BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 July 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இறுதி உத்தரவு வரும் வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விஷ வாயு வெளியானது என்று தமிழக அரசால் முடக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே நீதிமன்றம் நூறு கோடி அபராதம் மட்டும் விதித்துவிட்டு செயல்பட அனுமதித்தது தற்போது இறுதி உத்தரவு வரும் வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

# நாடும் மக்களும் நாசமாக போனாலும் பணக்காரர்களும் ஜிடிபிக்கும் மட்டும் எதுவும் குறை வந்துவிடக்கூடாது.

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

உமாசங்கர் ஐஏஎஸ் அபூர்வமாக இருக்கும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர், 91-96 அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பல ஊழல்களை வெளிப்படுத்தியவர், சென்ற திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க சொன்ன காண்ட்ராக்டை மறுத்தவர், மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், பெரும் போராட்டத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். அப்போதிலிருந்தே இயேசுவை சரணடைந்தேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

நக்கீரனில் வெளிவந்த உமாசங்கரின் பேட்டி

உமாசங்கர் IAS : பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூலம் சொல்லி அனுப்பினார் அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உமாசங்கர் IAS : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

# நேர்மையான அதிகாரி உமாசங்கர் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருந்துகிறோம்.

துப்பாக்கிகள் இல்லாமல் தவித்த ராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள் தகவல்கள் அம்பலம்

துப்பாக்கிகள் இல்லாமல் தவித்த ராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள் தகவல்கள் அம்பலம்

சென்ற மாதம் பிரதமர் மன்மோகன்சிங் ஸ்ரீநகர் செல்வதற்கு முதல் நாள் 2 தீவிரவாதிகள் தாக்கியதில் 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். ஆனால் அந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி இல்லாமல் இருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 24 ராணுவ வீரர்களும் விடுமுறை முடித்துவிட்டு இரண்டாவது டிராக்கில் வந்தனர், அதனால் அவர்களிடம் ஆயுதம் இல்லை, அவர்கள் முன்னால் வந்த டிராக்கில் வீரர்கள் ஆயுதத்துடன் இருந்தனர், இந்நிலையில் பின்னால் வந்த வாகனம் டிராபிக்கில் சிக்கிக்கொள்ள முன்னால் சென்ற வாகனம் வேகமாக சென்றுவிட ஆயுதங்கள் எதுவுமின்றி 2வது டிரக்கில் இருந்த வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் மாட்டினர்.

அவர்களுக்கு 100 மீ தொலைவில் சிஆர்பிஎஃப் செக் போஸ்ட் இருந்தும் அவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை. முதல் டிரக் விதிமுறைகளை மீறி 2வது டிரக்கை விட்டு சென்றது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

நாய்க் குட்டி விமர்சனம் மோடி மீது கேஸ், காமராஜர், உத்ரகாண்ட் பேரழிவு காலை செய்திகள்

நாய்க் குட்டி விமர்சனம்: மோடியை கைது செய்ய வேண்டும் – ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார்

ஐதராபாத் சந்தோஷ் நகர் போலீஸ் நிலையத்தில் வக்கீல் குலாம் ரப்பானி அளித்துள்ள புகார் மனுவில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கத்தில் நாய்க் குட்டி என்று கூறி இழிவுப்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார்.

இந்த பேச்சு இந்து – முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளதால் மோடியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
------------

உத்ரகாண்ட் வெள்ளப்பேரழிவு காணமல் போன 6 ஆயிரம் பேரை மரணமடைந்தவர்களாக அறிவிக்க முடிவு

உத்ரகாண்ட் வெள்ளப்பேரழிவில் பல ஆயிரம் பேர் இறந்தனர், இந்நிலையில் காணமல் போன 6 ஆயிரம் பேரை மரணமடைந்தவர்களாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது, உ.பியை சேர்ந்தவர்கள் 2000 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் 1000க்கும் மேல், மீதி பேர் 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

-------------------

"அரசியல் வேறுபாடுகளை கடந்து போற்றத்தக்க தலைவர் காமராஜர்" - திமுக தலைவர் கருணாநிதி

பெருந்தலைவர் காமராஜரின் 111வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த செய்தியில் "அரசியல் வேறுபாடுகளை கடந்து போற்றத்தக்க தலைவர் காமராஜர்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார், மேலும் சென்னை விமான நிலையத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதும் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டம் இயற்றியதும் தி.மு.க ஆட்சியில்தான் என்றும் மறக்காமல் சைடில் பிட் ஓட்டினார் திமுக தலைவர் கருணாநிதி.

-------------

மொரீஷியஸ் நாட்டிற்கு, கடற்படை போர் விமான இன்ஜின் மற்றும் தளவாடப் பொருட்களை, இந்திய அரசு பரிசாக வழங்கியது. 

# ஏய் பஞ்சாயத்து, எம்பூட்டு புள்ளைக்கு 5 ரூபாய் பலூன் வாங்கி தர வக்கில்லை, ஆட்டக்காரிக்கு 200 ரூபாயா?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media