குழந்தைகளுக்கு எப்போதும் வண்ணமயமாக இருப்பது பிடிக்கும் . அதனால் இவர்களை மயக்கி தங்கள் வியாபாராத்தை அதிகரித்துக் கொள்ள பல நிறுவனங்கள் முயன்று பல நிறங்களில் டிபன் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது . நம்முடைய செல்லக் குழந்தைகள் ஆசை ஆசையாக கேட்ட டிபன் பாக்ஸில் தான் அவர்களுக்கு பல நோய்களை கொடுக்கும் ஆபத்தும் ஒழிந்து கொண்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ??
சமீப காலத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இது போன்ற டிபன் பாக்ஸ் செய்கின்ற பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் நமது குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவது மட்டும் இல்லாமல் , அவர்களுக்கு டையாபடிஸ் , நெஞ்சு வலி போன்ற நோய்களும் வருகிறது .
இந்த பிளாஸ்டிக்கில் பிஸ்பெனால் - எ (பிபிஎ ) என்னும் தீங்கு விளைவிக்கும் ரசாயம் இருக்கிறது . இது பெரியவர்களுக்கு நரம்பியல் சிதைவுக் கோளாறுகள் ஏற்படுத்துகிறது . மேலும் பல கோளாறுகளை உண்டாக்குகிறது .
பெண்களுக்கு பெண்மை அடைவதற்கும் , பெண் அம்சங்களை பெறுவதற்கும் உதவும் ஈஸ்ட்ரோஜென் என்னும் இயக்குநீர் உண்டாவதை தடுக்கும் . சிறுவயதில் மகளிர் இந்த பிபிஎ என்னும் இரசாயத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் , அது அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பல பாதிப்புகளை உண்டாக்கும் . மேலும் இந்த பிபிஎ மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து உள்ளது .
இதை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை தலைவர் வி என் மிஷ்ரா தெரிவித்தார் .
அமெரிக்காவின் சில இடங்களில் குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பதில் இந்த பிபிஎ என்னும் இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது .