

உணவுப் பற்றாக்குறையை குறைப்பது மோடி அரசின் முக்கிய கொள்கையாக இருக்கும் .

வறுமைக்கு சாதியும் கிடையாது , மதமும் கிடையாது . வறுமை என்னும் சாபத்தை ஒழிப்பது இந்த அரசின் பெரிய போட்டியாக இருக்கும் . நாங்கள் வறுமையை குறைப்பதுடன் நின்று கொள்ள மாட்டோம் , அதை முற்றிலுமாக ஒழிப்போம் .

கறுப்பு பணம் மற்றும் கருப்பு வணிகத்தை ஒழிப்போம் .

மேலும் புதிய அரசு பருவக் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்கவும் தயாராக உள்ளது .

கிராமத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த அரசு தீவிரமாக ஈடுபடும் .



நமது நாடு பொருளாதாரத்தில் ஒரு கடுமையான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது . மீண்டும் அதை பலப்பட்டுத்துவது இந்த அரசின் சவலாக இருக்கும் .

பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பகுதி . பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த அரசு துளி அளவும் இடம் கொடுக்காது . அவர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் .

நம்முடைய இந்த அரசு பல இடங்களில் IIT மற்றும் IIM  அமைக்கும் . மேலும் இந்தியா முழுவது ஒரு இணைய நூலகம் அமைக்கும் .

புதியதாக 100 நகரங்களும் , நமது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அனைத்து குடும்பத்திற்கும் ஒரு நல்ல வீடு இருக்கும் .

மேலும் பிரணாப் முகர்ஜி தேர்தலை ஒழுங்காக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு தன் நன்றியைத் தெரிவித்தார் .


ஊரக வேலைவாய்ப்புத் துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் !!!

மோடி தலைமையிலான மத்திய அரசில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி . போன ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய திட்டமாக கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் . இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் உள்ள 635 மாவட்டங்களில் உள்ள 7.5 லட்ச கிராமங்களில் உள்ள 27 கோடி பேர் இந்த திட்டம் மூலம் பயனடைகின்றனர் . இந்த திட்டம் மூலம் 100 நாட்களுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை சம்பளம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும் . இதன் மூலம் இடைத் ததரகர்களால் ஏற்படும் நஷ்டம் குறைக்கப்படும் .

ஆனால் இந்த திட்டம் மூலம் சம்பளம் வழங்குவது தாமதம் ஆகிறது என குற்றச்சாட்டு எழுந்தது . இதனால் அமைச்சர் நிதின் கட்காரி , அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் சம்பளம் கிடைக்கவும் , 15 நாட்களுக்கு மேல் எந்த காரணத்திற்காகவும் சம்பளம் வழங்குவது தாமதம் ஆகக்கூடாது என உத்தரவிட்டார் . 

பி.ஜே.பி.யின் அடுத்த தலைவர் யார் ??



ஆட்சியை  தற்போது  பிடித்துவிட்டாலும்  பிறகு  வரும்  தேர்தலுக்கு  கட்சியை  நன்கு  வலுபடுத்த  வேண்டும்  என்பதை   உணர்ந்து  இருக்கிறது  பிஜேபி.  அதற்கு  நல்ல  தலைமை  தேவை.  கட்சியின்  தலைவராக  இருந்த  ராஜ்நாத்  சிங்  நாட்டின்  உள்துறை  அமைச்சர்  என்கிற  உயரிய  பதவிக்கு  சென்றுவிட்டார்.  அவர்  தான்  இந்தியாவின்  தலைமை  போலீஸ்.  அதனால் கட்சி பதவியை  துறந்து  ஆக  வேண்டிய  நிலைமை.  அப்படியானால்  அடுத்த  தலைவர்  யார் ?

பிஜேபி  இல்  பெரிய  அளவில்  வாரிசு  அரசியலுக்கு  இடம்  அளிக்க  மாட்டார்கள்  என்றாலும்  அவர்களின்  பெற்றோர்  ஆன  ஆர்.எஸ்.எஸ்  இன்  முடிவுக்கு   கட்டுப்பட்டவர்கள்.  அவர்கள்  கை காட்டும்  நபர்  தான்  தலைவர்.  இது  அவர்கள்  சட்டதிட்டத்தில்  எழுதப்படாத  விதி.  வாஜ்பாய்  அத்வானி  காலத்தில்  வேண்டுமானால்  கட்சியில்  கொஞ்சம்  சுதந்திரம்  இருந்து  இருக்கலாம்.  புதிதாக  ஒரு  நபரை  தேர்வு  செய்வதே  அவர்களது  வழக்கம். அவரை  அக்கட்சியின்  தொண்டனே  கூட  அறிந்து  இருக்க  மாட்டான்.  இந்த  முறை  மூன்று  பேர்  போட்டியில்  உள்ளனர்.  அவர்கள்  மோடியின்  வலது  கரமான  அமித் ஷா, ஜே.பி.நட்டா , ஓ.பி.மாத்தூர் .

மோடியின்  செல்ல பிள்ளையாக  இருந்த அமித்  ஷா , உத்தர பிரதேசத்தில்  பெற்ற  வெற்றியின்  மூலம்  பிஜேபி யின்  செல்ல  பிள்ளை  ஆகி  உள்ளார். இந்த  வெற்றிக்கு  பிறகு  கட்சியின்  அசைக்க முடியாத  வெற்றி  தூணாக  மாறி உள்ளார். தவறு  செய்யும்  ஆட்கள்  இவரது  கண்களில்  இருந்து  தப்பவே  முடியாது  என்கிறார்கள்.  அடுத்த  நபர்  ஓ.பி. மாத்தூர் , ஆர்.எஸ்.எஸ்  பிரசாகராக  இருந்தவர்.  2002 இல்  மத்திய பிரதேச  மாநில  பொறுப்புக்கு  சென்றார்.  இவர்  போனதில்  இருந்து  ஆட்சியை  இழந்த  காங்கிரஸ்  இன்னும்  எழுந்திருக்கவே  இல்லை.  மூன்றாவது  நபர்  ஜே.பி.நட்டா, தேர்தல்  கால  செயல்களை  திறமையோடு  செய்வதில்  வல்லவர்.  கடந்த  ஆண்டு  சத்தீஸ்கரில்  பெற்ற  வெற்றிக்கு  இவரது  பங்கு  முக்கியமானது  ஆகும்.  தேசிய பொது   செயலாளர்  பொறுப்பில்  இருந்து உள்ளார் .

 இவர்களில்  அடுத்த  தலைவர்  யார்  என்பதை  தேர்ந்து  எடுப்பது  மோடியின்  கையில்  இல்லை  அது  ஆர்.எஸ்.எஸ்.  கையில்  உள்ளது.  நாட்டிற்கு  நல்ல  தலைவரை  தந்தவர்கள்  கட்சிக்கு  நல்ல தலைவரை  தருவார்களா  என்று  பொருத்து  இருந்து  தான் பார்க்க  வேண்டும்.

கராச்சி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு !!!

நேற்று இரவு கராச்சி விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் உட்பட 23 பேர் பலியாயினர் .

 மும்பை தாக்குதலைப் போல இருந்த இந்த தாக்குதலில் , பல குண்டு வெடிப்புகளும் , ராணுவத்தினருக்கும் தீவிரவாதிக்குக்கும் ஐந்து மணி நேரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர் .

அங்கே இருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் , தீவிரவாதிகளினால் எந்தவொரு விமானத்திற்கும் பாதிப்பு இல்லை என்றும் 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார் .

சிந்த் எல்லையின் முதலமைச்சர் கூறுகையில் , தீவிரவாதிகள் நன்கு திட்டமிட்டு , பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர் . அவர்கள் விமானம் மற்றும் , ககட்டிடங்களை குறி வைத்தனர் என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media