BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 11 January 2014

குளறுபடியில் முடிந்த ஜனதா தர்பார் புதன்கிழமை தொடரலாம்

மக்கள் குறைகளை தீர்க்க, அவர்களை தன் அமைச்சர்களுடன் இன்று நேரில் சந்தித்தார், டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால். எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதை அடுத்து, கேஜ்ரிவால், நெரிசல் ஏதும் ஏற்படாமல் இருக்க, அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.

இன்று புகார் கொடுக்க வந்தோரில், பெரும்பாலும், அரசு ஊழியர்களே அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று நடந்த குளறுபிடிக்காக வருத்தம் தெரிவித்த கேஜ்ரிவால், அடுத்த முறை இது போல் சம்பவங்கள் நடக்காமல், ஜனதா தர்பாரை சிறந்த நிர்வாகத்துடன் நடத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இன்று பாதியில் நிறுத்தப்பட்ட மக்களுடனான நேரடி சந்திப்பு, தேவையான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு முடிந்துவிட்டால், புதன்கிழமை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏன் பலாத்காரங்கள் குறைவு?

மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். திரும்ப செல்கையில் அவர் கூறியதாவது: தமிழ் பெண்கள் மிகுந்த இறைபக்தியுடன் இருப்பதாலும், முழுதாக ஆடைகள் அணிவதாலும், மற்ற மாநிலங்களை விட, இங்கு பலாத்கார, கற்பழிப்பு குற்றங்கள் குறைவாக நடக்கின்றது.

கடந்த வருடம் நடந்த டெல்லி கூட்டு கற்பழிப்பு பற்றி கருத்து தெரிவித்த பாபுலால், பெண்கள் குறைவாக ஆடைகள் அணிவது, பலாத்காரங்களை அதிகரிக்க செய்கின்றது என கூறியுள்ளார்.

இது பற்றிய‌ தங்களின் தங்களின் கருத்துகளை 'கமென்ட்' செய்யுங்கள்.

17 லட்சங்களை வங்கி முன்பு கொளுத்திய சகோதரிகள்

பாகிஸ்தானில், 40 மற்றும் 35 வயதான இரு சகோதரிகள், மூன்று நாட்களுக்கு முன்பு, வங்கிக்கு சென்று, 17 லட்ச ரூபாய், பணத்தை தங்கள் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்க வந்திருப்பதாக கூறினர். உடனடியாக அத்தனை பெரிய தொகையை அளிக்க முடியாது என்று, கடந்த வியாழன் அன்று வருமாறு வங்கியின் மேனேஜர் கூறியுள்ளார்.

இதையடுத்து, வியாழன் அன்று வங்கிக்கு சென்ற சகோதரிகளிடம், 17 லட்ச ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்ட சகோதரிகள் இருவரும், அதை எடுத்து சென்று, வங்கியின் வாசலில், கொளுத்தி இருக்கின்றனர். இதை தடுக்க வந்தோரிடம், துப்பாக்கியை நீட்டி, "இது எங்கள் பணம், இதை நாங்கள் என்ன வேணும்னாலும் செய்வோம்." , என்று மிரட்டியுள்ளனர்.

அந்த சகோதரிகளுக்கும், அவர்களின் சகோதரர்கள் இருவருக்கும் மனநிலை சரியில்லை என அக்கம் பக்க்த்தில் உள்ளோர் தெரிவித்தனர்.

1912 க்கு பிறகு உறைந்து போன நயகரா



அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே ஓடும், உலக புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சி, அங்கு நிலவும் கடுங்குளிருக்கு, உறைந்து போய், பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது. அதை பார்த்து ரசிக்க, மற்றும் புகைப்படம் எடுக்க, , கடுங்குளிரையும் மற்றும் எந்த அபாயத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் நயாகராவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு முன்பு, 1912 ஆம் ஆண்டு இதே போல், நயாகரா உறைந்து காணப்பட்டது. நீர் வீழ்ச்சியின் கீழ், ஐஸ் கட்டிகள் விழுந்து, குவிந்து கிடக்கின்றது. நயாகரா உள்ள ஒரு பகுதியில், மைனஸ் 37 டிகிரி செல்ஷியஸ் குளிராக காணப்பட்டது.

இன்னும் சில நாட்களில் பனியும், குளிரும் குறையும் என்றும், இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள், ராகுல் டிராவிட்!!

டெஸ்டில் 13000 சொச்ச டெஸ்ட் ரன்கள்.
ஒரு நாள் போட்டியில் 10000 சொச்ச ரன்கள்.
70 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர். 300+ கேட்சுகள்.
டெஸ்டில் 30000 பந்துகளை சந்தித்த ஒரே வீரர். -ராகுல் டிராவிட்

பொழுது போக்குகாக, ஆடப்படும் இருபது ஓவர் ஆட்டங்களை போல் அல்ல, டெஸ்ட் போட்டிகள் ஆடுவது. உடல் தகுதி, கடுமையான உடல் உழைப்பு, அர்பணிப்பு, மனோதிடம், பயிற்சி என பல தகுதிகள் இருந்தால் மட்டுமே, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும். இப்படி அனைத்து தகுதிகளுடனும், இந்தியாவிற்காக தன்னை அற்பணித்து கொண்டு, எல்லா தளங்களிலும், சிறப்பாக பதினாறு வருடங்கள் விளையாடி காட்டியவர், நட்சத்திர ஆட்டக்காரர் ராகுல் டிராவிட். இரண்டரை வருடங்களுக்கு முன்னால் கூட, 2011 ல நடந்த இங்கிலாந்து தொடரில் மொத்த இந்திய அணியும் ஊத்தி மூட, ஒரு முனையில் ட்ராவிட் மட்டும் அடித்த மூன்று சதங்களோ, முதலில் இறங்கி கடைசி வரை நின்று, நாம் பாலோ ஆன் வாங்கி, வெறும் பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் களத்துக்கு வந்து ஆடிய டிராவிட்டின் தீரமும், மனதிடமும், திறமையும் மறக்க இயலாது.

இன்று ராகுல் டிராவிட்டின் 40வது பிறந்தநாள்.

உங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை, அந்த அடக்கமான, எளிமையான கிரிக்கெட் வீரருக்கு தெரிவியுங்கள்!

டெல்லி மக்கள் குறை தீர்க்க அவர்களை இன்று நேரில் சந்திக்கிறார் கேஜ்ரிவால்

ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும், கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள், தலைமை செயலகத்திற்கு வெளியில் பொது மக்களை சந்தித்து, அவரது குறைகள் மற்றும் புகார்களை நேரில் பெற்று அதை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவர். இதையடுத்து, இன்று நடைபெறும், அந்த ஒன்றரை மணி நேர‌ 'ஜனதா தர்பாரில்', முதல்வரை சந்திக்க, நூற்று கணக்கான மக்கள் திரண்டனர்.

மக்களின் குறை தீர்ப்பது, ஒவ்வொரு அரசின் முக்கியமான கடமையாகும் என்றும்,  திங்கள் முதல் வெள்ளி வரை, தலைமை செயலகத்தில் ஒரு அமைச்சர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின்  புகார்களை பெறுவார் எனவும்,  சனிக்கிழமை தோறும், காலை 9.30-11 வரை அனைத்து அமைச்சர்களும் தன்னுடன் சேர்ந்து மக்களை சந்திப்பர் என  கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் இருந்து புகார்களை பெறுவது மட்டுமன்றி, அவர்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும்.

டெல்லியில் 13 வயது பெண் கூட்டு கற்பழிப்பு

 கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள நந்த் நாக்ரி என்ற இடத்தில், 13வயது பெண் ஒருவர், மூன்று ஆட்டோ ஓட்டுநர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அந்த பெண், காவல் துறையில் புகார் கொடுத்ததை அடுத்து, ரேஹான், சோனு, சலீம் என்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் ஆட்டோ ஒட்டுநர்கள்.

அந்த பெண், சாலையில் நடந்து வருவதை பார்த்து, தனிமையான பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, ஒருவர் பின் ஒருவராக அவரை கற்பழித்தனர். இதை பற்றி, காவல் துறையிடம் புகார் அளிக்க கூடாது என மிரட்டியும் உள்ளனர்.

தி.மு.க மறுபடியும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம்

சமீபத்தில், கருணாநிதியை சந்திக்க வந்த குலாம் நபி அசாத், தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அமைப்ப‌து பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க, சோனியா காந்தி விரும்புவதாகவும், விரைவில் இது பற்றி அவரே கருணாநிதியுடன் பேசுவார் என்றும் பேசப்படுகிறது.

மேலும், தே.மு.தி.க வையும், தி,மு.கவுடன் கூட்டணி வைத்து கொள்ள நிச்சயம் அழைத்து வருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

காங்கிரஸ்-தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி அமைந்துவிடும் என நம்பிக்கையுடன் காங்கிரஸ் வட்டாரங்கள் இருக்கின்றது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media