BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 June 2014

செக்ஸி நடனம் ஆடிய பூன‌ம் பாண்டே கைது? வீடியோ இணைப்பு

பிரேசில் கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்து செக்ஸி நடனம் ஆடிய பூன‌ம் பாண்டே கைது? வீடியோ இணைப்பு

கைவசம் படமே இல்லையென்றாலும் பரபரப்பை கிளப்புவதில் கவர்ச்சி நடிகை பூன‌ம் பாண்டே கில்லாடி, உலகக்கோப்பை கால்பந்து நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கால்பந்து ரசிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்துவதாக கூறி ஒரு கிளு கிளு நடன வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிறத்தில் உள்ளாடைகளை மட்டும் அணிந்து, நெளிந்து வளைந்து நடனம் ஆடும் வீடியோ தான் தற்போது யுடியூபில் பரபரப்பாக உள்ளது, இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதை பார்த்து ரசித்துள்ளனர்.

பலரும் இந்த வீடியோவை ரசித்தாலும் சில சமூக அமைப்புகள் இந்த ஆபாச நடன வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. வழக்கம் போல மலிவான விளம்பரத்திற்காக பூனம் பாண்டே இதுபோன்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியவர்கள் போலிசில் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளனர், இதை அடுத்து முன்பு போலவே பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

பூனம் பாண்டே கால்பந்து ரசிகர்களுக்காகவும், வீரர்களுக்காகவும் வெளியிட்ட அந்த நடன வீடியோ இது தான்


திருப்பதி கோவிலில் நித்யானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா !!!

சில வருடங்களுக்கு முன் நித்தியானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பானது . இந்த காட்சிகளால் ஆத்திரமடைந்த மக்கள் அவர் ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினர் .கர்நாடக போலிசார் அவரை கைது செய்தனர் . பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார் .

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய நித்தியானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா சாமி வந்தனர் . அவர்களுடன் சீடர்கள் பலர் வந்தனர் .

குருபெயர்ச்சியில் குஷ்பு பெயர்ச்சி? தங்கர் பச்சானில் இருந்து துர்கா ஸ்டாலின் வரை நடந்த குழிபறிப்புகள்

குருபெயர்ச்சியில் குஷ்பு பெயர்ச்சி? தங்கர் பச்சானில் இருந்து துர்கா ஸ்டாலின் வரை நடந்த குழிபறிப்புகள்

திமுகவில் குஷ்பு ஏன் சேர்ந்தார், ஏன் விலகினார், என்பது பற்றி எதுவுமே புரியாமல் உள்ளார்கள் திமுகவின் அடிமட்டத்தொண்டர்கள், ஆனால் அவர் ஏன் சேர்ந்தார், ஏன் விலகினார் என்று ஆய்ந்தோமென்றால் உள்ளே ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் கற்பு பற்றி கன்னாபின்னாவென்று ஒரு கருத்தை அதிலும் தமிழ்பெண்களின் கற்பை  கேள்விகேட்கும் விதமாக ஒரு கருத்தை இந்தியாடுடேவில் உளறிவைத்தார் குஷ்பு, இதை கண்டித்து பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குஷ்புவை கடுமையாக விமர்சித்து கடும் போராட்டத்தில் இற‌ங்கினார்கள்.

ஊர் ஊராக வழக்கு போட்டு குஷ்புவை பல ஊர்களில் உள்ள கோர்ட்டுகளுக்கு அலைய வைத்தார்கள், கோர்ட்டுக்கு குஷ்பு வரும் போது பெண்களும் ஆண்களுமாக கூட்டமாக சேர்ந்து கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன் பின் தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று ஒரு சிலர் கருத்து சுதந்திரம் என்று குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இதை குஷ்புவின் அரசியல் ஆரம்பம் எனலாம், ஆனால் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் குஷ்புவினை கடுமையாக எதிர்க்க காரணம் என்ன என்றால் அதன் பின்னணியில் வேறு ஒரு கதை உள்ளது.

தங்கர் பச்சானின் திமிர் பேச்சு.

தங்கர் பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற ஒரு படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருந்தார், அதில் கதாநாயகியாக நடித்தவர் பத்மப்பிரியா என்ற மலையாள நடிகை, அவருடைய பெர்சனல் மேக்கப் உமனுக்கு பேட்டா தரவில்லை என்று ஒரு நாள் படப்பிடிப்பில் தகராறு செய்து கேன்சல் செய்துள்ளார், இதையடுத்து கடுப்பான தங்கர் பச்சான் ஒரு விழாவில்  பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகளுக்கு இணையானவர்கள் என்று வாய்கொழுப்புடன் பேச இதை தொடர்ந்து தங்கர்பச்சானுக்கு எதிராக நடிகர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், தங்கர்பச்சான் நடிகர் சங்கத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் நெருக்கடி தரப்பட்டது, தங்கர் பச்சானும் நடிகர் சங்கத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டார், தங்கர் பச்சான் நடிகர் சங்கத்திற்கு சென்று மன்னிப்பு கேட்ட அன்று நடிகைகள்  தங்கர் பச்சானை மிகக்கேவலமாக அர்சித்தனர், அதிலும் குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் அன்று தங்கர் பச்சானை மிக மோசமாக நடத்தினர், நடிகர்கள் விஜயக்குமாரும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் தங்கருக்கு எதிராக வாய்துடுக்காக பேசினர், தங்கர் பச்சானி தீவிரமான தமிழ் ஆதரவாளர் மேலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடத்துடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால் அன்றே குஷ்புவுக்கு குறிவைக்கப்பட்டது.

இதன் பின் இந்தியா டுடேவில் கற்பு குறித்து குஷ்பு உளர ஊர் ஊராக அலையவிடப்பட்டார், இந்த நெருக்கடிகளுக்கு பின் தனக்கு ஒரு அரசியல் பின்புலம் வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார் குஷ்பு, அதற்கு முன்பு ஜெயாடிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்ததால் அதிமுகவில் இணையலாம் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார், மேலும் 2011 சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிற்பார், அவரை எதிர்த்து குஷ்புவை நிறுத்தலாம், குஷ்பு முஸ்லீம் என்பதால் ஆயிரம் விளக்கு தொகுதியில் கணிசமாக உள்ள முஸ்லீம்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்பது வரை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சசிகலா குழு இதற்கு தடை போட காங்கிரஸ் பக்கம் சாய இருந்தார் குஷ்பு.

குஷ்புவை திமுகவில் சேர்த்த ஒட்டு கேட்பு ஸ்பெசலிஸ்ட் ஜாபர் சேட்

பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போது ஆட்சியில் இருந்த திமுக தலைமையின் ஆதரவினால் எதிர்ப்புகள் காணாமல் போயின‌

காங்கிரஸ் கட்சியில் சேர நாளெல்லாம் குறித்து தயாராக‌ இருந்த குஷ்புவை டெலிபோன் ஒட்டு கேட்பு ஸ்பெசலிஸ்ட் ஜாபர் சேட் குஷ்புவின் முடிவை திமுக தலைமைக்கு கொண்டு செல்ல உடனடியாக குஷ்புவுக்கு திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து குஷ்புவுக்கு அழைப்பு வந்தது, எம்.எல்.ஏ சீட் என்ற வாக்குறுதியுடன் திமுகவில் இணைந்த குஷ்பு எந்நேரத்தில் வேண்டுமானாலும் கோபாலபுரம் சென்று தலைவரை பார்க்கும் வல்லமையுடன் வலம் வந்தார், ஸ்டாலினை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க அதிமுகவுடன் பேசியிருந்ததால் கடுப்பில் இருந்த ஸ்டாலின் குஷ்புவின் வரவை ஆதரிக்கவில்லை, ஸ்டாலின் மட்டுமின்றி கனிமொழியும், மாறனும் கூட‌ ஆதரிக்கவில்லை. எனவே குஷ்புவுக்கு எம்.எல்.ஏ சீட்டும் அளிக்கப்படவில்லை. துர்கா ஸ்டாலின் உட்பட கருணாநிதி குடும்பத்து பெண்களுக்கு யாருக்கும் குஷ்புவை பிடிக்கவில்லை, அவரை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.

பிறந்த நாளில் நடந்த அவமானம்

சென்ற ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளின் போது குஷ்பு கோபாலபுரம் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க முயன்றார், ஆனால் கருணாநிதி குடும்பத்தினர் குஷ்புவை அனுமதிக்கவில்லை, மேலும் கருணாநிதி குடும்பத்தினர் ஒருவர் கட்சிக்காரங்க எல்லாம் அறிவாலயத்துக்கு வர வேண்டியது தானே இங்கே வந்து ஏன் தொல்லை தருகின்றார்கள் என்று குஷ்புவை பார்த்து முகத்தில் அடித்தது போல பேச வெளியில் வந்த குஷ்பு தெருவிலே டென்ஷனாக யாரிடமோ தொலைபேசிக்கொண்டு முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார், சிறிது நேரம் கழித்து அனுமதி கிடைத்து கருணாநிதியை பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தார்.


மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களால் திருச்சியில் நடந்த தாக்குதல்

அழகிரி ஸ்டாலின் பிரச்சினை தீவிரமாக வெடித்துக்கொண்டிருந்த போது ஸ்டாலின் தலைமை பதவிக்கு வருவாரா என்பது குறித்து ஒரு பத்திரிக்கை கேள்வி கேட்க அதற்கு ஸ்டாலினை விமர்சிப்பது போல பதில் சொல்லி இருந்தார், அதை அறிந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் வெகுண்டு சென்னையில் உள்ள குஷ்புவின் வீட்டை தாக்கினார்கள், அப்போது கட்சிக்காரர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள திருச்சியில் ஹோட்டலில் இருந்த குஷ்புவின் மீது செருப்பு வீசப்பட்டது மேலும் அவர் மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதை அடுத்து மெளனமான குஷ்பு அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவுடன் உடைந்து போனார், பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் படுதோல்வியும் இனி திமுகவில் ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இனியும் திமுகவில் இருப்பது எந்த விதத்திலும் தமக்கு லாபமில்லை என்பதை அறிந்து இதோ வெளியேறி விட்டார்.

ஒருவழிப்பாதை

காலம் காலமாக கட்சிக்கு உழைத்து உழைத்து தேய்ந்து போன தொண்டர்களுக்கெல்லாம் கிடைக்காத சிறப்புகள் குஷ்புவுக்கு கிடைத்தன, கட்சியின் எல்லா மேடைகளிலும் முக்கிய‌ இடம் கிடைத்தது, திருச்சி மாநாட்டில் பேச மைக் கிடைத்தது, எப்போது வேண்டுமானாலும் திமுக தலைவரின் வீட்டிற்கு சென்று அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, இவ்வளவு இருந்தும் குஷ்பு தனது அறிக்கையில் திமுகவில் என் உழைப்பெல்லாம் ஒரு வழிப்பாதையாக தான் இருந்துள்ளது என்று கூறி உள்ளார்.

அடுத்து அதிமுகவா?

தான் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்று குஷ்பு கூறி வந்தாலும் குஷ்பு அதிமுகவில் சேருவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன‌

குஷ்பு கட்சியை விட்டு சென்றதில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளார்கள்.

மோடி ஏன் பூட்டானை தன் முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தேர்வு செய்தார் !!!

இன்று பல பேர் கேட்கும் ஒரு கேள்வி மோடி ஏன் முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டான் சென்றார் . வேறு ஏதாவது பெரிய நாட்டிற்கு சென்று இருக்கலாமே . அது நன்றாக இருந்து இருக்குமே . இவர்கள் அனைவருக்கும் புரியும் படியாக ஒரு பதில் .

முதலில் சுருக்கமான பதிலைக் காணலாம் !!

பூட்டான் இந்தியாவின் சிறந்த நட்பு நாடு . மேலும் பூட்டான் நம்மை ஒரு போதும் பின்னால் குத்தியது இல்லை .

இப்போது விரிவான பதிலைக் காணலாம் !!

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பது பூட்டான் தான் . இந்தியாவின் அக்கறையின்மையை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடும் .

பூட்டானின் சிறப்பான அமைப்பால் அங்கே பல நதிகள் ஓடுகின்றன . இந்த நதிகள் மூலம் மின்சாரம் பெறலாம் . இந்த மின்சாரம் உற்பத்தி செய்வதை பூட்டான் நாட்டிற்கு செய்து கொடுப்பது இந்தியா . அங்கே மிகையாக் உள்ள மின்சாரத்தை அந்த நாடு இந்தியாவிற்கு கொடுக்கும் . அடுத்த 5 வருடத்தில் 10 டெரா வாட் மின்சாரம் இந்தியாவிற்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .

பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பூட்டானின் மலைகளில் கூடாரமிட்டுள்ளனர் . இவர்களின் திட்டங்களை முறியடிக்க இந்தியாவிற்கு பூட்டான் தேவை ...

மன அழுத்தத்தில் உள்ள கணவர்களுக்கு புதிய அப்ளிகேஷன் !!

பெண்களுக்கு முக்கியத்துவும் கொடுக்க வேண்டும் என போராடி வரும் நமது நாட்டில் ,திருமணமான  ஆண்களில் 8 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டு உள்ளார்கள் .

இதனை கேட்டவுடன் திருமணம் செய்வதற்கே பயமாக உள்ளது .இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் .

இதனை தருவதற்கு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்து உள்ளது . இதில் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 அமைப்புகளின் தொலைபேசி எண்கள் ,குடும்ப பிரச்சனையில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளும் இருக்கும் .நல்ல எண்ணங்களை தூண்டும் பழமொழிகள் வேறு உள்ளது .

எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட நாள் இன்று !!

மிக கொடுமையான நோய்களில் ஒன்று எய்ட்ஸ் நோய் .அந்த நோய் கண்டரியப்பட்ட நாள் இன்று .

அமெரிக்காவில் 1981 ஆம் ஆண்டு இந்த நோயை கண்டுபிடித்தார்கள் .1981 இல் அமெரிக்காவில் மட்டும் 121 பேர் இந்த நோயால் இறந்தனர் .1986 இல் இந்த கிருமிக்கு  எச்.ஐ.வி என்று பெயர் வைத்தனர் .இது மேற்கு - மத்திய ஆப்ப்ரிக்காவில் தோன்றி இருக்க கூடும் என்று கருதபடுகிறது .

உலகில் அதிகம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பது நம் இந்தியாவில் என்பதனை வேதனையுடன் தெரிவித்து  கொள்கிறோம் .இதுவரை இந்த நோய்க்கு 3 கோடி பேருக்கு மேல் இறந்து உள்ளார்கள் .இதனை தடுப்பதிற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம் . 

விஜய் அவார்ட்ஸ் ,இன்று முதல் வாக்களிக்கலாம் !!

விஜய் அவார்ட்ஸ் என்பது தமிழ் சினிமாவில் இருப்பவர்களை கௌரவிப்பதற்காக ஸ்டார் விஜய்  சேனலால் வழங்கப்பட்டு வருகிறது .இதனை 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார்கள் .

வைரமுத்து ஒருமுறை சொன்னார் "தேசிய விருது என்பது ஜனாதிபதி விருது ,விஜய் டிவி விருது என்பது ஜனங்களின் விருது "என்று .அவர்களின் தேர்வு எப்போதும் சரியானதாகவே இருக்கும் .அதில் 27 விருதுகளின்  வெற்றியாளர்கள் அவர்கள் அமைத்த ஜூரிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் .5 விருதுக்கான வெற்றியாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் .

அதற்கான வாக்களிப்பு இன்று முதல் தொடங்கியது .இந்த ஆண்டு ஜூரியில் சிம்ரன் உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளனர் .சரியான நபரை தேர்ந்தெடுத்து அவரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது கொடுக்கும் விஜய் டிவிக்கு நமது வாழ்த்துக்கள் .

வாக்களிக்க www.vijayawards.in செல்லவும் !!!

இலங்கையில் நடக்கும் கலவரத்தின் தற்போதைய நிலவரம் என்ன ???



இன்று இலங்கை, கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள அதேவேளை, இந்த பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கொட்டியாகும்புர பிரதேச வாழ் முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையாகவும், அவதானமாகவும், நிதானமாகவும் செயற்படும்படி கேட்டுக் கொள்கிறோம். தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்.

இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே உண்மையான செய்திகளை வெளியிட மறுத்த போது, நேற்று உங்கள் பிரார்த்தனைகளாலும், சமூக வலைத்தளங்களில் உடனடித் தகவல் பரிமாற்றங்களாலும், நிதானமான நடவடிக்கைகளாலும் மாவனல்லை பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இன்றும் அவ்வாறே ஒற்றுமையாகவும், நிதானமாகவும் செயற்படுங்கள். வீண் கலவரங்களுக்குச் செல்ல வேண்டாம். நம் சகோதரர்கள் இலங்கையில் எப் பிரதேசத்திலேனும் ஏதேனும் துண்டுப் பிரசுரங்களைக் காண நேர்ந்தால் உடனடியாக புகைப்படம் எடுத்தோ அல்லது பிரதி எடுத்தோ எமக்கு அறியத் தாருங்கள்.

கொட்டியாகும்புர பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உங்கள் குடும்பத்தார், நண்பர்களோடு எப்பொழுதும் தொடர்பிலேயே இருங்கள். ஏதேனும் பிரச்சினைகள் குறித்த அடையாளங்கள் தென்பட்டால் உடனே 0759700910-13 இந்த எண்ணுக்கு அழையுங்கள்.


நன்றி - எம்.ரிஷான் ஷெரீப் 

கருணாநிதி கண்டன அறிக்கை !!

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தினர்  (
http://www.satrumun.net/2014/06/blog-post_5473.html ) . இந்த தாக்குதலை கண்டித்து கருணாநிதி இன்று அறிக்கை விட்டார் .

அந்த அறிக்கையில் , " இலங்கையின் பெரும்பான்மை சிங்களர்கள் அரசியல் சட்ட நெறிமுறையின் படி சிறுபான்மையினரான தமிழர்கள் , இஸ்லாமியர் , கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்து ஆட்சி நடத்தாமல் , மோதல் போக்கினையே தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர் . இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களை தாக்கிச் சின்னா பின்னமாக்கிய , தற்போழுது மற்றொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் , அவர்களும் தமிழ் பேசுபவர்கள் என்பதால் தாக்கத் தொடங்கியுள்ளனர் . 

இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இன்ப்படுகொலை நடத்தி முடித்த நிலையில் , இஸ்லாமியர்களும் கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர் . அவர்களை பாதுகாக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய , மாநில அரசுகள் குரல் கொடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . 

எந்த கட்சியுலும் இணையவில்லை - நடிகை குஷ்பு விளக்கம் ..

நடிகை குஷ்பு சில நாட்களுக்கு முன் திமுக வில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் . இந்த நிலையில் அவர் பாஜக வில் இணைவதற்காக தான் திமுக வில் இருந்து விலகியதாக செய்திகள் வந்தனர் . 

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் , நான் எந்த கட்சியுலும் சேரப் போவதில்லை . அது குறித்த யுகங்களை விட்டுவிடுங்கள் . சில நேரங்களில் கஷ்டமான முடிவுகளை புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும் . எனக்கு இது உணர்ச்சிப் பூர்வமான நேரம் . எனது மகள்கள் தான் எனக்கு உலகம் . கொஞ்சநாள் குடும்பத்தோடு தனியாக இருக்க போகிறேன் . அதனால் பத்திரிக்கையாளர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் . திமுக தலைவர் எனக்கு தலைவராக மட்டும் இல்லாமல் தந்தையாகவும் இருந்தார் . அவர் மீது என் வாழ்க்கை முழுவதும் மரியாதை வைத்து இருப்பேன் . அந்த உணர்வை யாரும் நீக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார் .


தனுஷை வாழ்த்திய சிம்பு !!

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும்  திரைப்படம் வேலை இல்லா பட்டதாரி .இதில் நாயகியாக நடிப்பவர் அமலா  பால் .இதனை வேல்ராஜ் இயக்கி உள்ளார் மற்றும் தனுஷ் தயாரித்து உள்ளார் .இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளவர் அனிருத் .'3' படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து உள்ளார்கள் .படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .



இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது .இதனை பார்த்துவிட்டு சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார் .இது எதிரிகளாக இருக்கும் அவரது ரசிகர்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மப்பில் வந்தால் ஆப்பு !!

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால்  தான் பல விபத்துகள் நடக்கிறது .குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை நாம் கண்டுபுடிப்பது ,காரை நிறுத்த சொல்லி வாயை  ஊத சொல்வது தான் .இதற்காக எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் என்பது கடினமான செயல் .

அதற்காக அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்கள் .மதுவின் வாடையை கண்டுபிடிக்கும்   ஒரு லேசெர் கருவி தான் அது. இதனை சாலையில் ஒரு கேமராவில் பொருத்தினால் போதும் .சாலையில் எதாவது வாகனத்தில் மது வாடை வந்தால் போதும் உடனே நம்பர் பிலேட்டுடன் காரை படம்பிடித்து போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பிவிடும் .உடனே அவர்கள் போதையில் கார் ஓட்டுபவர்களை பிடித்து விடலாம் .

போட்டியில் தோற்றாலும் தங்கள் ஒழுக்கத்தால் மக்கள் மனதை வென்ற ஜப்பான் ரசிகர்கள் !!


ஜப்பான் நாட்டு மக்கள் தங்கள் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவும் கொடுப்பார்கள் .அவர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை போதித்து விடுகின்றனர் .அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுது கலசாரத்தையும் ஒழுக்கத்தையும் விட்டு கொடுப்பது இல்லை.


அதற்கு ஒரு எடுத்துகாட்டு கால்பந்து உலக கோப்பையின் போது நடந்துது .அந்த அணியின் முதல் ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியுடன் விளையாடியது .ஜப்பான் ரசிகர்கள் அணியை உற்சாக படுத்தி கொண்டு இருந்தனர் .இறுதியில் ஜப்பான் 1-2 என்று தோற்றது .போட்டி முடிந்த பின் தங்கள் இருக்கைகளுக்கு அடியே இருந்த குப்பைகளை அகற்றி தங்கள் கலாச்சாரத்தை உயர்த்தினர் .

இது அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்தது .ஜப்பான் வீரர்கள்  போட்டியில் தோற்றாலும் ரசிகர்கள் வென்று விட்டார்கள் .

ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்திச் சென்றது ஐஎஸ்ஐஎஸ் படை

ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்திச் சென்றது ஐஎஸ்ஐஎஸ் படை
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் என்ற இராக் சிரியா கூட்டு முஸ்லீம் படைக்கும் அமெரிக்க ஆதரவு படைகளுக்கும் தீவிர போர் நடைபெறுகிறது, ஐஎஸ்ஐஎஸ் படை மசூல் நகரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, இதை அடுத்து மசூல் நகரில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்த 40 இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் படை கடத்தியுள்ளது, இவர்களை யாராலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இதை போலவே திக்ரிக் நகரிலும் 100 இந்தியர்கள் வேலை செய்துவருகின்றனர், திக்ரிக் நகர் ஐஎஸ்ஐஎஸ் படை கட்டுப்பாட்டில் சென்றால் இவர்களுக்கும் சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .



ஏற்கனவே தீவிரவாதிகளின் பிடியில் 46 செவிலியர்கள்
( http://www.satrumun.net/2014/06/blog-post_2233.html )  சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டது பேஸ்புக் நிறுவனம் !!


பேஸ்புக் நிறுவனம் செவ்வாய் கிழமை அன்று தனது புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டது . இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் கிடைக்கிறது .

அந்த புதிய அப்ளிகேஷன் பெயர் ஸ்லிங்ஷாட் (slingshot) . இந்த அப்ளிகேஷன் மூலம் நம் போட்டாக்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் . ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பகிர்ந்து கொண்ட போட்டோ அந்த மொபைலில் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் . அதற்கு பின் அந்த போட்டோ மறைந்து விடும் .

இது ஸ்னாப்சாட் என்னும் அப்ளிகேஷனுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம் . இந்த ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் பேஸ்புக்கின் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவர்ந்து சென்று விட்டதால் கடந்த வருடமே இந்த ஸ்னாப்சாட்டை வாங்க பார்த்தது . ஆனால் ஸ்னாப்சாட் மறுத்து விட்டதால் தானாக போட்டியில் இறங்கிவிட்டது பேஸ்புக் நிறுவனம் . அதன் விளைவாக வந்தது தான் இந்த  ஸ்லிங்ஷாட் .

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ...

கால்பந்து உலக கோப்பை சில சுவாரஸ்யமான தகவல்கள் !!!

கால்பந்து உலக கோப்பை முடியும் வரை பேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ரஷ்ய வீரர்கள்  பயன்படுத்த கூடாது  என்று  அணியின் பயிற்சியாளர் உத்தரவிட்டுள்ளார் .

உலக கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளில் கூகுளில்  அதிக முறை தேடப்பட்டவர் பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிப் பிலிப் ஸ்காலரி ஆகும் .



இந்த உலக கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஸ்பெயின் , நெதர்லாந்த் அணகளுக்கு இடையிலான ஆட்டம் ஆகும் .ஆனால் இந்த ஆட்டத்திலேயே  மைதானத்தில் 3500 இருக்கைகள் காலியாக இருந்தன .

பிரேசில் மக்களிடேயே நடந்த கருத்து கணிப்பில் 35 சதவீதம் மக்கள் இந்த உலக கோப்பை பிரேசில் நாட்டின் மதிப்பை உயர்த்தும் என்று கூறி உள்ளனர் . ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 39 சதவீதம் மக்கள் நாட்டிற்கு அவப் பெயரை உண்டாக்கும் என்று கூறியுள்ளனர் .

புதிய ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகப்படுத்த் உள்ளது ஆப்பிள் நிறுவனம் !!

தொழில்நுட்ப உலகில் இருபெரும் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் முதல் இடத்தை பிடிக்க மாறி மாறி புது தொழில் நுட்பங்களை உல்கிற்கு கொடுத்துக் கொண்டே வருகிறது .

புது நுட்பங்களை உலகிற்கு அளித்தாலும் பதிப்புரிமை எங்களிடம் தான் உள்ளது என்று மாறி மாறி வழக்கும் தொடுப்பர் . அது போன்று கடந்த காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் பதிப்புரிமை பெற்ற் வசதி ஆன ஸ்வைப் செய்யும் வசதி ( அன்லாக் செய்ய தொடுதிரையை ஸ்வைப் செய்தல் ) மற்றும் பல வசதிகளை சாம்சங் நிறுவனம் தங்களிடம் இருந்து திருடியதாக வழக்கு தொடுத்தனர் . ஆனால் சாம்சங் நிறுவனம் அபராதத்தைக் கட்டி விட்டு தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வந்தனர் .

இந்நிலையில் தீடீரென ஆப்பிள் நிறுவனம் தங்களது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டது . சரி சண்டை முடிந்து விட்டது என்று நாம் நினைத்து வந்த வேளையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் என்னும் கையில் அணியும் வாட்ச்சை சந்தைக்கு கொண்டு வந்தது . இது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது . இதைப் பார்த்த் ஆப்பிள் நிறுவனம் இது போன்ற ஸ்மார்ட் வாட்ச்சுகளை உருவாக்க முடிவு செய்துள்ளது .


சாம்சங் நிறுவனம் போன்று இல்லாமல் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது . இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளில்  வாய்ஸ் ரெககனேஷன் மூலம் எஸ்எம்எஸ் மற்றும் செல்போனுக்கு வரும் அழைப்புகளை கேட்கும் வசதி, புளூடூத் மற்றும் வைபை  ஆகிய வசதிகளை இணைக்கவும் முடிவு செய்துள்ளது . இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் வெளியிடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன்



பழங்குடி மக்களின் ரத்தத்தை எடுக்கும் வெளியே விற்கும் அமெரிக்கா - அதிர்ச்சி ரிப்போர்ட் !!!

ஈக்வேடார் நாட்டில் அமேசான் காடுகள் உள்ளது . அந்த காட்டில் ஒரு ஹுயராணி என்னும் இடத்தில் வாழும் பழங்குடி மக்களின் ரத்தத்தை எடுத்து அமெரிக்க விஞ்ஞானிகள் விற்று வருவதாக ஈக்வேடார் நாட்டின் அந்த அமைச்சர் ரென் ரம்ரிஸ் தெரிவித்துள்ளார் .



இது பற்றி கூறுகையில் , " இந்த ஹுயராணி என்னும் இடத்தில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . இவர்கள் எந்தவித நோய்களின் தாக்குதல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் . இவர்கள் வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள் . இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அங்கு வாழும் 600 மக்களிடம் ரத்தம் எடுத்துள்ளனர் . சில மக்களிடம் பல முறை எடுத்துள்ளனர் . இந்த ரத்தத்தை எடுத்துச் சென்று மரபணு சோதனைகளை சோதனை கூடத்தில் சோதனை செய்கின்றனர் என்றார் .

இது பற்றி  இந்த ஹுயராணி பழங்குடி மக்கள் ஒருவர் கூறும்போது , " எங்கள் மக்களிடம் இரத்த பரிசோதனை செய்வதாக கூறி விஞ்ஞானிகள் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றனர் . ஆனால் இது வரை அந்த சோதனைகளின் முடிவுகள் எங்களிடம் வரவில்லை " என்று கூறினார் .

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை !!


இன்று இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுப்பது ஒரு முக்கிய கடைமையாக புதிய அரசுக்கு இருக்கிறது .அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுப்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று சக அமைச்சர்களுடன் டில்லியில் ஆலோசனை நடத்தினார் .

அந்த ஆலோசனை முடிந்த பின் அளித்த பேட்டியில் , " பதுக்கல் காரர்களை மாநில அரசுகள் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் . இன்று பற்றாக்குறையாக உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளோம் " என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media