BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

சென்னையில் வழக்கறிஞர் பொது மக்கள் முன்பே வெட்டி கொலை

சென்னை நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் நித்யானந்தம், வயது 32. அவர் இன்று காலை 9 மணி அளவில், புல்லா அவென்யூ சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த‌ 4 பேர், கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உணவகத்திற்குள் புகுந்து, நித்யானந்தத்தை சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இந்த தாக்குதலின்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் பக்கத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் எல்லோரும் ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் உயிர் பிரிந்த பின்னரே அந்த கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

காலை நேரத்தில், மக்கள் கூட்டம் நிறைந்த இடத்திலேயே இப்படி ஒரு படுகொலை நடந்தது, அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இதைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய கிரிக்கெட் பார்வையாளருக்கு ரூ.52 லட்சம் பரிசு



இந்தியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்தில் உள்ள பீர் கம்பெனி, வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை பார்வையாளர்கள் மாடத்தில் இருக்கும் எவரேனும் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு உடனடியாக அங்கேயே 1 லட்சம் நியூசிலாந்து டாலர் (சுமார் ரூ.52 லட்சம்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பரிசு தொகையை பெறுவதற்கான நிபந்தனைகள், பார்வையாளர்கள் அந்த நிறுவனத்தின் முத்திரை பெற்ற ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்திருக்க வேண்டும் மற்றும் சிக்சர் அடிக்கும் பந்தை ஒரு கையாலேயே பிடிக்க வேண்டும்.

நேற்று ஹேமில்டனில் நடந்த போட்டியில், கோரே ஆன்டர்சன் அடித்த சிக்சர் பந்து, பார்வையாளர் மாடத்திற்கு சென்றது. அப்போது, ஜித்திந்தர் சிங் என்ற இந்திய வம்சாவளி பார்வையாளர் ஒருவர், தனது வலது கையால் பந்தை பிடித்தார். இதையடுத்து, உடனடியாக அவருக்கு ரூ.52லட்சம் பரிசை, பீர் நிறுவனத்தினர் கொடுத்தனர்.

பரிசு வாங்கிய பணத்தில், கார் வாங்க போவதாகவும், கடன்களை அடைக்க போவதாகவும், 22 வயது ஜித்திந்தர் சிங் மகிழ்ச்சியாக கூறினார்.

பிற ஊர்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்



சென்னையில் புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது, இலக்கியவாதிகளின் கூத்தும் முடிந்தது. இனி பிற ஊர்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறப்போகும் நாள் மற்றும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் கூட்டு கற்பழிப்பு, போலீஸ் மேலதிகாரி நீக்கம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பீர்பம் மாவட்டம், கோல்கத்தாவில் இருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. வேற்று ஜாதி ஆண் ஒருவரை காதலித்தத‌ற்கு தண்டனையாக, 20 வயது பெண் ஒருவரை கற்பழிக்குமாறு அந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர். அதன் படியே அந்த பெண்னை ஒருவர் மாற்றி ஒருவராக, 12 ஆண்கள் கற்பழித்து இருக்கிறார்கள்.

இச்சம்பவத்தை பற்றி பேசிய பெண், "பஞ்சாயத்து தலைவர் கட்டளையின் பேரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ 10-12 பேர் என்னை தொடர்ச்சியாக கற்பழித்தனர், எத்தனை முறை என்னை கற்பழித்தார்கள் என்று எண்ண கூட முடியவில்லை." என்று கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அப்பெண்னுக்கு சிகிச்சை தந்து வரும் மருத்துவர், "கற்பழிக்கப் பட்ட பெண்னின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக தான் இருந்து வருகிறது. நிறைய அளவில் ரத்தத்தை இழந்திருக்கிறார். உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியான பெண்ணாக இருப்பதால் தான் இன்னும் அவர் உயருடன் இருக்கிறார்.", என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மேற்கு வங்காள மாநில முதல்வர் மமதா பேனர்ஜி, பீர்பம் பகுதி போலீஸ் மேலதிகாரியை(எஸ்.பி) பணி நீக்கம் செய்தார், மேலும், கற்ப்ழிப்பில் ஈடுப்பட்ட 12 பேர், மற்றும் பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை 2006–ல் தமிழக அரசு நிறுவியது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் அச்சிலையை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். 

இந்த சிலை சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களை இந்த சிலை மறைக்கிறது. எனவே சிவாஜி சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ந‌டிகர் சிவாஜிகணேசன் சிலை இரு முக்கிய சாலைகளுக்கு நடுவில் வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கின்றது. அதனால் பொது நலன் கருதி அச்சிலையை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்கள்.

ஊட்டி அருகே மூவரை கொன்ற புலி சுட்டு கொல்லப்பட்டது

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 3 பேரை புலி ஒன்று அடித்து கொன்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் புலியை தேடி வந்தனர். மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு பசு மாட்டையும், புலி அடித்து கொன்றது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரமானது. ஒரு வழியாக, வனத்துறையினர் நேற்று மாலை புலியை கண்டுபிடித்து, சுட்டு கொன்றனர். 18 நாட்களாக ஊட்டி மக்களிடம் நிலவி வந்த பயமும், பதற்றமும்  நீங்கியது.












தன் குடும்பத்தினர் 6 பேரை காப்பாற்றி, தாத்தாவை காப்பாற்றும் போது உயிரிழந்த 8 வயது சிறுவன்


நியூ யார்க்கில் டைலர் என்ற 8 வயது சிறுவன், கடந்த ஞாயிற்று கிழமை இரவு, தான் தங்கியிருந்த இடத்தில் தீ பற்றி கொண்டதை பார்த்திருக்கிறான். உடனடியாக, காவல் துறைக்கு போன் செய்து அழைத்து விட்டு, குடும்பத்தினர் ஆறு பேரை உறக்கத்தில் இருந்து எழுப்பி, அவர்களை தீயில் இருந்து காப்பாற்றி இருக்கிறான். ஆனால், தன் தாத்தா வீட்டினுள் மாட்டி கொண்டதை அடுத்து, அவரையும் காப்பாற்ற உள்ளே சென்ற போது, தாத்தாவுடன் சேர்ந்து தானும் தீயில் சிக்கி உயிரிழந்தான்.

பின்னர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, அச்சிறுவனும், தாத்தாவும் கட்டில் அருகே இறந்து கிடந்தனர். உடல் நிலை சரியில்லாத தாத்தாவை கட்டிலில் இருந்து தூக்க முயலும் போது, தீயும், புகையும் அதிகம் ஆனதால், இருவரும் உயிர் இழந்திருக்க கூடும் என்று தெரிகிறது.

இதைப் பற்றி டைலரின் தாய் பேசுகையில், "என் மகனை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு அவன் உயிருடன் திரும்ப வேண்டும். அவனின் தாத்தா அவனுக்கு உற்ற நண்பன் போல் ஆவார். அவருடன் தான் என் மகன் இறந்திருக்கிறான்..தனியாக போகவில்லை." என்று கூறினார்.

தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த முடியாது, இலங்கை அமைச்சர்

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இந்நிலையில், கொழும்புவில், நிருபர்களை சந்தித்து பேசிய இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, "அத்து மீறி எங்கள் கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம்." என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு விவகாரத்தில் மத்திய அரசு சுதந்திரமாக செயல்படுகிறது என்றும், எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அவர்களிடம் சொன்னதே இல்லை என்றும் தெரிவித்தார்.

"இந்திய அரசு, தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விடுத்த‌ வேண்டுகோளை ஏற்று கொள்ள முடியாது, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய யாருக்கும் உரிமை இல்லை, பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம்.", என ரஜிதா சேனரத்னே திட்டவட்டமாக கூறினார்.

2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கி

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து  பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், 2005 முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர், 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை. அதனால், வருகின்ற மார்ச் மாதத்திற்கு பின்னால், இந்த நோட்டுகளை பயன் படுத்த முடியாது, ஆனால் வங்கிகளில் இந்த நோட்டுகள் ஏற்று கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media