BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 2 August 2014

வெண்கலம் வென்றார் பி.வி சிந்து !!



இந்தியா சார்பாக பேர்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து மலேசிய வீரங்கனையை தோற்கடித்து வெண்கலம் வென்றார் . இவர் இதன் மூலம் சாய்னா நேவால் இல்லாத குறையை நிவர்த்திச் செய்தார் . சாய்னா நேவால் காயத்தினால் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவில்லை .

இன்றைய செய்திகள் - Satrumun Special News

சூப்பர்ஸ்டார் நாற்காலி மீது எனக்கு ஆசை உண்டு, அஜீத் ஓப்பன் டாக் 

ஃபேஸ்புக் வேலை செய்யவில்லை என்று போலிசில் புகார் அளித்த மக்கள்

தாயைக் கொன்று ட்ரங் பெட்டிக்குள் அடைத்த மகள் !!

ஆதரவு கேட்டு போய், அசிங்கப்பட்டு வந்தார், ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லாமல் மறைத்த "கத்தி" ரகசியம்

காட்டுக்குள் இன்னொரு வீரப்பன், பத்திரிக்கை பரபரப்புக்காக பலியாக்கப்படும் முதியவர்.

ஆண்டர்சன் மீது தப்பு இல்லையாம் - ஐ.சி.சி தீர்ப்பு !! இது தான் உங்க நியாயமா ?? என்ன நடந்தது ??

இறப்பதற்கு முன் பல உயிர்களைக் காப்பாற்றிய 11 வயது சிறுவன் !! சிறுவனாக இருந்தாலும் செயலால் பெரியவன் ஆனான் !!

குழந்தைகளை OLX மூலமா வித்துடு, பெண்ணுக்கு அப்பா கொடுத்த அட்வைஸ்...

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்க… : இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக ஆர்ப்பாட்டம்!

வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசான் காட்டின் பழங்குடியின மக்கள் !!

மொபைல்களின் விலையை குறைத்தது சாம்சங் நிறுவனம் !!

தங்கம் வென்று அசத்தியது தமிழக ஜோடி !!

மோடி மற்றும் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு !!

பாலைவனத்தில் மர்மமான முறையில் தோன்றிய ஏரி !!

ஹலோ , போலிஸா எங்களுக்கு பேஸ்புக் வரல ?? பேஸ்புக் வேலை செய்யாததால் போலிசுக்கு கால் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்



நேற்று இரவு அரை மணி நேரம் பேஸ்புக் உலகம் எங்கிலும் முடக்கப்பட்டது . இதனால் பலர் உலகமே அழிந்தது போல் பரபரப்பு அடைந்தனர் .

ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் ஒரு படி மேலே போய் பேஸ்புக் முடங்கியதால் அவசர போலிஸ் எண்ணான 911  க்கு கால் மேல் கால் செய்தனர் . தொடர்ந்து இது போன்ற கால் வந்ததால் கடுப்பான போலிஸ் துறையினர் தங்களது டிவிட்டர் அக்கௌண்டில் , " பேஸ்புக் முடக்கப்பட்டது சட்ட ஒழுங்கு பிரச்சனை அல்ல . எனவே எங்களுக்கு தயவு செய்து கால் பண்ணாதீர்கள் . பேஸ்புக் எப்போது மீண்டும் வரும் என்று எங்களுக்கு தெரியாது " என பதிவு செய்தனர் .


தங்கம் வென்று அசத்தியது தமிழக ஜோடி !!

காமன்வெல்த்தில் ஸ்குவாஷ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் , ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கம் வென்றது . இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .





தாயைக் கொன்று ட்ரங் பெட்டிக்குள் அடைத்த மகள் !!



பஞ்சாபில் ஜோகரிஹர் என்னும் கிராமத்தில் தனது தாயைக் கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது . ஜோதி (17) என்பவர் தனது தாய் ராணியைக் (65) கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார் .

போலிஸ் கூறுகையில் ராணி ஒரு விதவை என்றும் , தனது கணவர் இறந்த பின் ஜோதியை அவர் தத்து எடுத்தார் . இருவருக்கும் அடிக்கடி சண்டை மற்றும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது . மேலும் ஜோதியின் நடவடிக்கை மீது அடிக்கடி சந்தேகம் கொண்டார் ராணி . ஜோதியின் நடத்தை சரி இல்லை என்று அடிக்கடி கண்டித்துள்ளார் .

இதனால் கோவமடைந்த ஜோதி , 27 ஆம் தேதி அன்று ராணியை ஒரு டிரங் பெட்டிக்குள் தள்ளி பூட்டி விட்டார் . இதனால் மூச்சு விட முடியாமல் உள்ளே இறந்து போனார் ராணி .

இதை விசாரணையின் போது ஜோதி போலிஸிடம் ஒப்புக் கொண்டார் .

காட்டுக்குள் இன்னொரு வீரப்பன், பத்திரிக்கை பரபரப்புக்காக பலியாக்கப்படும் முதியவர்.


இந்த வாரம் ஜீனியர் விகடன் இதழ் காட்டுக்குள் இன்னொரு வீரப்பன் என்று மோட்டா என்ற கத்திரி மலை ஆதி வாசி முதியவர் பற்றி செய்தியினை வெளியிட்டு பரபரப்பு செய்தியாக்கியுள்ளது. பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் அந்த செய்தியில் உள்ள உண்மைத்தன்மையினை தீர ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டியது அவசியம்.

ஏற்கனவே சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் நூற்றுக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டும் பலர் பாலியல் மற்றும் வதைக்கும் ஆளான ஒரு பின்புலம் உள்ள வனத்தில் இன்னொரு வீரப்பன் என்ற செய்தி மற்றொரு மனித உரிமை மீறலுக்கே வழிவகுக்கும்.

சிறு குற்ற வழக்குகளில் தொடர்பு கொண்டு காவல் துறைக்கும் வனத்துறைக்கும் பயந்து சட்டத்தின் முன் சித்திரவதியின்றி தன்னை ஒப்படைக்க தயாராக உள்ள மோட்டா என்ற ஆதிவாசி முதியவரை சிலர் தங்களின் விளம்பர ஆசைக்காக பலியாடாக மாற்றியுள்ளனர். அவர்கள் பத்திரிக்கைக்காரர்களை அழைத்து வந்து பேட்டிக்கு ஏற்பாடு செய்த உழைப்பில் நூற்றில் ஒரு பகுதியினை செலவழித்திருந்தால் உள்ளூர் அல்லது வெளியூர் நீதிமன்றத்தில் மோட்டாவை சரண்டர் செய்திருக்கலாம்.

அவரின் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டால் கூட மூன்று வருடங்களில் விடுதலை அடைந்து விட முடியும். அரசின் ( போலீசின்) ரோசத்தை சீண்டியிருக்கவும் தேவையிருந்திருக்காது. இனி இந்த சின்ன பிரச்சனைக்காக அதிரடிப்படை கத்திரி மலையில் தங்களில் அராஜகத்தை ஆரம்பிக்கலாம் அல்லது ஒரு கொடிய குற்றவாளியைப்போல் இந்த சோத்துக்கும் தண்னீருக்கும் வழியின்றி காட்டில் உயிர் வாழ போராடி , பத்திரிக்கையாளர்கள் தன்னை பாதுகாப்பாக போலீசின் அடியின்றி சிறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்பிய ஆதிவாசி கொல்லப்படலாம்.

பத்திரிக்கைகள் தங்களின் தார்மீக பண்புக்கு எதிராக ஒரு சின்ன செய்தியை பரபரப்பாக மாற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.தமிழக அரசு கத்திரி மலை மோட்டாவை சட்டத்தின் வழி முறையாக கைது செய்து அவரின் மீதான வழக்கை நீதிமன்றத்தில் நடத்த உள்ளூர் மக்கள் உதவ (பின்னால் அடித்து பொய் வழக்கு போடமாட்டோம் என்ற உத்திரவாத்துடன்) கோரிக்கை வைக்கவேண்டும். மொத்தத்தில் வீரப்பன் என்ற கதை அல்லது தலைப்பு தவிர்க்கப்படவேண்டும்.

இவ்வாறு ச.பாலமுருகன் மாநிலச்செயலர் பி.யு.சி.எல் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

ஆண்டர்சன் மீது தப்பு இல்லையாம் - ஐ.சி.சி தீர்ப்பு !! இது தான் உங்க நியாயமா ?? என்ன நடந்தது ??



முதலில் ஒரு சிறு கதையை பார்த்து விடலாம் !!

பள்ளியில் ஒரு முறை ஆசிரியரின் பிரியமான பையன் ஒரு சாதாரண பையனை கண்டப்படி திட்டி விடுகிறான் . அந்த பையனும் பதிலுக்கு திட்டுகிறான் . இதனால் கோபம் அடைந்த அந்த பிரியமான பையன் அவனி சட்டைக் காலரை பிடித்தான் . ஆனால் அந்த பையன் அமைதியாக இருந்தான் . ஆசிரியர் உடனே வந்து இருவரையும் விலக்கி விட்டார் . அந்த சாதாரண பையனை ஒரு நாளுக்கு சஸ்பென்ட் செய்தார் . அவன் தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்தான் . ஆசிரியர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை . மற்ற மாணவர்களும் அந்த ஆசிரியருக்கு பிரியமான மாணவன் மீது தான் தவறு உள்ளதாக தெரிவித்தனர் . நாள் ஆக ஆக அந்த சாதாரண மாணவனுக்கு ஆதரவாக பல குரல்கள் வந்தது . இதனால் ஆசிரியர் வேறு வழியில்லாமல் தனது பிரியமான மாணவருக்கு மிகப் பெரிய தண்டனை காத்து இருப்பதாக அறிவித்தார் . மேலும் இருவருக்குமான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பதாக அறிவித்தார் . ஒரு வாரம் கழித்து இருவரும் குற்றம் செய்யவில்லை எனவே இருவருக்கும் தண்டனை கிடையாது என அறிவித்தார் . அந்த சாதாரண பையன் மிகவும் வருந்தினான் . ஆனால் மற்ற மாணவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை , ஏன் கவலைப் பட வேண்டும் என்று கேட்டனர் அவனிடம் .

இது தான் நடந்தது ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரத்தில் . அந்த சாதாரண பையன் ஜடேஜா , ஆசிரியருக்குப் பிடித்த பையன் - ஆண்டர்சன் , அந்த ஆசிரியர் - ஐ.சி.சி .  நியாயம் கிடைக்கவில்லை என்று நாம் கவலைப்பட்டால் இருவருக்கும் தண்டனை கிடைக்கவில்லையே , பின்னர் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்பர் .

உண்மையில் ஜடேஜாவிற்கு சிறு தண்டனையும் , ஆண்டர்சனிக்கு கடுமையான தண்டனையும் அளித்து இருக்க வேண்டும் .

குற்றவாளி தப்பிப்பதற்காக குற்றமே நடக்கவில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும் ???

பாலைவனத்தில் மர்மமான முறையில் தோன்றிய ஏரி !!


வறட்சி நாடான துனிசியாவில் தீடீரென்று ஒரு ஏரி மர்மமான முறையில் தோன்றியுள்ளது . மூன்று வாரங்களுக்கு முன் அங்கு ஆடு மேய்ப்பவர்களால் இந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டது . இந்த ஏரி எவ்வாறு உருவானது என்பதற்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை .

பாலைவனமாக இருந்த இடத்தில் தோன்றியதாலும் , 40 டிகிரி வெயிலில் வாடியதாலும் இந்த ஏரியில் உடலை குளிர்விப்பதற்காக நிறைய மக்கள் அங்கே வந்தனர் . இதற்கு கஃப்சா பீச் என்றும் பெயரிட்டுள்ளனர் .




முதலில் ஏரியில் இருந்த தண்ணீர் தெளிவாக நீல நிறத்தில் இருந்தது . காலம் ஆக ஆக , இந்த தண்ணீர் இப்போது பாசிகளால் இருண்ட பச்சை நிறத்தில் மாறியுள்ளது . இதனால் இந்த தண்ணீர் சுத்தமானது இல்லை என்றாலும் அதனை அங்கே வாழும் மக்கள் எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை . வழக்கம் போல் குளித்து வருகின்றனர்

சூப்பர்ஸ்டார் நாற்காலி மீது எனக்கு ஆசை உண்டு, அஜீத் ஓப்பன் டாக்


நடிகர் அஜீத் "தல" அஜீத் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் பேட்டிகள் கொடுத்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றைக்கு வேண்டுமானால் அஜீத் நல்ல பிள்ளையாக அமைதியின் திரு உருவாக, ஜெண்டில்மேன் இமேஜ் உடன் திகழலாம், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தன் படத்தில் கூட நடிக்கும் ஸ்வாதி, ஹீரா போன்ற நாயகிகளை நிஜத்திலும் காதலித்து கொண்டிருந்தார், அதிலும் நடிகை ஹீரா உடனான காதல் பொதுமேடையில் ஹீராவுக்கு முத்தம் கொடுக்கும் அளவுக்கெல்லாம் சென்றது.

தற்போது விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதும், பேட்டி என்றாலே கையெடுத்து கும்பிட்டு ஆளை விடுங்க என்று கூறும் அஜீத் பேட்டி கொடுப்பதை நிறுத்தியது ஏன் தெரியுமா? அஜீத் தனது பேட்டிகளில் ஓவராக பேசுவார், அதை தன்னம்பிக்கை என்று சிலரும் தலைக்கனம் என்றும் பலரும் கூறுவார்கள், இதனால் அஜீத்திற்கு வாரமலர் சினிமா கிசு கிசு பகுதியில்  "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று கிண்டலடிக்கப்படுவார்.

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாகவும், குமுதம் நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார்  என்ற போட்டியில் யார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்க விழா நடைபெற உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது, ஆனால் முதன் முதலில் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான், அந்த நாற்காலி மீது எனக்கு ஆசை உண்டு, அதை நான் அடைய வேண்டும் என்பது எனது இலட்சியம் என்று வெளிப்படையாக கூறியது விஜய் அல்ல, அது அஜீத் தான்.


 விஜய்க்கு ஒரு "சுறா" படம் போன்ற ஒரு படம் தான் அஜீத்துக்கு "ஆஞ்சநேயா" என்ற படம், ஆஞ்சநேயா படம் வெளியாக இருந்த நேரத்தில் தான் அஜீத் ஒரு பேட்டி அளித்திருந்தார், அந்த பேட்டியில் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு தான் ஆசைப்படுவதாகவும், அது தனக்கு கிடைக்க நான் வைத்திருக்கும் ஆயுதம் தான் ஆஞ்சநேயா, இந்த ஆஞ்சநேயா படம் தான் எனக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று தரப்போகிறது என்று வெளிப்படையாக பேட்டி அளித்திருந்தார், ஆனால் ஆஞ்சநேயா படம் வெளியாகி அஞ்சே நாளில் பெட்டிக்குள் போனது, அதன் பின் கிடைத்த அனுபவத்தில் முதிர்ச்சியடைந்த அஜீத் ஓவராக பேசி பேட்டியளிப்பதையும், பொது விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று வெளிப்படையாக பேசிய அஜீத் தற்போது மெளனமாகிவிட விஜய்யோ அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொள்வதற்கு விழா ஏற்பாடுகளுக்கு நாள் குறித்துக்கொண்டுள்ளார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் சொல்லுங்க, அஜீத்தா, விஜய்யா? யாருக்கு கொடுக்கலாம்

குழந்தைகளை OLX மூலமா வித்துடு

இது தான் இன்றைய டெக்னாலஜி காதல்..!

ஒரு பெண் தனது காதலை பற்றி தனது தந்தையிடம் கூறுகிறார்

பெண் : அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் …

WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக் கோம் ……
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்…
நாங்க லவ் ஐ ஷேர் பண்ணினது SKYPE ல,
அப்புறம் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் …
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர் வாதம் வேண்டும் …

அப்பா: நிஜமாவா!!
அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க…
ONLINEல ஜாலியா இருங்க…
E – BAY  மூலமா குழந்தைகளை வாங்கிக்கோங்க…
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு…
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு…. அவ்வுளவுதான்….

#பெண் : ஙே!!!!

இறப்பதற்கு முன் பல உயிர்களைக் காப்பாற்றிய 11 வயது சிறுவன் !! சிறுவனாக இருந்தாலும் செயலால் பெரியவன் ஆனான் !!



நாம் நினைத்தால் நமது ஒவ்வொரு செயலிலும் பிறருக்கு நன்மை செய்யலாம் . அதற்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டும் . அதேப் போன்று சீனாவில் நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு சிறுவன் நினைத்தான் , இப்போது பல உயிர்களை காப்பாற்றி நம்மை விட்டு ஒரு நிஜ ஹிரோவாக பிரிந்து இருக்கிறான் .

லியாங் யயோய் என்னும் 11 வயது சிறுவன் , நீண்ட காலமாக மூளையில் கட்டியால் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வந்தான் . அந்த சிறுவன் இறப்பதற்கு முன் யாரும் நினைத்து பார்க்காத அசாத்தியமான காரியம் ஒன்றை செய்தான் . இந்த காரியத்துக்கு அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் குணிந்து மரியாதை செலுத்தினர் . அந்த படம் இணையம் முழுவதும் பிரபலமானது .



அந்த சிறுவன் இறப்பதற்கு முன் தன் அம்மாவிடம் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்யும் படி கேட்டுக் கொண்டான் . அதன் படி அவனது அனைத்து உறுப்புகளும் தானம் செய்யப்பட்டது .



இது குறித்து அந்த சிறுவனின் ஆசிரியர் கூறுகையில் , உடல் உறுப்பு தானம் குறித்து அவன் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டான் என்றார் .

இது ஒரு சாதாரண காரியம் என்று நினைக்கலாம் . ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு இருக்கு . நம்மில் எத்தனை பேர் உடல் உறுப்பு தானத்திற்கான அட்டை வைத்துள்ளோம் .

அந்த சிறுவனுக்கு நாமும் மனதார நன்றிகளை தெரிவிக்கலாமே !!


ராணுவ வீரரை, ஹமாஸ் அமைப்பினர் கடத்தி விட்டனர் என போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல் ராணுவம் !!



இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் , காணாமல் போன இஸ்ரேலின் ராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி விட்டது என சந்தேகப்பட்டு மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம் .

ஹடார் கொல்டின் , 23 என்னும் ராணுவ வீரர் ராணுவ சுரங்கப்பாதை ஒன்றை அழிக்க முயன்ற போது , ஹமாஸ் அமைப்புடன் மோதல் ஏற்பட்டது . இந்த மோதலில் கொல்டின் காணாமல் போனார் . இவர் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது .

எனவே அந்த வீரரை தேடும் பணியில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதலை தொடர்ந்து உள்ளனர் .

அமெரிக்க அதிபர் ஓபாமாவும் அந்த வீரரை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார் . ஓபாமா கூறுகையில் , " இனிமேல் போர் நிறுத்தம் பற்றி பேசும் முன் , ஹமாஸ் அமைப்பினர் அந்த ராணுவ வீரரை விடுவித்து இருக்க வேண்டும் " என்றார் .

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அந்த ராணுவ வீரர் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறியுள்ளனர் .


வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசான் காட்டின் பழங்குடியின மக்கள் !!



பிரேசிலின் இதுவரை யாரும் அறிந்திராத பழங்குடி மக்கள் முதல் முறையாக தங்கள் இடத்தை விட்டு வெளிவந்து வெளி உலகிற்கு வந்தனர் . ஆடைகள் அணியாமல் கையில் குச்சியுடன் இருக்கும் இவர்களின் போட்டோக்கள் வெளிவந்துள்ளன . இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இது வரை தெரியவில்லை .



பெரு மற்றும் பிரேசிலின் எல்லையில் உள்ள என்விரா என்னும் நதியின் ஓரத்தில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் மருந்து எடுப்பவர்களால் துரத்தி விட்ட பின்னர் வெளி உலகிற்கு வந்தனர் . அப்போது இவர்களை பிரேசிலின் FUNAI என்னும் அமைப்பு படம் பிடித்தது .


இவர்கள் ஏதோ புரியாத மொழியில் கத்திக் கொண்டு இருந்தனர் . அது அவர்களின் தாய்மொழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது .

மொபைல்களின் விலையை குறைத்தது சாம்சங் நிறுவனம் !!



சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக , கேலக்ஸி நோட் -3 மற்றும் நோட் - 3 நியோ ஆகிய மொபைல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது .


மொபைல்                         முந்தைய விலை                        இப்போதைய விலை

கேலக்ஸி நோட் -3            ரூ.47,990                                                      ரூ.40,698

நோட் -3  நியோ                   ரூ.33,990                                                      ரூ.29,570

சாம்சங் நிறுவனம் இது போன்ற விலை குறைப்புகளை அறிவிப்பதில் மிகவு பிரபலம் . இதேப் போன்று மே மாதம் , கேலக்ஸி எஸ் - 4 மற்றும் எஸ் -4 மினி ஆகிய மொபைல்களின் விலையை குறைத்தது .


மொபைல்                         முந்தைய விலை                        இப்போதைய விலை

கேலக்ஸி எஸ் - 4          ரூ.40,500                                                    ரூ.31,814

கேலக்ஸி எஸ் - 4 மினி ரூ. 23,360                                                  ரூ.19,278

இப்போது பெருகி வரும் மொபைல் சந்தையில் தனது இடத்தை விடாமல் பிடிக்க இந்த விலை குறைப்பை சாம்சங் நிறுவனம் செய்து வருகிறது . ஆனால் சாம்சங் கேலக்ஸி  எஸ் -5 மொபைல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துவிட்டனர் .

பிரதமர் மற்றும் முதல்வரிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசு !!



இலங்கையின் பாதுகாப்பு இணையதளத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை கீழ்தரமாக சித்தரித்து , வெளியான ஒரு பதிவு ஒன்று வெளி ஆகி இருந்தது . இந்த பதிவினால் பல விமர்சனங்களை சந்தித்தது இலங்கை அரசு . எனவே பிரடமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை .

இலங்கையின் பாதுகாப்புத் துறை தளத்தில் , "மோடிக்கு ஜெயலலிதாவின் காதல் கடிதங்கள் எவ்வளவு அர்த்தமானவை " என்ற பெயரில் ஒரு கீழ்த்தரமான கட்டுரை வெளியானது . மேலும் அந்த கட்டுரையில் , ஜெயலலிதா படமும் , ஒரு இருதய வடிவமும் அதற்குள் மோடியின் படமும் இருப்பது போல் சித்தரித்து வெளியிட்டனர் .

இந்த பதிவு வெளியானவுடன் பல அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர் . காங்கிரஸ் கட்சியும் கண்டனங்களை தெரிவித்தது .

இதனால் அந்த கட்டுரை அந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டு , ஒரு மன்னிப்பு கட்டுரையை இடம் பெற செய்து இருக்கின்றனர் . மேலும் இலங்கை அரசு நிபந்தைனையற்ற மன்னிப்புக் கோரியது .

செக்ஸ் சிந்தனைகள் மெம்மரி பவரை அதிகரிக்கிறதாம், ஆய்வு முடிவுகள்


இது வரை செக்ஸ் குறித்து ஆராய்ந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் செக்ஸ் உடலுக்கு நல்லது, உடற்பயிற்சி செய்வதற்கு சமமானது, ரத்த அழுத்தத்தை குறைக்கும், தலைவலியை நீக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் என்றெல்லாம் தான் கூறினார்கள்.

சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சில மகிழ்ச்சியான முடிவுகள் வெளியாகியுள்ளன, இந்த ஆய்வில் செக்ஸ் சிந்தனைகளினால் ரத்தம் மற்றும் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக அளவு உருவாகிறது என்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

இவ்வாறு உற்பத்தியாகும் நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை கட்டுமான தொகுதிகள் உருவாக்கும் ஒரு சிறப்பு வகையாக செல்லாக இருக்கின்றன. செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது மூளையின் செல்கள் அதிக அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

மேலும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட இந்த எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய மூளைத்திறன் பெருமளவில் குறைந்து விடுகிறது. நெதர்லாந்து மட்டுமின்றி தென் கொரியாவின் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது.

தென் கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.என கூறுகிறது.செக்ஸ் செயல்பாடுகள் மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில் மன அழுத்தம் ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறி உள்ளது. மேலும் வயதானவர்களின் செக்ஸ் செயல்பாடுகள் குறையும் போது அது பல மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது என்று கிளாமர் இதழில் வெளிவந்துள்ள செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய செய்திகள் - Satrumun Special News


நடிகர் சூர்யாவின் அடாவடித்தனம், "சரவணன் என்கிற சூர்யா" பெயரை மாற்றிய புதுமுக இயக்குனர்
http://www.satrumun.net/2014/08/actor-surya-threatens-new-director.html

செக்ஸ் சிந்தனைகள் நினைவாற்றலை, மூளைத்திறனை அதிகரிக்கிறதாம், ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/08/it-increase-memory-power-shocking.html

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதமாம், சிங்கள ராணுவத்தின் வெறிபிடித்த திமிர் பேச்சு
http://www.satrumun.net/2014/08/blog-post_67.html

முடிவு எடுக்க முடியாமல் திணறி வரும் மோடி
http://www.satrumun.net/2014/08/blog-post.html

பீட்சா இயக்குனரின் அடுத்த படமான ஜிகர்தண்டா திரை விமர்சனம்
http://goo.gl/t1lhQv

2 மில்லியன் ஃபேன்ஸ், ஃபேஸ்புக்கில் புதிய சாதனை படைத்த நடிகர் விஜய்
http://www.satrumun.net/2014/08/blog-post_4.html

தன் அழகால் ரசிகர்களை கவர்ந்த வாலிபால் வீரங்கனைக்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை
http://www.satrumun.net/2014/08/blog-post_1.html

பதக்கம் வெல்லாவிட்டால் ஜட்டியோடு ஓடுவேன், பூனம் பாண்டேவுக்கு சவால் விடுகிறாரா இந்த‌ இந்திய வீரர்?
http://www.satrumun.net/2014/08/10.html

நிர்வாணமாக போஸ் தந்து உள்ளார் ஆமீர் கான்
http://www.satrumun.net/2014/08/blog-post_27.html

ஓட்டல் சரவண பவன் பற்றி முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார்
http://www.satrumun.net/2014/08/blog-post_59.html

பேஸ்புக் முடங்கியது !! சந்தடி சாக்கில் டிவிட்டருக்கு சென்ற பயனாளர்கள் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_44.html

இந்தியா-இங்கிலாந்து தொடரில் புதிய திருப்பம்
http://www.satrumun.net/2014/07/blog-post_85.html

வரலாற்றில் இடம் பிடித்த இந்திய வீரர் விகாஸ் கவுடா
http://www.satrumun.net/2014/08/blog-post_98.html

காமென்வெல்த்தில் எத்தனை வெற்றிகளை பெற்றாலும் சோகத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_111.html

காஸாவிற்கு ஆதரவாக , இஸ்ரேலிய ஊளவுத்துறை "மொசாத்" தின் இணையத்தை ஹேக் செய்தனர் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_679.html
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media