BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 9 January 2014

"மோடி பிரதமரானால் பேரழிவு" என்று மன்மோகன் சிங் கூறியது சரியே

நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என்று, மன்மோகன் சிங் கூறியது சரியே என்று, பத்திரிக்கையாளர் என்.ராம் கூறியுள்ளார். மோடி பிரிவினையை உண்டாக்குபவர் என்றும் கூறியுள்ளார்.



ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடக்கின்ற ஊழல்களை பற்றி மன்மோகன் சிங் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை என்றும், அவர் அவ்வாறு கொடுத்த விளக்கமே, அவர் பேச்சின் மிக மோசமான பகுதி என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தோற்க போவது உறுதி செய்யப் பட்ட விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான வீட்டில் 2,00,000 ஆபாசப்பட‌ சி.டி க்கள்

மும்பையில், ஒம் பிரகாஷ் குப்தா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ப்ளாட் ஒன்றில், காவல் துறையினர் 2,00,000 ஆபாச‌ப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்தனர். இதைப் பற்றி விசாரித்த போது, குப்தா, ப்ளாட் தனக்கு தான் சொந்தமானது என்றும், ஆனால் அதை முகர்ஜி என்பவருக்கு வாடகைக்கு விட்டு ஆறு வருடங்கள் ஆனது என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பது உண்மையா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.டி.கள் பிடிப்பட்ட இடத்தில் இருந்து, ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஸ்க் எடுக்கறது எல்லாம், ரஸ்க் சாப்பிட மாதிரி

வீரம் படத்தில் வரும், அபாயமான ரயில் சண்டை காட்சியில் டூப் போட வேண்டாம் என்று தானே அதில் நடித்து இருக்கிறார், நடிகர் அஜித். அவர் நடித்து முடிக்கும் வரை பயந்து போய் இருந்தனர் வீரம் படக்குழுவினர். இதைப் பற்றி கேட்ட போது, "நான் தானே ஹீரோ, நான் தான் வில்லை அடிக்க வேண்டும். காதல் காட்சிகளில், நடிகையை கட்டிப் பிடித்து ஆடும் போது டூப் போடுகிறோமா? இல்லையே, அப்படியிருக்க, சண்டை காட்சிகளில் மட்டும் ஏன் நழுவ வேண்டும்?" என சிறப்பாக பதில் அளித்துள்ளார் அல்டிமேட் ஸ்டார்.

ஒரு புறம், இப்படி வீரத்தை காட்டும் அஜித், வீரம் படத்திற்காக, மழையில் நனைவது போன்ற‌ காட்சிகள் தொடர்ந்து ஒரு வாரமாக எடுக்கப் பட்ட போது, சலிக்காமல் அதில் தான் நடித்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் போது, இயக்குநர் சிவாவை "நீங்க மழையில் நனையாமல் தள்ளி இருங்க" என்று மென்மையாகவும் கூறியிருக்கிறார். 

சூப்பர் ஸ்டார் படித்த பள்ளியை சீரமைக்க கோரி, ரசிகர்கள் வலியுறுத்தல்

சூப்பர் ஸ்டார் படித்த பள்ளியை சீரமைக்க கோரி, ரசிகர்கள் வலியுறுத்தல்

பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படித்த அரசு கன்னட துவக்கப் பள்ளியின் பழைய‌ கட்டிடம் இடிக்கப்பட்டு, புது கட்டிடம் கட்டும் பணி இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக 86 லட்ச ரூபாய் கர்நாடக மாநில அரசால் ஒதுக்கபட்டுள்ளது.

புதிய கட்டிடம் கட்டும் பணி, நடந்து முடிகிறது போல் இல்லாததால், பள்ளியின் கட்டிட‌ நிலை மேலும் மோசம் அடைந்து வருவதாலும், ரஜினி ரசிகர்கள், இப்பிரச்சனைக்கு இம்மாதம் 21ம் தேதிக்குள் ஒரு தீர்வு வர வேண்டும், இல்லையென்றால், கர்நாடகா முழுவதும் தர்ணா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுப்பற்றி கல்வி துறை அமைச்சருக்கும், ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாக கர்நாடக மாநில ரஜினி ஜி சேவா சமிதி துணை தலைவர் பிரகாஷ் கௌடா கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்த் படித்த பள்ளி, அரசு பள்ளியாக இல்லாமல், தனியார் பள்ளியாக இருந்து இருந்தால், ரசிகர்களே முன் வந்து சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டு இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.


ஏ.கே.47 கொடுங்க- எம்.எஸ்.தோனி


தென் ஆப்ரிக்காவுடன், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில், இந்தியா வெற்றி பெறாததை அடுத்து அதிருப்தியுடன் பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் விளையாடவில்லை எனவும், 'கில்லர் இன்ஸ்டின்க்ட் (கொலையாளியின் உள்ளுணர்வு)' இல்லை எனவும் விமர்ச்சித்தார்.



இதைப் பற்றி இந்திய அணி கேப்டன் தோனியிடம் கேட்ட போது, அதற்கு அவர் சிரித்து கொண்டே " கில்லர் இன்ஸ்டின்க்ட் இல்லை என்றால், அடுத்த முறை நாங்கள் ஏ.கே 47 துப்பாக்கி எடுத்த செல்ல வேண்டும் போலிருக்கிறது.." என்று பதில் அளித்துள்ளார்.

டியூடியில நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..

தேவயாணி கோப்ரகேட் விவகாரத்திற்கு பிறகு, அமெரிக்காவிற்கு, தன் எதிர்ப்பை தெரிவித்து, நெருக்கடி கொடுக்கும் வகையிலாக நடந்து வரும் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஜனவரி 16 தேதிக்குள், டெல்லியில் இருக்கும், அமெரிக்க தூதகரத்தின் க்ளப்பு ஒன்றை மூட வேண்டும். இந்த க்ளப்பில் உள்ள ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள், பார்கள், நீச்சல் குளம், டென்னிஸ் மற்றும் கால் பந்து விளையாடும் வசதிகள் என அனைத்தையும் இனிமேல் பயன் படுத்த முடியாது. மேலும், அமெரிக்க தூதகரத்தில் பணி புரியும் எந்த அதிகாரிகளின் வாகங்கள், போக்குவரத்து விதிகளை மீறினால், விதிவிலக்கு ஏதும் இல்லாமல், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது.

இத்தனை கெடுபிடிகள் நடந்து கொண்டிருந்தாலும், ஜனவரி 13 அன்று நடக்கவிருக்கும்,தேவயாணி வழக்கு விசாரணயை ஒரு மாதம் ஒத்தி வைக்குமாறு கேட்டு கொண்டு தேவயாணியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த‌ மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.

ஜில்லா படத்திற்கு தடை விதிக்க கோரி மனு

நடிகர் விஜயின் ஜில்லா படம், நாளை வெளிவர இருக்கும் நிலையில், அப்படத்திற்கு தடை விதிக்க கோரி, சௌமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி, மகேந்திரன், சென்னை சிவில்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

ஜில்லா என்ற பெயரை, தன் படத்திற்கு 2008லேயே பதிவு செய்து வைத்து இருப்பதாகவும், அதே பெயரிலேயே வெளிவர இருக்கும் விஜயின் ஜில்லாவை வெளிவர விடாமல் தடை செய்ய வேண்டுமென மனு தாரர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் விசாரணை இன்று நடை பெறும்.

பிப்ரவரி 8 சென்னை வருகிறார் மோடி

நரேந்திர மோடி, அடுத்த மாதம் எட்டாம் தேதி, பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச சென்னை வருகிறார். அவர் வந்து பேசுவதற்கு முன்பாகவே, எந்தெந்த கட்சிகளுடன், பா.ஜ.க‌ கூட்டணி அமைக்க போகிறது என்று முடிவாகி விடும் என்று பா.ஜ.க வின் சார்பாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மோடியின் வருகையின் மூலம், தேர்தல் பிரச்சாரம், தெற்கு மாநிலங்களில் தொடங்கும் மற்றும், இதுவே சென்னையில் அவர் கலந்து கொண்டு பேச போகும், முதல் பொது கூட்டமும் ஆகும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media