BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 August 2013

மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

இன்று நேற்றல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டினார்கள் என்று கொடூரமான முறையில் கொன்றும்,  கைது செய்து பல மாதங்கள் இலங்கை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் தி.மு.க வும், அ.தி.மு.க வும் பிரதமருக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார்களே தவிர இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது போல் தெரியவில்லை, தற்ச்சமயம் கூட தமிழக மீனவர்கள் 46 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

மத்திய அரசின் சார்பாக பதில் சொல்லும் நாராயணசாமி(15 நாள்) தமிழக அரசு எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி செல்கிறார், தமிழக அரசோ என்றோ தாரை வார்த்த கச்சதீவு தான் எல்லாவற்றிற்கும் காரணம், அப்பொழுது ஆட்சியில் இருந்தது தி.மு.க என இந்த நெருக்கடியிலும் அரசியல் லாபி செய்கிறது.

வெளிநாட்டில் தாக்கப்படும் ஒரு மாணவன் இந்தியனாக இருந்தால் உடனே அந்த நாட்டை கண்டித்து அறிக்கை விட வாய் திறக்கும் மன்மோகன் சிங் தமிழக மீனவர்கள் என்றால் மெளனமோகன் சிங்காகி விடுகிறார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 13 மீனவ அமைப்பு எங்களது மீனவ நண்பர்களை திரும்ப மீட்கும் வரை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து இருக்கிறது, இவர்களுக்கு மேலும் பல மீனவ அமைப்புகளின் ஆதரவு கூடும் என தெரிகிறது, எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அசராமல் அரசியல் செய்யும் மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாக இருக்கிறது.


சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய பாமாகவினர்

உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சுங்க சாவடியில் இன்று பாமகவினரின் கார் சுங்க சாவடியை தாண்டி செல்ல கால தாமதமானதால் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் சுங்கசாவடியில் இருந்த கணிணி மற்றும் ஊழியர்கள் இருக்கும் அறையையும் கடுமையாக தாக்கினர்

இதில் சுங்க சாவடியை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வந்துள்ளது, ஊழியர்கள் காவல்துறையினரிடம் நாங்கள் வழக்கம் போலவே எங்கள் பணியை செய்து கொண்டிருந்தோம், அவர்கள் வாகனத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த வாகனத்தில் சுங்க பணத்தை வசூல் செய்து கொண்டிருந்த நேரம் அவர்களை காக்க வைக்க வேண்டுமென்றே செய்ததில்லை, நாங்கள் எப்போதும் செய்யும் பணி தான் அது என்று சொல்லியுள்ளார்கள்.

அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ளதால் அதை வைத்து பா.ம.க வினர் மூன்று பேர் கைது செய்யபட்டனர், மேலும் அன்புமணி ராமதாஸ் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாக தகவல் தெரிகிறது.

ஊழியர்கள் அறிக்கையில் காரின் உள்ளிருந்தவர் அன்புமணி ராமதாஸ் போல் தெரிந்தார் என்று தான் தெரிவுத்து உள்ளனர், உறுதியாக எதுவும் சொல்லாத நிலையில் அன்புமணி ராமதாஸின் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பது அப்பகுதி பா.ம.கவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனாலும் சேலத்தில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருந்தார் அன்புமணி ராமதாஸ் என்ற செய்தி மட்டும் தற்பொழுது உறுதி செய்யபட்டுள்ளது.

# தமிழ்நாட்டை அமைதியா இருக்க விட மாட்டாங்க போலயே


தமிழகத்தில் அதிகாரிகளின் நிலை என்ன?

கடந்த 2012 ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.பாலாஜி மாற்றப்பட்டார்.
(சத்துணவு பணியாளர் நியமனத்தில் சட்டப்படி
வெளிப்படை முறையை கொண்டு வந்ததால்
-ஒரு வாரத்தில் மாற்றம்)

கடந்த 2012- மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.சகாயம் மாற்றப்பட்டார்.
(கிரானைட் நிறுவனங்களின் இரண்டு ஊராட்சியில் மட்டும் 16,000 கோடி ஊழல்களை கண்டுபிடித்து, வெளியே கொண்டு வந்ததால்- 80 மணி நேரத்தில் மாற்றம்)

கடந்த 2011ஆண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.ஆர்.ஆனந்தகுமார் மாற்றப்பட்டார்.
(காளிங்கராயன் கால்வாயை மாசுபடுத்தி வந்த ஈரோடு
கே.கே. எஸ்.கே உட்பட தோல் தொழிற்சாலைகளை
இழுத்து மூடியதால் - 30 மணி நேரத்தில் மாற்றம்)

கடந்த 2010- மாதத்தில் நாமக்கல்மாவட்ட
ஆட்சிதலைவர் திரு.சகாயம் மாற்றப்பட்டார்.
(ஊழல் செய்யும் வி.ஒ.ஏ.க்கள்&
அதிகாரிகள் மீது நடவடிக்கை;
நாமக்கல் மாவட்டத்தில்
வெளிப்படையான நிர்வாகம்
கொண்டு வந்து ,தி.மு.க. மத்திய மந்திரி
காந்திசெல்வன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியை மற்றும் கட்சிகாரர்களை, எவ்வித ஊழல் நடவடிக்கைக்கும் அனுமதிக்காதது,
கொல்லிமலையில் மால்கோ நிறுவனம்
மலையை வெட்டியதை நிறுத்தியது).

தற்பொழுது தூத்துகுடி ஆட்சியர்.

தமிழகத்தில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் பெரு முத(லை)லாளிகளின் கையில் தான் ஆட்சி இருக்கிறது, அவர்கள் வைத்தது தான் சட்டமாகவும் இருக்கிறது. இந்தியாவை ஆள்வது அம்பானி சகோதர்கள் தான் என்ற போது நம்பாத நாம், இப்பொழுது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன மாதிரியாக பதில் சொல்ல போகிறோம்.

நாம் வாழ்ந்து விட்டோம், நமது தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம். தமிழ்கத்தை சுடுகாடாக்கி விட்டு பெரும் பணத்துடன் இந்த பெரு முத(லை)லாளிகள் வேறு இடத்த்தை கொள்ளை அடிக்க சென்று விடுவார்கள், ஏனென்றால் மொத்த உலகமும் பணத்திற்கு அடிமையாக தான் இருக்கிறது, இருக்கும் கொஞ்சநஞ்ச நேர்மையான அதிகாரிகளையும் இந்த பணம் காவு வாங்கி விடுகிறது.

# தேர்தல் மிக அருகாமையில் உள்ளது

ஜெயா பிரதமரானால்..!

*ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும்

*சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும்

*பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே 273 எம்.பிக்கள் குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?

*ஒரு எம்.பி கூட சுதந்திரமா இருக்க முடியாது. ஏன்னா அவரு அன்னிக்கி பதவில இருக்காரா? இல்லையானு எவனுக்கும் தெரியாது, 8 மணி ஜெயா நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனும்

*குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.

*அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும், அத்துனை அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.

*ஒல்லியாய் இருப்போர்மீதும் குண்டர் சட்டம் பாயும். பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில் மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர் "நிலா" அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.

*பிரதமர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தாலே எம்.பிக்கள் மேசையை தட்டுவார்கள், அவர் கொட்டாவி விட்டால்கூட மேசையை ஒருசேர தட்டி நன்றி தெரிவிப்பர். சிறப்பு விருந்தினராய் வரும் ஜப்பான் பிரதமர் அதை ஏதோ மியூசிக் பிரோக்கிராம் என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

*உலக சேட்டிலைட் மேப்பில் இரவில் இந்தியா தனியா கருப்பா தெரியும், வெளிச்சம் இருந்தாத்தானே? தீபாவளி பரிசாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆட்டாங்கல்லும், அம்மிக்கல்லும் பரிசாய்க் கிடைக்கும்.

*இந்தியாவில் மின்சாரம் இல்லாததற்கு காரணம் முன்பிருந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிதான் என்று பிரதமரின் 5-ம் ஆண்டின் ஆட்சியில் அறிக்கை வரும்.

*MGR சிலைகள் பறக்கும் குதிரையின் விரிந்த இறக்கைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்படும்,

*பாராளுமன்றம் குழந்தைகள் நல மருத்துவமனையாகும்.

*சீனாவுக்கு ஒரு பயணம் போனால் அவர்கள் 200 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்படியே ஒரு 100 தடவ பயணம்போய் சீனா வளச்சியை இப்படியும் தடுக்கலாம்

*ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்தின் 33-ம் வார்டின் முக்குச்சந்தில் வசிக்கும் ஒரு தொண்டர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால்கூட அதை பிரதமரே அறிவிப்பார்.

*சுதந்திர தினத்துலகூட பாரத தாய்க்கு பதிலாக அம்மாவின் புகைப்படம் போட்டு வாழ்த்த வயதில்லை போஸ்டரெல்லாம் கலக்கும். போஸ்டர் அடிச்சவன் வயசு 95 ஆக இருக்கும்.

* பெட்ரோல், டீசல், பால் விலைகள் ஒரே நாளில் ரூ.100 ஏற்றப்படும். பிறகு 5 ஆண்டுகளுக்கு விலையேற்றமே இருக்காது. இளிச்சவாய மக்களும் 10 நாட்கள் போராடிவிட்டு பின் மறந்துவிடுவார்கள்.

* ரவுடிக பங்களாதேஷ்க்கோ, பாகிஸ்தானுக்கோ ஓடிட்டாங்கன்னு ஒரு அறிக்கை வரும்

# வேறு என்னவெல்லாம் நடக்கும் தோழர்களே..உங்கள் கருத்தை பதியலாம்

சூர்யா பார்ன் டு வின் - பேஸ்புக் வாயிலாக


தலைவா - முதல் தகவல் அறிக்கை

ஆஸ்திரேலியாவில் வாழும் முன்னாள் தாதா சத்தியராஜின் மகன் விஜய் மீண்டும் மும்பை வந்து அங்கே தந்தையின் தலைவர் பதவியை மீண்டும் பிடிப்பது தான் கதை சுருக்கும்.

படத்தில் விஜய் அறிமுகமாகும் காட்சி பாடலிலேயே தெரிந்து விடுகிறது இது விஜயின் வழக்கமான மசாலா படம் தான் என்று, படத்தின் முற்பகுதியை முழுமையாக தாங்கி பிடிப்பது சந்தானம் தான், அவரும் இல்லையென்றால் படத்தின் இடைவேளைக்கு பிறகு தலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும் என இடைவேளையில் பேசுபவர்கள் வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

வழக்கம் போலவே மும்பை வரும் நாயகன் ஒரே பாட்டில் மும்பையின் தலைவனாவது, பத்தே நிமிடத்தில் மகாராஷ்டிராவில் வாழ்பவரின் பிரச்சனையை தீர்ப்பது அப்பட்டமான தமிழ் சினிமா பாணி.

இடைவேளைக்கு முன் காமெடி, இடைவேளையின் போது ஒரு சஸ்பென்ஸ், கிளைமேக்ஸின் போது ஒரு திருப்பம் என இதன் திரைக்கதை குமுதம் ஒரு பக்க சிறுகதை போல் அதிக வலுவில்லாதது.

படத்தில் விஜய் பாடியிருக்கும் ஒரு பாடல் கேட்கும் படியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழில் வாதாட நாம் இங்கே தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிகிட்டு இருக்கோம் ஆனா மும்பை நீதிமன்றத்தில் மும்பை மந்திரி தமிழில் பேசி நம்மை அசர வைக்கிறார்(லாஜிக்கா, அது கிலோ என்ன விலை தலைவா)

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை என்று ரொமான்ஸ் ரசிகர்கள் புலம்பி கொண்டே வெளி வந்தனர்.

பொதுபடையான விமர்சனமாக படம் சுமார் தான் என்றாலும் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு விஜயின் தலைவா கெட்டப் ஒரு ஆக்சன் விருந்து தான்.

தமிழக மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி, நாளை தமிழ்கத்தில் வெளியிட படுவதாக இருந்த தலைவா படம் திரையரங்கு உரிமையாளர் சம்மேளனம் மறுப்பு தெரிவித்ததால் வெளியிடபடாது என தகவல் வந்துள்ளது.


எதிர்ப்பு வலுக்கும் தனி தெலுங்கானா

1956 ஆம் ஆண்டு ஹைதராபாத் தலைமையில் தமிழ்கத்தின் சில பகுதிகளையும் சேர்த்து மொழி வாரியாக பிரிக்கபட்ட முதல் மாநிலமாக ஆந்திரா பிரிந்தது. மக்கள் தொகை அடிப்படையில் இது ஐந்தாவது பெரிய மாநிலமாகவும், தென் இந்தியாவின் பெரிய மாநிலமாகவும் விளங்கி வந்தது

சில கடந்த சில ஆண்டுகளாகவே தனி தெலுங்கானா வேண்டும், ஆந்திராவிலிருந்து பிரித்து, தனி மாநிலமாக எங்களை அறிவிக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்

கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தனி தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக உருவாகும் என அறிவிக்கபட்டது.

அதை தொடர்ந்து தனி தெலுங்கானா பிரியக்கூடாது என ஆந்திராவெங்கும், தற்பொழுது தனி தெலுங்கானா உருவானால் அதனுடன் சேர்க்கப்படும் ஆந்திர கடலோர மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்பொழுது ஆந்திராவில் தமிழர்கள் 60% வாழும் பகுதியான சித்தூர், விஜயபுரம் போன்ற பகுதிகளில் தனி தெலுங்கானா பிரிப்பது தான் இறுதி முடிவென்றால் எங்களை தமிழகத்துடன் இணைத்து விடுங்கள் என்று தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் தலைவலியாக உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து போலந்து செல்லும் நான்கு வீராங்கனைகள்.

தேன்மொழி மேகநாதன், பவித்ரா கணேசன் மற்றும் சங்கரி கிருஷ்ணன் இவர்கள் மூன்று பேர் விளையாண்ட விளையாட்டை எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாது என ஏழு வருடங்களுக்கு முன் லேடி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து கொண்டிருந்த மூன்று பெண்கள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு சிறப்பு  கோச்சாக இருந்தவர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் மூவரும் போலந்தில் நடக்கும் கால்பந்து உலக சாம்பியன் ஆட்டத்துக்கு இந்தியா சார்பில் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர், இவர்கள் மூவரும் சாதாரண குடும்ப பிண்னனியில் இருந்து வந்தவர்கள் என்பதே இதில் முக்கியமான விசயம். மூவரின் பெற்றோர்களும் தினக்கூலிகள் தான்.

பவித்ராவும், தேன்மொழியும் சென்னை சேத்துபட்டை சேர்ந்தவர்கள், லேடி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள், பின் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வைஷ்ணவா கல்லூரியில் சேர்ந்து தற்பொழுது பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்கள், எங்களது பள்ளி தோழி சங்கரியும் எங்களுடன் சேர்ந்து உலக கோப்பைக்கு தேர்வு செய்யபட்டிருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என அவர்கள் தெரிவித்தனர்.

சங்கரியின் தாய் வீட்டுவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர், ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டு ஆண்களுக்கானது, நீ அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்றே சொல்லி வந்திருக்கிறார், பின் தனது மகளின் ஆர்வத்தை பார்த்து மேலும் ஊக்கபடுத்தி இன்று உலக கோப்பையில் விளையாட போலந்து செல்லும் அளவுக்கு பொறுமையாக குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.

நல்ல உயரமும், கை பலமும் மிக்க தேன்மொழி இவர்களது அணியின் கோல் கீப்பராக தேர்தெடுக்கபடுவார் என தெரிகிறது, இன்றும் நாங்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொழுது ஆண்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி கொண்டு தான் இருக்கிறோம், ஆனாலும் எங்கள் லட்சியம் ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதிக்க முடியும் என காட்டுவதே என கூறிய அவர்கள், வெளிநாடு செல்வது இதுவே முதன் முறையாகும்.

மொத்தம் 64 நாடுகளிலிருந்து 500 வீராங்கனைகளுக்கு மேல் வந்து கலந்து கொள்ளும் இந்த ஹோம்லெஸ் உலககோப்பை கால்பந்து விளையாட்டு ஆகஸ்ட் 11 தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

# சென்று வென்று வாருங்கள் இந்தியாவின் எதிர்காலமே!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media