BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்களுக்கு செக்ஸ் மூட் வர 237 காரணங்கள் இருக்கின்றதாம், சில காரணங்கள் இங்கே
http://www.satrumun.net/2014/09/women-get-romance-mood-for-237-reasons.html

தமிழர் வரலாறு 10 ஆயிரம் ஆண்டுகள் அல்ல, 15இலட்சம் ஆண்டுகள், இருட்டடிக்கப்படும் அத்திரம்பாக்கம்  ஆய்வுகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_85.html

உண்மை என்று எண்ணப்படும் சிரிப்பூட்டும் செக்ஸ் கட்டு கதைகள் !!
http://www.satrumun.net/2014/09/ridiculous-sex-myths.html

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் புதிய திருப்பம், வழக்கு சிபிஐ க்கு மாற்றப்படும்?
http://www.satrumun.net/2014/09/new-development-in-mavulivaakam.html

நடிகைகளை ஜோடிகளாக்கிய இளைஞர்கள்! வினாயகர் சதுர்த்தி விழா பேனர் கூத்துகள், அவசியம் பாருங்கள்
http://www.satrumun.net/2014/09/funny-banner-with-actress-in-vinayagar.html

ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு ‘நாய் பட்டம்’ கொடுத்த அமீர் : விழா மேடையில் பரபரப்பு
http://goo.gl/7nFMAh

இந்தியாவில் ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்படுகிற இணையதளம்
http://www.satrumun.net/2014/09/indian-websites-which-are-most-targetted-by-hackers.html

இப்போது உள்ள பேட்டரிகளை விட 10 மடங்கு அதிகமாக நிலைத்து இருக்கும் புதிய பேட்டரி
http://www.satrumun.net/2014/09/battery-which-lasts-longer-than-lithium-ion-battery.html

மோடி அரசுக்கும் மற்ற அரசுக்கும் உள்ள 8 வித்தியாசங்கள்
http://www.satrumun.net/2014/09/the-difference-between-modi-government.html

ஈழத்தின் ஆதி குடிகள் தமிழர்கள் தான் என்பதற்கான ஒரு எளிய சான்று ...!
http://www.satrumun.net/2014/09/blog-post_88.html

உலகின் மெலிதான மொபைல் போன் வெளிவந்தது
http://www.satrumun.net/2014/09/worlds-slimmest-phone-got-leaked.html

நடிகை ஏஞ்சலினா ஜோலியின் 3வது திருமண போட்டோக்கள் வெளிவந்தது
http://www.satrumun.net/2014/09/marriage-dress-of-angelina-jolie-came.html

என்றும் இளமை வேண்டுமா ? தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ..!
http://www.satrumun.net/2014/09/blog-post_57.html

தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்
http://www.satrumun.net/2014/09/blog-post_92.html

முதல்வர் ஜெயலலிதாவை அரசியலுக்கு வரவழைத்த திரைப்படம் எது ?
http://www.satrumun.net/2014/09/jayalalithas-must-watch-movie.html

சரக்கு இல்லாமல் நம்மால் வாழ முடியாதா - சென்னையில் இன்று  பாமக ஆர்பாட்டம்
http://www.satrumun.net/2014/09/ban-liquor-in-tamil-nadu.html

800 வருட விடுமுறைக்கு பின் வகுப்புகள் தொடங்கின
http://www.satrumun.net/2014/09/university-opens-after-800-years-holiday.html

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
http://www.satrumun.net/2014/09/blog-post_14.html

பொது அறிவு -1
http://www.satrumun.net/2014/09/1.html

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன ?
http://www.satrumun.net/2014/09/blog-post_58.html

இந்தியாவின் டேப்ளட் விற்பனையில் ஆப்பிளை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது மைக்ரோமேக்ஸ் !!
http://www.satrumun.net/2014/09/micromax-beat-apple-sale-in-india.html

தமிழரின் பெருமை மிகு வானியல் அறிவு ..!
http://www.satrumun.net/2014/09/blog-post_2.html

விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில் நடிகைகளை கிராபிக்ஸ்சில் இணைத்து ஜோடியாக்கிய இளைஞர்கள், உருப்படுவார்களா?

 
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து சில இளைஞர்கள் ப்ளெக்ஸ் போர்ட் வைத்திருந்தார்கள், வாழ்த்து தெரிவித்து வைப்பதெல்லாம் சரிதான் ஆனால் அந்த ப்ளெக்ஸ் பேனரில் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, பாவனா உட்பட பல நடிகைகளை தங்களின் ஜோடிகளாக போட்டு பேனர் அடித்திருந்தனர் இந்த இளைஞர்கள்! அதுவும் வினாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனரில் இதையெல்லாம் செய்த இவர்களெல்லாம் உருப்படுவாங்கங்கறிங்க?

பெண்களுக்கு செக்ஸ் மூட் வர 237 காரணங்கள் இருக்கின்றதாம், சில காரணங்கள் இங்கே


செக்ஸ் நினைப்பும் செக்ஸ் நினைவுகளும் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சிலருக்கு செக்ஸ் உறவு கொள்வது பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், ரிலாக்ஸ் ஆக ஆவதற்காக மட்டுமின்றி செக்ஸ் உறவானது பல விதங்களில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

பெண்களுக்கு செக்ஸ் மீது ஏன் ஆர்வம் உள்ளது என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் செக்ஸ் உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

Why Women Have Sex  என்ற நூலில் டேவிட் பஸ் என்ற மனவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து எழுதியுள்ளார். 1006 பெண்களை சோதனை செய்த இவர் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். இந்த பெண்களுக்கு செக்ஸ் பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.

செக்ஸ் என்பது ஒரு த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற திரில் அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான செக்ஸ் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமின்றி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் பெண்கள் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

சில பெண்களுக்கு ஆணின் வாசனையால் செக்ஸ் மூட் ஏற்பட்டு உடல்உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உடல்உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.
காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று சில பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, தோல் மினுமினுக்கிறது என்றும் அதனால் செக்ஸில் அதிக் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.

செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு மனதை ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர உதிரப்போக்கு சமயத்தில் ஏற்படும் வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.

உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத செக்ஸை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் செக்ஸில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் இந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

திருமணமான ஆரம்பத்தில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டிய பிறகும் செக்ஸ் தங்கள் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் இந்த உளவியல் நிபுணர்.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!





குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.



மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.

குமட்டலை குறைக்கும் .....

ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.

செரிமானத்தை மிகைப்படுத்தும்....

செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைக்கும் ....

தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல் ...

தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் ....

வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குகிறது ....

பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது ....

அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது

மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது .....

இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது

ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடும் பறவை எது? - பொது அறிவு -1


பொது அறிவு - 1
-----------------
* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன ?



அச்சம் 
---------
அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது. 

மடம் 
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை. 

நாணம் 
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம். 

பயிர்ப்பு 
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

மோடி அரசுக்கும் மற்ற அரசுக்கும் உள்ள 8 வித்தியாசங்கள்




மோடி அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ளது . இந்நிலையில் மோடி அரசுக்கும் மற்ற அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்ப்போம்.

* எல்லா நாடுகளையும் நண்பர்களாக மதித்து வரவேற்கிறது மோடி அரசு.

* நமது தாய் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் . அது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

* காஷ்மீர் பிரச்சனையை இப்போது கையில் எடுத்தால் அது பெரிய தவறாக மாறிவிடும் என்பதை புரிந்து கொண்டு, அது தொடர்பான பேச்சுகளை தவிர்த்தது.

* பெண்களை மட்டும் கண்டித்து வளர்க்காதீர்கள், ஆண்களை கண்டித்து வளருங்கள் என பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.

* நமது உணவு பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தி வருகிறது.

* உயர் பொறுப்பில் இருப்பவர்களும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

* தங்களது உறவினர்களை அமைச்சர்கள் பி.ஏ. க்களாக வைத்துக் கொள்ள கூடாது என கட்டாய உத்தரவு போட்டது.

* நமது நாடு எந்த பிரச்சனை மற்றும் கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. மதம் தொடர்பாக எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

ஈழத்தின் ஆதி குடிகள் தமிழர்கள் தான் என்பதற்கான ஒரு எளிய சான்று ...!


1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது

.தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள். இந்த தபால் தலையை தடை செய்து விட்டால் உண்மை வரலாற்றை மறைத்து விடலாம் என்ற சிங்களரின் அறிவை கண்டு உலகமே வியக்கிறது .

உலகின் மெலிதான மொபைல் போன் வெளிவந்தது

உலகில் மெலிதான மொபைல் போன் வெளிவந்துள்ளது. இது ஜியோமி நிறுவனத்தின் மொபைல் ஆகும். இதன் விலை ரூ.22,999 ஆகும்.




நடிகை ஏஞ்சலினா ஜோலியின் திருமண போட்டோக்கள் வெளிவந்தது





ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது நீண்ட நாள் காதலன் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். ஏஞ்சலினாவுக்கு ஏற்கனவே இருவருடன் திருமணம் முடிந்து விவாகரத்தும் முடிந்து விட்டது. ஏஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் 2005 இல் வெளிவந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடித்த போது காதலில் மலர்ந்தார்கள். 2006  ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலிப்பதை ஒப்புக் கொண்டார்கள்.  அப்போது  அந்த ஜோடிகளின் முதல் குழந்தை ஏஞ்சலினா வயிற்றில் இருந்தது.அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள் , ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

 அதன் பிறகு இவர்களுக்கு 3 குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஏஞ்சலினா 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இப்போது அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள். அவர்கள் இந்த ஜோடியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்கள். அதனால் இந்த மாதம் 23 ஆம் தேதி பிரான்ஸில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு முக்கியமான நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இது ஒரு ரகசிய திருமணத்தை போல் நடந்தது.

இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலியின் திருமண போட்டோக்கள் இப்போது வெளிவந்து உள்ளது. அவை பீப்பிள் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.

என்றும் இளமை வேண்டுமா ? தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ..!


நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும். இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. 


உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது. 



இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பின் (cholestrol) அளவை குறைகிறது. நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும். 



ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் அண்டிபாக்டீரியா பண்புகளை கொண்டுள்ளதால் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கும். அறுசுவையும் உள்ள கனி நெல்லிக்கனி. தினமும் உணவில் உண்டு வர நாள்பட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படும்.

தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்



தமிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்.
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்.
இன்றும் கிராமங்களில் செளமிட்டாய், ஐஸ், கொய்யாபழம், வளையல், உப்பு போன்றவைகளை விற்கும் வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் இளைப்பார திண்ணையில் இடமளிப்பதோடு, தண்ணீரும் தந்து உபசரிப்பார்கள். ஆனால் நகரங்களில் வீடு கட்டும்போது, தன்னுடைய இடத்தையும் தாண்டி, பக்கத்தில் ஒரு அடி, இரண்டு அடி என்று தள்ளி சுவர் எழுப்பும் நிலையில் இருக்கும்போது, திண்ணைக்கு எங்கே போவது.
விருந்தோம்பல் பண்பினை கம்பர், இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் வாயிலாகக் கூறுவார்.
"அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழாதாள்"   (கம்பராமாயனம்.காட்சிப்படலம்: 15)
என்ற பாடல் விருந்தினர்வரின் தானில்லாது இராமன் என்ன செய்வானோ என்று எண்ணிச் சீதை வருந்திய நிலையைப் புலப்படுத்துகிறது.
எங்கள் வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். பாட்டியிடம் ஏன் என்று கேட்டபோதுதான், திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே இந்த உணவு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் இன்று நாங்கள் இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சென்றாலோ, இல்லை வீட்டுப் பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் சென்றாலோ, சென்றவர் பாடு திண்டாட்டம்தான்.
நமது முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவியிடையே எழும் ஊடலைத் தீர்க்கும் மருந்தாகவே விருந்தினர் அமைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. விருந்தினர் வந்தால், இருவரும் ஊடலை மறந்து கவனிப்பராம். ஆதலால் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என்று கணவன் ஏங்குவதாக நற்றினை கூறுகிறது.
விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை,
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
என்பார்.
தொன்றுதொட்டு விளங்கும் விருந்தோம்பலை நாம் வளர்ப்போம்! நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தருவோமாக!

உண்மை என்று எண்ணப்படும் சிரிப்பூட்டும் செக்ஸ் கதைகள் !!



நமது நாட்டில் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பதில்லை . இதனால் ஒருவர் ஏதாவது ஒன்று உண்மை என்று கூறினால் அது தான் உண்மை என்று நாம் அனைவரும் நம்பி விடுவோம் . அப்படி உண்மை என்று எண்ணப்படும் பொய்யான செக்ஸ் நம்பிக்கைகள் பற்றி பார்க்கலாம் .


1 ) தன்னுடைய கால்களை எளிதாக கிராஸ் செய்து உட்கார முடிந்தால் அவருக்கு சிறிய ஆண் உறுப்பு இருக்கிறது என்று நம்புவது .

சில பெண்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது . ஆனால் இதற்கு பின்னால் உள்ள காரணம் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் , பலர் இதை தான் நம்புகின்றனர் . அடுத்த முறை வெளியே எங்கேயாவது செல்லும் போது கால்களை கிராஸ் செய்து உட்காரும் போது கவனமுடன் அமருங்கள்

2 ) அதிகம் உறவு கொண்டால் , பெண்களின் பின் பகுதி பெரிதாகி விடும் .

3 ) பெண்கள் அதிகமாக உறவு வைத்து கொண்டால் உராய்வு பிரச்சனையால் , அவர்களின் பார்டனரினால் அதிக சந்தோஷம் பெற முடியாது .

4 ) பெரிய கை , மூக்கு , கால் கொண்ட ஆண்களுக்கு ஆண் உறுப்பு பெரிதாக இருக்கும் .

5 ) நெஞ்சில் அதிக முடி கொண்ட ஆண்கள் அந்த விஷயத்தில் கில்லாடியாக இருப்பார்கள் .


ஜெயலலிதாவை அரசியலுக்கு வரவழைத்த திரைப்படம் எது ?




தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த ப்டம் என்று 1965 இல் வெளிவந்த  ஆயிரத்தில் ஒருவன் என்று கூறியுள்ளார் .இந்த படம் வெளிவந்த போதே 100 நாட்கள் ஒடின. இதன் மூலம் தான் எம்.ஜி.ஆர். உடன் நல்ல அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டது. அது தான் தன்னை அரசியல் வாழ்க்கைக்கு அழைத்து வந்தது என கூறினார். இந்த படம் இப்போது 50 ஆண்டுகளை கடந்து வெற்றி விழா கொண்டாட உள்ளது.

சரக்கு இல்லாமல் நம்மால் வாழ முடியாதா - சென்னையில் இன்று ஆர்பாட்டம்




தமிழகத்தின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி இன்று சென்னையில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று தமிழகத்தை சீரழித்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதுக்கடைகளாக தான் இருக்கும். தமிழகத்தை ஆண்டு வந்து கட்சிகள் அண்டை மாநிலங்களிளும் மது விற்பனை நடைபெறுகிறது என்பதை காரணம் காட்டி , தமிழகத்திலும் அதனை செய்து வந்தார்கள். இப்போது தென் மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளா மாநிலம் மதுவிலக்கை அமல்படுத்த திட்டத்தை தொடங்கி விட்டது.

தமிழகத்தில் உள்ள 60 சதவீத மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகளில் தான் உள்ளது. எனவே அவற்றை அகற்ற கோரி இன்றுசென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்படுகிற இணையதளம் எது ??




இணையத்தில் எப்போதும் ஹேக்கர்கள் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது . ஒரு நாட்டிற்கு எதிரிகளிடம் இருந்து எந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ , அதே அளவு இந்த ஹேக்கர்களிடம் இருந்தும் அச்சுறுத்தல் இருந்து கொண்டு தான் இருக்கிறது .

இந்தியாவில் இந்த ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்படுகிற இணையதளம் பாஜகவின் இணையதளம் மற்றும் பிரதமரின் அமைச்சக அலுவலக இணையதளம் .இதனை பாஜகவின் தொழில்நுட்ப குழுமத்தின் தலைமை அதிகாரி டில்லியில் நடந்த கலந்தாய்வு ஒன்றில் கூறினார் .

கடந்த ஐந்து மாதங்களில் ஹேக்கர்களால் 62,189 முறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது . மேலும் இந்தியாவின் 9,174 இந்திய இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது .

800 வருட விடுமுறைக்கு பின் வகுப்புகள் தொடங்கின




பிஹார் மாநிலத்தில் உள்ள நலந்தா பல்கலைகழகம் உலகில் உள்ள மிக பழமையான பல்கலைகழகங்களின் ஒன்றாகும். இது உலக புகழ் பெற்ற பல்கலைகழகம் ஆகும். இங்கு  வகுப்புகள் நடந்து 800 வருடங்கள் ஆகிறது. 13 ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டு ராணுவ வீரர்கள் இங்கு படையெடுத்த போது இதனை அழித்தார்கள். அதன் பின்பு இங்கு வகுப்புகள் நடக்கவில்லை. அதன் பிறகு இதனை 2006 இல் மீண்டும் அமைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று 15 மாணவர்களுடன் வகுப்புகள் நடந்தது. இதனை முழுமையாக 2020 இல் கட்டி முடிப்பார்கள்.

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் புதிய திருப்பம்





சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் கட்டிடத்தை சரியாக கட்டாதது தான் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இது தொடர்பாக முழுமையாக விசாரித்து தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கை தமிழக அரசிடம் இருந்து சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக இதனை கேட்டுள்ளார்கள். இது குறித்து பதிலளிக்குமாறு மாநில அரசு, மத்திய அரசு, சிபிஐ ஆகியவற்றுக்கு உச்ச  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே விரைவில் இந்த வழக்கில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இப்போது உள்ள பேட்டரிகளை விட 10 மடங்கு அதிகமாக நிலைத்து இருக்கும் புதிய பேட்டரிகள் !!



நமது மொபைலில் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது தீடிரென்று பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால் எப்படி இருக்கும் ?? மொபைல் போன்களில் எவ்வளவு விதமான புதிய வசதிகள் வந்தாலும் , இந்த சார்ஜ் மட்டும் ஒரு நாள் மட்டுமே நிற்கிறது . எனவே இப்போது நடந்து வரும் ஆய்வில் , ஆராய்சியாளர்கள் சர்க்கரை -பயோ பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர் .

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இப்போது உள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட 10 மடங்கு அதிகமாக சார்ஜ் நிலைத்து இருக்கும் . இந்த பேட்டரியில் சர்க்கரையில் உள்ள இரசாயண ஆற்றல் , மின்சாரம் ஆக மாற்றப்படுகிறது .

மேலும் இந்த பேட்டரி இப்போதுள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட விலை குறைவாகவே இருக்கும் . மேலும் இயற்கை பாதுகாப்பிற்கும் இந்த பேட்டரி துணை நிற்கும் .


இந்தியாவின் டேப்ளட் விற்பனையில் ஆப்பிளை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது மைக்ரோமேக்ஸ் !!



சர்வதேச டேட்டா காப்பரேஷன் வெளியிட்ட தகவல்களின்படி , இந்திய நிறுவனமான மைக்ரோமஸ் , சந்தையில் டேப்ளட் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை முறியடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது . முதல் இடத்தில் சாம்சங் தன்னை நிலை நாட்டிக் கொண்டது .

அந்த அறிக்கையின்படி சாம்சங் 19% சந்தை பங்குகளைக் கொண்டு முதல் இடத்தில் இருக்கிறது . மைக்ரோமேக்ஸ் 14% பங்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது . ஆப்பிள் நிறுவனம் வெறும் 9% பங்குகளுடன் மூன்றாம் இடத்தில் தள்ளப்பட்டது .

எப்போதும் போல ஆப்பரேட்டிங் சிஸ்டங்ககில் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் தான் அதிக மக்களால் விரும்பப்படுகிறது . இந்த ஓஎஸ் 89% பங்குகளை சந்தையில் கொண்டுள்ளது . விண்டோஸ் இப்போது ஓரளவுக்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது .

தமிழரின் வானியல் அறிவு ..!

:
பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே ?
தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல். கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.


சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது…!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media