BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 31 July 2014

விகாஸ் கவுடா தங்கம் வென்றார்




காமென்வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா 63.64 மீ எறிந்து தங்கம் வென்றார். தடகளத்தில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இது. இதன் மூலம் இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 5 வது இடத்திற்கு முன்னேறியது.

காமென்வெல்த்தில் எத்தனை வெற்றிகளை பெற்றாலும் சோகத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள்




காமென்வெல்த்தில் இந்திய வீரர்கள் பல வெற்றிகளை குவித்து வந்தாலும் அதனை பாராட்டுவது என்ன மிகவும் சிலரே . ஏனென்றால் நாம் அனைவருக்கும் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு. அதை தவிர வேறு எதுவும் தெரியாது. சச்சினை தெரியாது என்றால் பொங்கி எழுவோம், ஆனால் இந்த காமென்வெல்த்தில் தங்கம் வென்றவர்கள் பெயரை கேட்டால் தெரியாது.

மல்யுத்தத்தில் மலை போல் இருக்கிறார்கள் இந்திய வீரர்கள். காமென்வெல்த்தில் மல்யுத்தத்தில் மட்டும் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்று உள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் யோகேஷ்வர் தத் மற்றும் பாபிதா தங்கம் வென்றனர். கீதிகா வெள்ளி பதக்கம் வென்றார். பவண் குமார் வெண்கல பதக்கம் வென்றார். துப்பாக்கி சூடுதலிலும் பல வெற்றிகளை பெற்று உள்ளார்கள். நாம் அதிக பதக்கங்களை வென்றது துப்பாக்கி சூடுதலில் தான்.

தீபா கர்மாக்கர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் இவர் தான். ஆஷிஷ் குமாருக்கு அடுத்து பதக்கம் வெல்லும் அடுத்த இந்தியன் இவர் தான்.
அதோடு  நேற்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 5-2 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பள்ளிகல் - ஜோஷ்னா  பொன்னப்பா ஜோடி பதக்கம் வெல்லும் வாய்ப்பில் உள்ளது.

இப்படி நாம் பெருமைபடுவதற்கு பல காரியங்கள் இருந்தாலும் இந்தியன் ஏனோ சோகத்தில் தான் இருக்கிறான். ஏனென்றால் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்று விட்டதாம். அங்கே தோற்றவனுக்கு இங்கு பல கண்கள் கண்ணீர் சிந்துகின்றன , ஆனால் இங்கே வெற்றி பெற்றவனை வாழ்த்த சில கைகளே வருகின்றன.


இந்தியா-இங்கிலாந்து தொடரில் புதிய திருப்பம்




இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 வது டெஸ்டில் இந்தியாவும் ,3 வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. 2 வது டெஸ்டில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஷாந்த் சர்மா 3 வது டெஸ்டில் விளையாடவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது.


இந்நிலையில் 4 வது டெஸ்டில் விளையாடுவதற்கு நமன் ஓஜா அழைக்கப்பட்டு உள்ளார். இவர் காயமடைந்து உள்ள விர்திமன் சாஹாவுக்கு பதில் உள்ளே வருகிறார். இவர் இந்தியா ஏ அணிக்காக 219, 101,110 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்க உள்ள 4 வது டெஸ்டில் விளையாடுவதற்கு 4 ஆம் தேதி இங்கிலாந்து வருகிறார். இனியாவது இந்தியாவின் பேட்டிங்கில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை நீங்கள் கவனீத்தீர்களா ??



நாம் அனைவரும் இன்று பேஸ்புக்கின் லாகின் செய்து வழக்கம்போல் பேஸ்புக்கில் உலவிக் கொண்டு இருப்போம் . ஆனால் பேஸ்புக் ஒரு சிறிய மாற்றத்தை செய்து இருப்பதை நாம் கவனித்து இருக்க மாட்டோம் .

முன்னர் பேஸ்புக்கில் மேல் வலது ஓரத்தில் நோட்டிபிகேஷன் ஐகானில் , உலகம் போன்ற உருண்டையில் முன்னர் அமெரிக்காவின் வரைபடம் போன்ற தோற்றம் மட்டுமே இருக்கும் . இப்போது நாம் இருக்கும் இடத்திற்கேற்ப அந்த தோற்றம் மாறும் வகையில் வடிவமைத்து உள்ளனர் . ஆசியா , ஐரோப்பா , ஆப்ரிக்கா போன்ற இடங்களில் இருந்து நாம் லாகின் செய்தால் அந்த கண்டங்கள் உள்ள வரைபடம் தோன்றும் .



இது சிறிய மாற்றம் தான் என்றாலும் பேஸ்புக் சிறிய இடங்களில் கூட எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று பாருங்கள் .


ஐரோப்பாவில் தோன்றும் பேஸ்புக் :


அமெரிக்காவில் தோன்றும் பேஸ்புக் :


உசேன் போல்ட் உடன் "செல்பி" எடுத்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி !!



காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது . உலகின் பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது அவருடன் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டனர் . இப்போது அந்த மூன்று அதிகாரிகளும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் .

இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " அவர்களும் மூவரும் காமன்வெல்த் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் . ஆனால் நிறுவனத்தில் தொடர்ந்து பணி புரிவர் . அவர்கள் தொழில்முறையில் நடந்து கொள்ள வேண்டும் . இப்படி வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு இருக்க கூடாது " என்றார் .



காஸாவிற்கு ஆதரவாக , இஸ்ரேலிய ஊளவுத்துறை "மொசாத்" தின் இணையத்தை ஹேக் செய்தனர் !!



காஸா இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் , மிகவும் பிரபலமான  " அனானிமஸ் " என்னும் ஹேக்கர் குழு இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத்தின் இணைய தளத்தை ஹேக் செய்தது .

ஜூலை 7 ஆம் தேதி முதல் இந்த ஹேக்கர் குழு , இஸ்ரேலின் முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து வருகிறது . இதுவரை ஆயிரக்கணக்கான இஸ்ரேல் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு உள்ளது .

மேலும் இவர்கள் 5,000 முக்கிய அதிகாரிகள் பற்றிய விவரங்களை கசிய விட்டனர் . மேலும் இஸ்ரேலின் துணை பிரதமரின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் அக்கொண்டை ஹேக் செய்தது இந்த குழு .

மருந்துகளை இந்தியாவுக்குள் கடத்த நிழல் உலக தாதாவுடன் ஒப்பந்தம் போட்ட போக்கோ ஹாரம் அமைப்பு !!



நைஜீரியாவில் போக்கோ ஹாரம் என்னும் அமைப்பு மேற்கத்திய கல்விமுறைகளை திணிப்பதை எதிர்த்து போராடி வருகின்றனர் . இவர்கள் சில மாதங்களுக்கு முன் 300 மாணவிகளை கடத்தி உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்தனர் .

இப்போது வந்துள்ள உளவுத் துறை அறிக்கையின்படி நிழல் உலக தாதாவான தாவூத் உடன் இந்த அமைப்பினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது . இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் மருந்துகளைக் கடத்த திட்டமிட்டுள்ளனர் .

எந்தவொரு அமைப்புக்கும் தொடர்ந்து போரிட பணம் வேண்டும் . பணம் வேண்டும் என்பதற்காக போக்கோ ஹாரம் அமைப்பு இந்தியாவிற்குள் மருந்துகளை கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர் . அதற்காக தாவூத் இப்ராகிம் உடன் கூட்டு சேர்ந்துள்ளனர் .

சில வருடங்களுக்கு முன் தாவூத்தின் கூட்டம் அல் - கொய்தா அமைப்பிடம் இருந்து மருந்துகளை வாங்கி பதிலுக்கு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது . இந்த போக்கோ ஹாரம் அமைப்பும் அல்-கொய்தா அமைப்பின் உதவியில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய செய்திகள் - Satrumun Special News

ரஜினி குடும்பத்தில் தனுஷ்க்கு நடந்த அவமானம், விஐபியில் சகலையை வில்லனாக்கிய தனுஷ், குடும்பத்தில் குடுமிப்பிடி

நீங்கள் சாப்பிடும் சிக்கன் உட்கொள்ளும் மருந்து செயல்படாமல் தடுக்கும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!

சியோமி மொபைலில் உள்ள ஆபத்தான விஷயம்

காஸாவில் சண்டையிடும் வீரர்களுக்கு ஆதரவாக நிர்வாணமாக போஸ் தரும் இஸ்ரேலியப் பெண்கள் !!

இந்தியாவின் தோல்வியிலும் 3 சாதனைகள் புரிந்த தோனி

சிறுமியைக் கற்பழித்தவர்களை அடித்துக் கொன்ற கிராம மக்கள் !!

எங்ககிட்டேயேவா...? : 'போக்கு' காட்டிய சிம்புவுக்கு 'டாட்டா' காட்டிய பாண்டிராஜ்!

கற்பழிக்க முயன்றவர்களை கட்டி போட்டு அடித்து நொறுக்கிய பெண்கள் - படங்கள் !!

உலகின் நம்பர் 1 ஜோடிக்கு ஆப்பு வைத்த தமிழக ஜோடி !!

நன்றியுடன் இருந்த பாம்பின் பாசம், மரணத்திலும் இணைந்த பாம்பு, கண்ணீருடன் மக்கள்

மத்திய அரசிடம் இருந்து 50,000 ரூபாய் பரிசாக வெல்ல வேண்டுமா ??

ஸ்ருதி ஹாசனுடன் காதல் செய்யபோகும் வைகைப்புயல் வடிவேலு

100 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ உள்ளார் சல்மான் கான் !!

ராகுல் டிராவிட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 கருத்துகள்

கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டது

அம்மாவையும் கொன்றுவிடுவார்கள் என பயந்து ராகுல் தடுத்ததால் தான் சோனியா பிரதமர் ஆகவில்லை - குண்டு போடும் முன்னால் அமைச்சர்


நீங்கள் சாப்பிடும் சிக்கன் நீங்கள் உட்கொள்ளும் மருந்தை செயல்படாமல் தடுக்கும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!


நான் வெஜ் பிரியரா நீங்கள் !!! அதுவும் சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா !! கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது .

சி.எஸ்.இ என்னும் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் நடத்திய ஆய்வில் சிக்கனில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பது தெரிய வந்துள்ளது . மேலும் நாம் உண்ணும் இரண்டில் ஒரு கோழியில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது .

டில்லி மற்றும் அதனை சுத்தி உள்ள இடங்களில் நடந்த இந்த ஆய்வின் முடிவில் மொத்தம் 70 கோழி மாதிரிகளில் , நாம் அடிக்கடி பயன்படுத்தும் 6 ஆண்டிபயாட்டிக் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது . மேலும் 17 சதவீத மாதிரிகளில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆண்டிபயாட்டிக் மாதிரிகள் கலந்து இருப்பதையும் கண்டறிந்தனர் .


ஏன் கோழியில் ஆண்டிபயாட்டிக் சேர்க்கின்றனர் ??

பதில் மிகவும் சுலபம் . ஆண்டிபயாட்டிக் சேர்ப்பதனால் கோழிகள் விரைவில் வளர்ந்து அதிக எடை அடைந்து விடுகிறது . இதனால் உரிமையாளர்கள் அதிக நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியதில்லை . அவர்களுக்கு லாபமும் விரைவில் கிடைத்து விடுகிறது .

இதனால் நமக்கு என்ன பிரச்சனை ??

கோழிகளிடம் அதிக அளவு ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்படுவதால் , கோழி மிகவும் சத்தான ஒன்றாக மாறிவிடுகிறது . மேலும் அந்த கோழி ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது . அதை நாம் உட்கொள்ளும் போது அதே போன்று நமது உடலும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது .

ஒரு சிறிய பாகத்தை மட்டும் தவிர்த்து விட்டு சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு . கோழியில் இருக்கும் சிறிய பாக்டரீயா நமது உடலுக்குள் புகுந்த உடன் அந்த பாக்டரீயா நமது உடலில் வளர்ந்து விடுகிறது . இது கோழிகளுக்கு மட்டுமில்லை அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் இப்படி தான் நடக்கிறது .

ஒரு ஆண்டிற்கு 240 கோடி கோழிகள் இந்தியர்களால் உட்கொள்ளப்படுகிறது . அப்படி என்றால் எவ்வளவு ஆண்டி பயாட்டிக் என்பதை நீங்களே கணக்கிட்டு பாருங்கள் . 

இந்தியாவின் தோல்வியிலும் 3 சாதனைகள் புரிந்த தோனி




இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிக பெரிய தோல்வியை கண்டது. இந்தியா இந்த போட்டியில் தோற்றாலும் தோனி 3 சாதனைகள் புரிந்து உள்ளார். அவை,

1. இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து எதிராக அதிக 50 க்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்னும் பெருமையை பெற்றார். இவர் 6 வது 50 ரன்களை பதிவு செய்தார்.

2. கேப்டனாக அதிக 6 அடித்த வீரர் இவர் தான். இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்தது 50 வது சிக்ஸ் ஆகும். இவருக்கு அடுத்து பிரைன் லாரா 49 சிக்ஸர்களுடன் 2 வது இடத்தில் உள்ளார்.

3. இங்கிலாந்துக்கு எதிராக தோனி 10 வது 50 ரன்னை எடுத்தார். ஒரு அணிக்கு எதிராக சதம் அடிக்காமல் அதிக 50 ரன்களை எடுத்த வீரர் தோனி தான்.

பெண்ணை தாக்கிய டிரைவர்களை கட்டி போட்டு சாத்திய பெண்கள் - படங்கள் !!



ஒரு பெண்ணைக் கட்டி போட்டு கற்பழிக்க முயன்ற இரு டிரைவர்கள் கையும் களவுமாக மாட்டினர் . அவர்களை கட்டி போட்டு நிர்வாணமாக்கி  அந்த பெண்கள் கூட்டம் உதைத்தது . இனிமேல் அந்த டிரைவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும் முன் ஒரு முறை சிந்தித்து செயல்படுவர் .

அந்த டிரைவரினை உதைக்கும் படங்கள் வெளிவந்துள்ளது . அந்த படத்தினைக் கீழ்க் காண்போம் :









பிளிப்கார்ட்டால் சியோமி மொபைலுக்கு வந்து இருக்கும் புதிய எதிர்ப்பு




சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது கடந்த செவ்வாய்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை 22 ஆம் தேதி அன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன. ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன.

அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள்.

2 வது சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 5 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. அந்த அளவுக்கு இந்த மொபைல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 20,000 மொபைல்கள் விற்று  தீர்ந்து உள்ளன. அது தான் அதற்கு புதிய பிரச்சனையை கிளப்பி உள்ளது. இந்த மொபைலை வாங்குவதற்கு பலர் முன்பதிவு செய்து விட்டு காத்து இருந்தார்கள், ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் முன்பதிவு செய்யவில்லை என்று காட்டுகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். உடனடியாக புக் செய்யலாம் என்று பார்த்தால் அவுட் ஆப் ஸ்டாக் என்று வந்துவிடுகிறது.

2.00 மணிக்கு தொடங்கிய விற்பனை 2.01 மணிக்கு தீர்ந்து விடுகிறது. இந்த மொபைலுக்கு விளம்பரம் தேடுவதற்காக பிளிப்கார்ட் நிறுவனமும் சியோமி நிறுவனம் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்துவதாக கூறுகிறார்கள். இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொதிக்கும் எண்ணெய்யில் கையால் சுட்ட வடை ரூ.18300 க்கு ஏலம் போனது




கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் பக்தர் கொதிக்கும் எண்ணையில் கையால் வடை எடுத்தார். இது அங்கு இருந்த கடவுளுக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்பட்டது. மொத்தம் கையால் 7 வடைகள் சுடப்பட்டது. அந்த வடைகள் பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 7 வடைகளும் ரூ.18 ஆயிரத்து 300க்கு ஏலம் போனது. இதனை பக்தர்கள் போட்டிப்போட்டு வாங்கினர்.


இந்த வடையை சாப்பிட்டால் குழந்தை பிறக்காத பெண்களுக்கு குழந்தை பிறக்குமாம். கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு நிகரான எடைக்கு நிகராக அவர்களுக்கு நாணயம் வழங்கப்பட்டது.

ரஜினி குடும்பத்தில் தனுஷ்க்கு நடந்த அவமானம், விஐபியில் சகலையை வில்லனாக்கிய தனுஷ், குடும்பத்தில் குடுமிப்பிடி

ரஜினி குடும்பத்தில் தனுஷ்க்கு நடந்த அவமானம், சகலையை வில்லனாக்கிய தனுஷ், குடும்பத்தில் கும்மியடித்த வேலை இல்லா பட்டதாரி

ரஜினி குடும்பத்தில் 10வது வரை படித்த தனுஷ்க்கும் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. படித்த  இன்னொரு மாப்பிள்ளைக்கும் இடையில் நடந்த முட்டல், மோதல் தான் "வேலையில்லா பட்டதாரி" படத்திலும் எதிரொலித்திருக்கிறதாம்.

தனுஷை ஐஸ்வர்யா காதல் திருமணம் செய்து கொண்டது ரஜினி குடும்பத்தில் நிறையை வருத்தம், மேலும் தன் கணவர் தனுஷ்க்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற வருத்தம் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு நிறையவே உண்டு, செளந்தர்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டாலும் செளந்தர்யா திருமணம் செய்தது அஷ்வின் என்கிற மிகப்பெரிய கோடீஸ்வர வீட்டுப்பிள்ளையை.

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா திருமணத்திற்கு யாரோ ஒரு மூன்றாம் மனிதர்களாக தான் தனுஷ்ஷூம் ஐஸ்வர்யாவும் வந்து போனார்கள், அதிலேயே தனுஷ்ஷையும் ஐஸ்வர்யாவையும் ரஜினி குடும்பம் கொஞ்சம் தூரத்தில் வைப்பது தெரிய வந்தது, ரஜினியின் இரு மகள்களும் கடந்த இரண்டாண்டுகளாகவே மனவருத்தம் இருப்பது மீடியாவில் கசிந்தது.

இது வெளிப்படையாக தெரிந்தது ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான், மேடையில் தனது குடும்பத்தில் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொன்ன செளந்தர்யா தனது அக்கா ஐஸ்வர்யாவையும், அவரது கணவர் நடிகர் தனுஷையும் கண்டு கொள்ளவேயில்லை.

தனுஷ் நடித்து வெளியாகி ஹிட் அடித்திருக்கும்  "வேலையில்லா பட்டதாரி" திரைப்படத்தில் தனுஷை எதிர்க்கும் வில்லன் அருணின் காரக்டர் கிட்டதட்ட அஸ்வினை போலவே அமைக்கப்பட்டிப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பணக்கரா பெரிய பில்டிங் காண்டிராக்டர் மகனாக வருவதும், அமுல்பேபி என அடிக்கடி நக்கலடிப்பதும் வேண்டுமென்றே சகலையை போட்டு தாக்க தனுஷ் செய்திருக்கும் வேலை என்று கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் செளந்தர்யாவின் கணவர் அஷ்வினின் தந்தை சென்னையில் பல்லாயிரம் கோடி சொத்துமதிப்புள்ள பில்டிங் கண்ஸ்டிரக்ஷன் பிசினஸ் மேக்னேட் ஆவார். தற்போது தந்தையின் பில்டிங் கன்ஸ்ட்ரஷன் பிசினசை பார்ப்பது அஷ்வின் தான்.

இப்படி தனது கணவரை வேலை இல்லா பட்டதாரி படத்தில் கேவலப்படுத்தி தாக்கியுள்ளதை கண்டு வெகுந்த செளந்தர்யா அக்கா ஐஸ்வர்யாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதாகவும் தற்போது பஞ்சாயத்து சூப்பர்ஸ்டாரிடம் சென்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன, தற்போது பெங்களூரில் ஷூட்டிங்கில் இருப்பவர் சென்னை வந்து பேசிக்கொள்வதாக கூறியுள்ளாராம்.

ஒரு பாம்பின் பாசம் பலரையும் கண்ணீர் சிந்த வைத்து உள்ளது






நாம் இப்போது இருக்கும் உலகில் நமக்கு தெரிந்த நபருக்கு உதவி செய்வதற்கே யோசிப்பார்கள். அதையும் மீறி சில நல்லவர்கள் உதவி புரிந்தால் அதனை மறந்து விடுகிறார்கள். ஆனால் அந்த கேவலமான குணம் மனிதர்களிடத்தில் தான் உள்ளது. மிருகங்களிடத்தில் இருப்பது இல்லை. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம்.

போட்டோவில் பிணமாக இருக்கும் அந்த நபரின்  பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொண்டு  சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடன்  வளர்த்து வந்தார். ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாயையும் பிள்ளையையும்  போல பழக ஆரம்பித்துவிட்டனர் . இப்படியே பல ஆண்டுகள் சென்றன .

திடீரென்று ஓருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது, அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவே இல்லை. இது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர் உடலை விடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்.

இந்த சம்பவம் அங்கு இருந்த பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. 

கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டது




ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நல்ல தொடக்கத்தை தருபவர் ஜஸ்டின் லேங்கர் . அவர் இப்போது வெஸ்டர்ன் வாரியர்ஸ் என்னும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். அவர் கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகளை படைத்து உள்ளார். அவருக்கு இப்போது 43 வயது ஆகிறது. அந்த சாதனைகள்,

1. 60 நொடிகளில் 23 பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முந்தைய சாதனையில் 19 பந்துகள் எதிர்கொள்ளப்பட்டு இருந்தது.

2. ஒரு கிரிக்கெட் கிட்டை அணிவதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் 38.81 நொடிகள். கிரிக்கெட் கிட் என்றார் அதில் 2 பேடுகள், 2 கையுறைகள், ஹெல்மட், ஸ்வட்டர், ஆர்ம் பேண்டு ஆகியவை அடங்கும். இதற்கு முந்தைய சாதனையில் இதற்கு 78 நொடிகள் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த போவதாக கூறினார்.

ஸ்குவாஷ் : உலகின் நம்பர் 1 ஜோடிக்கு ஆப்பு வைத்த தமிழக ஜோடி !!



தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் , ஸ்குவாஷ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஜோடியாக இருந்து வரும் மலேசிய ஜோடியை இந்திய ஜோடியான தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா தோற்கடித்தனர் . இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே தீபிகா காலிறுதி போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


ஸ்ருதி ஹாசனுடன் காதல் செய்யபோகும் வைகப்புயல் வடிவேலு





ஸ்ருதி ஹாசன் இப்போது விஷாலுடன் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்தவுடன் விஜய் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அது முடிந்தவுடன் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கார்த்தி தற்போது கொம்பன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் படத்தின் இயக்குனர் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நாயகியாக தான் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.


இதில் ஸ்ருதி ஹாசனை ஒரு தலையாக காதலிக்கும் காமெடி வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். முதல் முறையாக கார்த்தி படத்தில் ஸ்ருதி ஹாசனும், வடிவேலுவும் நடிக்கிறார்கள். ஏற்கனவே போக்கிரி படத்தில் அசினை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது மீண்டும் அது போல் ஒரு வெற்றி படம் வருமா என்று பார்ப்போம்.

100 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ உள்ளார் சல்மான் கான் !!



பாலிவுட் நட்சத்திர நடிகர்களுல் ஒருவர் சல்மான் கான் . இவரது தற்போதைய படமான  " கிக் " 100 கோடிக்கு மேலாக வசூல் சாதனை புரிந்தது . இதன் மூலம் தொடர்ந்து 7 படங்களாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார் சல்மான் கான் .

இவர் எப்போதும் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பவர் . தொண்டு செய்வதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அடிக்கடி கூறுபவர் .

இதன் முதல் கட்டமாக 100 குழந்தைகளின் இதய நோய்களை தீர்க்க உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார் . இந்த அறிவிப்பை ரம்சான் தினத்தன்று அறிவித்தார் .

ராகுல் டிராவிட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 கருத்துகள்





இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் டிராவிட்டை பற்றி உலக சிறந்த வீரர்கள் கூறிய கருத்துகள்.

* ஸ்டீவ் வாஹ் : டிராவிட்டை முதல் 15 நிமிடங்களில் வீழ்த்தி விடுங்கள் இல்லையெனில் மீதி உள்ள அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுங்கள் என்று பவுலர்களுக்கு அறிவுரை கூறினார்.

* ரசிகர் கருத்து : இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் மேன் சச்சின் என்றால் டார்க் நைட் டிராவிட்டாக இருக்கும்.

* ஹர்ஷா போகுள் : நேர்மையாக விளையாடும் அணிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் இருந்த  போது, டிராவிட்டை பார்த்தாலே 10 புள்ளிகள் தந்து விடுகிறார்கள்.

* கிறிஸ் கெய்ல் : டிராவிட்டால் என்னை போன்று அதிரடியாக விளையாட முடியும் ஆனால் என்னால் டிராவிட்டை போன்று ஆட முடியாது.

* ஐயன் சேப்பல் : அணிக்கு பிரச்சனை என்றால் டிராவிட்டை அழையுங்கள்

* மாத்யு ஹேடன் : உலகில் நடப்பவை எல்லாம் ஆக்கிரமிப்பு இல்லை, டிராவிட் கண்களில் தெரிவது தான் உண்மையான ஆக்கிரமிப்பு.

* சித்து : தன் அணியினர் சொன்னால் உடைந்த கண்ணாடியிலும் நடக்க கூடியவர் டிராவிட்.

* பிரைன் லாரா : எனது வாழ்க்கை முடியும் வரை பேட் செய்ய வேண்டுமானால் அது டிராவிட் மற்றும் காலிஸால் தான் முடியும்.

* பிரட் லீ : டிராவிட்டோடு ஒத்து போக முடியவில்லை என்றால் உங்களுக்கு வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உள்ளது.

* ரசிகர் கருத்து : உங்களுக்கு டிராவிட்டை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பைத்தியகார மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்.

மத்திய அரசிடம் இருந்து 50,000 ரூபாய் பரிசாக வெல்ல வேண்டுமா ??


மத்திய அரசு இந்திய குடிமகன்களுக்கு 50,000 வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது . நிதி அமைச்சகம் , மக்களை உள்ளடக்கிய நிதி சேவைகளை வழங்க முதல் நடவடிக்கையாக , லோகோ , பெயர் மற்றும் டேக்லைன் ஆகியவற்றை வடிவமைத்து அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது . சிறந்த வடிவமைப்புக்கு பரிசுத் தொகையாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது .

இந்த போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் - ஆகஸ்ட் 7 , 2014 .
போட்டியில் கலந்து கொள்ள http://mygov.nic.in/index என்ற லிங்கிற்கு செல்லவும் .

சியோமி மொபைலில் உள்ள ஆபத்தான விஷயம்





சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது கடந்த செவ்வாய்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை 22 ஆம் தேதி அன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன. ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன.


அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள்.


2 வது சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 5 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. அந்த அளவுக்கு இந்த மொபைல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இந்த மொபைலில் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்கள் சைனாவுக்கு அனுப்பபடுகிறது. ஆனால் இது குறித்து நம்மிடம் எந்த அறிவுப்பும் இல்லை. அப்படியானால் இது நம்மை வேவு பார்ப்பதற்கு சமம். இது எதற்காக என்றால் நமது டேட்டாக்களை பேக்கப் எடுப்பதற்கு என்று கூறுகிறார்கள்.  ஆனால் இது சரியான பதிலாக தெரியவில்லை. என்வே இது குறித்து சியோமி நிறுவனம் தெளிவான பதிலை தர வேண்டும்.

காஸாவில் சண்டையிடும் வீரர்களுக்கு ஆதரவாக நிர்வாணமாக போஸ் தரும் இஸ்ரேலியப் பெண்கள் !!



காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து , இஸ்ரேலிய ராணுவப் படை போரிட்டு வருகிறது . இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்தாலும் அவர்களின் சொந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர் .

பேஸ்புக்கில் தனி பேஜ் ஒன்றை தொடங்கிய இவர்கள் , தங்களின் அரை நிர்வாண போட்டோக்களை பதிவு செய்ய தொடங்கினர் . அவர்களின் உடலில் ஆங்காங்கே , " ஐ சப்போர்ட் ஐ.டி.எப் " என்று எழுதி தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . இந்த பேஜ் பேஸ்புக் முழுவதும் ஹிட் ஆனது .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media