BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி, ரமணா படத்தில் வருவது போல நடந்த சம்பவம்

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி

காலையில் டில்லியில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலியாகினர் அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சென்னையை அடுத்த போரூரில் உள்ள மெள‌லிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் இன்று மாலை  சுமார் 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை, கீழ்தளங்களில் வேலை முடிவடைந்ததால் பலரும் சமீபத்தில் தான் இதில் குடியேறினார்கள்

இதுவரை இருவர் பலியாகியதாகவும் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது, இன்னும் 30 பேருக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் என தெரியவந்துள்ளது, இவர்களை மீட்கும் பணி மும்மரமாக நடைபெறுகிறது.

இக்கட்டிடத்தில் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஒரு நாள் மழைக்கே தாங்காமல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதை மறுத்துள்ள கட்டுமான நிறுவனம் இடி தாக்கியதால் நடந்த விபத்து என்று கூறியுள்ளது.

ரமணா படத்தில் ஏரி இருந்த இடத்தில் பலமற்ற மண் இருக்கும் இடத்தில் கட்டிடங்கள் கட்டி அது இடிந்து விழுவது போன்ற காட்சியமைப்பு இங்கே உண்மையாகியுள்ளது, இப்படத்தில் வருவதை போல இந்த கட்டிடம் போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் இக்கட்டிடத்தை தாங்கும் அளவு பலமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தை கட்டி வரும் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் முத்து ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏரியில் 13 மாடி கட்டிடம், எங்கே அரசாங்க விதிமுறைகள்? இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் எழுதுங்கள்

சொத்து குவிப்பு வழக்கு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது , அதனால தேர்தல் முன் கூட்டியே வரும் , சொல்லுகிறார் தமிழருவி மணியன் !!


காந்திய மக்கள் இயக்கத்தின் இளைஞரணி அலுவலக திறப்பு விழா நேற்று இரவு நடந்தது . அந்த திறப்பு விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களும் கலந்து கொண்டார் .

அவர் அளித்த பேட்டியில் , " கர்நாடக நீதிமன்ற வழக்கில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வருக்கு தீர்ப்பு சாதகமாக இருக்காது . இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த காலத்தை விட முன் கூட்டியே வர வாய்ப்புள்ளது . அப்படி வந்தால் கோவை மாவட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் " என்றார் .













































தேர்தலில் ஏன் தோத்துப் போனோம் ??? ஆராயப் போகிறார் வைகோ !!



நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்தது . தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டது பாஜக கட்சி . ஆனால் அந்த கட்சியுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்து இருந்த தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட்ட ஒரு தொகுதியிலிலும் ஜெயிக்கவில்லை . இதில் தேமுதிக 14 தொகுதியிலும் , மதிமுக 7 தொகுதியிலும் போட்டியிட்டது .

இந்த தோல்வியினால் மனமுடைந்த விஜய்காந்த் மீண்டும் கட்சிக்கு வலுவூட்ட தனது தோல்விக்கான காரணத்தை தனக்கு தோல்வியை தந்த தொண்டர்களிடம் கேட்டறிந்து கொள்ள முயன்றுள்ளார் .

இப்போது இவரை தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோவும் ஜூலை 3 ஆம் தேது மூலம் தொண்டர்களிடம் தோல்விக்கான காரணத்தை கேட்டறியும் முயற்சியில் இறங்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இங்கிலாந்து தொடர் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் - தோனி மனம் திறந்து போட்டி !!


இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது . இந்த பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் , 5 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு 20-20 போட்டியிலும் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது .

இந்த தொடர் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில் , " திறமைவாய்ந்த வீரர்களின் திறமையை ஒரு தொடரை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது . எங்களுக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் . அவர்களின் சொந்த கிரவுண்டில் விளையாடுவதால் அவர்களை சமாளிப்பது கடினம் . நீண்ட காலம் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி விளையாடுகிறோம் . அதனால் எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார் .

சென்னையில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது !!

சென்னையில் உள்ள போரூரில் மௌலிவாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 13 மாடி கட்டிடம் இன்று தீடிரென இடிந்து விழுந்தது .

கட்டிட இடிபாடுகளுக்குள் 40 வட மாநிலத்தவர்கள் சிக்கி உள்ளனர் . இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையியனர் ஈடுபட்டுள்ளனர் .
 



எல்லா நடிகைகளுக்கும் பிடித்த நடிகர் ஆர்யா : ஒரே விழாவில் விளக்கம் தந்த த்ரிஷா நயன்தாரா !!


ஆர்யா-விக்னேஷ் குமார் தயாரிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் , ஆர்யாவின் தம்பி நடிக்கும் படம் “அமரகாவியம். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சத்யம் சினிமாவில் இன்று நடைபெற்றது. இதில் தமிழின் முன்னணி கதாநாயகிகளான த்ரிஷாவும் நயன்தாராவும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை ரம்யா தொகுத்து வழங்கினார். 





அப்போது அவர் நயன்தாராவிடமும் த்ரிஷாவிடமும் சில கேள்விகளை கேட்டார். முதலில் அவர்கள் தங்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கே செல்லாதவர்கள் இதற்கு எப்படி வந்தார்கள் என்று. அதற்கு அவர்கள் அளித்த பதில் அவர்கள் வந்த்து ஆர்யா என்னும் மனிதனுக்காக. ஆர்யா அழைத்தார் என்பதற்காக தான் இருவரும் வந்தார்கள் என்றனர். அடுத்த கேள்வியாக ஆர்யாவை ஏன் எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கிறது என்றார். அதற்கு அவர்கள் , ஆர்யா எல்லாரிடமும் ஒரே மாதிரியாக பழகுவார். எல்லார் மீதும் அக்கறை கொண்டு பார்த்து கொள்வார் என்றனர்.

இதில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஆர்யாவை கட்டி அனைத்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இறுதியாக பேசிய ஆர்யா எல்லா நடிகைகளும் ஆர்யாகாக வந்தார்கள் என்றாளும் அவர்களை கெஞ்சி அழைத்து வந்தேன் என்றார்.

அம்மா எப்போ தான் ஜுன் 1 வரும் : தவிக்கும் தமிழக மக்கள் !!


தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழகத்தில் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது, மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கபடும் என்றார். இது தமிழக மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏர்படுத்தியது. சுமார் 7 ஆண்டுகளாக மின்வெட்டால் அவதி பட்டு வந்த தமிழக மக்களுக்கு இது பெரும் சந்தோஷத்தை தரும் செய்தியாக இருந்த்து. மக்களும் ஜுன் 1 வரை காத்து வந்தனர். ஜுன் 1 வந்த்து, ஆனால் தடையில்லா மின்சாரம் மட்டும் வரவேயில்லை.



அதற்காக மக்கள் இன்னும் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். மின்வெட்டிற்கு முக்கிய காரணம் பொருப்பில்லாத முந்தைய அரசுகளே. அப்போது 3500 மெகாவாட்டாக இருந்த கூடுதல் மின்சாரத்தை அம்மா தனது சிறப்பான ஆட்சியின் மூலம் 1000 மெகாவாட்டாக கொண்டு வந்தார். ஆனால் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது என்று அவசரபட்டு சொல்லி விட்டார். முன்பாவது சொன்ன நேரத்தில் மின்வெட்டு இருக்கும் ,அது தங்களுக்கு வசதியாக இருக்கும். இப்போது ,எப்போ வருகிறது எப்போ போகிறது என்றே தெரியவில்லை என மக்கள் பொலம்புகிறார்கள்.


எப்போது அம்மா சொன்ன ஜுன் 1 வருமோ என காத்து கொண்டு இருக்கிறார்கள்.

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு : இந்தியாவின் ஒரு மாநிலத்தை திருடியது !!



சீனா தனது புதிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது . இந்த வரைபட்த்தில் அதிர்ச்சிக்குள்ளான தகவல் இடம் பெற்று உள்ளது. நமது 29 மாநிலங்களில் ஒன்றும் சீன எல்லையில் உள்ள நமது மாநிலமான அருணாசல பிரதேசம் அவர்களது வரைபடத்தில் இடம் பெற்று உள்ளது. இதனை கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி ,நமது நாட்டின் மாநிலம் என தெரிந்தும் சீனா இந்த செயலை செய்து உள்ளது. அவர்களது இந்த செயலால் அந்த மாநிலம் அவர்களுடயது ஆகி விடாது. உண்மை என்னவென்று அனைத்து நாடுகளுக்கும் தெரியும். சீனாவின் இந்த கேவலமான செயலுக்கு மத்திய அரசின் வெளியுறவு துறை செயலாளர் அக்பருதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.



இப்போது நமது துணை பிரதமர் அன்சாரி சீன பயணம் சென்று உள்ளார். மோடி அரசு பதவிக்கு வந்தும் அவர்கள் நம்மை கண்டு பயபடவில்லை. மோடி அரசு உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய திட்டம் அறிவித்தார் தமிழக முதல்வர் !!



தமிழகத்தில் உள்ள அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளனர் .

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து இழுக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களை புதுப்பித்து , பயணிகளின் வரவை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டுய நடவடிக்கை குறித்து அறியும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது . அந்த ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் .

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் காணலாம் :

அருவிகள் , வனப் பகுதிகள் , மலைப் பிரதேசங்கள் உள்ளீட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் தலைமையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் . இந்த ஆணையத்தைப் பற்றி சட்டமன்ற கூட்டுத் தொடரில் முடிவு எடுக்கப்படும் .

பயணிகள் அதிகம் வரக் கூடிய குற்றால அருவியின் தூய்மையும் , அங்குள்ள வசதிகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

குற்றாலத்தில் முக்கியப் பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்படும் .

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் ஞானி !!!



சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் எழுத்தாளர் ஞானி . அந்த கட்சியின் சார்பாக ஆலந்துர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் . ஆனால் இவரால் தேர்தலில் தனது டெபாசிட்டை எடுக்க முடியவில்லை .

இப்போது தனது சமூக வலை தளத்தில் , கட்சியின் உடல்நிலையும் , தனது உடல் நிலையும் சரி இல்லாத்தால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . கட்சியை விட்டு விலகி இருந்தாலும் , கட்சியில் சேரும் முன் ஆம் ஆத்மியை ஆதரித்து பேசியதைப் போல தொடர்ந்து ஆதரித்து பேசுவேன் , எழுதுவேன் என்று தெரிவித்தார் .

இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறியது சீனா !!


சீனா புதிய வரைபடத்தை வெளியிட்ட பிரச்சனை முடியும் முன்னே இன்னொரு பிரச்சனையை கிளப்பியுள்ளது .

காஷ்மீரின் லடாக் ஏரியின் இந்திய பகுதிகளில் 5.5 கீமி தூரம் ஐந்து அதி வேக கப்பல்களில் சீனாவின் தூருப்புகள் உள்ளே வந்ததாக தெரிகிறது . இந்திய  ராணுவம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் தங்கள் பகுதிக்கு சென்றுள்ளனர் .

அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!


இன்று மோடியின் அரசில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருகளுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது .

இந்த பயிற்சி வகுப்பில் மோடி 30 நிமிடங்கள் உரயாற்றினார் . அந்த உரையில் மோடி வழங்கிய அறிவுரைகளின் முக்கியமானவற்றை கீழ்க் காண்போம் .

தனது அமைச்சர்களை பேட்டி அளிப்பதில் கவனுத்துடன் இருக்க சொன்னார் .

அடுத்த ஆறு மாதங்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு வைத்து கொள்ள வலியுறுத்தினார் .

இப்போது நாம் எதிர்கட்சி அல்ல , நாம் தான் ஆளும் கட்சி . எதிர்கட்சியில் இருந்த நாம் நம் மனதை மாற்றி அமைக்க வேண்டும் .

ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் .

பிறர் மீது குற்றம் சுமத்தாமல் அவரவர் வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் .

பாரளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் நன் நடத்தையோடு அமைச்சர்கள் இருக்க வேண்டும் .

மக்களவை தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்தது போல , சட்டமன்ற தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும் என்றார் .

தங்களுடைய தொகுதியயும் நன்றாக பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார் .

இவ்வாறு தன்னுடைய அமைச்சர்களுக்கு உரையாற்றினார் .

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் சீனா !! அருணாச்சல பிரதேசம் அவர்களுடைய பகுதியாம் !!



இந்தியாவின் ஒரு எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைவதை வழக்கமாக வைத்து இருந்தனர் . அதை தங்களின் எல்லை என்றும் கூறி வந்தனர் . இப்போது ஒரு படி மேலே போய் , சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுடன் இணைத்து வரைபடத்தில் அச்சிட்டு இருக்கின்றனர் .

அந்த  சீனா வரைபடத்தில் சீனாவின் தெற்கு திபேட் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசமாக இருக்கிறது . ஏற்கனவே எல்லை பிரச்சனை இருக்கும் இந்நேரத்தில் , இந்த புது பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது .

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!


800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் , அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்டானோ . இவர் தற்போது 34 வது வார கர்பத்தில் உள்ளார் .

இந்த கர்ப்பத்துடன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இவர் பந்தயத்தை 2 நிமிடம் 32 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார் . போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தன்னுடைய துணிச்சலான இந்த செயலால் மக்களின் மனதை வென்றார் . இவர் முடிவு கோட்டை நெருங்கும் போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது .



போட்டி முடிந்த பின் இவர் அளித்த பேட்டியில் , " நான் என் கர்ப்ப காலம் முழுவது ஓடிக் கொண்டு இருக்கிறேன் . இது எனக்கு நன்றாக இருக்கிறது . கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தாய் மற்றும் சேயின் உடல் நலனை அதிகரிக்கும் " என்றார் .



தமிழக அணிக்கு டாட்டா காட்டினார் பத்ரினாத் !! விதர்பா அணிக்கு விளையாட செல்கிறார் !!



தமிழக அணிக்காக முதன் முதலாக 2001 ஆம் ஆண்டில் பத்ரினாத் விளையாடினார் . கடந்த 14 வருடங்களாக தமிழக அணிக்காக ரஞ்சி மற்றும் பல தொடர்களில் விளையாடி வந்தார் . இந்திய அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார் . முதல் தர கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் 59.31 சராசரியாக கொண்டுள்ளார் . ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி , பல நேரங்களில் தனது அணியை காப்பாற்றியும் உள்ளார் .

அடுத்து நடக்க உள்ள சையது முஸ்தாக் அலி டிராபியில் தமிழக அணிக்கான உத்தேச அணியில் பத்ரினாத் இடம் பெறவில்லை . மேலும் 2014 ஐ.பி.எல் ஏலத்திலும் இவரை யாரும் எடுக்கவில்லை .

இதனால் சோர்வடைந்த இவர் விதர்பா அணிக்கு மாறுவது என முடிவு எடுத்து அதற்கான பணிகளையும் செய்துள்ளார் . 14 வருடங்களாக விளையாடிய அணியை விட்டு , இப்போது விதர்பா அணிக்கு மாறும் முடிவு பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது .


பாஜகவின் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு - இன்று தொடக்கம் !!!


பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என இரண்டு நாள் வகுப்பு , சுரஜ்கந்த் என்னும் இடத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்று வருகிறது .

இந்த கூட்டத்தில் முதல் உரையை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றினார் . பிரதமரும் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது .

பிரதமரை தொடர்ந்து , மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இளம் உறுப்பினர்களுக்கு அனைத்தையும் விளக்க உள்ளார் . மேலும் வெங்கையா நாயுடு , அருண் ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் , பியுஷ் கோஷல் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர் . இறுதியாக மூத்த தலைவர் எல்.கே அத்வானி உரையாற்ற உள்ளார் .

வியாபாரியா? விபச்சாரியா? லீனாமணிமேகலை கார்ட்டூனிஸ்ட் பாலா மோதல்! நடந்தது என்ன?


சமீபத்தில் "வித் யூ, வித்தவுட் யூ" என்ற சிங்கள மொழிப்படம்  பிவிஆர் திரை அரங்கில் வெளிவருவதாக இருந்தது, அந்த படத்தை தமிழ் அமைப்புகள் மிரட்டி நிறுத்தியதாக சிலர் பரபரப்பு கிளப்பினர், உண்மையில் படம் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்த ஒரு சிங்கள குரலாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்லியுள்ளனர், இந்நிலையில் எந்த தமிழ் அமைப்பும் இந்த படத்துக்கு மிரட்டல் விடாத நிலையில் லீனா மணிமேகலை உட்பட பலர் தமிழ்தேசிய அமைப்புகளை எதிர்த்து பேசினர்.

இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு பதிவிட்டிருந்தார், அதில் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் என்று குறிப்பிட்டிருந்தார், இதை அடுத்து லீனா மணி மேகலை தன்னை கார்ட்டூனிஸ்ட் பாலா "ஏக மொழியில் விபசாரி, வியாபாரி என்றும்" குறிப்பிட்டதாக கூறி அந்த பதிவை பாலா நீக்கவேண்டுமென குமுதம் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார் ,

குமுதம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வரதராஜன் அவர்கள் அழைத்துப் பேசினார். கார்டூனிஸ்ட் பாலா தன் மோசமான பதிவுகளை எடுத்துவிடுவதாக உறுதியளித்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்!  என்று மீண்டும் ஒரு பதிவை லீனா வெளியிட்டார்,

பாலா டாக்குமெண்ட் வியாபாரி லீனா மேடம் என்று குறிப்பிட்டதை லீனா திரித்து தன்னை விபசாரி என்று கூறியதாக குமுதம் நிறுவனத்திடம் முறையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்ட்டூனிஸ்ட் பாலா தனிப்பட்ட முறையில் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் எழுதியதில் எப்படி அவர் வேலை செய்யும் நிர்வாகம் தலையிட்டு பதிவை தூக்க சொல்லலாம் என்று பலர் குமுதத்தின் நடவடிக்கையையும் விமர்சித்துள்ளார்கள்.

பாலா எழுதிய பதிவு, லீனாவின் பதிவுகள் ஸ்கீரின் ஷாட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இது குறித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்



உலக கோப்பை முதல் சுற்று இன்றுடன் முடிவடைந்தது , இரண்டாவது சுற்று இன்று முதல் !!!



உலக கோப்பை கால்பந்தின் முதல் தொடர் , இரண்டாம் கட்டடத்தை எட்டியுள்ளது . முதல் சுற்று பல விறுவிறுப்புகளுடன் முடிந்தது . கோப்பை வெல்லும் என எதிர்பார்த்த ஸ்பெயின் , இத்தாலி அணி வெளியேறி அதிர்ச்சி அளித்தது . மேலும் இங்கிலாந்து , போர்ச்சுகல் அணியும் வெளியேறியது .

இரண்டாவது சுற்று இன்று முதல் தொடங்க இருக்கிறது . இனிமேல் வரும் அனைத்து போட்டிகளும் நாகவுட் போட்டிகளே . எந்த அணி யாருடன் மோத போகின்றன என்பதை பார்ப்போம் .

பிரேசில் - சிலி
கொலாம்பியா - உருகுவே


நெதெர்லாந்து - மெக்ஃஸிகோ
கிரிஸ் - கோஸ்டா ரிக்கா

பிரான்ஸ் - நைஜீரியா
ஜெர்மனி - அல்ஜீரியா

அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து
பெல்ஜியம் -  அமெரிக்கா

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media