அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன் . இவரது கணவர் மைக்கேல் ஜான்சன் . இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு கேன்சர் நோயினால் இறந்தார் . இவர் அதிகப்படியான புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் , இவருக்கு கேன்சர் நோய் வந்தது . தனது கணவர் சிகரெட் குடிப்பதால் தான் இறந்தார் என்ற விரக்தியில் , அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சிகரெட் நிறுவனமான ஆ.ஜெ . ரெனால்ட்ஸ் மீது வழக்கு தொடுத்தார் .
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி , சிகரெட் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும் , அந்த நிறுவனம் இவருக்கு இழப்பீடு தொகையாக 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது . மேலும் இந்த தீர்ப்பு மற்ற நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்றார் .
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்ய உள்ளது .