BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 22 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News


மனைவி செக்ஸ் வைக்காத நாட்களை இணையத்தில் விட்டு உதவி கேட்ட கணவன்
http://www.satrumun.net/2014/07/blog-post_5294.html

மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதலில் மகளை கொலை செய்ததற்காக நன்றி தெரிவித்த தந்தை
http://www.satrumun.net/2014/07/blog-post_7342.html

காதலியுடன் தனிமையில் எடுத்த "பலான" போட்டோக்களை இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டல், காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
http://www.satrumun.net/2014/07/blog-post_1269.html

இந்தியாவின் ஒரே 'சூப்பர் ஸ்டார்' சூர்யா தான் : 'அஞ்சான்' விழாவில் அறிவித்த விஜய் ஆதரவாளர்!!! 
http://goo.gl/SzI8rZ

விஜய் அஜித்தை கலாய்த்து வரும் கேம்களுக்கு அதிக வரவேற்பு
http://www.satrumun.net/2014/07/blog-post_2090.html

பேஸ்புக்கால் மாட்டி கொண்ட திருடி
http://www.satrumun.net/2014/07/blog-post_9710.html

விற்பனைக்கு வந்த முதல் நாளே சைனாவின் ஆப்பிள் போன் "சியோமி" மொபைலுக்கு அமோக வரவேற்பு
http://www.satrumun.net/2014/07/blog-post_3342.html

மலேசிய விமானம் போன்று இதற்கு முன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற விமானங்கள் !
http://www.satrumun.net/2014/07/blog-post_7537.html

பாக்கிஸ்தானுக்கு போனாலும் தெலுங்கானாவில் சானியா மிர்சாவுக்கு புதிய பதவி தந்தார் மாநில முதல்வர்
http://www.satrumun.net/2014/07/blog-post_531.html

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றி குறித்து தோனி என்ன சொன்னார்?
http://www.satrumun.net/2014/07/blog-post_22.html

தீபிகா படுகோனா, ப்ரீத்தி ஜிந்தாவா, காத்ரினா கைஃபை, மத்திய அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கும் தேர்வில் கேள்வி கேட்ட இலட்சணத்தை பாருங்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_8602.html

கடவுளே வந்தாலும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்புகளை தடுக்க முடியாது - கவர்னரின் கன்றாவி பேச்சு
http://www.satrumun.net/2014/07/blog-post_3234.html

காசாவை காப்பாற்றுங்கள் , இஸ்ரேலுக்கு எதிராக உருவாகிய ஹேக்கர் குழு !!
http://www.satrumun.net/2014/07/blog-post_5112.html

கருணாநிதி, ஜெயலலிதா மீது சுப்ரமணியன் சுவாமி புதிய குற்றச்சாட்டு
http://www.satrumun.net/2014/07/blog-post_9526.html

உலக பெண்கள் உச்சி மாநாட்டில் பேச இருக்கும் இந்திய நடிகை, யார் தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/blog-post_3139.html

விற்பனைக்கு வந்த முதல் நாளே சியோமி மொபைலுக்கு அமோக வரவேற்பு




சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது இன்று முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணைத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும்.


இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன. ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன. அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது.



இந்த மொபைல் வந்து உள்ளதால் சாம்சங், நோக்கியா, மோட்டோ என அனைத்து கம்பெனிகளின் மார்கெட்டுகளும் அடி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கால் ஒரு திருடி மாட்டி கொண்டார்




பிராங்க்பேர்ட் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சாக்ஸ்டோன். இவருக்கு 27 வயது ஆகிறது, இப்போது கர்ப்பமாக உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடைக்கு ஆடைகள் வாங்க வந்தார். அவருக்கு தேவையான ஆடைகளை எடுத்து கொண்டு பின்பக்க வழியாக வந்துவிட்டார். அவர் சென்ற பிறகு கடையில் சில ஆடைகள் மற்றும் அணிகலன்கள் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.


பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்த அவரது போட்டோவை, அந்த ஜவுளி கடையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்கள். அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கடையின் உரிமையாளரிடம் தெரிவிக்கவும் என கூறப்பட்டு இருந்தது. இது தெரியாமல் அந்த பெண் திருடிய ஆடைகளுடன் எடுத்த கொண்டு போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இந்த இரண்டு போட்டோக்களும் ஒன்றாக இருப்பதை உணர்ந்தவர்கள் ,இதனை கடை உரிமையாளரிடம் கூறினார்கள்.


இருவரும் ஒரே ஆள் என தெரிந்த பிறகு போலீஸிடம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து அந்த பெண்ணை கைது செய்தது.


எல்லாம் டெக்னாலஜி.

தெலுங்கானாவில் சானியா மிர்சாவுக்கு புதிய பதவி தந்தார் மாநில முதல்வர்





ஜூன் மாதம் அன்று ஆந்திர பிரேதச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இவை ஆந்திரம், தெலுங்கானா என அழைக்கப்பட்டன . பல போராட்டங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்தது. இதற்கு பல உயிர்கள் இந்த உலகை விட்டு பிரிந்து உள்ளன. ஆனால் அந்த மாநிலத்தின் தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் உதவிகள் அதிகம் தேவை படுகிறது. அதனால் அவர்களுடன் ஒரு உடன்பாட்டுடன் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைத்து வருகிறார்.



இப்போது அந்த மாநில தூதராக அந்த மாநிலத்தின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்த மாநிலத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காக அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில முதல்வரை சந்தித்து பேசினார். அவர் இந்த வேலைக்கு சம்பளமாக ஒரு கோடி மதிப்பிலான காசோலையை தந்து உள்ளார். 

மத்திய அரசின் தேர்வில் எந்த நடிகை உயரமானவர் என்னும் கேள்வியால் சர்ச்சை





அரசு பதவிகளுக்கு சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என பல வேலை இல்லா பட்டதாரிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இவை முழுவதும் ஊழல் நிரம்பி உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு ஆகும். இப்போது அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மத்திய அரசின் ஒரு தேர்வில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.




மத்திய அமைச்சகங்களிலும், மத்திய அரசின் துறைகளிலும் பணியாளர்களை நியமிப்பதற்காக எழுத்து தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 92 வது கேள்வியாக நான்கு நடிகைகளின் பெயரை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். இதெல்லாம் ஒரு கேள்வியாடா, இதற்கும் நாம் படிப்பதற்கும் என்னடா சம்மதம் என்று எண்ண தோன்றுகிறது.




இந்த கேள்விகளுக்கு மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த கேள்வியை மதிப்பீட்டில் எடுத்து கொள்ள கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த கோரிக்கைக்கு தேர்வு ஆணையம் சரி என்று கூறி உள்ளது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியது.

மீண்டும் தர்மபுரியில் ஒரு காதல் கதை, தனிமையில் எடுத்த போட்டோக்களை இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டல்





கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு காதலால் தமிழகமே பதற்றமாக இருந்தது. அதற்கு காரணம் தர்மபுரியில் நடந்த காதல் கதை. இளவரசன் - திவ்யா காதலால் தர்மபுரியே கதி கலங்கியது. அங்கு இருந்த ஜாதி வெறியால் அந்த காதல் தோற்றது. இப்போது மீண்டும் அதே தர்மபுரியில் ஒரு காதல் கதை தொடங்கி உள்ளது. இது ஒரு வேறுபட்ட கதை.

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாள் . அவளை காப்பாற்றி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வந்து உள்ளது. இவர் ஒரு டிப்ளமோ மாணவி, இவளது வகுப்பு தோழனான ஒருவரை காதலித்து உள்ளார். இளம்வயது என்பதால் புத்தி கெட்டு தவறான வழியில் சென்று அவரிடம் கற்பை இழந்தார். இதனால் அவள் கருவுற்றால், உடனே அந்த இளைஞன் தனது வீட்டில் விரைவில் சம்மதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவளது கருவை கலைத்து விட்டான்.




ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறான் . இருவரும் தனிமையில் இருந்த எடுத்த சில ஆபாசமான இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளான் . அது மட்டுமில்லாமல் தனது நண்பன் மூலமாகவும் மிரட்டி உள்ளான். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் விஷம் குடித்து உள்ளார். இப்போது அந்த இளைஞனிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்து உள்ளது.


நண்பர்களே காதலிப்பதில் தவறு இல்லை, ஆனால் அதில் எல்லை மீறிவிட்டால் நமக்கு தொல்லை தான்.

விஜய் அஜித்தை கலாய்த்து வரும் கேம்களுக்கு அதிக வரவேற்பு





தமிழ் சினிமாவில் முடிவுக்கு வராத ஒன்று என்றால் அது விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை தான். விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்பதும், அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பது எல்லாம் நமக்கு தெரிந்த ஒன்று தான். நாளுக்கு நாள் இது அதிகரித்து வருகிறது. டெக்னாலஜியை நல்ல விதமாக பயன்படுத்தி கொள்ளாமல் , தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக வலைதளமான பேஸ்புக்கில் விஜய் அஜித் ரசிகர்களுக்கான சண்டை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.


ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று மொபைலில் நாம் பயன்படுத்தும் ஓஎஸ் களிலும் இதனை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். விஜய்யை கலாய்த்து அஜித் ரசிகர்கள் கேம் விடுவதும், அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்கள் கேம் விடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கேவலமான செயல் ஆகும், அவர்களை கேவலப்படுத்தும் இவர்கள் தான் உண்மையில் கேவலமானவர்கள். இப்படிப்பட்டவர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருக்க முடியாது, விஜய் ரசிகர்களாகவும் இருக்க முடியாது.


இது வரை வந்த கேம்களில் அதிக டவுன்லோடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளவை.



2 வது குழந்தைக்கு தாயாக போகிறாரா பாடகி ஷகிரா ??

ஷகிரா என்றாலே இடுப்பு அழகி தான். இப்போது தான் பேஸ்புக்கில் 100 மில்லியன் பேர் லைக் செய்த முதல் நபர் என்னும் சாதனையை படைத்தார். சும்மாவே ஷகிரா பற்றி ரசிகர்கள் பேசி கொண்டே இருப்பார்கள் . இதற்கு முன் கால்பந்து உலக கோப்பை வந்ததால் கொஞ்சம் அதிகமாக பேசப்பட்டார். கடந்த உலக கோப்பையின் போது இவர் பாடிய வக்கா வக்கா பாடல் இவருக்கு அதிக ரசிகர்களை சேர்த்தது.



இவர் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரர் பிக்யூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மிலன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. இப்போது நடந்த உலக கோப்பையின் போது கூட தனது மகன் மிலனுடன் வந்து ஒரு ஆட்டம் போட்டார். இப்போது இவர் மீண்டும் பிரசவமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவர் அடுத்த குழந்தைக்கு தாயாக போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.



இதற்குமுன் ஷகிரா கருவுற்று இருக்கும் போது ஒரு போட்டோவை இணையத்தில் விட்டது போல் இப்போது ஒரு போட்டோவை விடுவாரா என ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளார்கள்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியக் கொடியை ஏந்த போவது யார் ??



நாளை தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டிகளில் தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்திச் செல்லும் வீரரை அறிவித்துள்ளனர் . இந்த பெருமைமிக்க இந்த வேலையை ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற துப்பாக்கிச்சூடு வீரர் விஜய குமாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

இவருக்கு ரிசர்வாக ஒலிம்பிக்கில் வெண்கள பதக்கம் வென்ற யோகேஸ்வர தட் அறிவிக்கப்பட்டுள்ளார் .

இந்த காமன்வெல்த் போட்டிகள் ரஷ்யாவின் கிளாஸ்கோ நகரில் நாளை தொடங்க உள்ளது .

உலக பெண்கள் உச்சி மாநாட்டில் பேச இருக்கும் இந்திய நடிகை !!



இன்று நடைபெற உள்ள முதல் பெண்கள் உச்சி மாநாட்டில் இந்திய நடிகை மற்றும் பிரபல மாடல் பிரீடா பின்டோ கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார் . இந்த மாநாட்டை பிரிட்டென் அரசு யுனிசெப் என்னும் அமைப்பின் உதவியுடன் நடத்த இருக்கிறது . உலகில் உள்ள அனைத்து பிரபல அதிகாரிகள் , அரசு , பிரபல பெண் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை ஒழிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது . முக்கியமாக அதிகரித்து வரும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தும் செய்ல்களை நிறுத்தவும் , வயதுக்கு வரும் முன்னே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்தவும் இந்த மாநாட்டில் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும் .


இந்த மாநாட்டின் கடைசியை உரையை பிரீடா பின்டோ அளிக்க உள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் , " நான் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி பேச உள்ளேன் . மேலும் குழந்தைகள் திருமணத்தை தடுப்பது எவ்வாறு ஒரு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் என்றும் , அவர்களுக்கு கல்வி வழங்குதல் , அவர்களை வன்முறையில் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும் பேச உள்ளதாக " கூறினார் .

பிரீடா பின்டோ ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 

கருணாநிதி, ஜெயலலிதா மீது சுப்ரமணியன் சுவாமி புதிய குற்றச்சாட்டு





மத்திய அரசின் உத்தரவு படி இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளில்  சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்க கூடாது என்று ஜெயலலிதா உத்தரவ்ட்டார். இப்போது இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.




ஜெயலலிதா, கருணாநிதி என்பது சமஸ்கிருத மொழிப்பெயர்கள் , அதனை எதிர்க்கும் இவர்கள் இருவரும் தங்கள் பெயரை மாற்றி கொள்ள வேண்டியது தானே ? சமஸ்கிருத மொழி என்பது எதிர்காலத்தின் மொழி, இது தான் கணினிக்கு ஏதுவான மொழி என நாசாவே அடையாளம் கண்டுள்ளது என பெருமை கூறுகிறார்.


சமஸ்கிருத மொழி வேண்டுமானால் எதிர்காலத்தின் மொழியாக இருக்கலாம், ஆனால் தமிழ் என்பது உலகின் எல்லா மொழிகளும் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மொழி . முதலில் அதனை மதிக்க கற்று கொள்ளுங்கள் சுப்ரமணிய சுவாமி.

மனைவி செக்ஸ் வைக்காத நாட்களை இணையத்தில் விட்டு உதவி கேட்ட கணவன்





இன்று இணையதளத்தில் இல்லாத வசதியே கிடையாது. நமக்கு எதை பற்றி தெரிய வேண்டுமானால் இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணையம் இல்லையெனில் நமக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் மாறி வருகிறது இன்றைய உலகம். அதில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் புதுமையாக ஒன்றை கேட்டு உள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் தனது மனைவி தன்னுடன் செக்ஸில் ஈடுபடாத நாட்களை தெரிவித்து உள்ளார். அதற்காக அவர் கூறிய காரணத்தையும் கூறியுள்ளார்.


இதனால் தான் மிகவும் மனமுடைந்து உள்ளதாகவும் அதற்கு உதவி புரியுமாறும் கேட்டு கொண்டார்.



காசாவை காப்பாற்றுங்கள் , இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பியது ஒரு ஹேக்கர் குழு !!



காஸாவில் இஸ்ரேல் அரசு தாக்குதலை அதிகரித்து வரும் இந்த வேளையில் , ஒரு ஹேக்கர் குழு காசாவை காப்பாற்றுங்கள் என்னும் வார்த்தைகளுடன் இஸ்ரேல் அரசின் முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து வருகிறது .

இந்த ஹேக்கர் குழு இதுவரை 100க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக் செய்துள்ளது . அந்த ஹேக் செய்த இணையதளாங்களில் அவர்கள்  , " உலகம் எங்கும் உள்ள இணையதள ஹேக்கர்களே , அனைவரும் ஒன்று சேருங்கள் . இஸ்ரேல் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள் . அங்கே என்ன நடக்கிறது என்பதை பகிருங்கள் . அவர்களின் அநியாயத்தை உலகிற்கு வெளிப்படுத்துங்கள்  " என்று எழுதியிருந்தனர் .

பல அரசு வெப்சைட்களை தாக்கியுள்ள அந்த குழு அரசு அல்லாத இணையதளங்களையும் தாக்கியுள்ளது .


மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதலில் மகளை கொலை செய்ததற்காக நன்றி தெரிவித்த தந்தை




கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.




இந்த தாக்குதலில் இறந்தவர்களில் 193 பேர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் நெதர்லாந்தை சேர்ந்த 17 வயது மாணவி எஸ்மிய்க் டி போர்ஸ்டம் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் தனது மகளை கொலை செய்ததற்காக நன்றி என்று ரஷிய அதிபர் விளாதிமர் புதினுக்கு அதிர்ச்சி தரும் கடிதம் ஒன்றை அவளது தந்தை எழுதி உள்ளார். தனது மகளை கொலை செய்ததற்காக ரஷிய அரசக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு அவரது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவில் இன்ஜினியரிங் படிப்பதாக இருந்தார். அவரது கனவை கலைத்து விட்டதாக அவர்கள் கர்வமாக சொல்லி கொள்ளலாம் என்றார். மீண்டும் அவர்களுக்கு நன்றி என்றார்.

கடவுளே வந்தாலும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்புகளை தடுக்க முடியாது - மாநில ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சு !!



மொகன்லால்கஞ்சில் நடந்த கொடூர கொலையை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கையில் தற்போதைய் ஆளுநராக இருக்கும் ஆஷிஷ் குரேஷி கடவுளே மாநிலத்திற்கு வந்தாலும் இந்த பாலியல் கொடுமைகளை தடுப்பது கடினம் என்று கூறி புதிய பிரச்சனையை வளர்த்துள்ளார் .

அவர் கூறுகையில் , " மொத்த போலிஸ் மற்றும் ராணுவப் படைகளை நிறுத்தினாலும் பாலியல் கொடுமைகளை தடுக்க முடியாது . வெறும் காவல் துறையினால் மட்டும் இதனை தடுத்து விட முடியாது . மேலும் கடவுளே வந்தாலும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்புகளை தடுக்க முடியாது என்று கூறினார் .

பின்னர் தன்னுடைய முந்தைய பேச்சிற்கு பதிலளிக்கும் வகையில் இன்னொரு பேட்டியில் , " பாலியல் கொடுமைகளை தடுக்க மக்கள் மனதில் ஒரு மாற்றம் வர வேண்டும் .குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் . நான் இதை உணர்த்தவே மொத்த போலிஸ் மற்றும் ராணுவப் படைகளை நிறுத்தினாலும் பாலியல் கொடுமைகளை தடுக்க முடியாது என்று கூறினேன் . மேலும் இந்த பாலியல் கொடுமைகளை தடுக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்தால் தான் முடியும் " என்றார் .

வெற்றி குறித்து தோனியின் கருத்து





இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இந்திய அணி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது .கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 10 இல் தோல்வியையும் 2 இல் டிராவும் செய்து இருந்தது. எனவே தோனியை கேப்டனில் இருந்து தூக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.


சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியா லார்ட்ஸ் வெற்றி பெற்று உள்ளது. சச்சின், திராவிட், லட்சுமனன், கும்பளே இல்லாமல் இந்திய அணி பெறும் வெற்றி இது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 295 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 342 எடுத்தது. 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயக்கப்பட்டது. இஷாந்த் ஷர்மாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இது குறித்து போட்டிக்கு பிறகு தோனியிடம் கடுத்து கேட்கப்பட்டது. இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து பெற்ற வெற்றி நினைவில் இருந்து நீங்காத வெற்றி. 3 ஆம் நாள் வரை ஆட்டம் நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும் 2011 தொடரில் கற்றுக்கொண்டோம். இந்திய அணியில் கடைசி கட்ட வீரர்கள் வரை நன்றாக பேட்டிங் செய்தார்கள். இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்து வீசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media