புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு கொலைவழக்கில் மைனர் குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்க வேண்டும் என தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டதாக கதறல்
Saturday, 31 August 2013
சிரியா ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றதற்கு ஆதாரம் உள்ளது - அமெரிக்கா
பஷீர் ஆசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் தனது குடிமக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்துள்ளதற்கு விவரமான, தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்க அரசின் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
கெர்ரி மேலும் தெரிவித்ததாவது சிரிய அரசு 1400 பேரை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றுள்ளதாகவும் அதில் 400 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் கூறியதை அடுத்து போரில் குதித்தது, ஆனால் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதை குறித்து பேசிய ஜான் கெர்ரி ஈராக்கில் நடைபெற்றது போன்ற இண்டெலிஜென்ஸ் தவறு நடக்காதவாறு நாங்கள் இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்களை மிகவும் கவனமாகவும் எச்சரிகையாகவும் ஆராய்வதாக கூறினார்.
# ஏற்கனவே 1$க்கு 68ரூபாய் போய்விட்டது, சிரியாவோடு போரை ஆரம்பித்து கச்சா எண்ணென்ய் விலையை ஏற்றி 1$க்கு 100 ரூபாய் ஆக்கிவிடாதீர்கள்
புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் மைனர் குற்றவாளிக்கு இன்று தீர்ப்பு
புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் மைனர் குற்றவாளிக்கு இன்று தீர்ப்பு
கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவன் 17 வயது கொண்ட மைனர், மற்ற 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டபோது இந்த ஒருவன் மட்டும் சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டான்.

ஆந்திராவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம், கிரன்குமார் ரெட்டி புதுக்கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததிலிருந்து சீமாந்திர காங்கிரஸ் பகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)