BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 November 2014

உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா : இந்தியா அபார வெற்றி



இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துவங்கி 150 ஆண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் இந்நாளில் இந்த போட்டி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். மொத்தம் 173 பந்துகளை சந்தித்த அவர், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களையும் விளாசி 264 ரன்கள் குவித்தார்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ரோகித் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார். இரண்டாவது முறையாக இன்று இரட்டை சதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் எந்த பந்துவீச்சாளராலும் ரோகித்தை அவுட்டாக்க முடியாமல் திணறினர். கடந்த மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்பு விவகாரம் : இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்



உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.இதையடுத்து, இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டை நீங்கும் என்று தெரிகிறது.இதன்படி, உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் மானியம் 10 சதத்துக்கு மிகக்கூடாது என்ற உலக வர்த்தக அமைப்பின் வரம்புக்கு அதிகமாக இந்தியாவில் உணவு மானியம் வழங்கப்பட்டாலும், அதற்கு உலக வர்த்தக அமைப்பில் உள்ள நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க இயலாது.வரும் சனிக்கிழமை, ஜி-20 நாடுகளுக்கிடையேயான இரு நாள் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டிய நிலையில் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 456 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து. மோடிக்கு கருணாநிதி நன்றி



ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 14-11-2014 அன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள ண்டுமென்று நான் கடந்த 31-10-2014 அன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும், தமிழக அரசினரும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து இது பற்றி வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் விடுதலை பற்றி பேசியதையடுத்து, துhக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி இன்றைய தினம் (14-11-2014) கிடைத்துள்ளது. ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media