BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News



ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் மூட் எந்த நேரங்களில் உண்டாகிறது?
http://www.satrumun.net/2014/07/what-time-male-and-female-have-energy.html

16ஐ கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன், 4 மாத கர்ப்பினியாக விழுப்புரத்தில் சிறுமி மீட்பு - கன்றாவி காதல்
http://www.satrumun.net/2014/07/16-year-old-girl-by-15-old-boy.html

சி.எம்.மே கேட்டாலும் சொல்ல முடியாது திமிராக பேசிய வடநாட்டு ஊழியர்கள், சீமான் கைதும் விடுதலையும், உண்மையில் டோல்கேட்டில் நடந்தது என்ன?
http://www.satrumun.net/2014/07/blog-post_6087.html

என்னா ஆட்டம் ஆடுது... : விமானத்தில் 'முகம் சுளிக்க' வைத்த ஸ்ருதிஹாசன்!
http://goo.gl/yFDShw

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியல்
http://www.satrumun.net/2014/07/blog-post_2602.html

கோஹ்லி அனுஷ்காவினால் தான் ரன் அடிக்காமல் இருக்குறாரோ ?
http://www.satrumun.net/2014/07/blog-post_5378.html

மலேசியன் ஏர்லைன்ஸை சுட்டது யார் ? , விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்தது
http://www.satrumun.net/2014/07/blog-post_1708.html

உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம், கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்
http://www.satrumun.net/2014/07/blog-post_5644.html

கூகுள் பற்றி நீங்கள் அறியாத பயன்கள் !! இதை கற்று கொண்டால் உங்கள் இணைய பயணம் இன்னும் சிறப்பாக மாறும் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_9259.html

துரத்தும் மலேசிய விமான துரதிஷ்டம், தொலைந்த விமானத்தில் சகோதரையும் , சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மகளையும் இழைந்த பரிதாபம் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_6324.html

"குடியரசு தலைவர்" பெயர் கூடத் தெரியாத ஆசிரியர் மீது நடவடிக்கை !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_6945.html

நேற்றைய ஆட்டத்தில் 3 சாதனைகள் புரிந்தார் தோனி
http://www.satrumun.net/2014/07/3_19.html

புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள்,
ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் போர் அடித்து விட்டதா ?? வருகிறது சேயில்பிஷ் மற்றும் பயர்பாஃஸ் ஓ.எஸ் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_3265.html

ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் 'மூட்' எந்த நேரங்களில் உண்டாகிறது?


செக்ஸ் ஆசையை தூண்டுவது உடலா? மூளையா என்றால் மூளை தான், மனிதனுக்கு செக்ஸ் எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை செக்ஸ் எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. செக்ஸ் ஆசையை வெறும் மூளை மட்டும் தூண்டுவதில்லை, செக்ஸ் எண்ணங்களுக்கு மரபணு எனப்படும் ஜீன்களும் முக்கிய காரணமாக உள்ளது.

உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.

ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் மாலை நேரத்திலும் செக்ஸ் உறவு கொள்ள ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை ஒரே நேரத்தில் கிளர்ச்சி பெற்று எழுகிறது.

உடலுறவு குறித்து ஆர்வம் இல்லாத நேரத்தில் ஆணோ பெண்ணோ தனது துணையை கிளுகிளுப்பாக பேசி அவர்களை மசாஜ் செய்வதன் மூலம் உறவில் ஈடுபடுத்த இயலும்.

சி.எம்.மே கேட்டாலும் சொல்ல முடியாது திமிராக பேசிய வடநாட்டு ஊழியர்கள், சீமான் கைதும் விடுதலையும், உண்மையில் டோல்கேட்டில் நடந்தது என்ன?

திமிராக பேசிய வடநாட்டு ஊழியர்கள், சீமான் கைதும் விடுதலையும், உண்மையில் டோல்கேட்டில் நடந்தது என்ன?

சீமான் நேற்று மதுரை டோல்கேட்டில் கடந்து வரும் போது டோல்கேட் ஊழியர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் பிரச்சினை ஆனது என்றும், அது தொடர்பாக அமித்குமார் என்ற உத்திரபிரதேசத்தை சேர்ந்த டோல்கேட் ஊழியர் சீமான் மீது புகார் அளித்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று காலை அமித்குமார் தான் சீமான் மீது புகார் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து சீமானை மாஜிஸ்திரேட் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார். நேற்றிலிருந்து சீமான் டோல்கேட்டில் பணம் கட்டாமல் தகராறு செய்ததாக ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதின, ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு.

சீமான் தனது வாகனத்திற்காக பணம் கொடுத்து சுங்க வரி ரசீது எடுத்துள்ளார், அதன் பின் தான் இந்த டோல்கேட் குறித்த தகவல்களை விசாரித்துள்ளார், எவ்வளவு பணம் கட்ட வேண்டும், ஏன் கட்ட வேண்டும், காண்டிராக்ட் எவ்வளவு நாள் உள்ளது என்று விசாரித்தார், ஆனால் சீமான் யார் என தெரியாத வடநாட்டு ஊழியர்கள் மிகுந்த திமிராக பேசியுள்ளனர், மேலும் உங்கள் சி.எம் மே வந்து கேட்டாளும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று திமிராக பேசியதற்கு பிறகே தகராறு ஆரம்பமாகியுள்ளது. இவைகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிந்துள்ளது.

16ஐ கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன், 4 மாத கர்ப்பினியாக விழுப்புரத்தில் சிறுமி மீட்பு - கன்றாவி காதல்

சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகளுக்கு வயது 16, இந்த பெண்ணை திடீரென காணவில்லை, இதையடுத்து அருகில் வசித்து வந்து 15 வயது பையனையும் கடந்த 7–ந்தேதி காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

போலீஸ் விசாரணையில் இந்த பையனும் பெண்ணும் காதலித்தது வீட்டை விட்டு ஓடிப்போய் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். ஆனால் அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும், பெற்றோரும் இவர்களை  சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

கோஹ்லி ஒரு வேளை இதனால் தான் ரன் அடிக்காமல் இருக்குறாரோ ???



இந்திய அணி இங்கிலாந்திற்கு ஒரு நீண்ட தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ளது . இந்த தொடர் முடிய கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகும் . எனவே வீரர்கள் தங்களின் மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கிலாந்திற்கு வந்துள்ளனர் . ஆனால் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஒருவர் மட்டும் இன்னொருவருடன் இங்கிலாந்து உள்ளார் .

யார் அவர் ??


அது  காதல் ஜோடிகளாக இருக்கும் , விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா ஷர்மா .இதற்கு கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது . இருவரும் இணைந்து நெருக்கமாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .  



மேலும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அனுஷ்கா ஷர்மா பெவிலியனில் இருந்து கோஹ்லிக்கு உற்சாக மூட்டினார் . ஆனால் இந்த போட்டியில் விராத் 25 ரன்கள் மட்டுமே அடித்தார் . 

"குடியரசு தலைவர்" பெயர் கூடத் தெரியாத ஆசிரியர் மீது நடவடிக்கை !!!


பீகாரில் ஒரு ஆசிரியர் நமது குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டதற்கு பிரதீபா பாட்டில் என்று சொன்னாராம் . மேலும் பீகாரின் ஆளுநர் ஸ்மிருதி இராணி யாம் . ( ஸ்மிருதி இராணி இப்போதுள்ள அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார் )

பீகாரின் டும்ரி பகுதியில் ஒரு தொடக்க பள்ளியில் பணி செய்து வருபவர் , குமாரி அனிதா . இவர்  தன்னுடைய பணி மாற்றத்திற்காக மாவட்ட நீதிபதியின் ஜன் தர்பாருக்கு சென்றார் . அந்த மாவட்ட நீதிபதியின் பெயர் குமார் அகர்வால் . அகர்வால் அந்த ஆசிரியரின் அறிவை சோதிக்க விரும்பினார் . எனவே மிக எளிதான கேள்விகளை கேட்டார் .

அந்த கேள்வியில் ஒன்றான இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு , பிரதீபா பாட்டில் என்று பதில் எழுதி நீதிபதியை வியப்பில் ஆழ்த்தினார் .

இப்போது அந்த ஆசிரியரின் கல்வி பட்டம் பெற்றது குறித்து சோதித்து வருகின்றனர் . இது குறித்து அகர்வால் கூறுகையில் , " இந்த சம்பவம் எனக்கு பயங்கர வியப்பை ஏற்படுத்தியுள்ளது . இது போன்ற சாதாரண கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத ஆசிரியர் எப்படி பள்ளியில் நமது குழந்தைகளுக்கு பாடம் எடுக்க முடியும் ?? " என்றார்

கடந்த வாரம் பீகார் சட்டசபையில் , கல்வி அமைச்சர் ,  ஆசிரியர்கள் 1000 த்துக்கும் மேற்பட்டோர் தங்களது கல்விப் பட்டத்தை போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றி , பணிகளில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தது !!



2012 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்றது போல் இன்னொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது .



வியாழக்கிழமை காலையில் அந்த பெண்ணின் உடலைப் பார்த்த பொதுமக்கள் போலிஃஸிடம் தகவல் கொடுத்தனர் . பில் கிளிண்டன் வருகைக்கு காவலுக்கு சென்று இருந்ததால் காவல்துறையினரால் இரண்டு மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு வர முடிந்தது .

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரால் ஓரளவு என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது . அந்த பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த வெறியர்களிடம் இருந்து தப்பிக்க பெரும்பாடு பட்டார் என்பதை போலிஸ் கணித்தனர் .

மேலும் அவரை பள்ளி காம்பவுண்டில் வைத்து பாலியல் வன்முறை செய்த வெறியர்கள் , அவரை குச்சியால் கால் , வயிறு , மார்பு ஆகிய இடங்களில் இரத்தம் வரும்வரை அடித்துள்ளனர் . குச்சியை அவரது அந்தரங்க இடங்களில் குத்தினர் . மீண்டும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் .

இறுதியாக அந்த அப்பாவி பெண்மணி தன் வலி தாங்க முடியாமல் உயிரை விட்டுள்ளார் .

இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .


இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாம் - ஐ.நா தகவல் !!


சமீபத்தில் ஐ.நா சபை உலகில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை வைத்து இளைஞர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டது . இந்தியாவில் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த பட்டியல் கூறுகிறது . இதனால் மற்ற நாடுகளை விட இந்தியா இளமையாக இருக்கிறது . 

இந்தியாவில் மூன்றில் ஒருவர் இளைஞராக இருக்கிறார் . 2011 ஆம் ஆண்டு முதல்  இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இவர்களில் 10முதல் 19 வயதுடையவர்கள் 253 மில்லியனாகவும், 15 முதல் 24 வயதுடையோர் எண்ணிக்கை 231 மில்லியனாகவும் உள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலனோர் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பது நமக்கு மேலும் பலம் சேர்க்கும் . 

இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுத்தால் தான் நமது இந்தியா வளர்ச்சிப் பெற முடியும் . 

கூகுள் பற்றி நீங்கள் அறியாத பயன்கள் !! இதை கற்று கொண்டால் உங்கள் இணைய பயணம் இன்னும் சிறப்பாக மாறும் !!

1 ) கூகுளை நீங்கள் டைமராக பயன்படுத்தலாம் . 


2) உங்களுடைய டிப் கணக்குகளை முடிக்க பயன்படுத்தலாம் . 


3) விடுமுறை எந்த நாளில் வருகிறது எனவும் பார்க்கலாம் . 



4 ) படம் எந்த நாளில் ரீலிஸ் ஆகிறது எனவும் பார்க்கலாம் .


5 )  உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகங்களை பார்க்கலாம் . 



6 ) உங்களுக்கு தேவைப்படும் விமானத்தின் நேரத்தைப் பார்க்கலாம் .


7 ) உங்கள் நகரத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பார்க்கலாம்


8 ) உங்கள் கூகுள் பக்கத்தை ஒரு ட்ரம் போல உருட்டலாம் . அதற்கு உங்கள் சர்ச் இடத்தில்  " do a barrel roll " என டைப் செய்யவும்


9) பக்கத்தை மெலிதாக திருப்ப tilt என டைப் செய்யவும் . 


9 ) ஒரு பொருளின் அர்த்தத்தை உணர அந்த வார்த்தைக்கு முன் define  என சேர்க்கவும் .


10 ) உங்களின் உணவுகள் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தருகின்றன என்பதை நாம் இரண்டு உணவு வகைகளை இணைத்து பார்த்துக் கொள்ளலாம் . 






தொலைந்த விமானத்தில் சகோதரையும் , சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மகளையும் இழைந்த பரிதாபம் !!



ஆஸ்திரேலியாவின் குயின்ஃஸ்லாந்தைச் சேர்ந்தவர் கெயிலின் மண் .இவர் தொலைந்து போன எம்.எச் - 370 விமானத்தில் தனது சகோதரனையும் , இப்போது ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச் 17  விமானத்தில் தனது மகளையும் இழந்து பரிதாபமான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார் .

 எம்.எச் - 370 விமானத்தில் இவரது சகோதரனும் அவரது மனைவியும் பயணம் செய்யும் போது அந்த விமானம் தொலைந்து போனது . இதனால் மிகுந்த துயரத்தை அடைந்தனர் அவரது குடும்பத்தினர் . இந்த துயரம் ஆறுவதற்குள் , நேற்று இவரது மாற்றான் மகள் மரி ரிஃஸ்க் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்து போன தகவல் கிடைத்துள்ளது . இதனால் இவர்களின் துயரம் இன்னும் அதிகரித்துள்ளது .

இவ்வாறு இரு துயரங்கள் ஒரே நிறுவனத்தால் தனது குடும்பத்திற்கு நடந்த போதும் அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் போர் அடித்து விட்டதா ?? வருகிறது சேயில்பிஷ் மற்றும் பயர்பாஃஸ் ஓ.எஸ் !!



இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது அதிகமாக கிடைக்கும் பொபைல்கள் அனைத்திலும் விண்டோஸ் அல்லது ஆண்ட்ராய்ட் அல்லது ஐ-ஓ.எஸ் மட்டுமே காண முடிகிறது . அதிலும் ஆண்ட்ராய்ட் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளதால் அதிகம் பேர் அந்த மொபைல் தான் பயன்படுத்துகின்றனர் .

இந்த மூன்று ஓ.எஸ் தவிர வேறு இல்லையா ??

இருக்கிறது !!! ஆம் , அதுவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் .  புதிதாக வர உள்ள ஓ.எஸ் ஜொல்லாவின் சேயில்பிஷ் , பயர்பாக்‌ஸ் மற்றும் உபுண்டுவின் ஓ.எஸ் .

ஜொல்லாவின் சேயில்பிஷ் !!

இந்த ஓ.எஸ்  வெளிநாடுகளில் இருந்தாலும் இனிமேல் தான் இந்தியாவுக்கு வர இருக்கிறது . ஆண்ட்ராய்ட் மொபைலில் இருப்பது போன்று பட்டன்கள் மூலம் ஆப்சன்களை தேர்வு செய்யாமல் கை அசைவுகளினால் வரைவது மூலம் நமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம் . இதில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அனைத்தும் இயங்கும் .

பயர்பாக்‌ஸ் ஓ.எஸ் :

இந்த ஓ.எஸ் ஆண்ட்ராய்ட் போன்று தோற்றமளித்தாலும் விலை குறைந்த மொபைல்களிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைவரும் பயர்பாக்‌ஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் வகையில் விலை குறைவாக இந்த மொபைல்கள் கிடைக்கும் .   இந்த மொபைலில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷ்னு மிக குறைந்த மெமரியில் இருக்கும் . 

உபுண்டு ஓ.எஸ் 

இந்த ஓ,எஸ் லினக்ஸ் பயன்படுத்திய அனைவருக்கும் எளிதாக இருக்கும் . அப்படியே  மொபைலுக்கு மாற்றி உள்ளார்கள் . மேலும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் லினக்‌ஸ் பயன்படுத்தி தான் உருவாக்கப் பட்டது என்பதால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர் . ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை !!! 





நேற்றைய ஆட்டத்தில் 3 சாதனைகள் புரிந்தார் தோனி





இந்தியா - இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது . இதில் 2 வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி 3 சாதனைகளை புரிந்து உள்ளார். இதற்கு முன் இந்தியா - இங்கிலாந்து இடையே விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்னும் பெருமை ஆலன் நாட் வசம் இருந்தது. அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்து தோனி 53 விக்கெட்டுகளுடன் 2 வது இடத்தில் இருந்தார்.


இரு அணிகளுக்கும் எதிராக அதிக கேட்சுகளை பிடித்தவர் வரிசையில் தோனியும் நாட்டும் சமமாக 49 கேட்சுகளை பிடித்து இருந்தனர். அது மட்டுமில்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட் கீப்பராக 50 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்னும் சாதனை என தோனிக்கு 3 சாதனைகள் இருந்தன. நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை பிடித்து 3 சாதனைகளையும் தோனி ஒரே நாளில் முறியடித்தார்.


இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்பதில் வேண்டுமானால் தோனிக்கும் கங்குலிக்கும் போட்டி இருக்கலாம். ஆனால் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் எந்த போட்டியும் இல்லை.

மோடி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து நோட்டீஸ்





மோடி முடிந்த லோக் சபா தேர்தலில் வாரணாசி, வதோதரா என 2 தொகுதிகளில் போட்டியிட்டு , 2 தொகுதியிலும் பெரும்பாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்க முடியும் என்பதால் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவர் வாரணாசி பெற்ற வெற்றியை எதிர்த்து அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் அலகாபாத் ஹைகோர்ட் இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


மோடியின் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்னவென்றால், மோடி தனது மனைவி யசோதா பெண்ணின் வருமானம் என்னவென்று கூறவில்லை. மற்றும் தனது பான் கார்டு பற்றிய தெளிவான தகவல்களை அவர் அளிக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. தேர்தல் செலவு 70 இலட்சத்துக்குள் தான் இருக்க வேண்டும், ஆனால் மோடி கோடி கணக்கில் செலவு செய்து உள்ளார்.மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட பனியனகள் மற்றும் தொப்பிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் நடத்தைகளை மீறிய செயலாகும். இதனால் மோடி மீது  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் மோடியிடன் தோற்ற அஜய் ராய்.

அவசரத்தில் பயன்படுத்த வேண்டிய 110 விதியை 115 முறை பயன்படுத்திய ஜெயலலிதா - ராமதாஸ் கடும் தாக்கு ...


நேற்று தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்று வந்தது . இந்த சபையில் சபாநாயகர் முதல்வரை 110 விதியை 115 முறை பயன்படுத்தியதாக கூறி முதல்வரை பாராட்டினார் . ஆனால் இது அவையின் விதிக்கு அப்பாற்பட்டதாகவும் , விதியை கேலிக் கூத்தாக்குவது போன்று இருப்பதாகவும் கூறி பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் , " தமிழக அரசு சார்பில் 54 துறைகள் உள்ளன . இந்த துறைகளின் மானியக் கோரிக்கைகளை அந்த அந்த துறைகளின் அமைச்சர்கள் அறிவிப்புகளாக வெளியிடுவர் . இது தான் மரபு . ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் பெயருக்கு சில அறிவிப்புகளையும் , மற்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா 110 விதியை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறார் .

இந்த 110 விதி  பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் பற்றி அவசர அறிவிப்பு வெளியிட வேண்டுமானால் இந்த விதியை பயன்படுத்தி வெளியிடலாம் . அந்த விதி மூலம் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மீது எந்த விவாதமும் இருக்க கூடாது என்பது விதி . இதை அரிதாக பயன்படுத்த வேண்டும் என்பதே மரபாக இருக்கிறது .

முதல்வர் பதவியேற்றபின் இந்நாள் வரை 115 முறை இந்த விதியை பயன்படுத்தி உள்ளார் . இந்த விதியை பயன்படுத்துவது என்பது முதல்வரின் உரிமை என்ற போதிலும் எப்போதாவது பயன்படுத்த வேண்டிய விதியை மூன்று ஆண்டுகளில் பயன்படுத்துவது என்பதும் அதை சபாநாயகர் பாராட்டி அறிக்கை வாசிப்பது என்பது விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயல் " என்று குறிப்பிட்டு இருந்தார் .

மலேசியன் ஏர்லைன்ஸை சுட்டது யார் ? , விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்தது




நேற்று முன்தினம் நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏதோ ஒரு படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 295 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது உக்ரைன் அருகே நடந்தது. இந்த தாக்குதலுக்கு ரஷியாவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என உக்ரைன் அரசால் குற்றச்சாட்ட பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.



இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி கொள்கிறார்கள். விமானத்தில் இருந்த 2 கறுப்பு பெட்டிகள் மீட்க பட்டு உள்ளது. அவை ரஷிய அரசுக்கு அனுப்பபட்டு உள்ளது. அதனை பார்த்த பிறகு விமானத்தில் நடந்த கடைசி நேர நிகழ்வுகள் வெளி வரலாம்.


இதன் மூலம் குற்றவாளி பற்றி ஏதேனும் துப்பு கிடைக்கலாம்.

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியல்





சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் எல்லா இந்தியர்களின் பெயர் பட்டியலை பெறுவதற்கு இப்போதைய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதற்காக மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அவர்களும் இந்த செயலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.


சுவிஸ் அரசுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் அந்த வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்போரின் பெயர்களை தருவதற்கு மறுத்து வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் கணக்கு தொடங்கியவர்களின் பெயரை அந்த அரசிடம் கேட்டு வருகிறோம். இதில் உள்ள சட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்றார் அருண் ஜெட்லி.

தமிழக முதல்வர் மீது வழக்கு போட அனுமதி வேண்டும் - டிராபிக் ராமசாமி கோர்ட்டில் மனு !!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி .

அந்த மனுவில் என்ன இருக்கிறது  ???

அந்த மனுவில் முதல்வர் ஜெயலலிதா , தான் எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீது உள்ள ஊழல் வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார் . இது இவரின் பதவியை பயன்படுத்தி செய்வதாகும் . எனவே ஜெயலலிதா மீது வழக்கு தொடர ஆளுநரிடம் மனு அனுப்பி இருந்தேன் . அவர் கண்டு கொள்ளாததால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார் .

இந்த மனு விரைவில் பரீசிலனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் !! உலக தலைவர்களின் கருத்து !!

கிழக்கு உக்ரெயினில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது . இதனால் உலக மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பு குறித்து பயந்து வருகின்றனர் . இந்த விவகாரம் தொடர்பாக உலக தலைவர்கள் அனைவரும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் .

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறுகையில் , " இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் " என்றார் .

அமெரிக்க அதிபர் ஓபாமா கூறுகையில் , " இந்த விவகாரம் ரஷ்ய ஆதரவு படைகள் இருக்கும் இடத்தில் தான் நடந்துள்ளது , உடனே ரஷ்ய கிளர்ச்சி படைகளையும் , உக்ரேயின் அரசு போர் நிறுத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் " என்றார் .

ஆனால் ரஷ்யாவும் உக்ரேயினும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media