BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 13 June 2014

20 வயது இளைஞனாக மாறும் அஜித் !!





தல அஜித் இப்போது கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்க வில்லை . இப்போதைக்கு தல 55 என்று கூறி வருகிறார்கள் .இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் .இதில் அஜித் எப்போதும் போல் ஒரு வேடம் சால்ட் அண்ட் பெப்பர் லுக் .ஆனால் மற்றொரு வேடத்தில் அஜித் 20 வயது இளைஞனாக நடிப்பதாக கூறபடுகிறது .இதற்காக அஜித் ஜிம்மிற்கு சென்று தன்னை மாற்றி வருகிறார் .

ரொனால்டோவின் வெற்றிக்கான நம்பிக்கைகள் !!






கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர் ,அதிக ரசிகர்களை கொண்டவர் என பல சிறப்புகளை கொண்டு உள்ள போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ சில நம்பிகைகளை கொண்டு உள்ளார் .அதன் படி நடந்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் .அவை,

1. மைதானத்துக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது கடைசி இருக்கையில் அமர்ந்து கடைசி ஆளாக தான் இறங்குவார் .

2. விமானத்தில் செல்லும் போது சக நாட்டு வீரரான பெப்பே அருகில் அமர்ந்து முதல் ஆளாக இறங்கி விடுவார் .

3. மைதானத்திற்கு செல்லும் முன்பு ஓய்வு அறையிலேயே பந்தை தொட்டு விடுவார் .

4.போட்டியின் இடைவேளையின் போது சிகை அலங்காரத்தை மாற்றி கொள்வார் .

5.மைதானதுக்கள் நுழையும் போது வலது காலை தான் முதலில் எடுத்து வைப்பார் .

6. போர்ச்சுகல் அணியில் இவர் மட்டும் முழு கை சீருடை அணிந்து விளையாடுவார் .

மீண்டும் மெஸ்ஸியும் ரொனால்டினோவும்: மெஸ்ஸியை கவர்ந்த ரசிகர் !!






உலக கோப்பை கால்பந்து போட்டிகாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர்  மெஸ்ஸி பயிற்சியில் இருந்தார் .இதனை ஆயிரகணக்கான ரசிகர்கள் கண்டு களித்தார்கள் .அப்போது திடீர் என்று ஒரு ரசிகர் மைதானத்திற்குள் வந்தார் .அவர்  மெஸ்ஸியின் அருகில் வந்தார் .அவர் பிரேசிலின் முன்னால் வீரர் ரொனால்டினோவை   போன்று இருந்தார் .மெஸ்ஸியும் ரொனால்டினோவும் பார்சிலோனா அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் .இதனால் மெஸ்ஸி அந்த ரசிகரிடம் பேச்சு கொடுத்தார்  .ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குள் அவரை அப்புறபடுத்தி விட்டனர் .

ராஜபக்சேவுக்கு அமைதிக்கான விருது : கொடுப்பதற்கு ஹிட்லர் வருவாரோ ??






ஜூன் 14-15 பொலிவியா நாட்டில் ஜி 77 மாநாடு நடைபெறுகிறது .இந்த மாநாட்டிற்கு ஐ.நா.வின் தலைவர்  பான் கீ மூன் ,இலங்கை அதிபர் ராஜபக்சே போன்ற தலைவர்கள் வருகிறார்கள் . இதில் ராஜபக்சே ஜூன் 15 அன்று உரையாற்றுகிறார் .பல நாட்டு தலைவர்களுடன் இவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் .இந்த ஜி -77 மாநாடு 1964 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது .இந்த மாநாட்டில் இலங்கையில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலை நாட்டியத்திற்காக அந்த நாடு அதிபர் ராஜபக்சேவிற்கு அமைதிக்கான விருது கொடுக்க இருக்கிறார்கள் .இந்த விருதை பொலிவியா நாட்டு அதிபர் எவோ மோர்லஸ் தர இருக்கிறார் .



இதனை கேட்கும்  போது தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ரெத்தம் கொதிக்கும் .அமைதியை குலைத்தவனுக்கு அமைதிக்கான விருதா .இவனுக்கு இந்த விருது என்றால் பிறகு ஹிட்லருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் .குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டியவனுக்கு இந்த விருது என்றால் பிறகு மற்ற நாடுகளிடியே தியாகி ஆகி  விடுவான் .இதனை தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை . தமிழக அரசு விரைந்து செயல் பட்டு இந்த விருதை தடுக்க வேண்டும் .

மின்துறையில் எஸ்.எம்.எஸ் . சேவை : ஜெயலலிதா அறிமுகம் !!










எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணத்தை அறியும் வசதியை ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் மூலம் 2 கோடி நுகர்வோர் பயன் பெறுவார்கள் .இந்த திட்டத்தின் மூலம் ,மின் அளவை கணக்கு எடுத்த பிறகு நாம் செலுத்த வேண்டிய தொகை ,பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் . பிறகு  பணம் செலுத்துவதற்கு கடைசி 3 மூன்று தினங்களுக்கு முன் அதனை நினைவூட்டும் வகையில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் .

ப்ளிப்கார்ட்டின், கவரும் புது புது சேவைகள் !!






ப்ளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் புதிய சேவையை தொடங்கி உள்ளது .இதற்கு பெயர் செதுல்டு டெலிவரி (Scheduled Delivery) என்று வைக்க பட்டு உள்ளது .இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நமக்கு தேவையான தேதியில் நாம் தேர்வு செய்த பொருட்களை டெலிவரி செய்வார்கள் . இந்த சேவை இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை .


போட்டியை சமாளிக்க ப்ளிப்கார்ட் நிறுவனம் புது புது சேவைகளாக அறிமுகபடுத்தி வருகிறது .

"டுவிட்டரில்" இந்தியா சிறப்பிடம் !!






டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா சிறப்பிடம் பெற்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன .  இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 16 வரை 5.8 கோடி கருத்துக்கள் பதிவாகி உள்ளன . இவை பெரும்பாலும் தேர்தலை பற்றிய கருத்துக்கள் ஆகும் .இவற்றில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு வந்த கருத்துக்கள் பிரபலமாக பேசபடுவதில் முன்னிலை வகிக்கின்றன .கடந்த ஆண்டு முழுவதும் மக்களவை தேர்தல் ,அரசியல் தொடர்பாக 2.5 கோடி பதிவுகள் பதிவாகி உள்ளன .


சமூக வலைத்தளங்கள் மீது அதிக நம்பிகை கொண்டு உள்ள மோடி பதவி ஏற்று உள்ள நிலையில் ,டுவிட்டர் பயன்படுதுவர் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை .

இந்தியாவில் சாலை விபத்து நடைபெறும் இடங்கள் !!!!

மத்திய அமைச்சர் கோபிநாத முண்டே சாலை விபத்தில் இறந்த பின் மீண்டும் சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் . 2012 ஆம் ஆண்டில் 1,32,258 மக்கள் தங்கள் உயிரை சாலை விபத்தால் இழந்துள்ளனர் .

மேலும் ஒரு கவலை தரும் விஷயமாக தமிழகத்தில் தான் அதிக மக்கள் தங்கள் உயிரை சாலை விபத்தில் இழந்துள்ளனர் . கோவா மாநிலத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளது .


மாநிலங்கள்மொத்த
விபத்துகள்
லட்ச மக்களின்
விபத்துக்கள்
மொத்த
இறப்புகள்
லட்ச மக்களில்
இறப்புகள்
அந்தமான் & நிக்கோபார்23662.01256.57
ஆந்திரா 42,52450.2814,96417.69
அருணாச்சல பிரதேஷ்25118.141389.97
அசாம்6,53520.942,2917.34
பீகார்10,3209.915,0564.86
சந்தீகர்41939.7013612.89
சத்தீஷ்கர்13,51152.893,16712.40
தாத்ரா & நாகவேலி8524.735315.42
டாமன் & டையு5020.562911.92
டில்லி6,93741.321,86611.12
கோவா4,312295.6429220.02
குஜராத27,94946.247,81712.93
ஹரியானா10,06539.704,44617.54
ஹிமாச்சல் பிரதேசம்2,89942.231,10916.16
ஜம்மு & காஷ்மீர்6,70953.501,1659.29
ஜார்கண்ட்5,71117.312,8188.54
கர்நாடகா44,44872.759,44815.46
கேரளா36,174108.294,28612.83
லக்ஷதீப்34.6500.00
மத்திய பிரதேசம்51,21070.518,17511.26
மஹாரஷ்ட்ரா66,31659.0113,33311.86
மணிப்பூர்77130.001586.15
மேகலாயா48316.282197.38
மிசோராம்11010.03777.02
நாகலாந்து422.12562.83
ஒடிஷா9,28522.123,7018.82
புதுச்சேரி1,18194.6319315.47
பஞ்சாப்6,34122.864,82017.37
ராஜஸ்தான்22,96933.519,52813.90
சிக்கிம்15825.88559.01
தமிழ் நாடு 67,75793.9216,17522.42
திரிபுரா88824.172727.40
உத்தர பிரதேசம்29,97215.0016,1498.08
உத்தரகண்ட்1,47214.598448.37
மேற்கு வங்களம்12,29013.465,3975.91
இந்தியா490,38340.51138,25811.42

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட்டார்கள் என்று கூறியவர்களுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பதிலடி கொடுத்த தமிழன் !!!

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட் டார்கள் - சோ (துக்ளக் 23.6.2013) என்று அன்றைக்கு கூறினார் . ஆனால் இன்று தமிழன் ஒருவன் தன் தாய்மொழி தமிழ் வழி தேர்வு எழுதிய ஜெயசீலன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ( http://www.satrumun.net/2014/06/blog-post_13.html )

சட்டி கூட சுரண்ட முதியாதுனு சொன்னாங்க நேற்றைக்கு தலைமை நீதிபதி , இன்றைக்கு  ஐ.ஏ.எஸ் நாளைக்கு இன்னும் வளருவோம் .


தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு ,
தாய் மொழியை பழித்தால் தாய் தடுத்தாலும் விடாதே

                                       - பாரதிதாசன் 

சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் நடிகர் விவேக்கின் அறிவுகெட்ட பேச்சு !!!

இன்று காலை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் விவேக் . அப்போது , அவர் சமஸ்கிருதம் தான்  உலகின் முதல் மொழி.தமிழ் போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்றார் . 

பொது நிகழ்ச்சி என்றால் என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா ?? இது போன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்கள் குறித்து பேசும் போது கூடுதல் கவனம் வேண்டாமா ??

இதை நாம் கூறினால் மொழி வெறியர்கள் என்பார்கள் . ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . தன் மொழி சிறந்த மொழி என்று கூறுபவர்கள் வெறியர்கள் அல்ல , தன் மொழி மட்டும் தான் சிறந்தது மற்ற மொழிகள் தாழ்த்த மொழி என்று கூறுபவர்களே வெறியர்கள் . 

முண்டாசுப்பட்டி மீசை வைத்தால் எப்படி என்று முயற்சித்து பாருங்கள், விளம்பரங்களில் கலக்கும் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட்

இன்று வெளியாகும் முண்டாசுப்பட்டி திரைப்படம், நீங்களும் முண்டாசுப்பட்டி மீசை வைத்தால் எப்படி என்று முயற்சித்து பாருங்கள். புதிய உத்திகளுடன் விளம்பரங்களில் கலக்கும் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட்



தமிழ் சினிமா நீண்ட நெடுங்காலமாக குருகுல கல்வியை போன்றே செயல்பட்டு வந்தது, ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டுமெனில் உதவியாளர், துணை இயக்குனர், இணை இயக்குனர் என்று வேலை செய்து கடைசியில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கும் போது சில ஆண்டுகளை கடந்திருப்பார்கள், இப்போக்கை மாற்றும் வகையில் திறமையான புதியவர்களுக்கு நேரடி வாய்ப்பளிக்கும் விதமாக திறமையான புதிய‌வர்களை கண்டு பிடித்து தமிழ்சினிமாவின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட்.

அட்டைகத்தியில் ஆரம்பித்து பீட்சா, சூதுகவ்வும், என தொடர்ந்து வெற்றி நடைபோட்டவர்கள் தற்போது முண்டாசுப்பட்டி என்ற படத்தை நாளை வெளியிட உள்ளார்கள், சோசியல் நெட்வொர்க்கை சிறப்பாக பயன்படுத்தி விளம்பரம் செய்தவர்கள் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட். பீட்சா படத்தின் ட்ரெய்லரை ஒரே நாளில் ஒரு இலட்சம் பேர் பார்க்கும்படி செய்தார்கள் இது தமிழ் சினிமா உலகின் புதிய யுக்தியாக ஆரம்பமானது.

தற்போது முண்டாசுப்பட்டி படத்தில் ஹீரோ கிருதா, மீசையோடு வருகின்றார், அதை போலவே உங்கள் படத்தை இந்த தளத்தில் கொடுத்து கிருதா மீசை கெட்டப்பில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என பார்க்கலாம். பல்வேறு பிரபலங்கள் இதை முயற்சி செய்துள்ளார்கள்,

http://mymundasupattistyle.com/ இணையதளத்தில் போய் நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

நகைச்சுவை நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணாநகர் முதல் தெரு ஆகிய படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கொடுக்காப்புளி  செல்வராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

இவரது வயது 58 . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார் . அவரது உடலுக்கு பல நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் .

பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சாதனை !!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பினோ ஜெபைன் இந்தத் தேர்வில் 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

நாடு முழுவதும் 1,122 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .இந்த 1,122 பேரில் 180 பேர் ஐ.ஏ.எஸ் பணி இடங்களிலும் 32 பேர் ஐ.எப்.எஸ் பணி இடங்களிலும் , 150 பேர் ஐ.பி.எஸ் பணி இடங்களிலும் தேர்வு பெற உள்ளனர் .

ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ்வழியில் தேர்வு எழுதி தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை !!!

நேற்று ஐ.ஏ.எஸ் தேர்விற்கான முடிவுகள் வெளியாயின . இந்த முடிவில் தமிழ் வழி தேர்வு எழுதிய தேனி வாலிபர் ஜெயசீலன் தமிழகத்தில் முதல் இடத்தையும் இந்தியா அளவில் 45 வது இடத்தியும் பிடித்துள்ளார் .

இந்த சாதனை குறித்து அவர்கூறும்போது , " நான் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை எங்கள் ஊரில் ஊள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் . பள்ளி மேற்படிப்பை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் . பின்னர் பி.எஸ்.சி விவசாயம் , மதுரை வேளான்மை கல்லூரியில் படித்தேன் . தமிழ் எனக்கு மிகவும் பிடித்ததால் தொலை தூரக்கல்வியாக எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தேன் . அதை தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறேன் .

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு சிறு வயது முதல் என்னுடன் வளர்ந்தது . மூன்றாவது முயற்சி செய்யும் போது தமிழகத்திலே முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . கடந்த முறை போல இந்த முறையும் தமிழ் முதன்மை பாடமாக எடுத்து தான் தேர்வு எழுதினேன் " என்றார் .

இதைபோல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி கார்த்திகேயன் 69 ஆம் இடத்தை பிடித்தார் .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media