தர்மபுரியில் திவ்யா இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதையடுத்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார், இதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டன.
பல திருப்பங்களுடன் நேற்று திவ்யா இளவரசனை பிரிவதாக பேட்டியளித்தார்.
இந்நிலையில் இளவரசன் உடல் இன்று தர்மபுரி அரசு கல்லூரி அருகில் உள்ள தண்டவாளத்தில் இருந்து கண்டெடுக்கபட்டுள்ளது, இவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது, அதே இளவரசினின் சடலம் தர்மபுரி ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது சட்டைப்பாக்கெட்டிலிருந்து இரண்டு கடிதங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளார் இது கொலையா தற்கொலையா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
இளவரசன் மரணமடைந்ததையடுத்து தர்மபுரி முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.