BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 January 2014

மணி சங்கர் அய்யர் அலுவலகம் தாக்கப்பட்டது

நேற்று நடந்த காங்கிரஸ் கமிட்டியில், மணி சங்கர் அய்யர், "இந்த 21ம் நூற்றாண்டில், மோடி இந்திய நாட்டின் பிரதமராக வர முடியாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் தேநீர் விற்கட்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி கருத்தி தெரிவித்து இருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ.க வினர், மயிலாடுதுறையில் உள்ள மணி சங்கரின் அலுவலகத்தில், கற்கள் எறிந்து, ஜன்னல்களை உடைத்தனர். இதை தொடர்ந்து, அவரின் அலுவலகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயலகம் உள்ள சத்யமூர்த்தி பவனில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு ஐம்பது பேர், தேநீர் விற்று, போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கும்பகோணத்திலும், மணி சங்கர் அய்யருக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜா.க ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜம்மு&கஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவும், அய்யருக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் நிறைய உள்ளது. ஆனால் அவரது அடிப்படை, அவர் வந்த விதம்  சாதாரணமானவை, எளிமையானவை. நம்மிடம் அப்படிப்பட்ட அடிப்படை இல்லை. எனவே அவரை கேலி செய்வ‌து , நமது பிரச்சாரத்திற்கு உதவாது." என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

சசி தரூர் மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல‌



நேற்றிரவு டெல்லியில் உள்ளா லீலா பேலஸ் ஓட்டலில், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா உயிர் இழந்து கிடந்தார். அவர் இறப்பிற்கு காரணம் மன உளைச்சல் மற்றும் அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்து கொண்டு செய்து கொண்ட தற்கொலையாக இருக்கலாம் என்றும் சில யூகங்கள் சூழ்ந்து இருந்தது.  மேலும், அவர் உடல்நிலை அபாயகரமான நிலையில் இருந்தது என கேரளாவில் உள்ள மருத்துவமனையில் கூறியிருந்தனர்.

இந்நிலையில், சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் மரணம், இயற்கையாக நிகழ்ந்தது அல்ல என்றும், அவரின் உடலின் மேல் புறத்தில், காயங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளனர். அவர் விஷம் உட்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை,  இரண்டு அல்லது மூன்று நாட்களில், முழு விவரங்களை அறிய முடியும் எனவும் கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு, சுனந்தாவின் உடல், சசி தரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டெல்லியில் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார்.


நியூ யார்க் டைம்ஸில், 2014ல் பார்க்கப்பட வேண்டிய 52 இடங்களில் சென்னை



நியூ யார்க் டைம் இணையதளத்தில்  2014ம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய 52 சுற்றுலா இடங்கள் என்ற கட்டுரையில், சென்னையும் இடம் பெற்றிருக்கிறது.

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை,  தேசிய கலாச்சார தலைநகரமும் ஆகும். ஆடற்கலை கற்பிக்கப்படும் கலாக் ஷேத்ரா மற்றும் கர்நாடக சங்கீதம் கற்பிக்கப்படும் மியூசிக் அகாடமி போன்ற புகழ் பெற்ற இடங்கள் சென்னை நகரில் உள்ளது. சிவபெருமான் ஸ்தலமான கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இங்கு நிறைய இருக்கின்றது. பார்க் ஹயாத் போன்ற மிக பெரிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் க்ளப்புகள், ரெஸ்டாரன்ட்டுகள் என கவர்ச்சிகரமாக இருக்கிறது இந்த நகரம் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு போறிங்களா? ஜாக்கிரதையாக இருங்க என்று சொல்லும் நாடுகள்

டென்மார்க்கை சேர்ந்த 51 வயது பெண், சமீபத்தில் டெல்லியில், தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வழி கேட்ட போது, ஒரு கும்பலால், கத்தி முனையில் கற்பழிக்கப்பட்டார். அதற்கு முன்பு, மங்களூர்-சென்னை செல்லும் ரயிலில், இரவு நேரத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஜெர்மனியை சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டார். இம்மாத தொடக்கத்தில், போலந்து நாட்டை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை வைத்து கொண்டு, டெல்லியில் டாக்ஸியில் செல்லும் போது, கற்பழிக்க பட்டிருக்கிறார்.

இது போன்ற தொடர் சம்பவங்களால், பெண் சுற்றுலா பயணிகளுக்கு, இந்தியா ஒரு அபாயகரமான இடம் என்ற பயத்தை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து, பிரிட்டைன் மற்றும் பிரான்ஸ் நாடுகள், தங்கள் நாட்டு அரசு இணையதளத்தில், "இந்தியாவிற்கு செல்லும் பெண்கள் மிக மிக பத்திரமாக இருக்க வேண்டும் மற்றும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் வெளிநாட்டு பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாக கூடும் என்று தெரிவிக்கன்றன" என்று அவர்கள் நாட்டு குடிமக்களுக்கு வலியுறுத்துகின்றன.

பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை திரைப்படமாகிறது



விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த 14 வயது சிறுவனின் புகைப்படங்கள் பார்ப்போரை உறைய வைத்தது.

இச்சம்வம், பிரவீன் காந்த் இயக்கி நடிக்கவிருக்கும் 'புலிப்பார்வை' என்ற படத்தில் காட்சிகளாக சேர்க்கப்ப்ட இருக்கின்றன. பாலசந்திரன் கதாபாத்திரத்தில் நடிக்க 100 சிறுவர்கள் பரிசீலக்கப்பட்டு, பொறுத்தமான சிறுவனை இயக்குநர் தேர்வு செய்து இருக்கிறார். இந்த படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்து வெளியிடுகிறார்.

இப்படத்தில், இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போர் காட்சிகளும் இடம் பெறுகின்றன.


அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், நேற்று இரவு மர்ம முறையில், டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் இறந்து கிடந்தார். அவரின் மரணம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் இறந்த செய்தி வந்த சில மணி நேரங்களில், நேற்றிரவு, மத்திய அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யூ வார்டில் வைக்கப்பட்டார்.

இன்று தான், ஐ.சி.யூ வில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக, அவரின் மனைவி சுனந்தா, டிவிட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் கடந்த இரு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளவில்லை என்றும், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என நம்ப படுகிறது. அவருடைய உடல் இன்று போஸ்ட் மார்டெம் செய்யப்பட இருக்கிறது.

மும்பையில் 18 பேர் நெரிசலில் மரணம்

102 வயதான ஆன்மிக குரு சையத்னா முகமத் பரானுதீன், மாரடைப்பால் நேற்று காலை மரணமடைந்தார். இவருக்கு இறுதி மரியாதை செலுத்த, ஆயிரம் கணக்கான மக்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணி அளவில், அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். திடீரென நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

தாவூதி போரா இனமக்களின் ஆன்மிக குருவான சையத்னா முகமத் பரானுதீனுக்கு இன்று காலை, தெற்கு மும்பையில் உள்ள பேந்தி பஜாரில் இறுதி சடங்குகள் நடைபெறும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media