BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 September 2013

மனைவிக்கு பயந்து கொண்டு சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன் - அமெரிக்க அதிபர் ஒபாமா

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல. விருப்பபட்டால் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

மகாராஷ்டிர அரசு திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது.

இந்த விசாரணையில், ஆதார் அட்டை பெறுவது அவரவர் விருப்பம் என்று பதில் தந்துள்ளது மத்திய அரசு.

விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கும் திட்டம் 2009-ல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த திட்டத்திற்காக மட்டும் இது வரை ரூ. 50,000 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. 

பிரேமானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு மாணவர் மர்ம சாவு

திருச்சி விராலிமலை, பாத்திமா நகரில் இயங்கி வரும் பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். 

கடலூர்-புதுவையில் தொடர்ந்து மோதிக்கொள்ளும் பாமக - விடுதலை சிறுத்தைகள், போலிஸ் துப்பாக்கி சூடு

கடலூர் மாவட்டத்திலும் புதுவையிலும் கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இது வன்னியர் தலித் மோதலாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media