BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 28 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

அதிமுகவை கைப்பற்ற பாஜக‌ திட்டம்? ஒரு அலசல்
http://www.satrumun.net/2014/09/bjp-planned-to-capture-admk.html

ஆண் - பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
http://www.satrumun.net/2014/09/satrumun-special-news_28.html

அரசியல் அழுத்தம் இந்த தீர்ப்பில் இருக்கிறதா - கேட்கிறார் பதிவர் நம்பிக்கை ராஜ் !!
http://www.satrumun.net/2014/09/is-political-pressure-enclosed-in-this-judgement-questioned-by-fb-user.html

இப்ப எப்படி Ban பண்ணுவீங்க? கிண்டல் அறிக்கை மூலம் விஜய்க்கே குழி பறிக்கும் விஜய் ரசிகர்கள்!!
http://goo.gl/mkj9PT

இரண்டாவது முறை முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்
http://www.satrumun.net/2014/09/blog-post_105.html

ஜெயலலிதாவும் ராசியில்லாத செப்டம்பரும் !!
http://www.satrumun.net/2014/09/jayalalitha-and-september.html

போயஸ் கார்டன் முதல் சிறைச்சாலை வரை , ஜெயலலிதாவின் வாழ்க்கை நேற்று எப்படி இருந்தது
http://www.satrumun.net/2014/09/jayalalitha-timetable-yesterday.html

அடுத்த வேலை சோனியா மற்றும் ராகுல் காந்தியை ஜெயிலுக்கு அனுப்புவது தான் - சுப்பிரமணியன் சுவாமி !!
http://www.satrumun.net/2014/09/next-target-is-gandhi-says-subramanian-swamy.html

ஜெயலலிதா அவர்களுக்கு சிறை எண் 7402 வழங்கப்பட்டது !! சிறையில் நடந்தது என்ன ??
http://www.satrumun.net/2014/09/jayalalitha-had-given-jail-number-7402-cell.html

மோடி தன் முதல் ஐ.நா சபை உரையின் போது கூறிய சில முக்கிய வரிகள் !!
http://www.satrumun.net/2014/09/modi-imp-lines-in-his-un-speech.html

வாழை இலையின் நன்மைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_338.html

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் 'மிஸ்டு கால்' விளம்பர சோதனை
http://www.satrumun.net/2014/09/blog-post_777.html

சீனாவில் ஆப்பிளை காப்பி அடிக்கும் ஜீயோமி மொபைல்
http://www.satrumun.net/2014/09/blog-post_490.html

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது
http://www.satrumun.net/2014/09/every-tamilan-should-know-this.html

கலவரத்தை தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது வழக்கு !!
http://www.satrumun.net/2014/09/case-register-ondmk-leader-karunanidhi.html

நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி
http://www.satrumun.net/2014/09/blog-post_118.html

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைக் கேட்டு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி !!
http://www.satrumun.net/2014/09/school-girl-attempts-suicide-over-jj-verdict.html

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைலான சாம்சங் காலக்ஸி ஆல்பா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. http://www.satrumun.net/2014/09/samsung-galaxy-alpha-mobile-announced.html

ஆன்லைனில் படித்ததை வைத்து ஏடிஎம்யை துறக்க முயன்ற சிறுவன் !!
http://www.satrumun.net/2014/09/a-boy-tries-to-steal-money-technically.html

தீர்ப்பு எதிரொலி :அரசுப் பேருந்து உள்பட 7 வாகனங்கள் உடைப்பு
http://www.satrumun.net/2014/09/7.html

ஐ.எஸ். மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
http://www.satrumun.net/2014/09/blog-post_507.html

சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி
http://www.satrumun.net/2014/09/12-most-polluted-indian-cities.html

மெட்ராஸ்: 10 பாய்ண்ட் விமர்சனம்
http://goo.gl/iXTx9j

அதிமுகவை கைப்பற்ற பாஜக‌ திட்டம்? ஒரு அலசல்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் உடனடியாக பதவியிழந்தார், மேலும் பத்து ஆண்டுகளுக்கு (4 ஆண்டுகள் தண்டனை+ 6 ஆண்டுகள்) அவர் தேர்தலிலும் நிற்க முடியாது, இப்படி இனி 10 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவிகளுக்கும் ஜெயலலிதா வரமுடியாது.

ஏற்கனவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற சூழலுக்கும் இப்போதுள்ள சூழலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன, முன்பு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற போது அடுத்து ஒரு இடைத்தேர்தல் வந்து ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆகும் வரை தான் ஓ.பி.எஸ் முதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே, இதனால் ஆட்சி மற்றும் கட்சியின் கட்டுப்பாடு ஜெயலலிதாவின் கைகளில் இருந்தது, சசிகலாவின் குடும்பத்தினர் ஏரியாவுக்கு ஒருவர் என பிரித்துக்கொண்டு கட்சியை கட்டுப்படுத்தினர். எனவே எந்த விதமான சித்து விளையாட்டுகளிலும் உள் ஆட்களோ வெளி ஆட்களோ ஈடுபடவில்லை.

தற்போதைய நிலை வேறு, இனி ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு எந்த நேரடி பதவியையும் ஏற்க முடியாது, எனவே கட்சியிலும் ஆட்சியிலும் இவரை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போனவர்களை இவர் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும், 2016 தேர்தலை ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி ஓட்டு கேட்கவும் முடியாது, அதிமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிலரை வளைத்து அதன் பின் ஒரு குழப்பத்தை விளைவித்தால் ஆட்சி கவிழும், ஆட்சி ஜெயலலிதா கையில் இல்லாத நிலையில் இனி தேர்தல் வெற்றியும் ஜெயலலிதா தலைமையில் சாத்தியம் இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மத்திய அரசு கையில் இருக்கும் நிலையில் மீதியுள்ள‌ இரண்டாம் கட்டத்தலைவர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஜெயலலிதாவை ஓரங்கட்டி அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் திமுக ஊழல்கட்சி என்று மக்களிடத்தில் பெயர் பெற்றுள்ள நிலையில், அதிமுக, திமுக அளவிற்கு வலிமையான மாற்று கட்சிகள் இல்லாத நிலையில்  அதிமுகவை குழப்பி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என பாஜக திட்டமிட்டிருக்கலாம்.

வாழை இலையின் நன்மைகள்

முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில் நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்  எனவே எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதுமட்டுமின்றி, வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், இது சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் தீர்வை வழங்கும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு பலரும் அறிந்திராத வாழை இலையின் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா.

வாழை இலையில் உணவை உண்ணும் போது, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமானமடைய உதவுகின்றன.
மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும்.பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

குழந்தைகள் விளையாடுகிறேன் என்று எங்காவது விழுந்து காயம் ஏற்பட்டால், அதனை விரைவில் குணமாக்க, துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து, காயம் அல்லது புண் உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைத்து கட்டினால், காயம் அல்லது புண் விரைவில் குணமாகும். சின்னம்மை விரைவில் குணமாக வேண்டுமானால், வாழை இலையில் தேன் தடவி, அதன் மேல் சில மணிநேரம் படுக்க வைக்க வேண்டும். சொரியாசிஸ் அல்லது சரும அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், நாளடைவில் குணமாகிவிடும்.
வெளியே செல்லும் போது, உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி செல்வதை விட, வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால், உணவானது கெடாமல் இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும்.

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் 'மிஸ்டு கால்' விளம்பர சோதனை

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் அதன் யூசர்களை விளம்பரதாரர்களுடன் இணைக்க உள்ளது.மொபைல் போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக, புதிய பட்டன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்த உடன் பிராண்ட் விளம்பரதாரருக்கு அழைப்பு சென்றுவிடும், பின்னர் அவர்களிடமிருந்து மறு அழைப்பு பெறுவதற்காக ஒரு புதிய வகை சோதனையில் இணையதள சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மறு அழைப்பு பெறும்போது ஷாப்பிங் தள்ளுபடி பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆடியோவின் மூலம் வழங்குகிறது.

இதனை ‘மிஸ்டு கால்’ விளம்பரம் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சோதனையிட்டு பின்னர் மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் யூசர்கள் உள்ளதால், இந்த மிஸ்டு கால் விளம்பர சேவையை அறிமுகப்படுத்தி போஸ்புக் நிறவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்க பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த விளம்பர சேவையை சோதனையிட உள்ளது.

பேஸ்புக்கில் 84% ல் 1.28 பில்லியன் பயனர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியில் இருந்து பயன்படுத்தும் பயனாளிகள் ஆவர்.
ஆனால் சர்வதேச சந்தைகளில் பேஸ்புக் பயன்படுத்தும் யூசர்களின் சராசரி வருவாய் அமெரிக்கா மற்றும் கனடாவை விட கணிசமாக குறைவாக உள்ளது.

சீனாவில் ஆப்பிளை காப்பி அடிக்கும் ஜீயோமி மொபைல்

சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக ஒரு கம்பெனி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும். ஜீயோமி (Xiaomi)என்ற மொபைல் நிறுவனம் சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சீனாவின் ஆப்பிள் (Apple of China) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த மொபைல்கள் அழைக்கப்படுவதற்க்கு காரணம் இந்நிறுவனம் ஆப்பிளை நிறைய காப்பி அடித்துள்ளது. 
 
இவர்களின் மார்கெட்டிங் யுக்தியும் ஆப்பிளை போன்றே உள்ளது. ஆப்பிளை காப்பி அடித்து மட்டுமல்லாமல் இப்பொழுது ஆப்பிளை விட அதிகமான ஸ்மார்ட்போன்களை சீனாவில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஜீயோமியின் பிரபலமான மொபைல்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ்களையே கொண்டுள்ளன. ஆனால் ஜீயோமி ஆன்டிராய்ட் ஓஎஸ்களை தனது மொபைல்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அதற்க்கு MiUI என்று பெயரிட்டுள்ளது. ஜீயோமியின் இப்போதைய இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங்கை விட குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது






இப்போது இருக்கும் காலத்தில் யாரும் சட்டை போடுவதை விரும்புவது இல்லை. அனைவரும் டி-ஷர்ட் அணிவதை தான் விரும்புகிறார்கள். எல்லா வயதினரும் இதற்கு மாறி வருகிறார்கள். பல பெண்களூம் டி-ஷர்டுக்கு மாறி விட்டார்கள். அவர்கள் அணியும் டி-ஷர்டுகளில் பல படங்கள் இருக்கும், பல வசனங்கள் இருக்கும் . அவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலயே இருக்கும். பிறகு நமது தமிழ் மொழி எதற்கு, நமது நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் எதற்கு. இதனை ஒரு கூட்டம் நன்கு புரிந்து கொண்டது. அவர்கள் தற்போது ஆடைகள் தயாரிக்கிறார்கள் . அதில் நம் இந்திய மற்றும் தமிழ் தலைவர்களின் போட்டோக்கள் இருக்கும் . நமது தமிழ் மொழியில் வசனங்கள் இருக்கும் . அந்த டி-ஷர்டுகளை நாம் வாங்கி கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயர் தைதிங்கள் ஆகும்.

அதன் பேஸ்புக் பக்கத்தின் முகவரி : http://goo.gl/u9n05A

அந்த தளத்தின் முகவரி : http://thaithingal.com/thaithingal/

இந்த டி-ஷர்டுகளை வாங்கி தமிழன் என்று நிருபியுங்கள்.

இரண்டாவது முறை முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக ஆளுநர் ரோசைய்யாவை இன்று சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரான ஓ. பன்னீர்செல்வம். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் தமது பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக சட்டமன்றத்தின் குழுவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாலை 6 மணி வரை காத்திருந்தார். பின்னர் ராகு காலம் முடிந்து 6.05 மணிக்கு அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார். 
ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஓ.பன்னீர் செல்வம்! அவருடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் ஆளுநரை சந்திக்க சென்றனர். அங்கு ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அவரிடம் ஒப்படைத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஆளுநர் ரோசைய்யாவிடம் கையளித்துவிட்டு திரும்பியது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக குழு. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

இந்தியாவில் மாசுவினால் அதிகம் பாதிக்கப்பட்ட 12 நகரங்களில் சென்னை இல்லை என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதில் இருக்கும் 12 நகரங்களை பார்ப்போம்.



* டெல்லி



* லுதியானா




* கான்பூர்




* பாட்னா




* அகமதாபாட்




* அமிருதரஸ்




* அலகாபாத்




* ஆக்ரா




* கண்ணா




* ஜோத்பூர்




* டெக்ரா டூன்




* குவாலியர்



நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி.
 இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன். இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். ஜெ. வழக்கில் ஆஜராகிறார்? இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியே ஆஜராகி வாதாடக் கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைக் கேட்டு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி !!



மதுரை மாவட்டதில் 17 வயது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்ததை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .

அந்த மாணவியின் பெயர் நாகலட்சுமி . நாகலட்சுமி தீர்ப்பு வந்தவுடன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார் . அவர் யாருடனும் பேசவில்லை . நேற்று இரவு உணவும் சாப்பிடவில்லை . இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .

அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது . இப்போது அவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து !!



எச்.எல் தத்து இன்று இந்தியாவின் 42வது தலைமை நீதிபதியாக பொறுப்பெடுத்துள்ளார் . இவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

இவருக்கு முன்னால் இருந்த ஆர்.எம் லோதாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது . எச்.எல்.தத்து இந்த பதவியில் அடுத்த வருடம் டிசம்பர் 2 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் . இவரின் வயது 63 . 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் பெஞ்சில் இவர் தான் தலைமையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


அடுத்த வேலை சோனியா மற்றும் ராகுல் காந்தியை ஜெயிலுக்கு அனுப்புவது தான் - சுப்பிரமணியன் சுவாமி !!



நேற்று அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு வந்தது . இது குறித்து பலர் வருத்தம் பலர் மகிழ்ச்சி என தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்த வழக்கை முதன் முதலில் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் என்றார் .

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் , " சிறப்பு நீதிமன்றம் நேர்மையான தீர்ப்பை தான் வழங்கியுள்ளது . எனது ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் . அடுத்த கிறிஸ்துமஸ்ஸில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரையும் சிறைக்குள் அனுப்ப வேண்டும் . மேலும் நேஷன்ல் ஹெரால்ட் வழக்கை தீவிரமாக எடுத்து அவர்களை சிறைக்குள் அனுப்ப உள்ளேன் . திகார் ஜெயில் அதிகாரிகள் தங்கள் கைதிகளுக்கு இத்தாலிய பிட்சா வழங்குவது குறித்து யோசிக்க வேண்டும் " என்றார் .

மேலும் தான் பல ஆடுகளுடன் சண்டை போடும் தனி சிங்கம் என்று தெரிவித்தார் .



அரசியல் அழுத்தம் இந்த தீர்ப்பில் இருக்கிறதா - கேட்கிறார் பதிவர் நம்பிக்கை ராஜ் !!

ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் :முதல்வருக்கு அபராதம் விதித்தது வரம்பு மீறிய செயல்; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி தான் தீர்ப்பு வழங்க பட்டதா?நீதிபதி குன்கவிற்கு ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்.நீதித்துறையில் மிக பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு . 1988 விதியை மீறியுள்ளார் குன்ஹா


# ரொம்ப சிம்பிள். 11 மணிக்கு தீர்ப்புன்னு சொல்லிட்டு அதை படிப்படியா 1 மணி,3 மணி,4 மணின்னு தள்ளிட்டேபோய் காலத்தை கடத்தினபோதே தெரிஞ்சிடுச்சி.எங்கே காலையிலேயே தீர்ப்பை சொல்லிட்டா உயர்நீதிமன்றம் போய் ஜாமீன் வாங்கிடுவாங்களோ என்பதும் ஒரு காரணம்.
திங்கள்கிழமையிலேர்ந்து தசரா விடுமுறை ஆரம்பிக்கும் அதற்குள் சிக்க வைக்கனும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சுப்பிரமணிய சாமி டுவிட்டர்ல எழுதுறான்.அப்போ சுப்ரமணிய சாமிக்கு என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரிஞ்சிருக்கு.
சுப்பிரமணிய சாமிக்கு பதிலா வேற யாராவது தீர்ப்பு வருவதற்கு முன்னாடியே தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்னு கருத்து சொல்லியிருந்தா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானே முன்வந்து எடுத்திருப்பார் அந்த நீதிபதி.
ஆனால் இந்த நீதிபதி சுப்பிரமணிய சாமி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
அரசியல் அழுத்தம் இந்த தீர்ப்பில் இருக்கு என்பதற்கு இதற்கு மேலயுமா ஆதாரம் வேணும்?

நம்பிக்கை ராஜ் 

கலவரத்தை தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது வழக்கு !!



திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அந்த கட்சி பொருளாளர் மீது நேற்று திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த சண்டையை தூண்டிவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

கருணாநிதி , ஸ்டாலின் மட்டுமில்லாமல் மேலும் பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்த வழக்கை தொடுத்தவர்கள் அதிமுக கட்சியைச் சார்ந்த சிலர் . அவர்கள் தங்களை திமுக கட்சியினர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்க வந்தனர் என பூகார் கொடுத்தனர் . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த கலவரம் நேற்று தீர்ப்பு வெளிவந்த பின் அதிமுகவினர் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய போது நடந்தது .

மோடி தன் முதல் ஐ.நா சபை உரையின் போது கூறிய சில முக்கிய வரிகள் !!



நியுயார்க் நகரில் சனிக்கிழமை அன்று மோடி தனது முதல் ஐ.நா சபை உரையை நிகழ்த்தினார் . அதில் சில முக்கியமானவற்றை கீழ்க் காண்போம்


  1. ஜி-4 , ஜி - 7 என பல மாநாடுகள் உள்ளன . அவற்றில் இந்தியாவும் பங்கு வகிக்கிறது . ஆனால் நாம் ஏன் இந்த ஜி மாநாட்டை தாண்டி யோசிக்கக் கூடாது ?? ஐ.நா மாநாடு போன்ற அருமையான அடித்தளம் இருக்கும் போது நாம் ஏன் இந்த ஜி மாநாட்டினை தேடிச் செல்ல வேண்டும் . 
  2. நாம் அடுத்த வருடத்தில் 70 வயதாகிவிடுவோம் . நாம் 80 ஆகும் வரை காத்து இருக்க வேண்டுமா என நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும் . அடுத்த வருடம் நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம் . 
  3. தீவிவராதம் புது பெயர் மற்றும் புது உருவம் எடுத்து வருகிறது . பெரிய நாடோ , சிறிய நாடோ தெற்கோ , மேற்கோ , கிழக்கோ வடக்கோ அனைத்து நாட்டிலும் தீவிரவாதம் இருக்கிறது . 
  4. நான் பாகிஸ்தான் நாட்டுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் . அதுவும் ஒரு அமைதியான சூழலில் எந்த்வொரு தீவிரவாதத்தின் நிழலும் இல்லாமல் . அதற்கான அமைப்பை பாகிஸ்தான் தான் உருவாக்கி தர வேண்டும் 
  5. இந்தியா தனது தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது 
  6. நாம் அனைவரும் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் . சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சக்தி தான் நமக்கு இப்போதைய தேவையாக இருக்கிறது . 
  7. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது . நான் சிந்தாந்தத்தைப் பற்றி கூறவில்லை . இந்தியாவின் தத்துவம் " உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் " 

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் வந்தது

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைலான சாம்சங் காலக்ஸி ஆல்பா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.39,990 ஆகும். இது மெட்டல் கோட்டிங் தரப்பட்ட மொபைல் ஆகும். இதின் மெமரி ஸ்டோரேஜ் 32 ஜிபி ஆகும். 12 மெகா பிக்ஸல் வசதி கொண்டது ஆகும்.



முதல்வரை சந்திக்க பெங்களூர் சென்றார் ஷீலா பாலகிருஷ்ணன்





சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது முதல்வர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார். அவர் இப்போது அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் அரசு நடவடிக்கை குறித்தும் கேட்பதற்காக சென்றுள்ளார். அடுத்த முதலவருக்கான போட்டியில் ஷீலா பாலகிருஷ்ணனும் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

ஜெயலலிதாவும் ராசியில்லாத செப்டம்பரும் !!



அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்களுக்கு செப்டம்பர் மாதம் ஒரு ராசி இல்லாத மாதம் ஆக தான் இருக்கிறது .

ஏனென்றால் இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தான் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இப்போது மீண்டும் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

செப்டம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் , குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்  முதல்வர் இருக்கையில் அமரக் கூடாது என தீர்ப்பு அளித்தது . இதனால் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக் இருக்கையில் அமர்ந்தார் .


ஆன்லைனில் படித்ததை வைத்து ஏடிஎம்யை துறக்க முயன்ற சிறுவன் !!



மும்பை டியோனர் பகுதியில் வசிப்பவர் 19 வயது சிறுவன் சமீர் அன்சாரி . இவர் பி.காம் படித்து வருகிறார் . இவர் அதிகாலை நேரத்தில் கோவந்தி சங்கரா காலணியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம் ஒன்றை திறக்க முயன்று கொண்டு இருந்தார் .

அப்போது போலிஸ் அவரிடம் திருடுகிறாயா என்று கேட்டபோது , பதிலுக்கு அன்சாரி , தான் ஒரு வங்கி டெக்னிசியன் என்றும் திருடன் எப்போதும் சிசிடிவி கேமராவை வைத்துக் கொண்டு திருட மாட்டான் என்றான் . ஆனால் போலிஸ்காரர்கள் சந்தேகத்தில் வங்கி அதிகாரிகளை விசாரித்தனர் . ஆனால் அன்சாரி அவர்கள் முன் அமைதியாக ஏ.டி.எம் இயந்திரத்தைக் கழற்றி கொண்டு இருந்தான் .

போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " அன்சாரி ஆன்லைன் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை துறக்க  கற்று கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் . போலிஸ் பேட்ரோல் சரியான நேரத்தில் வந்ததால் 7 இலட்ச ரூபாய் திருட்டை தடுக்க முடிந்தது . ஆனால் அன்சாரி போலிஸ் வந்த பின்னரும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் ஏ.டி.எம். இயந்திரத்தை துறக்கும் முயற்சியில் இருந்தார் . ஏ.டி.எம் இயந்திரம் குறித்த தொழில்நுட்ப விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்ட பின்னர் , ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்காமல் இந்த முறையை பின்பற்றி உள்ளார் " என்றார் .

போலிசார் இப்போது அவரை கைது செய்துள்ளனர் .


" சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும் " - மோடி ஐ.நா சபையில் வலியுறுத்தல் !!



தனது முதல் ஐ.நா சபை உரையில் மோடி அனைத்து உலக தலைவர்களையும் யோகா தினம் என ஒரு நாளை கொண்டாட வலியுறுத்தினார் . மேலும் ஒருவரின் வாழ்க்கைமுறையை மாற்றியும் , விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம் என கூறினார் .

ஐ.நா சபையில் பேசுகையில் , " நாம் சர்வதேச யோகா தினத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் . நமது முன்னோர்கள் நமக்கு அளித்த விலைமதிப்பில்லாத பொக்கிஷம் யோகா . இது வெறும் உடற்பயிற்சி மற்றும் அல்ல , நம்மை நாம் புரிந்து கொள்வதற்கும் , உலகம் மற்றும் இயற்கையை புரிந்து கொள்வதற்கான வழி . யோகா உடல் மற்றும் உள்ளத்தை ஒன்று படுத்துகிறது . ஒருவரின் வாழ்க்கைமுறையை மாற்றியும் , விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம் " என்றார் .

போயஸ் கார்டன் முதல் சிறைச்சாலை வரை , ஜெயலலிதாவின் வாழ்க்கை நேற்று எப்படி இருந்தது




காலை 8.45 மணி : ஜெயலலிதா தனது வீடு இருக்கும் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பினார்.

காலை 8.50 மணி : கோட்டூர்புரம் பாலம் அருகே தனது காரை அங்கு இருக்கும் பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை வணங்கினார்.

காலை 9.12 மணி : சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்றடைந்தார். அங்கு இருந்து பெங்களூருக்கு விமானம் ஏறினார்.

காலை 9.45 மணி : பெங்களூர் விமான நிலையத்தை அடைந்தார். அங்கு இருந்து லீலா பேலஸ் ஒட்டலுக்கு சென்று ஒய்வெடுத்தார்.

காலை 10.25 மணி : ஜெயலலிதாவுடன் சசிகலாவும், இளவரசியும் வந்துவிட்டார்கள். சுதாகரன் மட்டும் தற்போது வந்தார்.

காலை 10.45 மணி : ஜெயலலிதா, இளவரசி, சசிகலா ஆகியோர் ஒட்டலில் இருந்து கோர்ட்டுக்க் வந்தனர்.

காலை 11.00 மணி : வழக்கு தொடங்கியது, ஆனால் தீர்ப்பு 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்தது.

மதியம் 1.00 மணி : தீர்ப்பு 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் 3.00 மணி : ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு, இதனை கேட்டு அதிமுகவினர் கதறினர். கலவரங்களை தடுக்க 5 கிமீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

மாலை 4.00 மணி : 4 வருட சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் அறிவிப்பு.

மாலை 5.20 மணி : ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா அவர்களுக்கு சிறை எண் 7402 வழங்கப்பட்டது !! சிறையில் நடந்தது என்ன ??



நேற்று அதிமுக தலைவரின் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது . அந்த தீர்ப்பில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்தது . அவர் தீர்ப்பு வந்தவுடன் பரப்பன அஹ்ராகராவில் உள்ள் சென்ட்ரல் ஜெயிலுக்கு போக வேண்டும் . அதற்கு முன் அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் முதன்மை மருத்துவ செக்-அப் எடுத்துக் கொண்டார் .

இந்த மருத்துவ செக் அப்கள் அனைத்தும் முடிந்த பின்னர் இவருக்கு விவிஐபி சிறையில் 7402 ஆம் எண் சிறை வழங்கப்பட்டது  .  ஜெயலலிதாவுக்கு இந்த சிறை வழங்கப்பட்டது . அவருக்கு என பேன் , மெத்தை , தனி குளியலறை அகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது . சிறை விதிகளின் படி அவருக்கு வெள்ளை புடவை வழங்கப்பட்டது .  இந்த சிறையில் உள்ள விஐபி சிறை அறையில் தான் முன்னால் கர்நாடக தலைவர் எடியுரப்பா வைக்கப்பட்டு இருந்தார் . என்பது குறிப்பிடத்தக்கது . நில மோசடி வழக்கில் இந்த சிறையில் தான் அவர் 24 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார் .

அவருக்கு இரவு உணவாக களி உருண்டையும் , 200 கிராம் சோறும் ,இரண்டு சப்பாத்திகளும் வழங்கப்பட்டது . ஆனால் அதை அவர் மறுத்துவிட்டு பழங்கள் கேட்டு வாங்கிக் கொண்டார் .

மற்ற குற்றவாளிகளான சசிகலா , இளவரசி , சுதாகரன் ஆகியோருக்கு முறையே 7403 , 7404 , 7405 வழங்கப்பட்டது .


தீர்ப்பு எதிரொலி :அரசுப் பேருந்து உள்பட 7 வாகனங்கள் உடைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் அரசுப் பேருந்து உள்பட 7 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைக் கண்டித்து, சென்னையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனங்கள் தாக்கப்பட்டன. சூளைமேடு, திரிசூலம், வேளச்சேரி, திருநின்றவூர் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.இதேபோல், வியாசர்பாடி எருக்கஞ்சேரி சாலையில் வந்த கர்நாடகப் பதிவு எண் கொண்ட ஒரு வேனும், ஒரு காரும் தாக்கி உடைக்கப்பட்டன. சைதாப்பேட்டையிலும் ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 இடங்களில் ரயில் மறியல்: போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிமுகவினர், சென்னையில் திருநின்றவூர், தாம்பரம், பழவந்தாங்கல், ஆவடி, திரிசூலம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. முக்கியமாக தாம்பரம், பழவந்தாங்கல், திரிசூலம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டத்தினால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

அம்பத்தூர் : அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சந்திப்பிலும், கலெக்ட்ர் நகர் சந்திப்பிலும், பாடி- கொரட்டூர் சந்திப்பிலும், உருவ பொம்மைகளை எரித்தனர். மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் மீது மர்மகும்பல் கல்லால் தாக்கியதில் கடையின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. மதுரவாயல்: மதுரவாயல் பகுதியில் ஏரிக்கரை, வானகரம், மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் அதிமுகவினர் உருவ பொம்மைகளை எரித்தனர்.ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் திரண்ட 10 பெண்கள் உள்பட 50 அதிமுகவினர் மாலை புறநகர் ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருநின்றவூர் ரயில் நிலையத்திலும் அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். வில்லிவாக்கம் தொடங்கி திருநின்றவூர் வரை கடைகள் அடைக்கப்பட்டன. இதில் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

ஐ.எஸ். மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

இராக்கில் தாக்குதல் நடத்துவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்பு, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பினர்.  இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இலக்குகள் மீது பிரிட்டன் படைகள் தாக்குதல் நிகழ்த்த அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து, பிரிட்டன் விமானப் படை விமானங்கள் தாக்குதலுக்குத் தாயாராகி வருகின்றன. கிழக்கு மத்திய தரைக்கடலிலுள்ள சைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டனின் "டோர்னடோ ஜி4' ரகத்தைச் சேர்ந்த 6 குண்டு வீச்சு விமானங்கள் இதுவரை உளவுப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இனி அந்த விமானங்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், ""மிக மோசமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ûஸ அழிக்கும் பணியில், பிரிட்டனும் பங்கேற்கும்'' என்று தெரிவித்தார். முன்னதாக, இராக்கில் தாக்குதல் நிகழ்த்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், தாக்குதலுக்கு ஆதரவாக முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்களித்தன. தாக்குதலுக்கு ஆதரவாக 524 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் பதிவாயின. இராக்கில் மேற்கொள்ளவிருக்கும் தாக்குதல் நடவடிக்கை குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹம்மாண்ட் கூறுகையில், ""தாக்குதல் நிகழ்த்த வேண்டிய இலக்குகளை நிர்ணயம் செய்வது குறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம். குண்டுவீச்சுப் பகுதிகளிலிருந்து எங்களது விமானங்கள் மிகக் குறைவான சவாலையே எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, இராக்கில் தாக்குதல் நிகழ்த்த வேண்டிய இடங்களைக் கண்டறிவதற்காக பிரிட்டன் விமானங்கள் ஆறு வாரங்களாக அப்பகுதியில் உளவுப் பணியில் ஈடுபட்டு வந்தன. போர் விமானங்கள் மட்டுமின்றி, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய "டாமஹாக்' ரக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தவும் பிரிட்டன் கடற்படை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, அமெரிக்க, அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத நிலைகள் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், தற்போது பிரிட்டனும் அவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. அமைப்பு உகந்த இடமல்ல: ஐ.நா. பொதுச் சபையில் மோடி உரை

இரு தரப்பு விவகாரமான காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு ஐ.நா. பொதுச் சபை உகந்த இடமல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். காஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசியதற்கு பதிலடி தரும் வகையில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முதலாக ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி சனிக்கிழமை உரையாற்றினார். அதன் விவரம்:
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பொதுச் சபையில் எழுப்புவது, இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. (காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நவாஸ் ஷெரீஃப் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி மறைமுகமாக இவ்வாறு பேசினார்).

தீவிரவாதத்தின் சுவடே இல்லாத, சுமுகமான சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த விரும்புகிறேன். இருநாட்டு நல்லுறவையும், தோழமையையும் வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் சீரிய முறையில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்பாக, அப்படியொரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது தனது பொறுப்பு என்பதை உணர்ந்துகொண்டு பாகிஸ்தான் செயல்பட வேண்டும்.

வெள்ள நிவாரணத்துக்கு உதவி: இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அளவில் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். வெள்ள பாதிப்புக்கு ஆளான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் உதவிகளை அளிக்க முன் வந்தோம்.

அண்டை நாடுகளுடன் சுமுக உறவு: அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்கும் நாடுதான் வளர்ச்சியை எட்டும். அந்தவகையில், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டைய நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதற்கு இந்திய அரசு அதிகபட்ச முன்னுரிமையை அளித்து வருகிறது.
சிறிய நாடுகளுக்கு உதவி: வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, தன்னிடம் இருக்கும் ஓரளவு வளத்தைக்கூட, உதவி கேட்கும் சிறிய நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது.

அமைதிக்கு அச்சுறுத்தல்: உலக அளவில் பெரிய யுத்தங்கள் நிகழவில்லை என்றாலும் ஆசியா உள்ளிட்ட சில பிராந்தியங்களில் சண்டைகளும், அமைதியைச் சீர்குலைக்கும் வாய்ப்புகளும் உருவாகும் நிலை உள்ளது. ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவது கவலையளிக்கிறது. மேற்கு ஆசியப் பகுதிகளில் நடைபெறும் கிளர்ச்சிகளினாலும் அமைதி சீர்குலைகிறது.

தீவிரவாதத்தை களைவோம்: நாடுகள் இடையேயான வேற்றுமைகளைக் களைந்துவிட்டு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வோம். சர்வதேச தீவிரவாதத்தைக் களைவதற்கான கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஐ.நா.வுக்கு முக்கியத்துவம்: ஐ.நா. சபை இருக்கும்போது 'ஜி' அமைப்புகளை ஏற்படுத்துவது தேவைதானா என்பதை உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உள்ளிட்ட ஐ.நா. சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சபையில் உரையாற்றியதில் பெருமை கொள்கிறேன் என்றார் மோடி.

193 நாடுகள் பங்கேற்ற இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தில் மோடி சுமார் 35 நிமிடங்களுக்கு ஹிந்தியில் பேசினார். முன்னதாக, ஐ.நா. பொதுச்செயலர் பாங்-கீ-மூனை நரேந்திர மோடி சந்தித்தபோது காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.பொதுச் சபையில் நவாஸ் எழுப்பியது முறையற்றது என்றும் இருதரப்பிலான பிரச்னைகளை எழுப்புவதற்கு ஐ.நா. பொதுச்சபை உகந்த அமைப்பல்ல என்று தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்பு: முன்னதாக, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வருகைதந்த மோடியை, ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் வாழ்த்துக் கோஷங்களுடன் வரவேற்றனர். "நியூயார்க் மோடியை விரும்புகிறது', "அமெரிக்கா மோடியை விரும்புகிறது' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

அடுத்து யார்? ஓ.பன்னீர்செல்வமா? நத்தம் விஸ்வநாதனா? ஷீலா பாலகிருஷ்ணனா? ஜெயலலிதா டிக் அடித்தது யாரை?
http://www.satrumun.net/2014/09/who-is-next-cm-of-tamilnadu.html

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை யொட்டி பேஸ்புக்கில் வந்த நகைச்சுவை ட்ரோல்கள்
http://www.satrumun.net/2014/09/trolls-of-judgement-day.html

ஆண் - பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
http://www.satrumun.net/2014/08/what-are-hurdles-for-male-female.html

யாரும் எதிர்ப்பார்க்காதபடி தீர்ப்பில் ஒரு ஆப்பு வைத்துள்ள புத்திசாலி நீதிபதி
http://www.satrumun.net/2014/09/new-problem-for-jayalalitha-in-judgement.html

ஜெ. வழக்கு தீர்ப்பு சூழ்நிலையில் தமிழகத்தை காட்டுமிராண்டி இடமாக காட்டும் வடஇந்திய ஊடகங்கள் - திருமுருகன் காந்தி!
http://www.satrumun.net/2014/09/blog-post_373.html

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு செய்வதற்கு முன் நடந்த பரபரப்பு நிமிடங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_358.html

மெட்ராஸ் பட வெற்றியால் கவலையில் இருக்கும் ஜீவா
http://www.satrumun.net/2014/09/jeeva-sad-due-to-success-of-madras.html

சியோமி மொபைல் தீபாவளிக்கு விற்பனைக்கு வருகிறது
http://www.satrumun.net/2014/09/when-is-xiami-coming-again.html

இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதில் சந்தேகம் ??
http://www.satrumun.net/2014/09/who-is-indian-team-coach.html

20 வருடங்களுக்கு முன் வெள்ளை மாளிகை முன் சாதாராணமாக போஸ் கொடுத்தவர் , இன்று பிரதமாரக வெள்ளை மாளிகை செல்கிறார் !!
http://www.satrumun.net/2014/09/modi-photo-in-front-of-white-house.html

வைபி பெற்ற முதல் இரயில்வே நிலையம் ஆகிறது சென்னை சென்ட்ரல் !!
http://www.satrumun.net/2014/09/chennai-central-becomes-the-first-station-to-get-wifi.html

அடுத்து யார்? ஓ.பன்னீர்செல்வமா? நத்தம் விஸ்வநாதனா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ பதவி மற்றும் முதல்வர் பதவிகளை உடனடியாக இழந்தார், இதை அடுத்து யார் முதல்வராக ஆக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

வெளியே சோகமாக சீன் போட்டாலும் சீனியர் அமைச்சர்களில் இருந்து ஜூனியர் அமைச்சர்கள் வரை ஏன் சில எம்.எல்.ஏக்கள் கூட முதல்வர் கற்பனையில் கடந்த சில நாட்களாக மிதந்து வருகிறார்கள்

கடந்த இரண்டு வாரங்களாகவே அமைச்சர் செந்தில் பாலஜியின் பெயர் அடுத்த முதல்வர் என்று பலமாக பேசப்பட்டு வந்தாலும் அது அவரது பதவியை காலி செய்வதற்காக கிளப்பிவிடப்பட்டது என்றும் இப்படி கிளப்பிவிட்டால் ஜெயலலிதா அவரது பதவியை காலிசெய்து விடுவார் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

ஜெயலலிதா தீர்ப்பு குறித்து முன்பே கணித்து 26ம் தேதியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல தயாராக இருந்தார், ஆனால் தீர்ப்பு சாதகமாக உள்ளது என்று கிடைத்த தகவல்களை அடுத்து நம்பிக்கையுடன் சென்றுள்ளார்.  ஜெயலலிதா தயாரித்திருந்த பட்டியலில் முதலிடத்தில் ஓ.பன்னீர் செல்வமும், அடுத்த இட‌த்தில் நத்தம் விஸ்வநாதனும் இருந்துள்ளார்கள், தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் முதல்வரோடு மிகவும் நெருக்கமாக அரசு நடத்துவதில் உதவுவதாலும் அவருக்கு கட்சி மட்டத்தில் எந்த ஒரு செல்வாக்கும் இல்லாததாலும் இவரை ஜெ வின் தற்போதைய ஆலோசகரான சோ ராமசாமி ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தெரியவருகிறது. ஆட்சி உனக்கு கட்சி எனக்கு என்ற டீலிங்கில் ஷீலாவை முன்னிறுத்துகிறார்கள்.

ஜெயலலிதா தண்டனை அடைந்தால் அடுத்த என்ன என்ன செய்யவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டு போயிருப்பதால் இன்று புதிய முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media