BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 September 2013

தாலிபான்களால் இந்திய பெண் எழுத்துளார் சுட்டுக்கொலை

ஆஃப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தில் வசித்து வருபவர் 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, இவர் கொல்கத்தாவில் ஜான்பஸ் கான் என்கிற ஆப்கானிஸ்தான் தொழிலதிபரை சந்தித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டார், 1989ல் ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். 

1995ல் இவர் எழுதிய “A Kabuliwala’s Bengali Wife.” ஒரு காபூல் காரரின் வங்காளி மனைவி என்ற நூல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறையை எழுதியது. இவர் தாலிபான்களிடமிருந்து முன்பொருமுறை தப்பித்தது இந்தி படமாக எடுக்கப்பட்டது. இவர் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தது தாலிபான்களுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.

1993ல் வெளியேறிய இவர் சமீபத்தில் தன் கணவருடன் வாழ மீண்டும் பாக்திகா மாகாணத்தில் குடியேறி அங்கே சுகாதார ஊழியராகவும் பணியாற்றினார், இந்நிலையில் புதன் அன்று அவரது வீட்டை உடைத்து நுழைந்த தாலிபான்கள் அவரை கடத்தி சென்றனர், நேற்று அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது, அவரது சடலத்தில் 20 குண்டுகள் துளைத்திருந்தன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media