BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 January 2014

ஊழலுக்கு எதிராக பணிபுரிவதில் எந்த சமரசமும் இல்லை: கேஜ்ரிவால்

ஊழலுக்கு எதிராக தன் உயிரை கொடுத்தாவது அதை ஒழிக்க போராடுவேன் என்று கூறி இருக்கிறார், கேஜ்ரிவால்.

ஊழலை பொறுத்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும், ஷீலா தீட்ஷீத், காங்கிரஸ் அமைச்சர்கள், பா.ஜ.க அமைச்சர்கள், தனது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என எவராக இருந்தாலும், சமரசமே இல்லாமல் அவர்களை எதிர் கொள்ள போவதாக அவர் பேசி இருக்கிறார்.

மோடிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்த காவல் துறை


இளம் பெண் ஒருவரை சட்டவிரோதமாக பின் தொடர்ந்து வேவு பார்த்ததாக குஜ்ராத் முதல்வர் மோடி மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டனர். இது தொடர்பாக மாநில, மத்திய அளவில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, மோடி மீதும், அமித் ஷா மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி, குஜ்ராத் மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ப்ரதீப் ஷர்மா விடுத்த கோரிக்கையை, அம்மாநில காவல் துறை நிராகரித்து உள்ளது.

மு.க. அழகிரி பேட்டி தனக்கு தேவையில்லாத விஷயம்: மு.க. ஸ்டாலின்

அண்ணன் அழகிரி பேட்டி ஒரு தேவையில்லாத விஷயம்,  கடுப்பான தம்பி ஸ்டாலின்

நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் காட்டு காட்டென்று திமுக தலைமையை காட்டிய அழகிரியின் பேட்டி திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, கட்சி தலைமை தன்னை ஒதுக்கிறது, தன் மேல் ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கட்சி எதுவுமே பேசவில்லை என்றெல்லாம் பேட்டி அளித்து ஸ்டாலினின் பிபியை எகிறவைத்தார் அழகிரி.

இந்நிலையில் இன்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், புதிய தலைமுறையில் மு.க.அழகிரியின் பேட்டியை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, தொலைகாட்சிகளிலோ, பத்திரிக்கைகளிலோ வரும் பல தேவையில்லாத விஷயங்களை தான் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை என பதில் அளித்தார்.

மதுரையில் தி.மு.க அமைப்புகள் கலைக்க பட வேண்டும் என்ற முடிவு என்னால் எடுக்கப்பட்டதில்லை என்றும் அது தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொது செயலாளர் அன்பழகன் எடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஊழலை எதிர்த்து பேச உரிமை கிடையாது: சிவ சேனா தலைவர் உதவ் தாக்கரே

டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஊழலை எதிர்த்து பேசுவதற்கு, எந்த தார்மீக உரிமையும் இல்லை என தாக்கரே கூறியுள்ளார்.

ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியின் உதவியோடு ஆட்சி அமைத்து இருக்கும் கேஜ்ரிவால் ஊழலை எதிர்த்து பேசுவது போலியாக வேடம் போடுவதே ஆகும்.

கேஜ்ரிவாலும் அவர் கட்சியினரும், மெட்ரோ ரயில்களில் வேலைக்கு செல்வது பற்றியும், அரசு அளிக்கும் பங்களாக்களை நிராகரிப்பது பற்றியும் பேசிய பேச்சுக்கள், வாக்குறுதிகள் எல்லாமே காற்றில் பரந்து விட்டது என‌ அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


மதுக்கடைக்களுக்கு எதிராக விஜயகாந்த்


தமிழக அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏதும் செய்யாமல், மதுபான கடைகளை திறந்து, இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும், பல தாய்மார்களின் வாழ்க்கை பாதிக்க படுகிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறந்தது போதாது என்று, இப்பொழுது பெரிய பெரிய ஷாப்பிங் மாள்களிலும், ஏ.சி வசதிகளுடன் மதுகடைகளை திறந்து இருப்பது கண் டனதிற்கு உரியது என்று தே.மு.தி.க பொதுக்குழுவில் பேசியுள்ளார்.

இதற்கு முன்பு, சமீபத்தில் நடந்த, ஒரு படவிழாவின் போது, விஜயாகாந்த், குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், அது பெரிய தப்பா என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

தே.மு.தி.க பொதுக்குழுவில் கொந்தளித்த விஜயகாந்த் மனைவி

அசால்ட்டு காட்டிய அண்ணி, திமுகவுக்கு எதிராக‌ பிரேமலதா காட்டம், டாஸ்மாக்குக்கு எதிராக விஜயகாந்த் கொந்தளிப்பு

தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாம போகும்: மு.க. அழகிரி

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி, தி.மு.க லோக்சபா தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாமல் போகும் என்றும், விஜயகாந்த்தை ஒரு அரசியல் தலைவராகவே தான் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.



முன்பொரு முறை மு.க. அழகிரி, விஜயகாந்தை தனது நண்பர் என்று கூறியதாகவும், அதற்கு அவர், "அழகிரி என்ன? என்னுடன் கோலி விளையாடினாரா? பட்டம் விட்டாரா? " என்று கேட்டுள்ளார்.  தே.மு.தி.க தலைவராக கூறிக்கொள்ளும் விஜயகாந்திடம் அரசியல் நாகரிகமே இல்லை என்றும் மு.க. அழகிரி தனது பேட்டியில் கூறியுள்ளார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மூலம் கோ-ஆப்டெக்ஸ் இரண்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது!


கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்தது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். அந்நிலையில் அதன் நிர்வாக‌ இயக்குநராக, நேர்மைக்கு பேர் போன ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பொறுப்பேற்ற பின்பு, வியாபரத்தில் பல புதுமைகளை புகுத்தினார். இதன் மூலம் தொழிலில் வந்த லாபத்தில் ஒரு பங்கை, நெசவாளர்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்கினார்.

2013ம் ஆண்டு அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்கான விருதையும், கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய பங்களிப்பை தந்ததற்கான விருதையும், மத்திய அரசிடம் இருந்து பெற்றிருக்கிறது,கோ-ஆப்டெக்ஸ்.

இந்த சாதனையை சாத்தியமாக்கிய சகாயம் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்!

சென்னையிலும் போட்டியிடலாம் ஆம் ஆத்மி



பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ஆம் ஆத்மி, இம்மாத கடைசியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர் பட்டியலையும், தொகுதிகளையும் வெளியிட இருப்பதாக கூறியுள்ளது.

சென்னையும் அதில் ஒரு தொகுதியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி (தமிழ்நாடு) கட்சியை சேர்ந்த லெனின் தெரிவிக்கையில், தமிழகத்தில் இருந்து நிறைய இளைஞர்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியிலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்று கட்சியாக அமைவது பற்றி ஒரு ஆர்வம் உருவாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மட்டும், 31, 000 ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media