BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 May 2014

மோடி பதவியேற்பு விழாவில் 3000 பேர் பங்கேற்பு; 10,000 பேர் பாதுகாப்பு


நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே திறந்த வெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட 3000 அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிகழ்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி போலீஸ் இணை கமிஷனர் எம்.கே.மீனா இன்று கூறும்போது, குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவித்தார்.

துணை ராணுவப்படையினர், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

புது டெல்லியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடாதவகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதன் எதிரொலி: 151 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்


நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் ஏ.சி. பேருந்தில் கராச்சியில் இருந்து வாகா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 229 இந்திய மீனவர்கள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும், சுமார் 780 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் உயிரிழந்த மேஜர் முகுந்தின் வீட்டிற்கு திடீரென சென்ற நடிகர் விஜய்

கடந்த மாதம் காஷ்மீரில் தீவீரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலின்போது விரமரணம் அடைந்தவர் சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன். அவரது மனைவி பெயர் இந்து, மற்றும் அவரது மூன்று வயது பெண் பெயர் ஆர்ஷேயா. வரதராஜனின் வீர‌மரணத்துக்கு நாடே அஞ்சலி செலுத்தியது. மேலும், உரிய ராணுவ மரியாதையுடன் சென்னையிலேயே அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், நாட்டிற்காக உயிர் நீத்த முகுந்த் வரதராஜன், வீட்டிற்கு திடீரென சென்று அவரது குடும்பத்தினரிடம் தனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார். மேலும் கொஞ்சநேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் சிறுகுழந்தையைப்போல் விளையாடி அவளை மகிழ்வித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படித்து சாதனை செய்த‌ மாணவர்களுக்கு முதல்வரின் நிதி உதவி கிடைக்க ஏற்பாடு

மதுரை காக்கைப்பாடினியார் மேல்நிலைப் பள்ளி மாணவி அனுசியா 494 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தைப் பிடித்தார். தாய், தந்தையை இழந்த இவர் தற்போது தாத்தா, பாட்டியுடன் மதுரை சின்னச் சொக்கிகுளத்தில் வசித்து வருகிறார். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை மூலமே இதுவரை அனுசியாவின் படிப்புச் செலவை அவரது தாத்தா, பாட்டி மேற்கொண்டு வந்தனர். ஆனால் மேல்படிப்புக்கு அந்த பணம் போதுமானதாக இருக்காது. எனவே மருத்துவராக விரும்பும் தனது லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் அனுசியா கண்ணீர் வடித்த புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இதைக்கண்ட தன்னார்வலர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் நிர்வாகக் குழுவினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அனுசியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். பிடிஆர் கல்வி நிறுவனத்தினர் அனுசியாவின் வீட்டுக்கே சென்று, அவரது படிப்புச் செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதேபோல் மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்றிருந்த மற்றொரு மாணவியான கிருஷ்ண வேணியும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுதவிர பிளஸ் தேர்வில் 1129 மதிப்பெண் பெற்று மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில் மணிமாறன் என்ற மாணவர் இரண்டாமிடம் பெற்றிருந்தார். இவர் வெல்டிங் வேலை செய்துகொண்டே படித்து சாதனை படைத்தது பற்றியும், கல்வி உதவிக்காக ஏங்குவது குறித்தும் ஏற்கெனவே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் இருந்து இந்த 3 பேரின் விவரங்களை யும் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மூலம் கேட்டுப் பெற்றுள்ளனர்.

இதுதவிர பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சங்கீதாவின் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த 4 பேருக்கும் விரைவில் முதல்வரிடமிருந்து நிதி உதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் கிறுக்குத்தனமான‌ 10 செக்ஸ் சட்டங்கள்



1. கொலம்பியாவில், காலி மாநிலத்தில் மனைவி கணவனுடன் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும், அது முதல் முறை நடக்கும் போது மனைவியின் தாய் அறையினுள் தங்கி அதற்கு கண்ணால் பார்த்த சாட்சியாக இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது

2. ஒரு ஆண் ஒரு பெண்ணுடனும் அந்த பெண்ணின் மகளுடனும் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்வது  பொலிவியாவில் சாண்டா குரூஸ்சில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்

3.டாப்லெஸ் சேல்ஸ் உமன்கள் இங்கிலாந்தில் லிவர்பூலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்,  ஆனால் இது மீன்கடைகளில்(tropical fish stores ) மட்டும் தான் இதற்கு அனுமதி

4.துரோகம் செய்த கணவனை அடித்து கொல்ல மனைவிக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு, ஆனால் வெறும் கையால் தான் அடித்துக்கொள்ளவேண்டும், இந்த விதி இருப்பது ஹாங்காங்கில்

5. குவாம் (Guam ) நாட்டில் கன்னிப்பெண்களை திருமணம் செய்ய தடை உள்ளது, எனவே பல ஆண்கள் கன்னிப்பெண்களுடன் உறவு கொள்வதை ஃபுல்டைம் ஜாப் ஆக வைத்துள்ளார்கள்

6. இந்தோனேசியாவில் சுயஇன்பம் மேற்கொண்டு பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டும்.

7. ஒரு குறிப்பிட்ட மதத்தில் உயிரழந்தவர்களின் பாலுறுப்புகளை பார்க்க தடை உள்ளது, எனவே இறந்தவர்களின் பாலுறுப்பின் மீது செங்கல் அல்லது கட்டையை வைத்துவிடுவார்கள்.

8. பக்ரைனில், ஆண் மருத்துவர் பெண்களின் பிறப்புருப்புகளை சோதனை செய்யலாம்,  ஆனால் நேரடியாக அதை பார்க்க கூடாது, கண்ணாடி பிரதிபலிப்பின் வழியாக பார்க்கலாம்.

9. லெபனாலில், ஆண்கள் மிருகங்களுடன் உறவு கொள்ள அனுமதியுண்டு, ஆனால் உறவு கொள்ளும் மிருகம் பெண்ணாக இருக்க வேண்டும், ஆண் மிருகங்களுடன் ஒரு ஆண் உறவு கொண்டால் அது மரண தண்டனைக்குறிய குற்றம்.

10. ஆட்டுகுட்டியுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே ஆட்டை அடித்து சாப்பிட்டால் அது மரணதண்டனைக்குறிய குற்றம், இந்த சட்டம் சில‌ மத்திய ஆசிய‌  நாடுகளில் உள்ளது

ராஜபக்சே வருகையை எதிர்த்து, டெல்லியில் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம்



ராஜபக்சே வருகையை எதிர்த்து மே 26 காலை 11 மணி அளவில் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

"சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு ஊட்டும் மாபெரும் வெற்றியை பெற்ற மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் ஜனநாயகப் பெருமையை உலகம் வியக்க உயர்த்தி உன்னதமான புகழ்ச் சிகரங்களை நோக்கி இந்திய நாட்டை வழி நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையோடு அவரது பதவி ஏற்புக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.

இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று. 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது விதியோடு நாம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உணர்ச்சிகரமாகப் பேசினார்.

அந்த சுதந்திர தினம் தமிழர்களுக்குத் துக்க நாள் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அறிவித்தார். ஆனால், அவரது தலைமை மாணாக்கராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆகஸ்ட் 15 துக்க நாள் அல்ல, கொண்டாட வேண்டிய மகிழ்ச்சிகரமான திருநாள் என்று தந்தை பெரியாரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்டு பிரகடனம் செய்தார்.

அதே அறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஜனவரி 26 ஆம் நாளை துக்க நாள் என்று அறிவித்தார். லட்சக்கணக்கான மாணவர்கள் அண்ணாவின் அழைப்பை ஏற்று அறப்போர் நடத்தினர். 8 தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாட்டின் வீதிகளில், தமிழர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த அறப்போர்க்களத்தில் ஒரு மாணவனாக சிப்பாயாக நின்றவன் நான்.

இன்று ஏறத்தாழ அதே மனநிலையில் இருக்கிறேன். அறிஞர் அண்ணா இந்தியக் குடியரசை எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட 1965 ஜனவரி 26 ஆம் நாள் பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்குத் தந்த வாக்குறுதியையும் மீறி, இந்தியை மட்டும் அரியணை ஏற்றுகின்ற தொடக்க நாளாக அமைந்ததால், தங்களது எதிர்ப்பையும், கசப்பையும் காட்டுவதற்காக கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார்.

அதே போலத்தான் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி ராஜபக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

எங்கள் மனவேதனையையும் எதிர்ப்பையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் என்பதால், ராஜபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, நாளை மறுநாள் மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.

என்றைக்கு இந்தியாவுக்குள் ராஜபக்சே நுழைந்தாலும் அக்கொடியவன் வருகையை எதிர்த்து நாங்கள் அறப்போர் நடத்துவோம் என்று மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சியை நோக்கி புறப்பட்ட முற்றுகைப் போராட்டத்தின் போது நான் அறிவித்தேன்.

அதன்பின்னர், தலைநகர் டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமரை ராஜபக்சே சந்திக்கப் போவதாக அறிவிப்பு வந்தவுடன் நானும் என் சகாக்களும் டெல்லியில் அதே ஜந்தர் மந்தரில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டோம்.

பிஹார் பயணத்தை மட்டும் முடித்துக்கொண்டு கடைசி நேரத்தில் தனது டெல்லி வருகையை ரத்து செய்துவிட்டு, திருப்பதிக்கு ஓடிப்போனான் ராஜபக்சே. அங்கும் எங்கள் தோழர்களும், உணர்வாளர்களும் அறப்போர் நடத்திக் கைதானார்கள்.

தமிழ் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய குற்றவாளியை இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கச் செய்வது அந்த விழாவின் உன்னதத்தையே அடியோடு நாசப்படுத்தி களங்கப்படுத்துவது ஆகும்.

இலங்கைத் தீவில் வெறிபிடித்த புத்த பிட்சுகள் சுவாமி விவேகானந்தர் அவர்களையே கற்களையும் செருப்புக்களையும் வீசித் தாக்கினார்கள். இதுவரை இலங்கையில் இந்துக் கோவில்கள் சிவன் கோவில், காளி கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட 2,300 ஆலயங்கள் சிங்கள வெறியர்களால் தாக்கி தகர்க்கப்பட்டன; கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டன; கடைசியாக இப்பொழுது இஸ்லாமிய மசூதிகள் மீதும் தாக்குதல் நடக்கிறது. இந்துக் கோவில்களின் வளாகங்களில் புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டாயச் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இப்பொழுதும் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடக்கின்றன.

தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் முகாம்கள் அமைத்து ஹிட்லர் வதை முகாம்களைப் போல, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகள் அச்சத்தையும் பீதியையும் தருகிற சிறைமுகாம்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழ்ப் பெண்கள் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். தமிழர்களின் கலாச்சார சுவடே இல்லாமல் ஆக்க கலாச்சாரப் படுகொலையும் கட்டமைப்பு படுகொலையும் ராஜபக்சே அரசால் நடத்தப்படுகின்றன.

பச்சிளம் குழந்தைகள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு மாவீர மகன் பாலச்சந்திரன் படுகொலையே சாட்சியமாகும். தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தால் நாசமாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு இசைப்பிரியா படுகொலையே சாட்சியமாகும்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் பலவும் சேர்ந்து சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. இனக்கொலை கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய அரசு ஜெனீவா கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தன் துரோகத்தைத் தொடர்ந்தது.

இந்தத் துரோகச் செயல்கள் அரங்கேற சிங்கள அரசுக்கும், சோனியா காந்திக்கும் கைக்கூலிகளாக செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் இப்பொழுதும் அதே துரோகத்தைத் தொடர்வதற்கு நரித் தந்திரமாக செயல்படுகிறார்கள்.

புதிய அரசுக்கு மிகத் தவறான பாதையைக் காட்டி உள்ளார்கள். இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரையெல்லாம் ராஜபக்சே பயன்படுத்துகிறான் என்பதை நான் நன்றாக அறிவேன்.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு ராஜபக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.

முத்துக்குமார் உள்ளிட்ட 19 உத்தமத் தியாகிகள் மேனியைக் கருக்கிய நெருப்பு எங்கள் நெஞ்சத்தில் அணையாத தணலாக ஏற்கனவே இருக்கிறது.

தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எல்லாம் வாழும் தமிழர்களும் ஈழத்தைச் சூழ்ந்துவிட்ட மரண இருள் எப்பொழுது நீங்கும்? என்று பிறக்கும் நீதியின் விடியல்? என்று ஏங்குகின்றனர். இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்; நிரந்தர வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சமா பாதகம் செய்த ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதே நாளில், மே 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னையில் வடசென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்".

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவிற்கு அழைக்கபட்டதன் எதிரொலியாக‌, தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு


மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதையொட்டி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக, இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, அதிபர் ராஜபக்சே புது டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும், அதையொட்டி இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிடுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, ஜெனீவாவில் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நடந்த இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததன் விளைவாக, தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுடன் இலங்கை இணக்கமான உறவைக் கொண்டிருந்தது போலவே, மோடி தலைமையிலான அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காக ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மியில் இருந்து நேற்று விலகிய முக்கிய தலைவர்கள் ஷாஜியா இல்மி மற்றும் கோபிநாத்


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அதன் முக்கியத் தலைவர்களான ஷாஜியா இல்மி மற்றும் 'ஏர் டெக்கான்' விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத் ஆகியோர் நேற்று திடீரென விலகினர்.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷாஜியா, டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் கட்சிக்கு நிதி திரட்டும் பெயரில் பணம் வசூலித்ததாக சர்ச்சை கிளம்பியதால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு உ.பி.யின் காஜியாபாத்தில் பாஜக வேட்பாளர் வி.கே.சிங்கை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஆம் ஆத்மியில் இருந்து விலகியது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் ஷாஜியா கூறுகையில், ‘‘ஒரு சிறிய குழு கேஜ்ரிவாலை சூழ்ந்து கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. 'ஸ்வராஜ்' பற்றி பேசும் இந்தக் கட்சியிலேயே சுதந்திரத்தைப் பின்பற்ற முடியாத நிலை உள்ளது’’ என்று கூறினார்.

பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத் 'ஏர் டெக்கான்' நிறுவனத்தை தொடங்கியவர். கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். மேலும் அக்கட்சியின் சார்பாக ம‌க்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் தேர்தல் சமயத்தில்கூட பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், கோபிநாத் சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து திடீரென விலகினார்.

மோடி பதவியேற்பு விழாவில் பாமக, தேமுதிக பங்கேற்பு, மதிமுக புறக்கணிப்பு


மோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மட்டுமின்றி, பாஜக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, பாமகவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்க பாமகவும் தேமுதிகவும் முடிவு செய்துள்ளன. பாமக தரப்பில் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். மதிமுக மட்டும் விழாவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் விழாவுக்கு செல்ல மாட்டார் என்று நம்ப படுகிறது. முதல்வர் செல்லாவிட்டாலும் தம்பிதுரை போன்ற மூத்த உறுப்பினர் ஒருவரை மட்டுமாவது மரியாதை நிமித்தமாக அனுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அழைப்பை ஏற்று நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் இருவரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று நம்ப படுகிறது.

பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்ததை தேமுதிக ஏற்றுக் கொள்ளவில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-விஜயகாந்த்

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பதை தேமுதிக ஏற்கவில்லை. இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"பாரத நாடு பல மாநிலங்களை உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருகிறது. பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருப்பதை தேமுதிக ஏற்றுக் கொள்ளவில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இலங்கையில் நம் தமிழின மக்களை இலங்கை அதிபர் ராஜபட்ச இனப்படுகொலை செய்து, கொன்று குவித்த மாபாதக செயலை எந்த காலத்திலும் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இன்றுவரை தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முழு காரணம் ராஜபட்சவின் தலைமையில் உள்ள இலங்கை அரசாகும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் கோரிக்கை விடுத்தேன். அதற்கு யாரும் அப்பொழுது செவி சாய்க்கவில்லை.

இதே காரணத்திற்காக ஜனாதிபதி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்தது. பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சென்னை வந்தபோது எனது தலைமையில் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்து, நானும், என்னுடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தேமுதிக பல ஆண்டு காலமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்து, அதன் பின்புதான் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக் காட்டினோம். அதேபோல் புதியதாக பொறுப்பேற்கும் நரேந்திரமோடி ஆட்சிக்கும் ஆறு மாத காலம் அவகாசம் தரப்பட வேண்டும். அதன் பின்புதான் எந்த விமர்சனமாக இருந்தாலும் வைக்கப்பட வேண்டும்.

நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை மட்டும் அழைக்கவில்லை. சார்க் நாடுகள் அமைப்பில் உள்ள 8 நாட்டுத் தலைவர்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. ஓட்டு மொத்த இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளும் இவ்விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். ராஜபட்சவை மட்டும் இந்த விழாவிற்கு பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக தேமுதிக இவ்விழாவில் பங்கேற்காது.

நரேந்திரமோடியின் ஆட்சி இந்தியாவில் அமைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். அவரை நேரில் சந்தித்தபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழகத்தில் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து தமிழக பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக என்னிடம் உறுதி அளித்துள்ளார். இதை மீண்டும் அவரிடம் தேமுதிக சார்பில் நான் வலியுறுத்துவேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media