BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 15 August 2014

சூர்யாவா? பார்த்திபனா? சினேகாவா? இன்று ரிலீசான படங்களில் முந்தியது யார்?

ப்ளாப் ஆன அஞ்சான்
டாப் ஆன பார்திபன்
பிக்கப் ஆன சினேகா

இன்றைய ரிலீஸ் படங்களில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கிய "அஞ்சான்", ஆனால் படம் பப்படமானது, நமது சினிமா விமர்சகர் ஒன்றரை ஸ்டாருக்கு மேல் கொடுக்காதீர்கள் என்று சண்டை போட்டுக்கொண்டுள்ளார். நமது ரேட்டிங் 2.0/5.0

முதல் பாதி கலக்கலாகவும் இரண்டாம் பாதி முதல்பாதி அளவில்லையென்றாலும் ஓரளவுக்கு நன்றாகவும் போகிறதாம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான  கதை திரைக்கதை வசனம். நமது ரேட்டிங் 3.5/5.0

இயக்குனர் முத்துராமலிங்கம் சினேகாவின் காதலர்கள் ஓரளவிற்கு ஸ்டெடியாக போரடிக்காமல் செல்கிறதாம். படம் தியேட்டர்கள் கிடைத்தால் தாக்குபிடித்து ஓடிவிடும்  நமது ரேட்டிங் 3.0/5.0

சந்தேகமே இல்லாமல் பார்த்திபன் சிக்ஸர் அடித்துவிட்டார், அஞ்சான் படுத்துக்கொண்டதால் இன்னும் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தால் சினேகாவின் காதலர்களும் வசூல் பார்த்துவிடும்.

அஞ்சான் போன்ற மரண மொக்கை படங்களை எல்லாம் சூர்யா ஏன் ஒத்துக்கொண்டு நடிக்கின்றார்?

# இந்த படங்கள் பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்க‌

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


பெண்களில் சிலர் செக்ஸ்சை வெறுப்பதற்கான காரணங்கள்!!
http://www.satrumun.net/2014/08/why-some-women-dont-like-s-facs.html

பெண்கள் பொதுவாக சொல்லும் பொய்கள் !!
http://www.satrumun.net/2014/08/top-things-at-which-women-lie.html

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
http://www.satrumun.net/2014/08/modi-on-iday-speech.html

மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் - லிங்கா ஷூட்டிங்கில் ரஜினி பரபரப்பு பேட்டி, திரும்பவும் முதல்ல இருந்தா?
http://www.satrumun.net/2014/08/rajini-talks-about-cm-post.html

எப்படி சம்பாதிக்கும் ஆண்களை, பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் ?? - ஆய்வின் முடிவு !!
http://www.satrumun.net/2014/08/what-salary-earning-people-women-prefers-most.html

நட்சத்திர பதிவர் - கிஷோர் கே ஸ்வாமி சர்ச்சையின் நாயகன்
http://www.satrumun.net/2014/08/satrumun-star-kishoe-k-swamy.html

உலகில் வெறும் 11 நாடுகள் தான் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதாம் !!
http://www.satrumun.net/2014/08/world-peaceful-countries-list.html

குலுங்கி குலுங்கி அழுத ஹன்ஷிகா : ரொமான்ஸ் காட்சியில் அத்துமீறினாரா ஆர்யா?
http://goo.gl/8DXwTv

என்ன ஒரு புத்திசாலித்தனம்... : ஜோதிகாவுக்கு 'மாஸ்' காட்ட சூர்யா போட்ட 'மாஸ்டர்' ப்ளான்!
http://goo.gl/euZ7v4

இவர்களின் உண்மையான அழகும் , தைரியமும் நம்மை கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும் !!
http://www.satrumun.net/2014/08/phostoshoot-of-accid-attack-victims.html

நம்பர் 10 ஜெர்ஸி அணிந்த பிரபல கால்பந்து வீரர்கள் !!
http://www.satrumun.net/2014/08/famous-football-players-who-wears-no10-jersey.html

செக்ஸ் பற்றி ஹிட்லரின் விபரீத கருத்துகள்
http://www.satrumun.net/2014/06/hitler-and-sex.html

பெண்களில் சிலர் செக்ஸ்சை வெறுப்பதற்கான காரணங்கள்!! நிச்சயம் அறிந்துகொள்ளுங்கள்

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண்களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

* காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நேரிடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.

* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.

* சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.

* உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.

* கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.

* பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.

* குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்

* செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.

நட்சத்திர பதிவர் - கிஷோர் கே ஸ்வாமி சர்ச்சையின் நாயகன்


ஃபேஸ்புக் என்னும் சமூக ஊடகத்தின் வழியாக எந்த அளவிற்கு சர்ச்சையை கிளப்பவும் பிரபலம் அடையவும் முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கிஷோர் கே ஸ்வாமி, அவரது எழுத்தில் காணும் அதிரடிக்கும் அவரது தேகத்திற்கும் தொடர்பே இருக்க இயலாது, ஒல்லியான தேகம், பேட்டி அளிக்கும் போது கூட பட பட பேச்சு, ஒரு ஸ்டேட்டஸ்சில் ஓராயிரம் வெடிகுண்டுகளை கொளுத்தி போடுவது என ஒரு வித்தியாசமான பதிவர்.

அதிமுகவின் ஆதரவாளனாகவும் அம்மாவின் விசுவாசி என்றும் சொல்லிக்கொள்ளுபவர் என்றாலும் பல நேரங்களில் அதிமுக அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் உள்விளையாட்டுகளை அதிரடியாக வெளியிடுவார். தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை கொள்ள மாட்டார்.

அச்சு, காட்சி ஊடக பிரபலத்தை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் வாத்தியார்த்தனம் காட்டிக்கொண்டிருந்த மனுஷ்யபுத்திரன் மற்றும் சில பிரபல பத்திரிக்கையாளர்களுக்கு பாடம் புகட்டியவர். பல நேரங்களில் பெரும்பாண்மைக்கு நேரெதிர் நிலைப்பாட்டை எடுப்பவர் இந்த சர்ச்சை நாயகன். இவரிடம் மடக்கி பேசி விவாதத்தில் வெற்றி பெருவது என்பது மிக கடினமானது, எந்த பிரச்சினையை பேசினாலும் அந்த பிரச்சினை குறித்து ஓரளவுக்கு நல்ல அறிமுகத்துடன் செய்வதால் இவரை மடக்குவதும் கடினம்.

கனிமொழி மற்றும் கருணாநிதி ஆகியோர் மீது பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ளார், திமுகவினருக்கு மட்டுமல்ல பல நேரங்களில் அதிமுகவினரையும் விளாசுவார்.

சில நாட்களுக்கு முன் டிராபிக் போலிசிடம் எகனை மொகனையாக பேசி நாலு சாத்து வாங்கினாலும் தொடர்ந்து காவல்நிலையம் வரை போய் அவர்களுடன் போராடி வழக்கு பதிவு செய் என்று கூறி கடைசியில் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டால் நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்க கூடாது என்று சொல்லி அனுப்பியுள்ளார் இந்த கிரேசி பாய்.

இவரை உளவுத்துறை கையாள் என்றும், மிரட்டல் பேர்வழி என்றும் அவரது எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் இவரோ என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல என் கடன் சர்ச்சையை கிளப்புவதே என்று செயல்படுவார்.

இவரது டைம்லைனை தொடர்ந்து படித்தால் சில நேரம் சுவாரசியமான கிசு கிசுக்கள் கிடைக்கும், சில நேரம் அரசியல் விவகாரங்கள் கிடைக்கும், சில நேரங்களில் பொதுப்புத்திக்கு எதிரான கருத்துகள் ஆதாரங்களுடன் விவரமாக கிடைக்கும், பல நேரங்களில் வம்பு வழக்குகள் கிடைக்கும். எதை எடுக்க வேண்டும், எதை விட வேண்டும் என்பது அவரவர்கள் விருப்பம்.

எல்லா நேரமும் ஃபேஸ்புக்கிலே இருக்கின்றீரே வாழ்க்கையை நடத்த சம்பாதிக்க என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் போதுமான அளவு இருக்கு என்று முடித்துக்கொள்வார்.

கிஷோர் கே ஸ்வாமியின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/kishore.kswamy

பெண்கள் பொதுவாக சொல்லும் பொய்கள் !!



பெண்கள் சில நேரம் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றும் , ஒருவரின் உறவு தடைப் படாமல் இருக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் பொய் கூறுவர் . ஆனால் சில நேரங்களில் உண்மை என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே அவர்கள் பொய் கூறுவதும் உண்டு . அப்படி பெண்கள் பொதுவாக சொல்லும் பொய்கள் கீழ் வருமாறு :



1) உன்னுடைய போன் காலுக்காக நான் காத்து இருக்கவில்லை .
  
2) எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் , ஆனால் லவ் இல்லை .

3) நாம இரண்டு பேரும் சேர்ந்தே பில் கட்டலாம் . நீ எப்போதும் கட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை 

4) என்ன உனக்கு இந்த அளவு பிடிக்கும் என்று நினைத்துப் பார்த்தது இல்லை . 

5) எனக்கு பையன் அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லை . கொஞ்சம் சம்பாதித்தால் போதும் , வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்திடலாம் . 

6) நான் எப்போது தேடிக் கொண்டு இருக்கும் அந்த ஒரு நபர் நீ தான் . 

7) உன்மேல் தப்பு இல்லை , நான் தான் தப்பு பண்ணிட்டேன் . 

8) நான் அவனுடன் வெளியே போகவில்லை என்றால் , அவன் வேறு எவளுடனாவது சென்று விடுவான் 

9) எனக்கு என் மாமியாருடன் நன்றாக ஒத்துப் போகிறது .

அடுத்த முறை இதில் ஏதாவது ஒன்றை உங்களிடம் சொன்னால் நீங்களே பொய் என்றுகண்டு பிடித்துவிடலாம் . 

எப்படி சம்பாதிக்கும் ஆண்களை, பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் ?? - ஆய்வின் முடிவு !!



நியுசிலாந்தின் பிரபல டேட்டிங் நிறுவனங்களில் ஒன்றான எலைட் சிங்கில்ஸ் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் , தங்களைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களை தான் கல்யாணம் செய்து கொள்வோம் என்று 70 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் தெரிவித்து உள்ளனர் .

பணம் ஒரு ஆண் பெண் இல்லற உறவில் எவ்வாறு தேவைப்படுகிறது என்று நடத்தப்பட்ட் ஆய்வில் , இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது . இந்த ஆய்வின் படி வீட்டில் இருவரும் வேலைக்குச் சென்றாலும் பெண்கள் தன்னுடைய கணவர் தன்னை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் .

உலகில் வெறும் 11 நாடுகள் தான் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதாம் !!



ஒரு புறம் காஸாவில் போர் , ஒரு புறம் ஈராக்கில் தாக்குதல் , ஒரு புறம் நைஜிரியாவில் போர் , உக்ரேனில் சண்டை , இவ்வாறு உலகம் முழுவதும் ஒரு சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என கேட்கும் போது , உலகமே சண்டையில் இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது . ஆனால் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தில் ஆய்வு படி 11 நாடுகள் எந்த வித போரிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறதாம் .

இந்த நிறுவனம் இந்த ஆய்வில் 162 நாடுகளை பகுப்பாய்வு செய்தனர் . இந்த ஆய்வில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகம் அமைதியை இழந்து வருவதாக தெரிவிக்கிறது . இந்த ஆய்விற்காக அவர்கள் ஒரு நாட்டின் உள்ளூர் மற்றும் வெளி பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்து ஆராய்ந்துள்ளனர் .

சான்றாக , பிரிட்டேனில் உள்நாட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லை . ஆனால் வெளிநாட்டுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் இந்த அமைதி குறியீட்டில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . அதேப் போல வட கொரியாவில் வெளி நாட்டுடன் எந்தப் பிரச்சனைகளும் இல்லை . ஆனால் உள்நாட்டுப் பிரச்சனைகளால் பின்னுக்குத் தள்ளப் பட்டது .

அந்த ஆய்வின் படி அமைதியாக உள்ள நாடுகள்


  1. ஐஸ்லாந்து
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. நியுசிலாந்து
  5. சுவிட்சர்லாந்து
  6. பின்லாந்து
  7. கனடா
  8. ஜப்பான்
  9. பெல்ஜியம்
  10. நார்வே

இந்தியாவுக்கு 142 வது இடம் .



நம்பர் 10 ஜெர்ஸி அணிந்த பிரபல கால்பந்து வீரர்கள் !!



நமக்கு 10 ஆம் நம்பர் ஜெர்ஸி என்றால் ஞாபகத்தில் வருவது சச்சின் தான் . அதேப் போல கால்பந்திலும் 10 ஆம் நம்பர் ஜெர்ஸியை சில பிரபலமான வீரர்கள் அணிந்து விளையாடி உள்ளனர் , விளையாடியும் வருகின்றனர் . அந்த 10 ஆம் நம்பர் என்றாலே தனி சிறப்பு தான் .

அந்த பிரபலமான வீரர்கள் கீழ் வருமாறு .

8 ) வேய்னே ருனி ( இங்கிலாந்து )

இங்கிலாந்து கால்பந்து உலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் .




7 ) பிரான்செச்கோ டொட்டி ( இத்தாலி )

இத்தாலி ரசிகர்களிடையே பிரபலமானவர் . 2006 ஆம் ஆண்டு இத்தாலி அணிக்காக கோப்பை வென்றவர் . இவர் விளையாடும் கிளப் ரோமா இவரின் ஓய்வுக்கு பின் 10 ஆம் நம்பரை யாரிடமும் கொடுக்காமல் 10 ஆம் நம்பருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளனர் .



6 ) மைக்கெல் பிளாட்டினி ( பிரான்ஸ் )

இவரை பலருக்கு யு.இ.எப்.அ அமைப்புக்கு தலைவராக தான் தெரியும் . ஆனால் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பிடித்தவர் .



5 ) ஸினேடின் ஸிடேன் ( பிரான்ஸ் )

இவர் தன்னுடைய கடைசி போட்டியில் தலையால் முட்டி சர்ச்சையில் சிக்கினாலும் எதிரணி வீரர்களை தனது அசாத்திய திறமையால் திணறடிக்கும் திறமை வாய்ந்தவர் .



4 ) ரொனால்டினோ ( பிரேசில் )

அனைவராலும் விரும்பப்படுபவர் . ஒருவராலும் வெறுக்கப்படாதவர் .



3 ) மெஸ்ஸி ( அர்ஜெண்டினா )

இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை



2 ) மராடோனா ( அர்ஜெண்டினா )

கால்பந்து உலகின் ஜாம்பவான்



1 ) பிலே  ( பிரேசில் )

இவரை கால்பந்து உலகின் அரசன் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது . 


சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!



தனது முதல் சுதந்திர தின உரையை மோடி இன்று டில்லி செங்கோட்டையில் நிகழ்த்தினார் . முதல் முறையாக எந்தவொரு பாதுகாப்பு கூண்டிலும் இல்லாமல் மோடி இந்த உரையை நிகழ்த்தினார் . அதற்கே அவரை நாம் பாராட்டி ஆக வேண்டும் . மேலும் இந்த உரையில் அவர் கூறிய சில சிறப்பான செய்திகளைக் கீழ்க் காணலாம் .

1 ) நான் உங்களின் பிரதமர் இல்லை . உங்களின் பிரதம பணியாளன் . உங்களின் பிரதம பணியாளனாக இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

2 ) ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது உங்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன் . இது தான் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி .

3 ) உலகிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் - " வாருங்கள் , இந்தியாவில் செய்யுங்கள் . எங்கே வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள் , ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் . ஏனென்றால் எங்களிடம் திறனும் , திறமையும் இருக்கிறது .

4 ) வறுமைக்கு எதிராக ஒரு போர் நடத்தி நம்மால் வறுமையை வெற்றி கொள்ள முடியாதா ??

5 ) நாங்கள் எங்களின் பெரும்பான்மை அடிப்படையில் முன்னேற விரும்பவில்லை . அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னேற விரும்புகிறோம் .

6 ) ஒரு மகள் தனது பெற்றோரை ஐந்து மகன்கள் ஆற்றும் கடைமையை விட அதிகம் கடமை ஆற்றியதை நான் பார்த்துள்ளேன் .

7 ) நமது ஆண் பெண் விகிதத்தைப் பாருங்கள் ?? யார் இந்த விகிதத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது ?? கண்டிப்பாக கடவுள் இல்லை . மருத்துவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளைக் கொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

8 ) இந்த உலகம் நம்மை வெறும் பாம்பு ஆட்டிகள் என்றும் பில்லி சூனியம் செய்பவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு இருந்தது . ஆனால் நமது இளைஞர்கள் ஐ.டி துறையில் செய்த சாதனையைப் பாருங்கள் .

9 ) ஒரு துப்பாக்கியினால் இந்த உலகத்தை சிவப்பாக (இரத்தம்) மாற்றலாம் . ஆனால் ஒரு கலப்பையால் இந்த உலகை பசுமையாக மாற்றலாம் .

10 ) பெற்றோர்கள் அனைவரும் இந்நாள் வரை நமது மகள்களை தான் எங்கே செல்கிறாய் என்று கேட்டு கொண்டு இருந்தோம் . இனிமேல் நமது மகன்களையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் .

இவர்களின் உண்மையான அழகும் , தைரியமும் நம்மை கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும் !!


உலகம் அழகு என்று சொல்லித் திரியும் அழகை இவர்கள் ஏதோ ஒரு கயவனின் முட்டாள் தனமான செயலால் இவர்கள் இழந்தாலும் இன்னும் தன்னுடைய மன அழகை இவர்கள் இன்னும் இழக்கவில்லை . 

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய போட்டோஷூட் !!













மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் - ரஜினி பரபரப்பு பேட்டி !!



லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அப்போது அவர் நிரூபர்களுக்கு கன்னடத்தில் அளித்த பேட்டியில் , மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் என்றார் .  அந்த பேட்டி கீழ் வருமாறு :

அரசியலுக்கு வருவீர்களா ??

( எப்போதும் போல் தன்னுடைய வசீகரமான சிரிப்புடன் ) அது கடவுளுடைய விருப்பம் . கடவுள் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும்

உங்களுடைய விருப்பம் என்ன ??

கடவுளின் விருப்பம் தான் என்னுடைய விருப்பம் ஆக இருக்கும் .

அரசியலுக்கு வந்தால் முதல்வர் ஆக முடியும் என நினைக்கிறீர்களா ??

மக்கள் மனது வைத்தால் முதல்வர் ஆக முடியும் .

இவ்வாறு அவர் தெரிவித்தார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media