BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 January 2014

கேரள நர்சுகள் பத்தி கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்டார், குமார் விஷ்வாஸ்

2008ஆம் ஆண்டு தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமார் விஷ்வாஸ், "கேரள நர்சுகள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர்  ஃபேஸ்புக்கில் தங்களது படங்களைக் கூட போட மாட்டார்கள்." என்று பேசியிருந்தார். இதன் வீடியோ சமீபத்தில் வெளியாகி, கேரள மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து இருந்தது. 

குமார் விஷ்வாஸ் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கக் வேண்டுமென்று, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தான் 2008ல் கூறியிருந்த‌ கருத்துகாக மன்னிப்பு கோரிய‌ குமார் விஷ்வாஸ், "நான் கவி சம்மேளன் நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோவை பார்த்து கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பலரின் மனம் புண்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன்.  யார் மனதையும் வேண்டும் என்றே நான் புண்படுத்தியதில்லை. மதம், பகுதி, ஜாதி அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை நான் விரும்புவதில்லை. இருப்பினும் எனது வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.










"

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில், போலியோ தடுப்பு முகாமில் வேலை பார்த்து கொண்டிருந்த மூன்று அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில், அந்நோய் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னும் மக்களிடேயே காணப்படுகிறது.

மக்களின் ஆரோக்கியதிற்காக வேலை செய்பவர்கள் மீது, பாகிஸ்தானில் வன்முறைகள் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் கூட, போலியோ தடுப்பிற்காக பணி புரிந்து கொண்டிருந்த மூவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காடுவெட்டி குரு மீது போலீசில் புகார்

புதுச்சேரியில் நேற்று வன்னியர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி,  பத்திரிக்கையில் பிரசுரிக்க முடியாத, அவதூறான வார்த்தைகளை பேசியிருக்கிறார். மேலும், ஜாதி வெறியை தூண்டும் வகையிலும் பேசியிருக்கிறார் என புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் டி.ஜி.பி. காமராஜை சந்தித்து காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. மீது புகார் மனு கொடுத்தனர்.

மேலும், அரசியலமைப்பு சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பற்றியும், அச்சட்டத்தின் மூலம் பயன் பெறுகிற தாழ்த்தப்பட்ட மக்களை பற்றியும், இழிவுப்படுத்தும் வகையில் குரு பேசியிருப்பதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், காடுவெட்டி குரு மீதும், அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தலைமை ஏற்றவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய்க்காக யாழ்பாணத்தில் போராட்டம்

ஜில்லா படம் வேஸ்ட் என்று உதயனன் பத்திரிக்கை விமர்சனம் எழுதியதை எதிர்த்து விஜய் ரசிகர்கள் பத்திரிக்கை அலுவலகம் முன் போராடினார்கள்.

கேரளா நர்சுகளை பற்றி பேசி, சர்ச்சையில் சிக்கிய AAP குமார் விஷ்வாஸ்

6 ஆண்டுகளுக்கு முன் கேரளா நர்சுகளை பற்றி ஆம் ஆத்மி கட்சி குமார் விஷ்வாஸ் பேசியதை பிரச்சினையாக்கும் காங்கிரஸ்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான குமார் விஷ்வாஸ் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

முன்பு இஸ்லாமியர்கள் கொண்டாடும் முகரம் பண்டிகையை பற்றி கிண்டலடித்து, ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினார் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஷ்வாஸ்.

இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் கேரளாவில் உள்ள நர்சுகளை பற்றி அவர்களது நிறம் பற்றி கிண்டலாக பேசியிருந்த வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது, இது கேரள மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது. "முன்பெல்லாம் நர்சுகள் என்றாலே ஆண்களுக்கு உற்சாகமாக‌ இருந்தது. கேரள நர்சுகள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் தங்களது பேஸ்புக்கில் படங்களைக் கூட போட மாட்டார்கள். ஆனால் இப்போது வட இந்திய நர்சுகள் வந்து விட்டனர். அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள்", என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் பேசியுள்ளார் விஷ்வாஸ்.

விஷ்வாசின் இந்த பேச்சிற்கு, பல கண்டனங்கள் வந்துள்ளது. கொச்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

கேரளாவில் உள்ள நர்சுகளுக்கான சங்கங்கள் விஷ்வாஸை கண்டித்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் கிண்டலாக பேசியதை பிரச்சினையாக்குவது ஆம் ஆத்மி கட்சியை பழிவாங்கும் செயல் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

# 6 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது கிளப்பி விட்டு பிரச்சினை செய்வது ராகுலுக்கு எதிராக போட்டியிடப்போகும் குமார் விஷ்வாசை பழிவாங்கும் செயல் என நினைப்பவர்கள் லைக் போடவும்

தர்ணாவில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு


விதிக்கப்பட்ட 144 தடையை மீறி, இரண்டு நாட்கள் தர்ணாவில் ஈடுப்பட்டதற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும்,  டெல்லி போலீசார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சில பேரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.  டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

தன்னை தானே அராஜகவாதி என்று அழைத்து கொள்ளும் கேஜ்ரிவால் மீது, தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று கிரண் பேடி கூறியுள்ளார்.

இரண்டு நாட்களாக நடந்த தர்ணாவில், போலீசாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதை பற்றி டெல்லி பா.ஜ.க தலைவர் விஜய் பேசுகையில், "ஆம் ஆத்மியின் இந்த இரு நாள் அரசியல் நாடகம், இரண்டே இரண்டு போலீசாரை விடுமுறையில் அனுப்புவதற்காக தானா?!" என்று கேட்டுள்ளார்.

மணி சங்கர் அய்யர் கருத்துடன் உடன் பாடில்லை- டிக்விஜயா சிங்

"மோடி, இந்த 21ஆம் நூற்றாண்டில் பிரதமர் ஆகப்போவதில்லை. காங்கிரஸ் கூட்டத்தில், வேண்டுமென்றால் தேநீர் விற்கட்டும்", என்று கூறிய மணி சங்கர் அய்யர் கருத்துக்கு, பா.ஜ.க வில் இருந்து மட்டும் கண்டனங்கள் வரவில்லை. காங்கிரஸிலேயே கூட எதிர்ப்புகள் வந்திருக்கிறது. இதை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் டிக்விஜயா சிங் பேசுகையில், மணி சங்கரின், "மோடி டீ விற்கட்டும்" என்ற கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார்.

"இந்தியா ஜனநாயக நாடு.  எந்த ஒரு சாதாரணா குடிமகனும், நாட்டின் உயரிய பதவியை அடைய எண்ணலாம். எந்த ஒரு பின்புலம் இல்லாமல், நாட்டின் குடியரசு தலைவராக வந்தவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள். அதனால், மணி சங்கர் அய்யர், மோடியை பற்றி கூறியது தவறு." என்று டிக்விஜயா சிங் கூறினார்.

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்



தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை ஹைதராபாத்தில், உறக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 91. 

கடந்த அக்டோபர் மாதம் பத்திரிக்கையாளர்களை அழைத்து சந்தித்து, தனக்கு புற்று நோய் இருப்பதாக அறிவித்தார். தன் ரசிகர்களின் ஆசியோடு, 100 வயது வரை வாழ விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் மொத்தம் 256 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த 'நவராத்திரி' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நவராரி'யில் இவர் 9 வேடங்களில் நடித்துள்ளார்.
'பத்ம விபூஷன்' நாகேஸ்வரராவ், இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே' விருதையும் பெற்றுள்ளார்.















 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media