BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

தீபிகா படுங்கோனையை முந்திய ஆலியா பாட் !!



ஸூம் சேனல் வெளியிடும் டைம்ஸ் கெலிபஸ் நடிகைகளின் பட்டியலில் சென்ற மாதம் முதல் இடம் பிடித்து இருந்த தீபிகா படுங்கோனையை முந்தி இந்த மாதம் ஆலியா பாட் முதல் இடம் பிடித்தார் . ஆலியா பாட் சென்ற மாதம் 9 வது இடத்தில் இருந்தார் . கிக் பட நாயகி 28 ஆம் இடத்தில் இருந்து பத்தாம் இடம் பிடித்தார் .





                                                                இந்த மாதம்                                       சென்ற மாதம்

ஆலியா பாட்                                            1                                                                     9
தீபிகா படுங்கோனே                             2                                                                     1
கரினா கபூர்                                               3                                                                      3




நடிகர்களின் பட்டியலில் சல்மான் கான் முதல் இடம் பிடித்தார் . அக்ஷய் குமார் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் . ஆலியா பாட் நடிக்கும் படத்தின் கதாநாயகன் ஆன வருன் தவான் மூன்றாம் இடம் பிடித்தார்
.



                                                                இந்த மாதம்                                       சென்ற மாதம்
சல்மான் கான்                                          1                                                                     3
அக்ஷய் குமார்                                          2                                                                     1
வருண் தவான்                                         3                                                                     11
  

தன்னுடைய நிர்வாண படத்தை தானே வெளியிட்டு ஹேக்கரை கலாய்த்த நடிகை !!



சில நாட்களுக்கு முன் ஹேக்கர்கள் சில நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிட்டதால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர் . சில நடிகைகள் கடும் மனவருத்தத்திற்கு ஆளாயினர் . ஆனால் இந்த சம்பவத்திற்கு கேலி குயகோ என்ற நடிகை மட்டும் வித்தியாசமாக பதில் அளித்துள்ளார் . தன்னுடைய நிர்வாண போட்டோவை தானே வெளியிட்டு , " இத மறந்துட்டீங்களே " என ஹேக்கரை கலாய்த்து உள்ளார் .



பிக் பாங் சீரியலில் பிரபலமான கேலி குயகோ தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கௌண்டில் தன்னுடைய கணவனுடன் பீச்சில் இருக்கும் போட்டோ ஒன்றை போட்டு போட்டோவில் பிளர் செய்து தான் நிர்வாணமாக இருப்பது போன்று போட்டோ ஒன்றை போட்டார் . அந்த போட்டோவில் , " நாம இத மறந்துட்டோமே " என்று எழுதி இருந்தார் .


பாதிக்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . 

கங்கையை சுத்தம் செய்ய 200 வருடம் ஆகும் , மோடிக்கு உச்ச நீதிமன்றம் பதில் !!



மோடி அரசின் கங்கையை சுத்தம் செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் , கங்கை நதியை சுத்தப்படுத்த 200 ஆண்டுகள் ஆனாலும் முடியாது . எனவே தற்போது ஒரு கச்சிதமான திட்டத்துடன் வரும்படி மோடி அரசிடம் சொல்லியுள்ளது .

உச்ச நீதிமன்றம் அளித்த பதில் வருமாறு , " உங்களின் திட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் , இந்த திட்டம் 200 ஆண்டுகள் ஆனாலும் முடியாது , கங்கையும் சுத்தம் அடையாது . நீங்கள் செய்கின்ற செயல்கள் மூலம் கங்கை தன் பழைய புகழை அடைவதை எதிர்கால சந்ததியினர் பார்க்க வேண்டும் . மேலும் நாங்கள் அனைத்து விதத்திலும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் . நாங்கள் உங்களுக்காக அங்கே உள்ள சுகாதாரக் கேடு விளைவிக்கும் நிறுவனங்களையும் மூட தயாராக இருக்கிறோம் . "


யுவராஜ் - போல்ட் மோதல் !! கிரிக்கெட்டில் போல்ட் வெற்றி , ஓட்டத்தில் யுவராஜ் வென்றார் ( படங்களுடன் )



இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்த உலகின் அதிவேக வீரரான உசேன் போல்ட் தான் கிரிக்கெட்டிலும் கில்லாடி என்பதை நிரூபித்தார் . பூமா நிறுவனம் நடத்திய 4 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் அணி மற்றும் போல்ட் அணி மோதியது . பொழுது போக்கிற்காக நடந்த போட்டியில் போல்ட் அணி வென்றனர் . ஆனால் ஓட்டப்பந்தயப் போட்டியில் யுவராஜ் வென்று சமன் செய்தார் .

முதலில் பேட் செய்த யுவராஜ் அணி நிர்ணயித்த 59 ரன்கள் இலக்கை , போல்ட் அணி சேஸ் செய்தது . யுவராஜ் அணியில் யுவராஜ் 14 பந்துகளில் 24 எடுத்தார் . போல்ட் தனது அணியை கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற செய்தார் . மொத்தம் 5 சிக்சர்கள் அடித்த போல்ட் 19 பந்தில் 45 ரன்கள் எடுத்து அசத்தினார் . யுவராஜ் அணியில் ஜாகிர் கானும் , போல்ட் அணியில் ஹர்பஜன் சிங்கும் விளையாடினர் .

இதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்து நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுவராஜ்  சிங் வென்றார் . யுவராஜ் சிங்கை தன்னை விட்டு முந்தி செல்ல போல்ட் அனுமதித்தார் . இருவருக்கும் பூமா நிறுவனம் ஸ்பான்சர் என்பதால் அந்த நிறுவனம் இந்த போட்டியை நடத்தியது .






இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் வேண்டாம், ஃபேஸ்புக் போதும் என கூறும் பெண்கள், அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/facebook-is-enough-no-need-male.html

பணத்திற்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் - கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸ்சின் கண்ணீர் பேட்டி
http://www.satrumun.net/2014/09/actress-swetha-basu-confessed-she-was.html

செய்வது பியூன் வேலை , சொத்தோ 2 சொகுசு கார்கள் 6 வீடுகள், ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் அம்பலம்
http://www.satrumun.net/2014/09/bank-peon-has-six-houses-and-two-luxury.html

ஸ்டேட் பேங்க்கில் 2986 வேலை காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்
http://www.satrumun.net/2014/09/state-bank-of-india-mass-recruting-2986.html

விளம்பரங்களுக்கு நிர்வாணமாக நடித்த நடிகைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_65.html

நாம் பிறருக்கு அனுப்பிய மெசஜ்ஜை அவர்கள் படிப்பதற்கு முன் நாம் அழித்து விடலாம்
http://www.satrumun.net/2014/09/blog-post_42.html

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை கொய்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு
http://www.satrumun.net/2014/09/america-media-person-beheaded-by-isis.html

செப்டம்பர் மாதத்தின் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
http://www.satrumun.net/2014/09/5.html

அசாருதினை முந்திய தோனி, இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்து சாதனை
http://www.satrumun.net/2014/09/blog-post_3.html

தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல.
http://www.satrumun.net/2014/09/blog-post_73.html

இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்,தமிழரின் உணவு
http://www.satrumun.net/2014/09/blog-post_34.html

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம், தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு .
http://www.satrumun.net/2014/09/blog-post_48.html

அவந்திகா நகரத்தின் இன்றைய பெயர் என்ன? பொது அறிவு
http://www.satrumun.net/2014/09/2.html

தமிழ் இலக்கியங்களில் வானியல் சிந்தனை
http://www.satrumun.net/2014/09/blog-post_5.html

ஓபாமாவை காப்பி அடிக்கிறார் மோடி, சொல்வது யார்?
http://www.satrumun.net/2014/09/modi-copying-obama-says-amarinder-singh.html

விமானம் மூலம் இந்தியா வந்தது எபோலா
http://www.satrumun.net/2014/09/blog-post_8.html

கைதாகாமல் இருக்க அழகிரி முன் ஜாமீன் வாங்கினார்
http://www.satrumun.net/2014/09/blog-post_54.html

அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள சச்சினின் சுயசரிதை வெளிவருகிறது
http://www.satrumun.net/2014/09/blog-post_50.html

ஐரோப்பா செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
http://www.satrumun.net/2014/09/blog-post_76.html

செக்ஸ் வேண்டாம், ஃபேஸ்புக் போதும் என கூறும் பெண்கள், அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்


பெண்களுக்கு செக்ஸ் உறவு கொள்வதை விட ஃபேஸ்புக்கில் ப்ரவுஸ் செய்வது தான் மிகவும்  பிடித்திருக்கிறதாம். இது குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

1020 பெண்களிடம் இதுதொடர்பாக இந்த ஆய்வு செய்த நிறுவனம் கருத்துக் கேட்டபோது 57 சதவீதம் பேர் செக்ஸை விட ஃபேஸ்புக்கில் உலவுவது தான் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

15 நாட்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள கூடாது என்று சொல்வதை விட 15 நாட்களுக்கு இண்டெர்நெட் பக்கமே போகக் கூடாது என்று யாராவது சொன்னால், தங்களுக்கு பயங்கர கோபம் வரும் என்றும், ஃபேஸ்புக்குக்காக செக்ஸை தியாகம் செய்யக் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் செக்ஸில் ஈடுபடுவதை விட ஃபேஸ்புக்கில் சேட்டிங்கில்தான் தங்களது காதலர்கள், நண்பர்களோடு அதிக நேரம் பேசுகின்றனர். செக்ஸ் விஷயங்களை நேரில் அனுபவிப்பதை விட சாட்டிங்கில் அதிக நேரம் பேசி அதை அனுபவிக்கின்றனராம்.

மேலும் 2 சதவீதம் பெண்கள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை பார்கக் கூடாது என்று தங்களது கணவர்கள்/காதலர்கள்  கூறியதற்காக அவர்கள் உறவே வேண்டாமென்று பிரிந்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

2 சதவீதம் பேர் பேஸ்புக், டிவிட்டர் மூலம் தங்களது காதலர்களுக்கு செக்ஸியான மெசேஜ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பாய் பிரண்ட், கணவர் அல்லது அறிமுகம் இல்லாத ஆண்களோடு செக்ஸியாக பேச ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல.

தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. உலகில் தேடப்படும் பல கேள்விககளுக்கு பதிலளிக்கும் பெட்டகமாக  தமிழ் மொழி உள்ளது. தமிழில் கணிதம், அறிவியல், அரசியல் தீர்வு, புவி பற்றிய, இன்னும் பல அரிய, அதிசய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. மனிதன் வரலாறு , தாவரம் தோன்றிய வரலாறு, உயிரினம் தோன்றிய வரலாறு, புவி தோன்றிய வரலாறு, மொழி தோன்றிய வரலாறு, இன்னும் பல அடங்கியது தமிழ்.

இந்தியரும், வெளிநாட்டவரும் உரிமை கொண்டாடும் தற்போதைய கணடுபிடிப்புகள் அனைத்தும், தமிழர் அயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, பயன் படுத்தப்பட்டவையே ஆகும்.


இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்,தமிழரின் உணவு

தேவையானவை: இஞ்சி, நெல்லிக்காய் - தலா 100 கிராம், பூண்டு - 50 கிராம், வெல்லம் - சிறிது, மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி, வெந்தயம் (வறுத்துப் பொடித்தது), நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்


பலன்கள்: இஞ்சியை 'அமிர்த மருந்து’ என்று சித்த மருத்துவத்தில் கூறுகின்றனர். பித்தத்தைத் தன்னிலைப்படுத்தி, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது..

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம், தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு .


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.


பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

பணத்திற்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் - கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸ்சின் கண்ணீர் பேட்டி

த‌னக்கு பண நெருக்கடி ஏற்பட்டது, சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது, பணம் என்னிடம் இல்லை, எனக்கு வேறு வழியின்றி எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன, அந்நிலையில் விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் சிலர் தள்ளிவிட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாஸ் கண்ணீர் விட்டு கதறினார்.

ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியபோது தொழில் அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகையை கையும் களவுமாக பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நடிகை யார் என்பதை வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது விபசாரத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசு என தெலுங்கு இணையதளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் பட உலகில் அறிமுகமான ஸ்வேதாபாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்துள்ள சுவேதா,தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் விபாசர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா பாஸ் வுடன் விபசார புரோக்கர் பாலுவும் கைதானார்.

கைதான ஸ்வேதா பாஸ், பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி கோர்ட்டில் ஸ்வேதா பாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்வேதா பாஸ், சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன் இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது மேலும் சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்வேதாவை பாஸை போல பல நடிகைகள் பணத்திற்காக விபசார படுகுழியில் உற்றார் உறவினர்களா தள்ளப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை கொய்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு


சில நாட்களுக்கு முன் தான் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது, இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் அமெரிக்காவின் மற்றொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை கொய்து கொன்றுள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு

“A second message to America” என்று பெயரிட்டு இந்த வீடியோவை அனுப்பிய தீவிரவாத அமைப்பு இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையிட்டதை கண்டிக்கும் வகையில் ஸ்டீவன் சாட்லாஃப் தலை கொய்யப்படுவதாக கூறுப்பட்டுள்ளது. 'இவரது தலை, இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டிற்கான விலை' என்கிறது அந்த தீவிரவாதியின் பேச்சு. மேலும் தாங்கள் பிணைக்கைதியாக வைத்திருக்கும் பிரிட்டன் பத்திரிக்கையாளர் டேவிட் ஹெய்ன்ஸ்சையும் கொலை செய்யப்போவதாக தீவிரவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர்.

ஸ்டேட் பேங்க்கில் 2986 வேலை காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்

ஸ்டேட் பேங்க்கில் 2986 வேலை காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் அஸோஸியேட் வங்கிகளின் புரோபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.


மொத்தம் 2986 காலிப்பணியிடங்கள்

2014, செப்டம்பர் 1 அன்று 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை அரசின் விதிப்படி உண்டு.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100, பிற பிரிவினருக்கு ரூ.500. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலோ செலான் மூலமாகவோ கட்டலாம். செலான் மூலம் கட்டினால் விண்ணப்பித்த மூன்று வேலை நாள்களுக்குள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் www.statebankofindia.com என்னும் இணையதளத்தில் அல்லது www.sbi.co.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாள்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 01.09.2014 18.09.2014
செலான் மூலம் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 03.09.2014- 20.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் - 2014
கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in

அனைவருக்கும் இந்த தகவல்கள் சென்று சேர ஷேர் செய்யுங்கள்

அவந்திகா நகரத்தின் இன்றைய பெயர் என்ன? பொது அறிவு


பொது அறிவு -2
----------------------------- 


Ø  பைஎன்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடி இந்திய பெண்மணி யார்?  -பம்பாய் ஜெயஸ்ரீ

Ø  மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது?  -மஞ்சள் நிற கால்களையுடைய பச்சைப்புறா

Ø  2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும் அது அமைந்துள்ள இடம் எது? - 70 அடி, பாட்னா

Ø  கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர் பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது? - ஏதெனா

Ø  லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் வரும் கதாபாத்திரமான லில்லிபுட் நகரத்திற்கு குலிவர் பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன? – ஆன்டிலோப்

Ø  பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன? - உஜ்ஜைனி

Ø  இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட்  உரையை தாக்கல் செய்தவர் யார்?- ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்

Ø  அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின் சகோதரர் பெயர் என்ன? – காசிம்

Ø  கோள்களில் மிகவும் சூடான கோள் எது? – வீனஸ்

Ø  அதுல் கோச்சார் என்பவர் யார்? - இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் புகழ்பெற்ற சமையல் கலைஞர்.

தமிழ் இலக்கியங்களில் வானியல் சிந்தனை


ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மாணிக்கவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"

விளக்கம்:

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும்(ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.

இதையே இராமாயணம் பாடிய கம்பர், வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது

"தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்."

இதில் வாலி இறந்து, வானுலகத்திர்க்கும் அப்பால் உள்ள உலகத்திற்கு செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். அது எந்த உலகம்?

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"

"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை!


ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை.

வேலையோ வங்கியில் பியூன், சொத்தோ 2 சொகுசு கார்கள் 6 வீடுகள், ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் அம்பலம்



மத்திய பிரதேச மாநிலத்தில்  குவாலியர் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடைநிலை ஊழியராக பியூனாக பணியாற்றி  வரும் ஒருவரது வீட்டில் இன்றுஅதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரிடம் ஆறு வீடுகளும் இரண்டு சொகுசு கார்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் 1983 ஆம் ஆண்டு முதல் பியூனாக பணிபுரிந்து வருபவர் குல்தீப் யாதவ்(40), வேடிக்கை என்ன வென்றாள் இவர் 30 ஆண்டுகளாக எந்த பணி உயர்வும் இல்லாமல் பியூனாகவே இருந்து வருகிறார்.

குல்தீப் யாதவ் குறித்து  ஒரு மொட்டை கடிதம் மூலம் யாரோ ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அவரது சொத்துகள் குறித்து தகவல்  அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில்,  இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டில் லோக் அயுக்தா அல்லது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் இரண்டடுக்கு பங்களா மற்றும் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள்  மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றுக்கான ஆவணங்களை கைப்பற்றினர். அவரது வீட்டில் தொடந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு வரை இந்த சோதனை நீடிக்கும் என தெரிகிறது.  குல்தீப் யாதவின் சொத்தின் மதிப்பீடு சுமார் 7 கோடிக்கும் மேல் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கியில் பியூனுக்கு மாத சம்பளம் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் இருக்காது, என்றும் இந்த 30 ஆண்டுகளில் அவரால் 15 முதல் 17 லட்சத்துக்கு மேல் சம்பாதித்திருக்க முடியாது ஆனால் இவரது சொத்து மதிப்பு 7 கோடி என்றால் என்னென்ன முறைகேடுகள் செய்து இதை சம்பாதித்தார் என்று இனி தான் விசாரிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஓபாமாவை காப்பி அடிக்கிறார் மோடி - சொல்லுகிறார் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் !!



வருகிற ஆசிரியர்கள் தினத்தன்று நரேந்திர மோடி அனைத்து மாணவர்களிடமும் உரையாட இருக்கிறார் . இதனை குறித்து காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் கூறுகையில் , " பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஓபாமாவை கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலும் காப்பி அடித்து வருகிறார் " என்றார் .

காங்கிரஸின் துணை மக்களவை தலைவரான அமரிந்தர் சிங் கூறுகையில் , " ஆசிரியர்கள் தினத்தில் மோடி , ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் மாணவர்களுடன் கலந்துரையாடுவது விந்தையாக இருக்கிறது . இதேப் போன்று தான் ஓபாமா 2009 ஆம் ஆண்டு செய்தார் . மோடி ஓபாமாவை அவசர அவசரமாக காப்பி அடித்து வருகிறார் . " என்றார் .

விமானம் மூலம் இந்தியா வந்தது எபோலா




மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோய் எபோலா. இந்த நோய்க்கு அங்கு இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வந்த 181 பயணிகளில் 6 பேருக்கு எபோலா வைரஸ் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எபோலா நோய் இல்லை என்பது நிருபணம் ஆன பின்பு தான் அவர்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

விளம்பரங்களுக்கு நிர்வாணமாக நடித்த நடிகைகள்

* ஜெனிபர் லோபஸ்



* ஜெனிபர் ஆனிஸ்டன்



* கிசெல் பட்சென்




* எலிசாபெட்டா கேன்டலிஸ்



* கேட்டி ஹோல்ம்ஸ்



* எவா மெண்டிஸ்






செப்டம்பர் மாதத்தின் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

* சியோமி எம்.ஐ.3 - ரூ. 13,999



* சியோமி ரெட்மி 1எஸ் - ரூ. 5,999



* மோட்டோ ஜி - ரூ. 10,499



* நோக்கியா லுமியா 525 - ரூ. 9.099




* சோனி எக்ஸ்பீரியா ஈ1 - ரூ. 6,690





இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் தோனி




இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் தோனி இந்தியாவுக்காக பல கோப்பைகளை பெற்று தந்துள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகளே கிடையாது. ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பொருப்பேற்ற பின் தோனி 161 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகளை பெற்று தந்து இருந்தார். அசாருதீனின் 90 போட்டிகளில் கேப்டனாக வெற்றி என்னும் சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது சமன் செய்தார். அசாருதின் 174 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 90 வெற்றிகளை பெற்று தந்தார் .

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்த கேப்டன் என்னும் சாதனை தோனி வசம் செல்கிறது.

கைதாகாமல் இருக்க அழகிரி முன் ஜாமீன் வாங்கினார்




மதுரையில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அழகிரி விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அழகிரி முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இதனை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கியது.

நாம் பிறருக்கு அனுப்பிய மெசஜ்ஜை அவர்கள் படிப்பதற்கு முன் நாம் அழித்து விடலாம்




நாம் நமது நண்பருக்கோ அல்லது காதலிக்கோ தவறான மெசஜ்ஜை அனுப்பி விட்டோம் என்றால் இனி கவலைபட தேவையில்லை. அவர்கள் அதனை படிக்காவிட்டால் நாம் அதனை டெலிட் செய்து விடலாம். இதற்காக புதிய அப் வந்துள்ளது. இதன் பெயர் இன்விசிபிள் டெக்ஸ்ட். இது இளைஞர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள சச்சினின் சுயசரிதை வெளிவருகிறது




கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகள் படைத்து அதன் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே இல்லை. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இந்நிலையில் அவரது சுயசரிதை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சச்சினை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கும் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஐரோப்பா செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடலாம் என நினைக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் உள்ள 2 பாடல்களை படப்பிடிப்பதற்காக படக்குழு ஐரோப்பா செல்கிறது. இதில் ரஜினியும் செல்கிறார். கோச்சடையான் படம் ரஜினிக்கு நல்ல வெற்றியை தராததால் இந்த படத்தை அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media