திமுக தலைமையின் நடவடிக்கைகள் குறித்து இன்று பத்திரிக்கைகளுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில் திமுக தலைமையின் நடவடிக்கைகள் கட்சியின் அழிவுப்பாதைக்கு வழி வகுப்பதாக உள்ளது. திமுக வுக்கு இனி வளர்ச்சி என்பதே கிடையாது என்றும் கூறினார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் கட்சியில் தவறு செய்தவர்களா? என்ற கேள்விக்கு கட்சியின் தலைமை ஒரு தரப்பினருக்கு ஆதரவாக, தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
கே.பி.ராமலிங்கம், போஸ் போன்ற உங்கள் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களே? என்ற கேள்விக்கு
மேலும் எனது பிறந்த நாள் விழாவில் எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை நீக்குவதும் திருமண விழாவில் சந்தித்தவர்களை நீக்குவதும் கண்மூடித்தனமாக உள்ளது என்றார்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் கேலிக்கூத் தாக உள்ளது. திமுகவின் சமீபகால நடவடிக்கைகள், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதுபோல் உள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தான் திமுக தோற்றுள்ளது. அதைப் பற்றி தலைமை கண்டுகொள் ளாதது ஏன் என்றார்.
என்ன நடவடிக்கை மூலம் திமுகவை வலுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு திமுகவுக்கு இனி வளர்ச்சி என்பதே இல்லை. அது முடிந்து விட்டது என்றார்.
திமுகவின் தோல்விக்கு காரணமானவர்களான கே.என்.நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்,துரை.முருகன் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் இருக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய, நகர செயலாளர்கள் அளவில் நடவடிக்கை எடுத்துள்ளது கட்சித்தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.