BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 September 2014

ஐ - படத்தின் டீசர் வெளியீடு [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது]

இன்று ஐ படத்தின் பாடல் வெளியீடு நடைபெற்றது, ஐ படத்தின் முன்னோட்ட காட்சிகள் சோனி மியூசிக்கினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே 60ஆயிரம் பேர்களுக்கு மேல் இதை பார்த்துள்ளார்கள்

 

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


பெண்களுக்கு செக்ஸ் ரீதியாக எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?
http://www.satrumun.net/2014/09/which-men-more-attracting-women-for.html

வரலாற்று சிறப்பு வாய்ந்த 100 பேர்களின் பட்டியல் இயேசு வுக்கு முதலிடம், காந்தியும், புத்தர் பட்டியலில் உள்ளார்கள்
http://www.satrumun.net/2014/09/the-100-most-significant-figures-in.html

பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள் : ஸ்பேம்களால் உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படும் அபாயம்
http://www.satrumun.net/2014/09/blog-post_67.html

கத்தி படத்தின் பாடல் லீக், முழுப்படத்தையும் வெளியிடுவோம் என மிரட்டல்
http://www.satrumun.net/2014/09/kathi-movie-song-leaked-in-net.html

சென்னை வந்தார் அர்னால்ட், முதல்வரை சந்தித்தார், சூர்யா படம் எடுத்துக்கொண்டார்
http://www.satrumun.net/2014/09/arnold-visit-chennai-to-attend-eye.html 

இனி ஒட்டும் இல்லை.., உறவும் இல்லை… : தனுஷை நிரந்தரமாகப் பிரிந்த சிவகார்த்திகேயன்!
http://goo.gl/0cktmW

அறியப்படாத கூகுள் இன் சேவைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_140.html

அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக்,  மனித குலத்தின் உடனடி கவனத்திற்கு
http://www.satrumun.net/2014/09/blog-post_59.html

முதுகுவலி: ஏன் வருகிறது, தீர்வு என்ன
http://www.satrumun.net/2014/09/blog-post_61.html

விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து, நீதிமன்ற இடத்தை மாற்ற கோரி ஜெயலலிதா மனு
http://www.satrumun.net/2014/09/jaya-filed-petition-to-change-special.html

ஜெயலலிதாவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்திய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
http://www.satrumun.net/2014/09/arnold-talks-with-jeyalalitha.html

கத்தி படத்தின் இசை குறித்து அதிகாரபூர்வ தகவல் வந்தது
http://www.satrumun.net/2014/09/news-about-kaththi-music.html

நாம் தொலைத்தவைகள் ஏராளம், நம் முன்னோர்கள் அனுபவித்த சந்தோஷங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_29.html

தமிழின் சிறப்புகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_15.html

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி என அதிமுக மீது பாஜக குற்றச்சாட்டு
http://www.satrumun.net/2014/09/bjp-alleged-that-admk-distribute-money.html

புதுச்சேரியில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
http://www.satrumun.net/2014/09/english-to-continue-as-link-language-in.html

பற்களில் கரையா கவலை வேண்டாம்



என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..


நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்....


{கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்... எவ்வளவு உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் தெரிந்தவர்களிடம் உறுதி செய்து கொள்ளவும்.}

அனைவருக்கும் ஒரு பயனுள்ள செய்தி



சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:

தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதழ்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.

இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் கண்ட இணையமுகவரிக்குச் சென்று "Register Citizen" என்பதை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழு விபரமும் ரிஜிஸ்டர் ஆகி விடும். பின்னர் உங்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான கல்வி உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும்.
பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் வழி வகை உண்டு.

இணைய முகவரி http://edistrict.tn.gov.in/ 

பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள் : எச்சரிக்கை


நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும்,  குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய  மீடியாவாகவும் செயல்படுகிறது.

கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் இப்படியொரு தளத்தை மோசடி பேர்வழிகள் சும்மா விடுவார்களா? நம்மை ஏமாற்ற இங்கும் வலை வீசுகிறார்கள் ஏமாற்று பேர்வழிகள் (Spammers). அவர்கள் வீசும் பல வழிகளில் ஒன்றை இங்கே பார்ப்போம்.

இது எங்கிருந்து தொடங்கும் என்று நமக்கு தெரியாது. நம்முடைய பேஸ்புக் நண்பர் அவரின் பேஸ்புக் பகிர்வில் நம்மை டேக் செய்திருப்பதாக நமக்கு அறிவிப்பு காட்டும். 

பார்த்ததும் குழப்பமடைய செய்யும் விதமாக ஒரு சுட்டியை பகிர்ந்திருப்பார். உதாரணத்திற்கு xn--47aaeaba.com என்ற முகவரி.

அதனை க்ளிக் செய்தால் வேறொரு தளத்திற்கு செல்லும். உதாரணத்திற்குworldmedya.net

அந்த தளம் உங்கள் உலவிக்கு ஏற்றார் போல நீட்சி (Extension) ஒன்றை நிறுவச் சொல்லும்.

பயர்பாக்ஸ் உலவியாக இருந்தால் பின்வருமாறு இருக்கும்.


கூகுள் க்ரோம் உலவியாக இருந்தால் பின்வருமாறு காட்டும்.


வீடியோவை பார்க்க Flash Player-ஐ நிறுவச் சொல்லும். அதை க்ளிக் செய்தால் க்ரோம் நீட்சி (Extension) ஒன்றை நிறுவச்சொல்லும்.

இவற்றை நம்பி பயர்பாக்ஸிலோ, க்ரோமிலோ இந்த நீட்சியை (Extension)நிறுவினால் உங்கள் உலவி உங்களிடம் இல்லை.

இந்த நீட்சி (Extension) என்னென்ன செய்யும்?

1. உங்கள் உலவியில் நடப்பவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.

2. நீங்கள் பேஸ்புக் தளத்தை திறக்கும் போது நீங்கள் உள்நுழைந்திருக்கிறீர்களா? என்று பார்க்கும்.

3. அப்படி உள்நுழைந்திருந்தால் ஜாவா நிரல் ஒன்றை நீட்சியில் நிறுவும்.

இந்த நிரல் மூலம் மோசடி பேர்வழிகள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணக்கு மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் கொடுக்க முடியும், உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்ப முடியும், நீங்கள் இணைந்திருக்கும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துரை இட முடியும், இது போன்ற ஸ்பாம் இணைப்பை பகிர்ந்து உங்கள் நண்பர்களை டேக் செய்ய முடியும், இப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

தற்போது இந்த மோசடி பேர்வழிகள் செய்வது, புதிய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய வைப்பார்கள். அதிகமான லைக் கிடைத்த பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தை விற்றுவிடுவார்கள்.இப்படி தொடர்ந்து நடைபெறும். மேலும் மேலே சொன்ன தளங்களில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் உள்ளது. அதன் மூலமும் இவர்களுக்கு பணம் கிடைக்கும்.

இது ஓரிரு நாளில் முடிந்துவிடும் மோசடி இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பெயர்களில்முளைத்துக் கொண்டே இருக்கும்.

இது போல உங்கள் நண்பர்கள் மூலம் வந்தால் புறக்கணித்துவிடுங்கள். நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்துவிடுங்கள்.

ஒருவேளை மேலே சொன்ன நீட்சியை நிறுவியிருந்தால்,

1. முதலில் நீட்சியை நீக்கிவிடுங்கள்.

2. பிறகு பேஸ்புக்கில் கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள்.

3. தேவைப்பட்டால் உலவியையும் நீக்கிவிட்டு புதிதாக நிறுவுங்கள்.

4. உங்கள் டைம்லைனில் நீங்கள் பகிராத ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து நீக்கிவிடுங்கள்.

5. நீங்கள் லைக் செய்யாத பக்கங்கள் லைக் செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து Unlike செய்துவிடுங்கள்.

இதே மோசடி வேறு சில வழிகளிலும் வரும். அவைகள்,

1. "John Cena of WWE died in a head injury while training!என்று பேஸ்புக் கம்மென்ட்களில் பார்க்கலாம். இது பற்றிய வீடியோ:



2. 100 டாலர் மதிப்புள்ள ஸ்டார்பக்ஸ் காபி அன்பளிப்பு அட்டை. இது பற்றிய வீடியோ:



3. உங்கள் பேஸ்புக் தளத்தின் கலரை மாற்றுங்கள் என்று வரும்.


4. உங்கள் ப்ரொபைலை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
 என்று வரும்.


இது போன்று மோசடி பேர்வழிகள் எண்ணற்ற முறையில் நமக்கு வலை வீசுகிறார்கள். இவற்றில் சிக்காமல் பாதுகாப்புடன் இருங்கள்!

குறிப்பு 1: பதிவில் சொன்ன மோசடியால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்காக உதவி செய்ய முற்பட்டபோது தான் மேலே சொல்லப்பட்ட தகவல்கள் Bit Defenderதளத்தில் கிடைத்தது.

அறியப்படாத கூகுள் இன் சேவைகள்



1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):

தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது. 

2. கூகுள் திங்க் (Google Think)

கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.

3. கூகுள் மாடரேட்டர் (Google Moderator):

பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.

4. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.

5 . கூகுள் ஸ்கீமர் (Google Schemer):

தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.

6. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google):

தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.

7. பில்ட் வித் குரோம் (Build with chrome):

ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.

8. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project):

இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.

9. கூகுள் ஸ்காலர் (Google Scholar):

இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.

10. கூகுள் மார்ஸ் (Google Mars):

அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.

மனித குலத்தின் உடனடி கவனத்திற்கு



கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மருத்துவ சாதனை என்று போற்றப்படுவது நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்தான "ஆன்டிபயாடிக்'. 1950இல் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகமானதற்கு முன்புவரை, சிறிய வெட்டுக் காயம், தொண்டைப் புண் போன்ற உபாதைகள்கூடப் பலரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தன. "பாக்டீரியா' என்று பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகளும் நச்சுயுரிகளும் (வைரஸ்) பேரழிவை ஏற்படுத்தி வந்தன.

ஆன்டிபயாடிக்கின் வரவு, மனித குலத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஆன்டிபயாடிக் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்தால், சாதாரண விஷக்காய்ச்சல்கூட அதிவேகமாகப் பரவி, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலி கொண்டிருக்கும். 1950க்கு முன்னால் பிளேக், காலரா போன்ற நோய்கள் அசுர வேகத்தில் பரவி பல்லாயிரம் கிராமங்களில் உயிரினங்களும் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்த சரித்திரப் பதிவுகள் ஏராளம், ஏராளம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகவும், இயற்கையை வென்ற அறிவியல் சாதனையாகவும் கருதப்பட்டதோ, அதே ஆன்டிபயாடிக் இப்போது தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) சமீபத்தில் நடத்திய சர்வதேச ஆய்வின் முடிவுகள் "ஆன்டிபயாடிக்'கின் வீரியத்தை முனை மழுங்கச் செய்து, எந்தவித சிகிச்சைக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகள் அதிவேகமாக உருவாகிக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடமாக உபயோகத்தில் இருப்பதால், நுண்ணுயிரிகளில் சில காலப்போக்கில் ஆன்டிபயாடிக் மருந்திற்குத் தங்களுக்குத் தாமே எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எப்படி நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் வெள்ள அணுக்கள் மூலம் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி அழிக்க முயற்சிக்கிறதோ, அதேபோல, நுண்ணுயிரிகளும் ஆன்டிபயாடிக் சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்க முற்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது ஆரம்ப கட்டமாக இருப்பதால் ஆன்டிபயாடிக்குக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடைய நுண்ணுயிரிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், இவை தொடர்ந்து ஆன்டிபயாடிக் சிகிச்சையை எதிர்கொள்ள எதிர்கொள்ள, எதிர்ப்பு சக்தியுடைய நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயனற்றவையாக்கிவிடும் அபாயம் ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட முக்கியமான காரணம், இருமல், சளி, சாதாரண காய்ச்சல், கை கால்களில் முறிவு, உடலில் பல்வேறு பாகங்களில் ஏற்படும் கொப்புளங்கள் போன்றவற்றை மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுவதுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நோயாளிகளும் சரி, உடனடியாக குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆன்டிபயாடிக் சிகிச்சையை விரும்புவதும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காக ஆன்டிபயாடிக் தயாரிப்புகளை மருத்துவர்களிடம் முனைந்து பரிந்துரைப்பதும்கூட இந்த நிலைமைக்குக் காரணங்கள். அதேபோல, நோய் குணமடைந்ததும், "ஆன்டிபயாடிக்' சிகிச்சை முழுமையாகாத நிலையில் மருந்து உட்கொள்வதை நோயாளிகள் நிறுத்தி விடுவதும்கூட நுண்ணுயிரிகள் ஆன்டிபயாடிக்குக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வழிகோலுகின்றன.

தனியார் மருத்துவ வசதிகள் அதிகரித்திருப்பதுகூட, அதிகமான ஆன்டிபயாடிக் உபயோகத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. 2011இல் வெளியாகி இருக்கு உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி, இந்தியாவில் 53% பேர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அதிக லாபம் கிடைக்கும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்கள், மருத்துவமனனைகள், மருந்துக் கடைகள் மூலமாக விற்பனை செய்ய ஊக்குவிப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை இது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறுது.

இந்த நிலைமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்துவது, அணு ஆயுதத் தடுப்பைவிட முன்னுரிமை தர வேண்டிய ஒன்று. இல்லையென்றால் கடந்த நுற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். சாதாரண வெட்டுக் காயம், சளி இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும். ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் அதிகரித்து விட்டால், பிளேக், காலரா காலத்துக்கு உலகம் திரும்பக் கூடும்,

ஜாக்கிரதை!

முதுகுவலி: ஏன் வருகிறது, தீர்வு என்ன



முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

பெண்களுக்கு செக்ஸ் ரீதியாக எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?


பெண்களை கவர்வதற்கு ஆண்கள் பல முயற்சிகள் எடுக்கின்றனர், ஆண்களின் அனைத்து முயற்சிகளுமே பெண்களை செக்ஸ் ரீதியாக கவர்வதற்கு தான் என்பது மனோதத்துவ ஆய்வாளர் சிக்மண்ட் ஃப்ராய்டின் முடிவு. ஆண்கள் என்ன வெல்லாமோ செய்து பெண்களை செக்ஸ் ரீதியாக கவர நினைப்பது உண்டு. ஆனால் ஆண்கள் இப்படி எல்லாம் சிரமப்பட வேண்டாமாம்.

எந்த மாதிரி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆய்வு ஒன்றை நடத்தி தகவல் வெளியிட்டு உள்ளனர். இந்த ஆய்வு நிறுவனம் இது பற்றி இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இது பற்றி ஆய்வு நடத்தியது.

இதில் நன்கு ஷேவிங் செய்திருந்த ஆண்களையே தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறினார்கள். அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து வைத்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல டிரிம் செய்யப்படாத தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது.

ஷேவிங் செய்த பின் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சமாக முகத்தில் முடி முளைத்து இருக்கும் ஆண்கள் "செக்ஸ்" ரீதியாக கவர்வதாக அதிக அளவு பெண்கள் தெரிவித்தனர். இதில் மும்பையை சேர்ந்த 64 சதவீத பெண்கள் இந்த மாதிரி இரண்டு நாட்கள் தாடி ஆண்கள் மீது தங்களுக்கு "செக்ஸ்" ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த 83 சதவீத பெண்களும் மும்பையை சேர்ந்த 72 சதவீத பெண்களும், நன்கு முகச்சவரம் செய்த ஆண்களுக்கே முத்தம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

ஹலோ பாஸ் எங்கே கிளம்பிட்டிங்க? ஷேவிங் செய்யவா?

விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து, நீதிமன்ற இடத்தை மாற்ற கோரி ஜெயலலிதா மனு


செப்டம்பர் 20ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில் தன் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தீர்ப்பு அளிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார். தீர்ப்பு நாள் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்திருப்பது வழக்கை தாமதப்படுத்த முயற்சியா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த 100 பேர்களின் பட்டியல் இயேசு வுக்கு முதலிடம், காந்தியும், புத்தர் பட்டியலில் உள்ளார்கள்

உலகின் வரலாற்று சிறப்பு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை சாஃப்ட்வேர் துணை கொண்டு வெளியிட்டுள்ளார்கள் 
ஸ்டீவன் ஸ்கெய்ன் மற்றும் சார்லஸ் பி. வார்ட் ஆகியோர், இது குறித்து இவர்கள் எழுதிய புத்தகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த 100 பேர்களை தேர்ந்தெடுக்க வரலாற்று ஆய்வாளர்களை அணுகாமல் அவர்கள் உருவாக்கிய தாக்கத்தின் வழியாக தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்து இந்த மென்பொருளை உருவாக்கியதாகவும் இது கூகிள் தேடு பொறி போன்று பல்வேறு காரணிகளை வைத்து இந்த பட்டியலை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்கள்

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட சில முக்கியமானவர்கள்

1. இயேசு கிறிஸ்து
2. நெப்போலியன்
3. முகமது நபி
4. வில்லியம் ஷேக்ஸ்பியர்
5. ஆபிரகாம் லிங்கன்
6. ஜார்ஜ் வாஷிங்டன்
7. அடால்ப் ஹிட்லர்
8. அரிஸ்டாட்டில்
9. அலெக்சாண்டர்
10. தாமஸ் ஜெபர்சன்

46. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
52. கெளதம புத்தர்

முழு பட்டியலையும் காண இந்த லிங்கை அழுத்துங்கள்

சென்னை வந்தார் அர்னால்ட், முதல்வரை சந்தித்தார், சூர்யா படம் எடுத்துக்கொண்டார்

 ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவும் கலிபோர்னியாவின் கவர்னராக இருந்தவருமான அர்னால்ட் இன்று சென்னைக்கு வந்திருந்தார், இன்று மாலை நடைபெறும் "ஐ" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள அவர் இன்று மதியம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

அர்னால்டை சந்திக்க பல பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அவரை சந்தித்து அவருடன் படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

எளிமையாக தனக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களுடன் தோளில் கை போட்டு படம் எடுத்துக்கொண்டார்

ஜெயலலிதாவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்திய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு





ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஐ'. இந்த படத்தை ஷங்கர் சுமார் 2 வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருத்தினராக ஹாலிவுட் நாயகன் அர்னால்டு கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலையே விமானம் மூலம் சென்னை வந்து விட்டார். இந்த விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

சென்னை வந்த அர்னால்டு இன்று மதியம் 2.45 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தமிழகத்தின் சாதனைகள் மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். தன்னை அழைத்து சென்ற பாதுகாப்பு அதிகாரியின் தோழில் கை போட்டு கொண்டு சகஜமாக இருந்தார். அர்னால்டு கலிபோர்னியாவின் ஆளுநராக 8 ஆண்டுகள் இருந்துள்ளார். 

கத்தி படத்தின் இசை குறித்து அதிகாரபூர்வ தகவல் வந்தது




இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் கத்தி. இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை துப்பாக்கி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை எப்போது என அதிக எதிர்பார்ப்புகள் இருந்த போது , இசை செப்டம்பர் 18 ஆம் தேதி வருகிறது என்கிற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இந்த படத்துக்கு போட்டியாக தீபாவளி அன்று விக்ரமின் 'ஐ' படம் வெளிவருகிறது. 'ஐ' படத்தின் இசை இன்று வெளிவருகிறது. 

நாம் தொலைத்தவைகள் ஏராளம்


நமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.
இன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.

முதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம்  வகுப்பில் ‘விடுப்பு கடிதம்’ எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில்  இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் “As I’m suffering from fever, I’m unable to attend.. “ என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.
TH21WCTC_FLOATS_130875f

தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுகமானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் இருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள்  என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.
முன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன்  கூடிய டிஜிட்டல்  டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது,  ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. “உங்க அப்பா மொபைல் நம்பர்  என்ன?”   என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.
பண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது !
சரி ! அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே “ஓடி விளையாடு பாப்பா ” என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே  கலைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
சில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்சி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.
இந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன  சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.

தமிழின் சிறப்புகள்

மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி…
தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.
தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)
பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை. அம்மா – ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் அ-ம்-மா மாற்றமில்லை. MOTHER ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் எம் – ஓ – டி – ஹச் – ஈ – ஆர். இப்படி பேசினால் புரியுமா?
பழங்கால மொழிகளான சீனம், எகிப்து, லத்தீன், பாலி (புத்தரின் போதனைகள் பாலியில்தான் உள்ளது), சமஸ்கிருதம் ஆகியவை இப்போது உலகில் வழக்குமுறை/பேச்சுமுறையில் இல்லை. 19ம் நூற்றாண்டுடன் பழைய சீன மொழி அழிந்துவிட்டது. இப்போது சீனா முழுவதும் பேசப்படும் மொழியாக மாண்டரின் உள்ளது. பழங்கால மொழிகளில் இன்னும் மாறாமல் (இலக்கண இலக்கியங்களில்) அப்படியே இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மட்டுமே!
டிஸ்கி : பிற மொழிகளைப் பழிப்பது நம் வேலையல்லை – உதாரணத்திற்காக மட்டுமே கூறப்பட்டுள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு :-)

கத்தி படத்தின் பாடல் லீக், முழுப்படத்தையும் வெளியிடுவோம் என மிரட்டல்


விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கு ஏகப்பட்ட பிரசிச்னைகள், ராஜபக்சேவின் நண்பர் என்று கருத்தப்படும் லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளதால் இப்படம் வெளியாக கூடாது என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேலையில் கத்தி படத்தின் செல்பி புள்ள பாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்பி புள்ள பாடல் கத்தில் படத்தில் விஜய் பாடுவதாக உள்ளது, இதை அனிருத் விஜய்க்கு பாடி காட்டியுள்ளார், அனிருத் பாடிய செல்பி புள்ள பாடல் இன்று காலை இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து கத்தி படக்குழு அளித்துள்ள தகவலில் "கத்தி படத்தில் இடம்பெறும் பாடல் இது இல்லை, ரசிகர்கள் ஏமாற வேண்டாம், விரைவில் நாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கத்தி படத்தை வெளியிட நினைத்தால் இணையத்தில் முழுமையாக கத்தி படத்தினை ரிலீசுக்கு முன்பே வெளியிடுவோம் என்று விஜய்யின் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டியுள்ளார்.

# எது எப்படியோ? அனைத்துமே கத்தி படத்துக்கு விளம்பரம் தான்

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி என அதிமுக மீது பாஜக குற்றச்சாட்டு


கோவையில் தற்போது மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து வருகிறது, திமுக தேர்தலில் போட்டியிடாததால் தற்போது போட்டி அதிமுக மற்றும் பாஜகவிற்கிடையே உள்ளது, இந்நிலையில் துடியலூர் வட்டாரத்தில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியது. நேற்று மதியம், துடியலூர், சேரன் காலனியில், கோவை மாநகராட்சி 1வது வார்டு, பா.ஜ.க  கவுன்சிலர் வத்சலா மற்றும் பா.ஜக  நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு கூறி, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக சில  நபர்களை சுற்றி வளைத்து அவர்களை போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனாக் அ.தி.மு.க. மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

புதுச்சேரியில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


புதுச்சேரி யூனியன் பிரதேச மொழிக்கொள்கைப்படி தமிழ் அலுவல் மொழியாக இருக்கும், மலையாளம் மாஹி பகுதிக்கும் தெலுங்கு ஏனாம் பகுதிக்கும் தொடர்பு மொழியாக இருக்கும், ஆங்கிலம் அனைத்து பகுதிக்கும் தொடர்பு மொழியாக இருக்கும்.

புதுவை கலை இலக்கிய பெருமன்றம் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அதன் மொழிக்கொள்கையை கடைபிடிக்க வலியுறுத்தி ஆணையிடுமாறு கோரியது, இதை விசாரித்த உயர்நீதிமன்றம் புதுச்சேரி மொழிக்கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது என்றும்  ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கலாம் என்றும் கூறியது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media