கடந்த சில தினங்களாக காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பலியானர்கள், பலர் படுகாயம் அடைந்தனர், இதை பயன்படுத்தி சில பங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுறுவும் முயற்சிகளும் நடந்தது. இந்திய ராணுவத்தினர் அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களது முயற்சியை முறியடித்தனர்.
Thursday, 22 August 2013
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம்.
கடந்த சில தினங்களாக காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பலியானர்கள், பலர் படுகாயம் அடைந்தனர், இதை பயன்படுத்தி சில பங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுறுவும் முயற்சிகளும் நடந்தது. இந்திய ராணுவத்தினர் அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களது முயற்சியை முறியடித்தனர்.
தாயாளுஅம்மாளை வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது -உச்சநீதி மன்றம்
தமக்கும் 2ஜி வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை, என்னை வழக்கிலிந்து விடுவித்து விடுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தாயாளுஅம்மாள் சிறப்பு சி.பி.ஐ உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என அறிவித்தார்.
மெட்ராஸ் கஃபே திரைபடுத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு.
நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
மெட்ராஸ் கபேக்கு எதிராக மாணவர்கள் ஆர்பாட்டம்
ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீவிரவாதம் என சித்தரிப்பது போலவும், அவர்களுடன் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு நேரடி தொடர்பிருந்து தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போலவும் சித்தரிக்கபட்டு ஜான் ஆபிரஹாம் நடித்து ஹிந்தியில் வெளியாகியுள்ள மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பலரும் எதிர்த்து வருகிறார்கள்.
விஷவாயு குண்டு வீசிய ஷிரியா ராணுவம்
ஷிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் புரட்சியாளர்களை கட்டுபடுத்த ஷிரிய ராணுவம் ரசாயனகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது, இதில் 1300 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் பெரும்பாலோர் குழந்தைகள். இந்த குண்டு நேற்று அதிகாலை மூன்று மணியளவில் வீசப்பட்டதால் ஏராளமான மக்கள் தூக்கத்திலேயே இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
Subscribe to:
Posts
(
Atom
)