125 ஆண்டு கால கும்பகோணம் டிரஸ்ட் பார்த்த கும்பகோணம் வேலை, 100 கோடி சொத்தை 1.81 கோடிக்கு விற்ற வழக்கு சில சுவராசியமான தகவல்கள்
சமூக ஆர்வலர் ராமன் செட்டியார் அவர்கள் அரண்மனை ராமன் செட்டியார் ஆனந்தம் டிரஸ்ட் 1887ல் 5.06 ஏக்கர் நிலத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது, அதன் இன்றைய சந்தை மதிப்பு நூறு கோடி ரூபாய் ஆகும். 2002ம் ஆண்டு டிரஸ்டின் அனைத்து அசையா சொத்துக்களையும் தனியாருக்கு விற்று அந்த பணத்தை கொண்டு டிரஸ்ட்டை நடத்துவது என டிரஸ்ட் பொறுப்பாளர்களால் முடிவு செய்யப்பட்டு இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை தேசிய வங்கியில் டெப்பாசிட் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் நீதிமன்றம் 2003 ஜனவரியில் அனுமதியளித்தது, இதன் பின் தான் கும்பகோணம் டிரஸ்ட்டின் கும்பகோண வேலை ஆரம்பித்தது.
சொத்தை விற்க கொடுத்த ஏலத்தில் 16 பேர் கலந்து கொண்டனர், குறைந்த பட்ச ஏலத்தொகை மார்க்கெட் நிலவரப்படி கூறப்பட்டிருக்க வேண்டும், ஆனால் குறைந்த பட்ச ஏலத்தொகை எதுவுமில்லாமல் ஏலம் கொடுக்கப்பட்டது அதில் ஏலத்தை எடுத்தவர் 1.86 கோடிக்கு எடுத்தார், அதில் முதல் தவணையான 25லட்சத்தை கட்ட அவர் 6 மாதம் எடுத்துக்கொண்டார், மீதி 1.56 கோடியை 5 ஆண்டுகளில் அளித்தார்.
ஏலத்தில் எடுக்கப்படும் தொகையின் 15% பணத்தை உடனடியாக கட்டவேண்டும் என்பதும் மீதி பணத்தை 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்பதும் விதி ஆனால் முதல் தவணைக்கே 6 மாதமும் மீதப்பணத்தை கட்ட 5 ஆண்டுகளும் எடுத்துக்கொண்ட இந்த விற்பனை முறைகேட்ட எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்த போது இந்த விற்பனையை அங்கீகரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த பணத்திற்கு 5 ஆண்டுகளுக்கு 6% வட்டியை மட்டும் கூடுதலாக கட்ட சொன்னது.
இதையும் எதிர்த்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
# நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் சாப்பிடுவது இது தானோ?