BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 8 July 2013

வர்த்தக செய்திகள்

தேசியபங்கு சந்தை குறியீடான நிஃப்டி இன்று முற்பகுதியில் குறைந்தும் முடிவின் போது சற்றே ஏற்றத்துடன் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

கீழ்தாங்கு நிலையாக 5780 உள்ளது, அதை நஷ்ட தடுப்பாக வைத்து கீழே வாங்கலாம், மேல் 5898 உயர தடுப்பாக இருக்கிறது.

இவை உத்தேச தகவல் மட்டுமே. வியாபாரம் உங்கள் சுய ஆலோசனைக்கு பின்னர் செய்தல் நலம்.


***

மேலும் சரியும் ருபாய்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவு டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு குறைந்தது ஏற்கனவே தெரிவித்திருந்தோம், இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 4500 கோடி ரூபாய் அன்னியமுதலீடு திரும்ப பெற்றுக்கொள்ளபட்டதாக தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்காவில், இந்தியர்களின் மென்பொருள்துறை மற்றும் பலவகைகளில் முதலீடு 11,000 கோடி டாலரை தொட்டதாக அமெரிக்க ஐபிசி அறிவித்துள்ளது.

ரிசர்வ்வங்கி வட்டிவிகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தாலோ அல்லது அன்னிய முதலீடுகளை பெற மத்திய அரசு முயற்சி செய்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் ஏற்றம் காணும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.


 

இளவரசனின் இறுதி கடிதம்.

இளவரசனின் உறவினர்களிடமிருந்து கடிதம் ஒன்று பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது. அக்கடிதத்தை இளவரசனின் உடையிலிருந்து எடுத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில் தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என இளவரசன் கைப்பட எழுதியிருப்பதாக போலிஸார் தெரிவித்தனர்.

இளவரசன் மரணமடைந்து நான்கு தினங்களுக்கு பின் இக்கடிதம் வெளிவந்திருப்பதால் சில அமைப்புகள் அக்கடிதம் போலி என போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

கடிதத்தில் இருந்த கையெழுத்து இளவரசனுக்கு சொந்தமானது தானா என அறிய தடவியல்துறையை நாடுவதாக காவல்துறை அறிவித்தது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media