BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 October 2013

நய்யாண்டி - விமர்சனம்

நஸ்ரியாவின் தொப்புளை வைத்து ஏகப்பட்ட பப்ளிசிட்டி பெற்ற நய்யாண்டி திரைப்படம். ஆனால் பட வசூல் போஸ்டர் அடிச்ச காசுக்கு கூட தேறாது. தனது காதலியை திருமணம் செய்து கொண்டு வீட்டினுள் அந்த பெண்ணை வேலைக்காரியாக வைத்திருக்க அது தெரியாத அண்ணன்கள் இருவரும் தம்பி பொண்டாட்டியை உஷார் செய்ய நினைப்பதுமாக நகைச்சுவை என்ற அபத்தமாக செல்கிறது கதை.

தனுஷின் காதலி கம் மனைவியான நஸ்ரியாவை நிச்சயம் செய்திருந்த தாதா நஸ்ரியாவை தூக்கி கொண்டு போக தனுஷ் காப்பாற்ற போக என மிச்சம் கதை.

நகைச்சுவை, திரைக்கதை, பாடல்கள், நஸ்ரியா என எதுவுமே நன்றாக இல்லை. நஸ்ரியாவோட மேக்கப் மேனுக்கு சம்பள பாக்கி வைத்து விட்டார்கள் போல. தனுஷ் மட்டுமே தன் இயல்பான நடிப்பால் மிளிர்கிறார்.

இந்த படத்துக்கு தொப்புள் மட்டும் அல்ல, வேறு எதை காட்டி பப்ளிசிட்டி செய்திருந்தாலும் போஸ்டர் அடிச்ச காசுக்கு கூட வசூல் தேறாது.

# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

மதிப்பெண்கள் : 2.5/5

வணக்கம் சென்னை - விமர்சனம்


நஸ்ரியாவின் டூப்பின் தொப்புள் கிளப்பிய பரபரப்பினால் நய்யாண்டியை பார்த்து நைய்ந்து போய் வந்திருந்த நமது சினிமா விமர்சகரை அடுத்த ஷோவுக்கே வண‌க்கம் சென்னை டிக்கெட்டை கையில் திணித்து போய் பார்த்துவிட்டு வந்து இரண்டுக்கும் சேர்த்து விமர்சனம் எழுதுங்கள் என்று அனுப்பினோம், போனவர் போனவர் தான் இன்று மாலை தான் போனில்  கிடைத்தார்,  நேற்றே எஃப் ஐ ஆர் ஆக போடவேண்டியது, லேட்டானாலும் பரவாயில்லை விமர்சனம் அனுப்புங்க என்று கேட்டதற்கு "கொலை கேஸ்ல உள்ள போய்டுவ" ஜாக்கிரதை என்றார். சரி முதலில் விமர்சனம் அனுப்புங்கள் என்றோம் அதன் பின் தான் புரிந்தது அவர் ஏன் அப்படி சொன்னார் என்று.

பெரிய இடத்து பேரன்களின் தயாரிப்பு, தயாரிப்பு பணத்துக்கு பஞ்சம் இருக்காது, கலகலப்பு சிவா, அமெரிக்கா பிரியா ஆனந்த், சந்தானம் என வெயிட்டாக இருக்கும் என்று படத்திற்கு போனால் சந்தர்ப்ப வசத்தில் ஹீரோயினும் ஹீரோவும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி ஒரே வீட்டில் வாடகைக்கு தங்குகிறார்கள், போலிஸ் சிடம் கணவன் மனைவி என்று பொய் சொல்கிறார்கள், அதற்குள் சிவாவுக்கு ஹீரோயின் மீது காதல் வருகிறது, ஹீரோயினோ வேறு ஒருவரை காதலிக்கிறார் அவர் வரவுக்கு காத்திருக்கிறார். அடுத்தவன் காதலி ஹீரோவை காதலித்தாரா இது தான் கதை, திரைக்கதை. இதில் நடுத்தெரு நாராயணன் என்று சந்தானமும்.

உப்புசப்பில்லாத கதை, கதையோடு ஒட்டாத திரைக்கதை, சிரிப்பே வராத காமெடி என ஒரு மொக்கை படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த படம்.

சிவா இப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் ஹீரோவாகவும் முடியாமல் காமெடியனாகவும் முடியாமல் ஃபீல்ட் அவுட் ஆக வேண்டியிருக்கும், ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை கதையாக வடிவேலுவோ வேறு ஒரு நல்ல காமெடியனோ  இல்லாத கேப்பில் சந்தானம் சம்பாதித்து வருகிறார் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார்.

வணக்கம் சென்னை - போயா வெண்ணெய்!

# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

மதிப்பெண்கள் : 2.5/5

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media