BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 18 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


பெண்களிற்கு மிகவும் பிடித்தது 'கிஸ்' தானாம், 'கிஸ்' தர மறந்துவிடாதீர்கள் ஆண்களே!
http://www.satrumun.net/2014/07/ladies-like-this-much.html

தொடர் தோல்வியால் "தோனி" பதவி விலகுகிறார் ??
http://www.satrumun.net/2014/08/dhoni-to-resign-his-captain-post.html

பின் பகுதியில் ஆபாசமாக டாட்டூ குத்திய நடிகை டாப்ஸி, படத்தையும் வெளியிட்டுள்ளார்
http://www.satrumun.net/2014/08/tatoo-at-back-of-tapsee-making.html

எபோலோ நோய் - அறிகுறிகளும், அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களும்!!
http://www.satrumun.net/2014/08/ebolo-virus-symptoms-and-info.html

நெடுஞ்சாலைகளில் பயணிகள் குறையை போக்க அம்மா உணவகம் வருகிறது ??
http://www.satrumun.net/2014/08/amma-hotel-to-be-set-up-in-highways.html

அஞ்சானுக்கு எதிரா வேணும்னே அவதூறு பரப்புறாங்க... : வருத்தப்பட்ட சூர்யா, ஆவேசப்பட்ட லிங்குசாமி!
http://goo.gl/R7cCXq

கத்தி படத்தின் இசையில் உள்ள பல ஆச்சரியமான விஷயங்கள் - அனிருத் சுற்றிய ரீல்
http://www.satrumun.net/2014/08/many-new-things-in-kathi-music.html

அங்காடி தெரு படத்தை போல் சாலை ஒரத்தில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது வாகனம் ஏறியது
http://www.satrumun.net/2014/08/car-rides-over-people-sleeping-near-road.html

நான் ஹிட்லர் தான் - தெலுங்கான முதல்வர் சவால்
http://www.satrumun.net/2014/08/not-ashamed-be-called-hitler-kcr-on.html

கூகுளின் இப்போதைய எதிரி ஆப்பிள் இல்லையாம் , சுறாவாம் !!
http://www.satrumun.net/2014/08/google-new-rival-sharks.html

தனது பிரபல மனைவிக்காக தனியே கோவில் கட்ட உள்ள பிரபல ராப் பாடகர் !!
http://www.satrumun.net/2014/08/kanye-west-to-build-a-church-for-his-wife-kim-kadharshian.html

இடது கை பழக்கம் உள்ள பிரபலமான நபர்கள் !!
http://www.satrumun.net/2014/08/famous-left-handed-people.html

டாப் 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம் !!
http://www.satrumun.net/2014/08/500.html

உலகில் வெறும் 11 நாடுகள் தான் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதாம் !!
http://www.satrumun.net/2014/08/world-peaceful-countries-list.html

நெடுஞ்சாலைகளில் பயணிகள் குறையை போக்க அம்மா உணவகம் வருகிறது ??




தமிழக நெடுஞ்சாலைகளில் செல்லும் போது அனைத்து உணவு பொருட்களையும் நாமே கொண்டு சென்று விட வேண்டும். இல்லையெனில் அங்கு கிடைக்கும் உணவும் கேடு, கையில் இருக்கும் பணமும் கேடு. அங்கு இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடும் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் எல்லாமே இலவசம் தான். அது மட்டும் இல்லாமல் அவர்கள் செல்லும் வழியில் உள்ள டோல் பூத்துகளில் இவர்களே பணம் கட்டி விடுகிறார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது மட்டும் பயணிகள் தான். தரமற்ற உணவு கிடைக்காமல் அவர்கள் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் அங்கு அம்மா உணவகம் வந்தால் பயணிகளுக்கு நல்ல வசதியாக இருக்கும். ஏனென்றால் அங்கு கிடைக்கும் உணவு தரமானவையாகவும், விலை மலிவாகவும் இருக்கும். இந்த முடிவை அம்மா விரைவில் எடுக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை ஆகும்.

பின் பகுதியில் ஆபாசமாக டாட்டூ குத்தியுள்ள நடிகை டாப்ஸி




ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி. இவர் அதற்கு பின் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் டாட்டூ மூலம் பிரபலமாக முடிவு செய்து உள்ளார். முன்பு கனுக்காலில் டாட்டூ வரைந்து இருந்தார். இப்போது தனது பின் பகுதியில் டாட்டூ வரைந்து அந்த போட்டோவை டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

இது அதிக ஆபாசமாக உள்ளது. அவர் டாட்டூவை காட்டுகிறாரா அல்லது வேறு எதையோ காட்டுகிறாரா என்று தெரியவில்லை. தனது பின் பகுதியில் டாட்டூ குத்தியதன் மூலம், அதனை எப்போதாவது தான் பார்க்க முடியும். அதனால் அந்த டாட்டூ போர் அடிக்காது என்று கூச்சமே இல்லாமல் கூறியுள்ளார்.

தொடர் தோல்வியால் தோனி பதவி விலகுவாரா ??




இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரியாக அமையவில்லை, மற்றும் தோனியின் கேப்டன்சி சரியாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே தோனி இதனால் பதவி விலகுவார் என பலரும் எதிர்பார்த்து உள்ளார்கள்.

இது குறித்து தோனியிடம் கேட்டதற்கு, தோல்வியை உள்வாங்கும் வலிமை தனக்கு இருக்கிறதா என்பதை அறி்ந்த பின்னரே இது பற்றி முடிவு செய்ய இயலும் என்றும் கூறினார். தோனியின் கேப்டனிசியில் சில தவறுகள் இருந்தாலும் தோனிக்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்துவதற்கு போதிய அனுபவம் கொண்ட வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அங்காடி தெரு படத்தை போல் சாலை ஒரத்தில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது வாகனம் ஏறியது




டெல்லியில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்து உள்ளது. ரிஷிகுமார் என்பவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தார். அவரது காரில் அவருடன் அவரது உறவுகார பெண்ணும் இருந்தார். குடிபோதையில் இருந்ததால் கண்முன் தெரியாமல் காரை ஒட்டியுள்ளார். வழக்கம் போல் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் சிலர் படுத்து தூங்கி உள்ளார்கள்.

வேகமாக வந்த ரிஷிகுமார் இவர்கள் மீது காரை ஏற்றி உள்ளார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸார் ரிஷிகுமாரை  கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்தி படத்தின் இசையில் உள்ள பல ஆச்சரியமான விஷயங்கள்




விஜய் சம்ந்தா நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தை விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்கள். அதற்குள் எல்லா காட்சிகளையும் முடித்து விட வேண்டும் என உள்ளார்கள்.

இந்த படத்தின் இசை செப்டம்பர் மாதம் 2 வது வாரம் வெளிவரும் என தகவல்கள் வருகின்றன. அது குறித்து சரியான தேதி இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் கத்தி படத்தின் பாடல்களில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.  விஜய் பாட வேண்டிய பாடலுக்கு இசையமைக்கும் பணி முடிந்துவிட்டது. இன்னும் விஜய் பாட வேண்டியது தான் மீதி உள்ளது. கத்தி படத்தின் இசை வெளீயிட்டு விழா குறித்து தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்கலாம்.

நான் ஹிட்லர் தான் - தெலுங்கான முதல்வர் சவால்


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற சர்வே எடுக்க உத்தரவிட்டுள்ளார், இது குறித்து கடும் விமர்சனங்கள் கிளம்பின, இது தெலுங்கானா அல்லாத பிற பகுதி மக்கள் உரிமைகளை பறிக்க செய்யும் செயல்களுக்காக தான் என்று கூறினார்கள், மேலும் சந்திரசேகரராவை ஹிட்லர் என சிலர் விமர்சித்தனர்.

இது குறித்து பேசிய சந்திரசேகர ராவ் தன்னை  சிலர் ஹிட்லர் என்று வர்ணிப்பதைப் பற்றி கவலையே படவில்லை. ஆமாம், நான் ஹிட்லர்தான். தேவைப்பட்டால் ஹிட்லரை விட படு மோசமாகவும் இருப்பேன் என்று கூறியுள்ளார் மேலும் தெலுங்கானா மாநில மக்கள் குறித்த சர்வே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தேவைப்படுவோருக்கு தேவைப்படும் திட்டங்கள் உதவிகள் சென்று சேரவும் உறுதி செய்யவே இந்த சர்வே என்று ராவ் விளக்கியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media