BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 November 2014

ஆண்மை தன்மை அதிகரிக்கும் : செவ்வாழை

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு  செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும் : திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும் : சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும் : தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

உணவே மருந்து : நாவற் பழத்தின் மருத்துவ குணம்



  • சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையு
  • நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
  • மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.
  • பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.
  • நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
  • பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
  • நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
  • பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=78%
மாவுப்பொருள்=20%
புரதம்=0.7%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.02%
பாஸ்பரஸ்=0.01%
இரும்புச்சத்து=1 யூனிட்
மற்றும் வைட்டமின் C, வைட்டமின் B, போலிக் அமிலம் உள்ள‌து.
இவை அனைத்தும் 100 கிராம் நாவல் பழச்சாறில் உள்ள சத்துக்கள்

இஸ்ரேலில் ராஜ்நாத் சிங்

இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் சென்றடைந்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு அவர் முதல் முறையாக வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் சென்றடைந்த பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்தியில், "இந்தியா-இஸ்ரேல் இடையே சுமுகமான நட்புறவு நீடித்து வருகிறது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். இதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், முக்கிய தலைவர்களுடனும் பேச்சு நடத்த உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த சுற்றுப் பயணத்தின்போது தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடுவது, பாதுகாப்பு ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மொனாக்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச காவல் துறை அமைப்பான "இன்டர்போல்' அதிகாரிகளின் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். இதன்பின்னர் டெல் அவிவ் சென்றடைந்த ராஜ்நாத் சிங்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மோஷி யாலோன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்தச் சுற்றுயணத்தின்போது, பழமைவாந்த புனித நகரமான ஜெருசலேம், ஜோர்டான் பள்ளத்தாக்கு, வடக்கு, தெற்கு இஸ்ரேல் ஆகிய பகுதிகளுக்கு ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார்.

அமைதிப் பேச்சுக்கு நிபந்தனை கூடாது : பாகிஸ்தான்


இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான நிபந்தனையையும் ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் பேசியபோது, ""இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் நேர்மையாக அணுக வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தான் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது இந்தியாவுடனா? காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனா? என்றும், அதனை பாகிஸ்தான்தான் தேர்வு செய்ய வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கு மட்டும் சாதகமானதாக கருத முடியாது. இந்தப் பேச்சுவார்த்தையானது தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியையும், அப்பகுதி மக்களின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் எந்தவிதமான நிபந்தனையையும் ஏற்க மாட்டோம். காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருவதை ஐ.நா.சபை தீர்மானம் அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானும் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது. ஆப்கானிஸ்தான்-இந்தியா இடையே நடைபெறும் வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் ஒருபோதும் தடையாக இருக்காது. இதற்கு கராச்சி துறைமுகத்தை இந்தியா தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

குஜராத்: உலகின் மிக உயரமான காற்றாலை கோபுரம் திறப்பு



குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், உலகின் மிக உயரமான காற்றாலை கோபுரத்தை அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை திறந்துவைத்தார். குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் நானிபெர் கிராமத்தில் உலகின் மிக உயரமான, 120 மீட்டர் உயரமுள்ள காற்றாலை கோபுரத்தை சுஸ்ளோன் எரிசக்தி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைத்து ஆனந்திபென் படேல் பேசியதாவது: ""குஜராத் மாநிலமானது காற்றாலை மூலம் மட்டும் 10,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆற்றலுடையதாகத் திகழ்கிறது. மின் உற்பத்திக்குதான் குஜராத் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால்தான் இம்மாநிலம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது'' என்று அவர் கூறினார்.

கருப்புப் பணம் : பாதிக் கணக்குகளில் பணமில்லை: எஸ்ஐடி தகவல்

""சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனீவா நகரில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தொடங்கியுள்ள 600க்கும் மேற்பட்ட கணக்குகளில், பாதிக்கும் குறைவான கணக்குகளில் பணமில்லை'' என்று கருப்புப் பணம் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கருப்புப் பணம் தொடர்பாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான குழு, மத்திய அரசிடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள 628 கணக்குகள் அடங்கிய பட்டியல் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கணக்குகளில் பாதிக்கும் குறைவான கணக்குகளில், அதாவது 289இல் எந்தப் பணமும் இல்லையென்றும், பட்டியலில் 122 கணக்குகள் இரு முறை திரும்பத் திரும்ப தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் குழு தெரிவித்துள்ளது. அந்தக் கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டன? அந்தக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை ஆகியவை தொடர்பான விவரங்கள் பட்டியலில் இல்லை. இந்த விவரங்கள் இல்லாதது, அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெரும் தடையாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள பெயர்களை கொண்டு, வருமான வரித் துறை 150 சோதனைகளை நடத்தியது. அவர்களுக்கு எதிராக ஆய்வும் நடத்தியது. ஆனால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்திடம் தற்போது அந்தப் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள 300 பேரின் பெயர்களுக்கு எதிராக நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், வரி விதிப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது நீண்டகாலம் நடைபெறும் நடவடிக்கை என்றபோதிலும், தற்போதே அந்த நடவடிக்கையைத் தொடங்குவதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்குவதைத் தடுக்க உதவும். இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசும் எஸ்ஐடிக்கு பதில் அளித்துள்ளது. அந்தப் பதிலில், 78 நாடுகளுடன் இந்தியா இதுதொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

அதில், 75 நாடுகளுடன் மத்திய நிதியமைச்சகம் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது. தஜிகிஸ்தான், ஐஸ்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தனது அறிக்கையில், பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடர்பு கொண்டு, சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள அவர்களது கணக்குகள் குறித்த விவரங்களைக் கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கணக்கு விவரங்களை அளிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனையில் இருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் எஸ்ஐடி மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

3 நாடுகளுக்கு மோடி பயணம்



ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட 3 நாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அங்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க தான் ஆவலோடு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: பல்வேறு உச்சி மாநாடுகள், இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பதற்காக, வரும் 11ஆம் தேதி முதல் மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளில் நான் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். மியான்மர் சுற்றுப்பயணத்தின்போது, அங்கு நடைபெறவுள்ள ஆசியான், கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன். அந்த மாநாடுகளுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் ஆழமானது. ஆசியான் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவது "கிழக்கு நோக்கிய கொள்கை'யின் முக்கிய அம்சமாகும். இந்தியா முக்கியப் பங்காற்றக்கூடிய வகையில், இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்பது நமது கனவு. அந்தக் கனவை ஆசியான் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும். இந்தச் சந்திப்புகள் நல்ல முறையில் அமையும் என உறுதியாக நம்புகிறேன். மியான்மர், இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாகும். அந்நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற முறையில் எனது ஆஸ்திரேலியப் பயணமானது, மிகவும் சிறப்பு வாய்ந்தது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். என்னை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளேன். அப்போது, உலகப் பொருளாதாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன். இதுபோல, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியச் சமூகத்தினரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

கிரிக்கெட் விளையாட்டு என்பது இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பொதுவான நாகரிகமாகி விட்டது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைக்க எனக்கு அழைப்பு விடுத்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவது உலகப்போரின்போது, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தோளோடு தோள் சேர்ந்து ஒரே அணியில் போரிட்டன. எனது ஆஸ்திரேலியப் பயணத்தின்போது அபோட்டுடன் போர் வீரர்களின் நினைவிடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media