Monday, 30 September 2013
மீண்டும் அணியில் இடம் பிடித்தார் யுவராஜ் சிங்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஒரு நாள் மற்றும் 1 டி20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார். வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடமில்லை.
அறிவிக்கப்பட்ட அணி : டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, முகம்மது சமி, ஜெயதேவ் உனக்தத்.

கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி
கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
அக்டோபர் 3ம் தேதி இவர் மீதான தண்டனை விபரங்கள் அறிவிக்கப் படும். அதன் பின்னர் அவரது எம்பி பதவி உடனடியாக பறிபோகும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடைத் தீவின வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்தததால் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு பிஸ்ரா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.
இவரைப் போல இந்தியா முழுவதிலும் மொத்தம் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.
மேலும் லல்லு பிரசாத் யாதவ்க்கு அளிக்கபப்ட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)