BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 5 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

காரில் செக்ஸ் வைத்த 17 வயது டீன் ஏஜ் ஜோடி, நாசமான பல கார்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_40.html

இந்தியாவிலேயே மிகப்பெரிய"ரெய்டு"
http://www.satrumun.net/2014/09/blog-post_46.html

பெண்களை கடத்தி கற்பழித்து விபச்சாரத்தில் தள்ள குழந்தைகளை பயன்படுத்தும் புது டெக்னிக் - எச்சரிக்கை விடுக்கும் டி.ஏ.வி பள்ளி
http://www.satrumun.net/2014/09/dav-schools-warns-about-gang-abducts.html

ஆண்கள் பெண்களுடன் நல்ல உறவில் இருக்க வேண்டுமானால் இந்த 5 கேள்விகளை கேட்க கூடாது
http://www.satrumun.net/2014/09/men-should-never-ask-womenb.html

தனது வாழ்க்கையில் தனக்கு யார் முக்கியம் என தோனி மனம் திறந்த பேட்டி
http://www.satrumun.net/2014/09/dhonis-order-of-preferences-in-life.html

நிறைய சம்பளம் வாங்குறிங்களா? அப்போ நிறைய முடி கொட்டும்
http://www.satrumun.net/2014/09/high-paid-man-suffers-high-hair-loss.html

மத்திய பிரதேசத்தில் 1,600 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மோடியின் ஆசிரிய தின உரை !!
http://www.satrumun.net/2014/09/modi-special-speech-saved-1600-students.html

மீண்டும் சிம்பு நயன்தாரா காதல் மலர்கிறதா ??
http://www.satrumun.net/2014/09/new-privacy-checkup-in-facebook-in-few.html

நீங்கள் நிர்வாணமாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
http://www.satrumun.net/2014/09/advantages-of-being-naked.html

ஓட்ஸ் ஒழிக, கேழ்வரகு, கம்பு போன்ற பாரம்பரிய உணவுகளை அழிக்கும் பன்னாட்டு உணவுகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_47.html

கோள்கள், நட்சத்திரங்கள் கோள வடிவில் இருப்பது ஏன் ?
http://www.satrumun.net/2014/09/blog-post_35.html

மருத்துவ உலகில் புதிய முயற்சி :அச்சிடப்பட்ட கண் செல்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_25.html

இன்னும் 2,3 நாட்களில் பேஸ்புக்கில் உங்கள் தனிமனித பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
http://www.satrumun.net/2014/09/new-privacy-checkup-in-facebook-in-few.html

செல்போன் ரேடியேஷன் (அலைபேசி கதிர்வீச்சு) இருந்து தப்பிக்க வழிகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_51.html

தனது பழைய காதலிக்கு 21,807 முறை போன் மற்றும் மெசெஜ் செய்த காதலன் கைது !!
http://www.satrumun.net/2014/09/man-who-called-his-ex-often-sentenced-to-prison.html

பேஸ்புக் டிவிட்டரில் புதிய சாதனை படைத்த மோடி
http://www.satrumun.net/2014/09/modi-makes-new-record-in-fb-and-twitter.html

உங்கள் குழந்தைகளுக்கு மறக்காமல் காலை உணவு கொடுங்கள் , டையாபடிஸ் நோயில் இருந்து பாதுகாக்குமாம் !!
http://www.satrumun.net/2014/09/now-you-can-save-your-child-from-diabetes.html

ஹேக்கர் வெளியிட்ட நிர்வான படங்களில் இருப்பது நான் இல்லை , நான் அதைவிட இன்னும் அழகாக இருப்பேன் - பிரபல நடிகை
http://www.satrumun.net/2014/09/ariana-grande-responds-to-hacked-pictures.html

ஐ படத்தின் டீசர் லீக்கானதால் , புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது
#இவரே பாம் வைப்பாராம், அதை இவரே எடுப்பாராம்
http://www.satrumun.net/2014/09/ai-teaser-got-leaked.html

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 4 கல்லூரி மாணவர்கள் !!
http://www.satrumun.net/2014/09/4-students-from-hyderabad-detained-by-police-while-travelling-to-iraq.html

மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப வேண்டும்
http://www.satrumun.net/2014/09/blog-post_37.html

குரு உத்சவ் என மாறுகிறது ஆசிரியர் தினம், வடமொழியை திணிக்கும் மோடி அரசு
http://www.satrumun.net/2014/09/blog-post_64.html

உணவு யுத்தம், உடலை கெடுக்கும் பெப்ஸி, கோக்
http://www.satrumun.net/2014/09/blog-post_24.html

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகையின் சம்பளம் 35 மில்லியன் டாலராம் !!
http://www.satrumun.net/2014/09/high-paid-actress-list-in-tv-serial.html

ஐ.பி.எல் போட்டி என ஒன்று இருக்கவே கூடாதாம் ! ஐ.பி.எல்லைதீட்டித் தீர்த்த இயன் போத்தாம் !!
http://www.satrumun.net/2014/09/ian-botham-slams-ipl.html

நமது வாழ்க்கையில் வந்துள்ள 7 வகையான ஆசிரியர்கள்
http://www.satrumun.net/2014/09/7-type-of-teachers-we-had-a.html

காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து !! பயணிகள் நிலை என்ன ??
http://www.satrumun.net/2014/09/kashmir-flood-washed-away-a-bus.html

காரில் செக்ஸ் வைத்த டீன் ஏஜ் ஜோடி, நாசமான பல கார்கள்


17 வயது ஆன ஒரு டீன் ஏஜ் ஜோடி நீல நிற Inokom Atos காரின் உள் சந்தேகத்துக்கிடமான முறையில் கோட்டா தமன்சரா என்ற இடத்தில்  ஏதோ செய்து கொண்டிருந்தார்கள், இது மலேசியாவில் உள்ள ஒரு இடமாகும். செவ்வாய் இரவு 10.30 மணிக்கு காரினுள் கசமுசா என்று சந்தேகப்பட்ட போலிசார் காரை நெருங்கி இந்த ஜோடியை வெளியே வர சொன்னார்கள், ஆனால் வெளியே வராமல் இந்த ஜோடி மிக வேகமாக காரை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

போலிசாரும் பின்னால் வாகனத்தில் துரத்த ஆரம்பித்தனர், ஒரு மணி நேர துரத்தலுக்கு பின் தமன்சாரா டோல் பிளாசா அருகில் ஒரு ஹோண்டா சிவிக் காரை மோதி நிறுத்தினர். இதில் இந்த ஜோடி லேசாக காயமடைந்தது, இதையடுத்து அந்த ஜோடியை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர், சுங்கை புலாவ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இந்த ஜோடி ஷா ஆலம் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்



இந்த துரத்தலில் பல வாகனங்கள் இந்த ஜோடியால் சேதமடைந்தது, காரை ஆபத்தான முறையில் ஓட்டுவது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இன்னும் 2,3 நாட்களில் பேஸ்புக்கில் உங்கள் தனிமனித பாதுகாப்பு உறுதி செய்யப்படும்






பேஸ்புக்கில் இன்னும் 2,3 நாட்களில் உங்களிடம் புதிதாக ஒன்றை செய்ய சொல்லி பேஸ்புக் கேட்கும் . அது வேறொன்றுமில்லை பேஸ்புக்கில் நமது தனிமனித பாதுகாப்பு குறித்து செக் செய்வது ஆகும். இதன் மூலம் நமது பொரபைல் பாதுகாப்புடன் இருக்கிறதா என்பதை நாம் சரிபார்த்து கொள்ளலாம். பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் ஸ்டேட்டசுகளை யார் யார் பார்க்கலாம் என்பதையும் இதன் மூலம் நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

இதில் மொத்தம்  3  வழிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றி இதனை நாம் எளிதாக செய்து முடிக்கலாம். விரைவில் இது உங்கள் பொரபைலுக்கு வரும் காத்து இருங்கள்.

மீண்டும் சிம்பு நயன்தாரா காதல் மலர்கிறதா ??




நடிகர் ஆர்யா அவருடைய தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'அமர காவியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். இதில், மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் பீரிமியர் ஷோ எஸ்கேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவின் ஹீரோ ஹீரோயினாக இருந்தது சிம்புவும் நயன்தாராவும் தான்.

இவர்கள் இருவரும் இந்த விழாவுக்கு ஜோடியாக வந்தார்கள். இவர்களை பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாக வந்தது. நயன்தாராவை அரவணைத்து சிம்பு அழைத்து சென்றார். இவர்கள் இருவரும் இதற்கு முன் காதலித்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

நிர்வாணமாக இருப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்






நிர்வாண இருப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே எப்போதும் வெளியே சென்று விட்டு வந்ததும் எல்லா உடைகளையும் நீக்கி விட்டு தண்ணீரில் ஒரு குளியல் போட்டு விடுங்கள். அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

* இது நமது உடலில் உள்ள விட்டமின் டி யை அதிகரிக்கும். இது சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் விட்டமின் ஆகும்.

* நமது தோல் மிகவும் வலுவானதாக மாறும்.

* அழுத்தமான துணிகளை அணியும் போது ஏற்படும் சிவப்பு மார்க்குகளை , தவிர்க்கலாம்.

* மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும்.

* எந்த தொற்றும் வராமல் பார்த்துக் கொள்ளும்.

* இது ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுத்துவதை தடுக்கும்.

* நாம் ஏதாவது மன அழுத்தத்தில் இருந்தால் அதில் இருந்து வெளி கொண்டு வரும்.

அலைபேசி கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க வழிகள்

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் அலைபேசி  இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ எல்லோரும்  பயன்படுத்தியே தீர
வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப

இயலாது. ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன்
கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும்
பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில்,கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த அலை பேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas,Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் அலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம் . ஆகவே முக்கியமான விடயம் நாம் அலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு அலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள்.லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் அலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட அலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்குதெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து  SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் அலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக 
கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் அலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட அலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக

இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகி றது.

8. அலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிகவாய்ப்புள்ளதாம் .

9. அலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. அலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. அலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. அலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

தனது பழைய காதலிக்கு 21,807 முறை போன் மற்றும் மெசெஜ் செய்த காதலன் கைது !!



பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் தனது பழைய காதலிக்கு 21,807 முறை போன் மற்றும் மெசெஜ் செய்து தொல்லை கொடுத்ததால் காதலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .

அவருக்கு 10 மாத சிறை தண்டனையும் , 1000 யுரோ அபாராதமாகவும் விதிக்கப்பட்டது . அவருக்கு மனநிலை ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது . அவரின் பழைய காதலியுடன் எந்த விதமான தொடர்பிலிம் இருக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது .

அந்த பழைய காதலனும் தான் போன் செய்ததை ஒப்புக் கொண்டார் . இவர்கள் காதல் 2011 ஆம் ஆண்டு பிரியும் போதும் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

காதலன் கூறுகையில் " நான் அவளிடம் இருந்து எங்கள் வீட்டினை சரி செய்ய சரி பாதி பணத்தைக் கேட்கவும் அல்லது அவளிடம் இருந்து நன்றி என்ற ஒரு வார்த்தையை எதிர்பார்த்து தான் அவளுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டு இருந்தேன் " என்றார் . இறுதியாக தான் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும் ஒப்புக் கொண்டார் .

பாரம்பரிய உணவுகளை அழிக்கும் பன்னாட்டு உணவுகள்


இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140x4= 560 ரூபாய்.

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.

[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.] அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, பன்னாட்டு (MNC)

 நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.

அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு. 

                                                 சிந்தியுங்கள்.....!

பேஸ்புக் டிவிட்டரில் புதிய சாதனை படைத்த மோடி




இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த  பிறகு பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் அரசியல்வாதிகளில் மோடி 2 வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளார்.

பேஸ்புக்கில் மோடி பக்கத்துக்கு 21 மில்லியன் லைக்குகளும், ஒபாமாவுக்கு 42.4 மில்லியன் லைக்குகளும் உள்ளது. டிவிட்டரில் ஒபாமாவுக்கு 46 மில்லியன் ஃபாலோவர்ஸும், மோடிக்கு 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸூம் உள்ளார்கள். ஒபாமாவின் பதவி காலம் விரைவில் முடிந்து விடும் பட்சத்தில் மோடி ஒபாமாவை முந்தி முதல் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு மறக்காமல் காலை உணவு கொடுங்கள் , அது குழந்தைகளை டையாபடிஸ் நோயில் இருந்து பாதுகாக்குமாம் !!



உங்கள் குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் உங்களிடம் டிமிக்கு கொடுத்து வருகிறதா ??

இனிமேல் அதற்கு ஒருபோதும் அனுமதி தராதீர்கள் . ஏனென்றால் உங்கள் குழந்தைகளுக்கு தினமும் சத்தான காலை உணவு கொடுத்து வந்தால் டைப் -2 நீரழிவு நோய் வருவதில் இருந்து பாதுகாக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது .

இந்த ஆய்வு பிரிட்டேனில் உள்ள  9 முதல் 10 வயது வரை உள்ள 4,116 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது . இந்த ஆய்வில் குழந்தைகளிடம் எப்போது உணவு அருந்துனீர்கள் , எதை உணவாக எடுத்துக் கொண்டீர்கள் , அவர்களது இரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது .


மத்திய பிரதேசத்தில் 1,600 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மோடியின் ஆசிரிய தின உரை !!



மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 1,600 மாணவர்களின் உயிர் இன்று மோடியின் முதல் ஆசிரியர் தின உரையால் காப்பாற்றப்பட்டது .

150 வருடங்கள் பழமையான அந்த பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது . இந்த சம்பவம் ஒரு 10.20 மணி போல நடந்தது . ஆனால் இன்று மட்டும் மோடியின் சிறப்பு ஆசிரிய தின உரையைக் கேட்க மாணவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் 12:00 மணிக்கு வரச் சொன்னதால் மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது . பொதுவாக அந்த இடத்தில் 10:00 மணி அளவில் மாணவர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டு இருக்கும் .

இன்று சிறப்பு உரையைக் கேட்க மாணவர்கள் அனைவருக்கும் நேரங்கள் தள்ளி வைக்கப்பட்டது . அதனால் அந்த இடத்தில் கூரை இடிந்து விழும் போது ஒருவரும் இல்லை . எனவே 1,600 மாணவர்களும் காப்பாற்றப்பட்டனர் .


ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 4 கல்லூரி மாணவர்கள் !!



பொறியியல் கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆன 4 ஹைதராபாத் மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து தனி இஸ்லாமிய நாட்டினை பெற ஈராக்கில் போரிட பயணிக்கும் வழியில் பிடிபட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் .

நேற்று அல்-கொய்தா  இந்தியாவில் புதிய கிளை தொடங்கப்பட்டுவிட்டது என அறிவித்ததால் , மத்திய அமைச்சகம் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தி இருந்தது . ஹைதராபாத் போலிஸ் கொடுத்த தகவலின்படி 4 மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் வைத்து பிடிபட்டனர் . அவர்கள் வங்கதேசத்தை கடந்து பின் ஈராக்கில் போரிட திட்டம் போட்டதாக ஒப்புக் கொண்டனர் .

அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நடந்த பிரச்சாரத்தால் இந்த முடிவை எடுத்ததாக கூறினர் . ஏற்கனவே தனி இஸ்லாமிய நாடு அடைவதற்காக ஆன்லைனில் ஆட்கள் எடுக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .


பெண்களை கடத்தி கற்பழித்து விபச்சாரத்தில் தள்ள குழந்தைகளை பயன்படுத்தும் புது டெக்னிக் - எச்சரிக்கை விடுக்கும் டி.ஏ.வி பள்ளி

பெண்களை கடத்தும் புதுவிதமான டெக்னிக் - எச்சரிக்கை விடுக்கும் டி.ஏ.வி பள்ளி

சென்னையில் உள்ள டி.ஏ.வி பள்ளி முதல்வர் ஒரு சர்க்குலர் விடுத்திருந்தார், அதில் சாலையில் தனியாக ஏதேனும் ஒரு குழந்தை அழுதால் அந்த குழந்தைய போலிஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கவும், அப்படி இல்லாமல் அந்த குழந்தை சொல்லும் அட்ரஸ்சிற்கு அந்த குழந்தையை அழைத்துச் என்றால் அழைத்து வந்த பெண்களை கடத்தி கற்பழித்தல், விபச்சாரம் போன்ற செயல்களுக்கு உட்படுத்த வாய்ப்புண்டு என்று எச்சரித்துள்ளார்.

இதையடுத்து பரபரப்பு கிளம்பியது, இது குறித்து போலிசார் தெரிவிக்கையில் சென்னையில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பஞ்சாப் மாநிலத்தில் இப்படி நடந்ததாகவும் அங்குள்ள டி.ஏ.வி பள்ளி இந்தியா முழுதும் உள்ள பிற டி.ஏ.வி பள்ளிகளுக்கு தெரிவித்து எச்சரிக்கையாக இருக்க சொன்னதாகவும் தெரிவித்ததாக கூறினார்கள்.

அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஷேர் செய்யுங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப வேண்டும்

மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆசிரியர் பணியிடங்களில், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து, பதிலளிக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தின், மாநில செயலர் நம்புராஜன், தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறை, கடந்த மார்ச் மாதம், ஒரு அரசாணையை வெளி யிட்டது. 'வெவ்வேறு துறைகளில் உள்ள பின்னடைவு காலியிடங்களை, சிறப்பு தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், 1,107 பின்னடைவு காலியிடங்களை, மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்த பின்னடைவு காலியிடங்களை நிரப்பாமல், கடந்த மாதம், புதிதாக பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதலில், காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். பின்னடைவு காலியிடங்களை நிரப்பாததால், மாற்றுத் திறனாளிகளின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். பின்னடைவு காலியிடங்களை நிரப்பிவிட்டு, புதிய அறிவிப்பை வெளியிட, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க, அரசு பிளீடர் மூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர். இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுபற்றி தெளிவுபடுத்தவும், அரசுக்கு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, அக்டோபர், 7ம் தேதிக்கு, தள்ளி வைத்தது.

குரு உத்சவ் என மாறுகிறது ஆசிரியர் தினம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


செப்டம்பர் 5-ல், முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், 126-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை, இனிமேல், 'குரு உத்சவ் 2014' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்றும், விழாவையொட்டி, மாணவர்களிடையே, 23 மொழிகளில் கட்டுரை எழுதும் போட்டியை நடத்த வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தினம் குரு உத்சவ் என்று  மாற்றப்படுவதற்கு என்ன  காரணம் அதற்க்கான அவசியம் என்ன என்று பார்க்கும் நேரத்தில் இதில் மறைந்து இருப்பது ஒரே ஒரு செய்தி தான் அது இந்தி திணிப்பு தவிர வேறில்லை .

உணவு யுத்தம்

இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால் கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன.  பின் விட்டை என்ன?’ ன்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள    அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.

ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள்  ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன . பிரபல நடிகர்கள்  கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் கையில் ,இந்த குளிர்பானங்கள் எல்லாம் மக்களுக்கு கேடு விளைவிப்பதைத்தவிர வேறொன்றையும் செய்வது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை .

ஹேக்கர் வெளியிட்ட படங்களில் இருப்பது நான் இல்லை , நான் அதைவிட இன்னும் அழகாக இருப்பேன் - சொல்லுகிறார் ஏரியனா கிராண்டே




கடந்த சில தினங்களாக ஹேக்கர் வெளியிட்ட படங்களை குறித்த பேச்சு தான் இணையம் முழுவதும் பரவலாக இருந்தது . அந்த படங்களுக்கு சில நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர் . அந்த ஹேக்கரின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டவர்களில் ஒருவரான ஏரியனா கிராண்டே அந்த படங்களில் இருப்பது தான் இல்லை என மறுத்துள்ளார் .

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , " என்னைப் பற்றி வந்த படங்களை பற்றி பேசுபவர்களுக்கு , நான் அந்த படத்தில் இருப்பதை விட என் இடை நன்றாக கியுட்டாக இருக்கும் " என்று எழுதி தன்னுடைய செல்பி ஒன்றை பதிந்து
இருக்கிறார் .


ஐ படத்தின் டீசர் லீக்கானதால் , புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது





ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம் எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 'ஐ'. இந்த படத்தை ஷங்கர் 2 வருடமாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த படத்தின் இசை செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் கசிந்து விட்டது. இதனை திருட்டு தனமாக வீடியோ எடுத்து இணையத்தில் விட்டவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஐ.பி.எல் போட்டி என ஒன்று இருக்கவே கூடாதாம் ! ஐ.பி.எல் போட்டியை தீட்டித் தீர்த்த இயன் போத்தாம் !!



முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் போத்தம் ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு நல்லது இல்லை என்றும் , அப்படி ஒன்று இருக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .

அவர் அளித்த பேட்டியில் , " நான் ஐ.பி.எல் போட்டிகளை நினைத்து மிகவும் வருந்துகிறேன் . என்னைப் பொறுத்த வரை அப்படி ஒன்று இருக்கவே கூடாது , ஐ.பி.எல் போட்டிகள் வீரர்களின் முக்கியத்துவத்தை மாற்றி விடுகிறது . வீரர்கள் அடிமையாகி விடுகிறார்கள் . ஐ.பி.எல் போட்டிகளில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர வேண்டும் . ஊழலில் ஈடுபடும் பெரிய ஆட்களின் பெயரையும் அவர்கள் வெளியிட வேண்டும் " என்றார் .

ஆண்கள் பெண்களுடன் நல்ல உறவில் இருக்க வேண்டுமானால் இந்த 5 கேள்விகளை கேட்க கூடாது






ஆண்கள் பெண்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமானால் அவர்களிடம் சிலவற்றை பேசவோ கேட்கவோ கூடாது. அவை என்னவென்று பார்ப்போம்.

* ஒரு ஆண் பெண்ணிடம் தனக்கு முத்தம் வேண்டும் என்று கேட்க கூடாது.

* அந்த பெண்ணின் ஆண் நண்பர்களை பற்றி துருவி துருவி கேட்க கூடாது.

* போன் பேசும் போது ஆண் எப்போதும் கட் செய்கிறேன் என்று முதலில் சொல்ல கூடாது.

* தன்னை பிடித்து இருக்கிறதா என்று அந்த பெண்ணிடம் கேட்க கூடாது.

* இன்று இரவு என்ன திட்டம் வைத்து இருக்கிறாய் என்று கேட்க கூடாது.

அதிகம் சம்பளம் வாங்குகீறீர்களா , அப்படி என்றால் உங்களுக்கு முடி இழப்பு அதிகமாக இருக்கும் !!



ஒரு வருடத்திற்கு 74 இலட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு அவர்களின் கடுமையான வேலைப்பளுவினால் மற்றவர்களை விட அதிகப்படியான முடி இழப்பு ஏற்படுமாம் என பிரிட்டெனில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது .


2000 பேரிடம் நடந்த இந்த ஆய்வில் நான்கில் மூன்று பெண்கள் முடி இழப்பிற்கு காரணம் அதிகப்படியான டென்சன் தான் என்று கூறியுள்ளனர் . ஆனால் ஆண்கள் தங்களது குடும்ப ஜின்ஸ் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்று கூறியுள்ளனர் . மேலும் பலர் தங்களது வேலைப்பளுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளனர் .

மேலும் இந்த முடி இழப்பு ஏற்படுவதை ஆண்கள் தங்களது 38 வயதிலும் , பெண்கள் 45 வயதிலும் உணர்கின்றனர் .

நமது வாழ்க்கையில் வந்துள்ள 7 வகையான ஆசிரியர்கள்





 * அனைவராளும் வெறுக்கப்பட்ட ஆசிரியர்

* எப்போதும் ஆங்கிலத்திலையே பேசும் ஆசிரியர்

* இந்த ஆசிரியரின் பெயரை விட அவருக்கு வைத்த பட்ட பெயர் தான் அனைவருக்கும் தெரியும்

* எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாமால் புதிராக பேசும் ஆசிரியர்.

* புது வகையான தண்டனைகள் கொடுக்கும் ஆசிரியர்.

* மாணவர்களுடன் ஒரு நண்பனை போல் பழகும் ஆசிரியர்

*  மாணவர்கள் பார்வையில் எப்போதும் செக்ஸியாக இருக்கும் ஆசிரியர்.

காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து !! பயணிகள் நிலை என்ன ??




50 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த பேருந்து , நேற்று காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் , வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது .இன்னும் 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை .

வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் இறந்து இருக்கலாம் என உள்ளூர் போலிசார் தெரிவித்துள்ளனர் . பேருந்தில் இருந்து வெளியே குதித்த 4 பயணிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர் . அந்த 4 பேரில் ஒருவர் ஓட்டுநர் இன்னொருவர் நடத்துனர் .

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் கடும் மழை பெய்து வருகிறது . 22 வருடங்களுக்கு பின் இப்போது தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது .


தனது வாழ்க்கையில் தனக்கு யார் முக்கியம் என தோனி மனம் திறந்த பேட்டி





இங்கிலாந்து அணி உடனான ஒரு நாள் தொடரை வென்றுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் தோனி ஒரு மனம் திறந்த பேட்டி ஒன்றை தந்துள்ளார். 2011 இல் உலக கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் அணி வீரர்கள் தான் என்றார். தனது வாழ்க்கையில் தனக்கு பிடித்தமானவர்களில் அவரது மனைவிக்கு 3 வது இடம் தான் கிடைத்துள்ளது. அவர் முதல் இடத்தில் இந்தியாவை வைத்துள்ளார். 2 வது இடத்தில் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள்.

இதற்கு அடுத்து தனக்கு அதிகம் பிடித்தது பைக்குகள் என்று கூறியுள்ளார். அவரிடம் 35 பைக்குகள் உள்ளன. அவை பல வகையான பைக்குகள். இன்னும் அவருக்கு பைக்குகள் மீதான ஆசை அப்படியே உள்ளதாக கூறியுள்ளார். 

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகையின் சம்பளம் 35 மில்லியன் டாலராம் !!



போபர்ஸ் நாளிதழ் உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகர் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது . இந்த பட்டியலில் தொடேந்து மூன்றாவது வருடமாக கொலம்பியாவின் சோபியா வெர்கரா முதல் இடம் பிடித்தார் . இவர் ஒரு டிவி தொடருக்கு $325,000 சம்பளமாக பெறுகிறார் . இவரின் மொத்த சம்பளம் 35 மில்லியன் டாலர் .


அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்


  1. சோபியா வெர்கரா                                              -            35 மில்லியன்
  2. மரிக்சா ஹர்கிட்டே                                            -            13 மில்லியன்
  3. கேலி குயகா                                                          -             11 மில்லியன் 

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media