BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 February 2014

அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்


லோக்பால் மசோதா தாக்கல் செய்யபடாததை அடுத்து, தான் கூறியவாறே பதவியை ராஜினாமா செய்தார் டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்.

லஞ்சத்தை ஒழிக்க ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை பதவியை துறக்க‌ தான் தயார் என்று அவர் கூறியுள்ளார். லோக்பால் மசோதா தாக்கல் செய்யபட கூடாது என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த மசோதா இன்று நிறைவேற்ற படவில்லை. இதை பற்றி கேஜ்ரிவால் பேசும் போது, "இந்த மசோதாவால், தன் தலைவர்கள் சிறைக்கு செல்லபடும் என்பது அவர்களுக்கு தெரியும். " என எதிர்ப்பு தெரிவித்தவர்களை பற்றி கூறினார்.

40 கிலோ கல்லை சுமந்து கொண்டு கர்ப்பம் என ஏமாந்த‌ பெண்

சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் தன் வயிறு பெரிதாக இருப்பதை கர்ப்பம் என்றும் நினைத்து கொண்டிருந்தார். அவரது வயிற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக வயிற்றில் அந்தக் கல்லுடன் இருந்துள்ளார் அப்பெண். மருத்துவர்கள் விசாரித்ததில் வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கர்ப்பம் என அவரது குடும்பத்தார் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 40கிலோ எடையுள்ள கல் அகற்றப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கட்டாய ரத்த தானம்?


பிப்ரவரி 24ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இதையொட்டி ரத்த தானத்தில் கின்னஸ் சாதனை செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் 10 நகரங்களில் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் ரத்ததான முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். மேலும் அப்படி கலந்து கொள்கிறவர்களுக்குத்தான் விடுமுறையுடன் சம்பளம் தருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ), டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருகிறவர்களிடம் ரத்ததானம் கொடுக்க சம்மதித்தால்தான் லைசென்ஸ் தரப்படும் என்று கூறுவதாகவும். தனியார் பேருந்துகள் வைத்திருப்பவர்களும் ரத்ததானத்திற்கு ஆட்கள் அனுப்ப கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல கல்லூரிகளுக்கும் கூட விடுப்பு கொடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு செலவுக்கு பணமும் கொடுத்து முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோக்பால் மசோதா தாக்கல் செய்யபடவில்லை; சொன்னபடி கேஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா?


 டெல்லி சட்டப்பேரவையில், நேற்று ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த அரவிந்த் கேஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

இன்று டெல்லி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் ஜன்லோக்பால் மசோதா மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பெரும் அமளிக்கு இடையே, சட்டசபையில் ஜன் லோக்பால் தாக்கலானது. அப்பொழுது கேஜ்ரிவால், " இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன். இதன் மீது விவாதம் நடத்துவதா அல்லது ஓட்டெடுப்பு நடத்துவதா என்பது குறித்து அவை முடிவு செய்யும்." என்றார்.

பின்னர் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடந்த‌து. அப்போது 42 எம்.எல்.ஏக்கள் ஜன்லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் ஆத்மியின் 27 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஜன்லோக்பால் மசோதாவை ஆதரித்தனர். இதனால் ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்ய சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் முதல்வர் கேஜ்ரிவால் ஏற்க‌னவே அறிவித்தபடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யுவன் மதம் மாறியதற்கு முழு ஆதரவு தரும் சிம்பு


பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதைப் பற்றி அவரே, தன் டிவிட்டர் பக்கத்தில், உறுதி படுத்தி செய்தி வெளியிட்டு இருந்தார்.

தான் மதம் மாறியதை உறுதி படுத்த,"ஆமாம் நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன்." என்று, யுவன் செய்தி வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் கூறிய அவரின் நெருங்கிய நண்பர் சிம்பு, "என்னவாக இருந்தாலும் சரி உங்களுக்கு எனது அன்பும், ஆதரவும் எப்பொழுதும் உண்டு." என்று டிவீட் செய்து இருந்தார். யுவனும், "நன்றி பிரதர்" என்று சிம்புவிற்கு பதில் அளித்து இருந்தார்.


டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வந்து கொண்டிருந்த யுவன், தான் மதம் மாறியது குறித்து, ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து விமர்சித்து வந்ததை தாக்கு பிடிக்க முடியாமல், டிவிட்டரில் உள்ள தனது கணக்கை முடக்கி விட்டு வெளியேறினார்.

மானபங்கத்திலிருந்து தப்பிக்க, ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவருடன் இருந்த இளைஞர்கள் சிலர், அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, அந்த மாணவி ஓடும் ரெயிலில் இருந்து குதித்து இருக்கிறார். அதனால் அப்பெண் படுகாயமடைந்தார்.

பொதுமக்கள் சிலர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு அருகேயுள்ள டம்லுக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாவே உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் குணமாகும் வாய்ப்புகள் நிறைய‌ உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.

விஜயகாந்தை 'கேப்டன்' என்ற பெயரை பயன்படுத்த கூடாது, உள்துறை செயலருக்கு கடிதம்


ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், 'கேப்டன்' என்ற அடைமொழியை சினிமாக்காரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலருக்கு, முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. 1950ல், இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி, ராணுவ அதிகாரிகளே, 'கேப்டன்' என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது." என்று கூறியுள்ளார்.

மேலும், இது பற்றி அவர் விஜயகாந்திற்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், அவர் கேப்டன் என்ற பெயரை பயன்படுத்துவதை இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறுத்தாவிட்டால், தான் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

மேக்னாவை அடுத்து தனிஷா

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஆடைகளை துறந்து வெறும் காங்கிரஸ் கொடியை மட்டும் உடலில் போர்த்திக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார், நடிகை தனிஷா. நரேந்திர மோடிக்காக, ஆதரவு தெரிவிக்கிறேன் என்று ஆடைகளை துறந்து களம் இறங்கிய மேக்னாவை தொடர்ந்து, தனிஷாவும் இது போல் இறங்கி இருக்கிறார்.
மோடிக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறி நிர்வாணமாக போஸ் அளித்த மேக்னாவின் இணையதளமே நேற்று கிராஷ் ஆனது.

குறுகிய காலத்தில் பிரபலம் அடையவே , இது போல் நடவடிக்கைகளில் நடிகைகள் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுகிறது.

என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை- நடிகை மௌனிகா

                                               

'வண்ண வண்ணப் பூக்கள்' படத்தில் பாலு மகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா. அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் குறும்படத் தொடரில் பல படங்களில் நடித்துள்ளார்.  'மௌனிகாவும் என் மனைவிதான்' என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா. 1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மௌனிகா பேசுகையில், "பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு (1998-ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை. பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media