BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 May 2014

மருத்துவமனை கட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை தானம் செய்த விவசாயி


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஹன் குல்லு என்ற‌ விவசாயி பேருந்தின் மேற்கூரையில் உட்கார்ந்து பயணம் செய்துள்ளார். அவ்வாறு பயணம் செய்கையில் எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்ததால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது ஊருக்கு அருகில் மருத்துவமனை இல்லாததால் நீண்ட தூரத்தில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லவேண்டியிருந்தது.

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றினர். அதன் பிறகு குல்லு, இனிமேல் யாரும் தங்கள் ஊரில் சிகிச்சை வசதி இல்லாமல் தவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்ட தானமாக வழங்கியுள்ளார். விரைவில் அங்கு மருத்துவமனை துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்லு தானம் செய்துள்ள நிலத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 10 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல்


சென்னை காவல் நிலைய‌ கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 12 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு மர்ம நபர், வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் நாளை காலை 10 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார், மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அந்த எண் குரோம் பேட்டையை சேர்ந்த த.மு.மு.க. பிரமுகரின் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவரது வீட்டு முகவரியில் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்த போது குறிப்பிட்ட செல்போன் எண்ணை வாங்கவில்லை என்று கூறினார். எனவே மர்ம ஆசாமி த.மு.மு.க. பிரமுகரை சிக்க வைக்க அவரது பெயரில் போலி அடையாள அட்டை கொடுத்து செல்போன் எண் வாங்கி இருப்பது தெரிந்தது. மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை அரசு மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்பட 5 இடங்களிலும் இன்று காலை ஏராளமான போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னையில் 200 இடங்களில் 'அம்மா வாரச்சந்தை' விரைவில் தொடக்கம்


சென்னை மாநகரத்தில் 200 இடங்களில் அம்மா வாரச்சந்தைகளை விரைவில் தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவை மாநகராட்சியின் சொந்த கட்டிடங்கள் வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளாதபோது அங்கு இயங்கும்.

இந்த சந்தையில் மக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்கப்படும். இதில் சுய உதவிக் குழுக்கள், சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்கப்படும். பிரபல தனியார் கம்பெனி களின் பொருட்களும் சந்தையில் விற்கப்படும் என்று கூறப்ப டுகிறது. சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு வாரச்சந்தை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

பிரிவு உபச்சார விருந்தில் கலந்து கொள்ளாமல் பிரதமரை அவமதித்த ராகுல் காந்தி


பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரிவு உபச்சார விருந்தளித்தார். இந்த விருந்தில் முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை என்பதோடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துக் கொள்ளவில்லை.

பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி சந்தித்து, இந்த விருந்தில் கலந்துக்கொள்ள முடியாது என்று கடந்த வாரமே கூறியதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து சிவ சேனை மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், "ராகுல் காந்தி எப்போதும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு விடுமுறைக்காகத்தான் இந்தியா வருவார். மே 16-க்கு பின் அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார். அவருக்கு தேர்தல் முடிவுகள் குறித்து நன்றாக தெரிந்துள்ளது.

இந்த நிலையில் இறுதி பிரிவு உபச்சார விருந்துக்குக் கூட ராகுல் காந்தியால் கலந்துக் கொள்ள முடியவில்லை. பொதுவாக அவர் மக்களவைக்குத்தான் ஒழுங்காக வரமாட்டார். ஆனால் இந்த முறை பிரதமருக்கு வழங்கிய பிரிவு உபச்சார நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் அவரை அவமதித்துவிட்டார்" என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்துடன் காரை திருடியவருக்கு மரண தண்டனை


ஜேம்ஸ் மெக்வே (44) என்ற நபர், கடந்த 2011-ம் ஆண்டு 75 வயது பெண்மணி ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது காரை திருடிச் சென்றார். பின்னர் மெக்வே, விஸ்கான்சின் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், “வாஷிங்டன் சென்று அதிபர் ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்துடன் காரை திருடினேன்” என்றார் மெக்வே. இவர் மீதான வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மெக்வேவுக்கு மரண தண்டனை அளித்து நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட கருத்தை கூறியிருந்தால், மெக்வேவுக்கு பரோல் சலுகை இல்லாத ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு யாரும் கூறவில்லை. எனினும் மெக் வேவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தெற்கு டகோடா மாநில உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும்.

பாஜகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் , இரண்டு மாநில கட்சிகள் மறுப்பு !!

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இந்த நேரத்தில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என சில கருத்துக் கணிப்புகள் கூறியது . ஆனால் பெரும்பான்மை கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பதற்காக மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை வாங்க கூட்டணி கதவை திறந்தது பாஜக .


ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஒருமுறை இருந்த திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் முயற்சியை திட்டவட்டமாக மறுத்துள்ளது .


இன்னொரு கட்சியான தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் டி.பி.திரிபாதி கூறியதாவது , ஒருவேளை பாஜக தலைவர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் எதிர்க்கட்சி வரிசையில் தேசியவாத காங்கிரஸ் அமரும். தேசியவாத காங்கிரசு பாஜகவுடன் நெருக்கம் காட்டி ஆதாயம் பெற முயற்சிப்பதாக வரும் அனைத்து செய்திகளும் பொய்யானவை என்றார் . தேசியவாத காங்கிரசு இப்போது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது .

விபத்து எதுவும் நடக்கவில்லை; கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக உள்ளது- அணுமின் நிலைய வளாக இயக்குநர்


கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து அறிவியல்பூர்வ விசாரணை நடத்த வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள் ளார். ஆனால், ‘விபத்து எதுவும் நடக்கவில்லை. அணுஉலை பாது காப்பாக உள்ளது, பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்று கூடங் குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணு மின் கழகம் சார்பில் கூடங்குளம் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

கூடங்குளம் நிலையத்தில் நீராவி குழாய் உடைப்பு மற்றும் வெடிப்பு போன்ற எந்த விபத்தும் நடக்க வில்லை. அதுபோன்ற தகவல்கள் மற்றும் செய்திகள் தவறானவை. புதன்கிழமை பகல் 12.10 மணிக்கு முதல் அலகில் பராமரிப்பு பணி நடந்தபோது, வால்விலிருந்து கொதி நீர் வழிந்ததில், அணு மின் நிலைய 3 பணியாளர்களும், 3 தற்காலிக பணியாளர்களும் காய மடைந்தனர். அவர்களுக்கு உடனடி யாக முதலுதவி தரப்பட்டு, அணு விஜய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் நாகர் கோவில் சிறப்பு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். கூடங் குளம் அணுமின் நிலைய முதல் அலகில் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு 900 மெகாவாட் உற்பத்தி திறன் எட்டப்பட்டது. பின்னர் 12-ம் தேதி பராமரிப்பு பணிக்காக இயக்கம் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை காலை அணு மின் நிலையம் மீண்டும் இயக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அணுமின் நிலையத்தை அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த சுமார் 60 பேர் நேரடியாக புதன்கிழமை பார்த்தனர். அணு உலை மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை


பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று ஓட்டுப்பதிவுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில், ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான இன்று, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருடனும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்று அவர் விளக்குகிறார். அதாவது, தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினர் அனைவரும் ஒரே குரலில் ஒற்றுமையாக, தெளிவாக பேச வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த ஆலோசனைக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தெளிவின்றி அமைந்தால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பணியாற்றுவதா? அல்லது பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க மற்ற கட்சிகளுடன் இணைந்து முயற்சிப்பதா? என்பது பற்றியும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும். இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கிய ராகுல் காந்தியை தோல்விப்பழியில் இருந்து பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காந்தியின் மகன் ஹரிலால், தன் மகளையே கற்பழித்ததாகக் கூறும் காந்தியின் கடிதம் ஏலத்திற்கு வருகிற‌து


காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு, மாதுவிற்கும் அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு ஆளானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஹரிலால் பெற்ற மகளையே பலவந்தப் படுத்தி கற்பழிக்க  துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், ‘நீ இன்னும் மது மற்றும் விபச்சார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார்.

காந்தி தனது கைப்பட எழுதிய இந்த கடிதங்கள் உள்பட மேலும் சில கடிதங்களை இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனம் வரும் 22-ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.

தடங்கல்கள் வந்தால்கூட, எந்த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ஓட்டு எண்ணிக்கையை வெப்காஸ்டிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, நேரில் பார்ப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவதற்கு தலைமைச் செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் வரக்கூடாது. எண்ணிக்கை விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்காக மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வசதி செய்துதரப்படும்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் வர முடியாது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சான்றிதழை வாங்கும்போது அவர்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக எடுத்துக்கொண்டால், சராசரியாக 20 அல்லது 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தடங்கல் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடந்தால், மாலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.

தடங்கல்கள் வந்தால்கூட, எந்த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின்போது சாப்பாட்டுக்கென்று இடைவெளி விடப்படாது.

வாக்கு எண்ணிக்கையின்போது 59 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறுவதற்கு முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அவரது தேர்தல் செலவு கணக்கில் சேரும்.

ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் செலவு உதவி பார்வையாளர்கள் பணியாற்றுவர். இவர்கள் உள்ளூரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களாகும்.

தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். மறுவாக்குப்பதிவு இல்லாத நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மேலும் தளர்த்துவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.

(ஓட்டு எண்ணும் போது எந்திரங்கள் பழுதானாலோ அல்லது குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம்).

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஒருவாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

தேர்தலின் போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

எனவே அந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 30 ஆக உயர்த்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. வடசென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 7 மேஜைகள்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கும் 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று பொதுவான புகார்கள்தான் இருந்தது. பெரிய அளவில் புகார்கள் கூறப்படவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததை வைத்தே, தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

யாருமே பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால், இந்த தேர்தல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

அமெரிக்காவில் கோடை வெப்பத்தால் காட்டு மரங்கள் தீப்பிடித்தது; பயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோட்டம்


அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, கலிபோர்னியாவில் அதிகமான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தெற்கு கலிபோர்னியா பகுதியின் காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கி விட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ராணுவத்தளம் மற்றும் ஒரு பொழுதுப்போக்கு மையம் ஆகியவை இழுத்து மூடப்பட்டன. மேற்குக் கடற்கரை பகுதியையொட்டியுள்ள புதர்களும் தீப்பற்றி எரிகிறது. இதனால், அமெரிக்காவின் மாநிலங்களை ஒன்றிணைக்கும் 5 நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கார்ல்ஸ்பட் என்ற இடத்தில் ஒரு ஓய்வு விடுதி மற்றும் சில வீடுகளையும் தீ பொசுக்கி அழித்தது. அப்பகுதியில் உள்ள சுமார் 11 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களை தேடி செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளதால் அவர்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறினர். இதேபோல், சான் டியாகோ பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்களையும் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்பகுதியில் தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்ததன் விளைவாக அந்த எச்சரிக்கை பின்னர் கைவிடப்பட்டது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media