BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 2 October 2014

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4 வது இடம் பிடித்தும் தங்கம் வென்ற வீரர் !!



ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது . இந்த போட்டிகளின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது . இந்தப் போட்டியில் ஈராக்கின் அட்னான் அல்மன்ட்பேஜ் என்பவர் 4 வது இடம் பிடித்தார் . முதல் மூன்று இடங்கள் பிடித்த அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது .

முதல் இடம் பிடித்த சவூதியின் மொஹம்மது அப்துலாசிஸ் மற்ற வீரர்கள் ஓடுவதற்கு தடை செய்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . மற்ற இரண்டு வீரர்களும் தங்களின் பாதையில் இருந்து தவறாக ஓடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் .

இது குறித்து  அட்னான் அல்மன்ட்பேஜ் கூறுகையில் , " நான் இன்று பதக்கம் வெல்வதற்கு நன்றிக் கடமை பட்டுள்ளேன் . அந்த மூன்று பேரும் எனக்கு போட்டியாக இருந்தார்கள் . அவர்கள் 200 மீட்டரில் தவறு செய்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் " என்றார் .

விளங்க முடியா ரகசியம்

நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது.

இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது\அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை


ஆரோக்கியமான இதயத்தை பாதுகாப்பது எப்படி

 இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய  அமைப்பில் அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால்  போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து நம்மை  பாதுகாத்துக்கொள்ளலாம்.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின்  எல்லையை பரிந்துரைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு காரணமாக தமனியில் உள்ள பிளேக்  கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லா பால்,  பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள்,  ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது.

எடை நிர்வாகம்

தோற்றத்தை கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி  இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64 வயது வரை உள்ளவர்கள்  குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள்,  கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு  ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

ஆரோக்கிய இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள்  வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த  வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகுதொலைவில் இருக்கும் கடை,  போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு சிறந்த  பங்களிப்பாகும்.

வாழ்க்கை முறை

உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது  தான் இதய நோயிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல்  நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி  நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆபத்து அறிகுறிகள்

அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து  அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம்,  போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம்  அழைத்துச்செல்ல வேண்டும்.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

10 செக்ஸ் உண்மைகள்...
http://www.satrumun.net/2014/07/10.html

அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிப் போக காரணம் என்ன ??
http://www.satrumun.net/2014/10/why-jaya-plea-was-suspended-to-next-week.html

நியாயமற்ற நடுவர் தீர்ப்புக்காக பதக்கத்தை வாங்க மறுத்து போராடிய இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு மற்றொரு அடி !!
http://www.satrumun.net/2014/10/another-blow-to-injury-for-saritha-devi.html

கற்பனை அல்ல இது காரட்டின் அற்புதம்
http://www.satrumun.net/2014/10/blog-post_19.html

காலையில மீட்டிங், சாயங்காலம் மேரேஜ் : ‘மாஜி நடிகை’ துளசியின் லவ் சீக்ரெட்ஸ்!
http://goo.gl/GcSigl

4வது முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிர் தடகள அணி !!
http://www.satrumun.net/2014/10/india-wins-400-m-relay-gold.html

யான் – விமர்சனம், அஞ்சான் பெட்டரோ பெட்டர்
http://goo.gl/PDMBh1

சென்னையில் 5 ஆயிரம் திருட்டு சி.டி. பறிமுதல்
http://www.satrumun.net/2014/10/5.html

சுழற் பந்து வீச்சாளர்கள் பந்தை எறிவதை கண்டுபிடிக்க உதவிய அஷ்வின் !!
http://www.satrumun.net/2014/10/how-ashwin-exposed-chuck-bowlers.html

தென்கொரியாவிற்கு சாதாகமாக வழங்கப்பட்ட நடுவர் தீர்ப்புகள் !! எதிர்த்த மங்கோலிய நாட்டினர் , வேடிக்கை பார்த்த இந்திய அதிகாரிகள் ..
http://www.satrumun.net/2014/10/wrong-decision-by-refrees-in-asian-games.html

செவ்வாயின் 3டி போட்டோவை அனுப்பியது மங்கள்யான் ( படங்களுடன் ) !!
http://www.satrumun.net/2014/10/latest-info-on-mangalyan.html

"சுத்தமான இந்தியா " திட்டத்தை துவங்கி வைத்தார் மோடி !!
http://www.satrumun.net/2014/10/modi-launches-swachh-bharat-campaign.html

காந்தி ஒரு சகாப்தமா ? அல்லது சாபமா ?
http://www.satrumun.net/2014/10/blog-post_6.html

சர்ச்சை போஸ்டரின் டிரான்சிஸ்டரை கீழே போட்டுவிட்டு போஸ் கொடுங்கள் !! அமீர் கானுக்கு ஹிருத்திக் ரோஷன் சவால் ..
http://www.satrumun.net/2014/10/hrithik-gives-dare-to-amir-khan-and-he-finishes-in-style.html

இந்தியாவின் 3-ஆவது நேவிகேஷன் செயற்கைக்கோள் அக்.10-இல் விண்ணில் ஏவப்படுகிறது
 http://www.satrumun.net/2014/10/3-10.html

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இலங்கையை எதிர்த்து தமிழ் அகதிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
http://www.satrumun.net/2014/10/blog-post_2.html

தமிழ் மொழியின் சிறப்பு பெயர்கள்
http://www.satrumun.net/2014/10/blog-post_35.html

தமிழின் சிறப்பு
http://www.satrumun.net/2014/10/blog-post_42.html

கணித மேதை சகுந்தலா தேவி எழுதிய த வேர்ல்ட் ஆஃப் ஹோமோ செக்சுவல்ஸ்
http://www.satrumun.net/2013/11/google-doodle-shakuntala-devi-books-on.html

தொடர்ந்து 4 வது முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிர் தடகள அணி !!



மகளிர் 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளது . இது தொடர்ந்து 4 வது முறையாக ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்கிறது இந்திய அணி . இவர்கள் 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா தான் 4*400 தொடர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று வருகிறார்கள் . இவர்கள் தங்களின் பழைய சாதனையை இவர்களே முறியடித்துள்ளனர் .

பழைய சாதனையான 3:29:02 என்ற நேரத்தை இவர்கள் முறியடித்து புதிய சாதனையாக 3:28:68 என்ற நேரத்தை வைத்தனர் . இது இந்தியாவிற்கு தடகளத்தில் கிடைக்கும் 2 வது தங்கம் . பெண்கள் தட்டு எறிதலில் சீமா புனியா இதற்கு முன் தங்கம் வென்று இருந்தார் .

இந்திய அணியின் சார்பாக பன்வார் , டின்டு லுக்கா , மந்தீப் கவுர் மற்றும் பூவம்மா ஆகியோர் ஓடினர் . டின்டு லுக்கா 800 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . பூவம்மா 400 மீட்டர் பந்தயத்தில் வெண்கலம் வென்று இருந்தார் . 

சுழற் பந்து வீச்சாளர்கள் பந்தை எறிவதை கண்டுபிடிக்க உதவிய அஷ்வின் !!



கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் சையித் அஜ்மலை பந்தை எறிவதாக ஐ.சி.சி நிறுவனத்தால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார் . ஆனால் சக்கிங் செய்யும் பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின் கண்டுபிடிக்க உதவினார் என நீங்கள் நம்புவீர்களா ??

ஆம் !! பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது . அப்போது அஷ்வின் பந்து வீச வந்தார் . வந்த முதல் பந்திலே வங்கதேசத்தின் மொமினல் ஹக்கை அவுட் ஆக்கினார் . அந்த போட்டியில் எப்போது அரைக்கை சட்டை அணியும் அஷ்வின் அந்த போட்டியில் முழுக் கை சட்டை அணிந்து விளையாடினார் .

நீங்கள் கிரிக்கெட்டை கவனமாக பார்ப்பவர்கள் என்றால் , உலகின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர்கள் முழுக்கை அணிந்து கொண்டு தான் விளையாடுவர் . நரேன் , அஜ்மல் , ஹர்பஜன் சிங் போன்றோர் முழுக்கை அணிந்து தான் விளையாடுவார்கள் .

இது மட்டும் இல்லாமல் அஷ்வின் தனது பவுலிங் அக்ஷனை நரேன் போன்று மாற்றி பவுலிங் செய்தார் . அடுத்த சில போட்டிகளிலும் அப்படியே பவுலிங் செய்தார் . பின்னர் பேட்டி அளித்த அஷ்வின் , " எனக்கு எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் . நான் இது வரை முழுக்கை சட்டையில் பந்து வீசியதில்லை . எனவே அவ்வாறு பந்து வீசுவது எப்படி இருக்கும் என உணர விரும்பினேன் . உங்கள் முழங்கையை மடக்குவதன் மூலம் அதிக அளவிலான சுழற்சி கிடைக்கும் என்பதால் நான் முயற்சி செய்தேன் . அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது . இதனை பயன்படுத்தி பலர் இலாபம் அடையும் போது ஏன் நான் மட்டும் சும்மா இருக்க வேண்டும் " என்றார் .

இந்த பேச்சு பந்தை எறியும் பவுலர்களின் தவறை வெளியே கொண்டு வரும் விதமாக இருக்கிறது . ஒருவேளை இது தான் ஐ.சி.சி நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க உதவி இருக்குமோ என்று தெரியவில்லை .

தென்கொரியாவிற்கு சாதாகமாக வழங்கப்பட்ட நடுவர் தீர்ப்புகள் !! எதிர்த்த மங்கோலிய நாட்டினர் , வேடிக்கை பார்த்த இந்திய அதிகாரிகள் ..



நேற்று இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிகா தேவிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது . ( http://www.satrumun.net/2014/10/saritha-devi-cries-in-ceremony-due-to-false-judgement.html ) இந்த போட்டியில் சரிகாவை எதிர்த்து போட்டியிட்டவர் தென் கொரியாவைச் சேர்ந்தவர் .

இதேப் போன்று இந்தியாவின் தேவேந்திரோ சிங்கிற்கும் ஒன்சைட்டாக தீர்ப்பு வழங்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார் . இவரை எதிர்த்து விளையாடிவரும்  கொரியாவைச் சேர்ந்தவர் தான் .

இதேப் போன்று மங்கோலியா நாட்டு வீரர் ஒருவருக்கும் இதே நிலமை தான் ஏற்பட்டது . அவர் சண்டை நடந்த இடத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தனது எதிர்ப்பை தெரிவித்தார் . ஆனால் அவர் வலுகட்டாயமாக நடுவர்களால் வெளியனுப்பப்பட்டார் . இவரை எதிர்த்து விளையாடிவரும்  கொரியாவைச் சேர்ந்தவர் தான் . ஆனால் மங்கோலிய நாட்டு வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்து நடக்க இருந்த போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர் .

ஆனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வருத்தமானச் செய்தி .

செவ்வாயின் 3டி போட்டோவை அனுப்பியது மங்கள்யான் ( படங்களுடன் ) !!



இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் என்று அழைக்கப்படும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைந்தது . இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றி முடிக்க 3.2 நாட்கள் ஆகிறதாம் . இன்னும் 6 மாதங்களுக்கு மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டு இருக்கும் .

இதில் உள்ள அனைத்து இயந்திரங்களும் இயக்க தொடங்கிவிட்டது . இந்த செயற்கை கோளில் உள்ள மார்ஸ் கலர் கேமரா எனப்படும் இந்த கேமரா இதுவரை இரண்டு செட் போட்டோக்களை அனுப்பி உள்ளது .

மேலும் செவ்வாய் கிரகத்தின் 3-டி போட்டோ ஒன்றையும் இஸ்ரோவிற்கு அனுப்பி உள்ளது . இதனை தனது டிவிட்டர் அக்கோண்டில் பதிந்துள்ளது .


அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிப் போக காரணம் என்ன ??



சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை நேற்று தள்ளி வைக்கப்பட்டது . இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது .

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா , சசிகலா , இளவரசி , சுதாகரண் ஆகியோரை நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தார் . மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும் அபாரதமாக விதித்தார் .

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை இருந்தால் , குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்க முடியாது . எனவே ஜெயலலிதா சார்பாக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது . தசரா விடுமுறை என்பதால் இந்த மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா விசாரித்தார் . முதலில் அரசு தரப்பு வக்கீல் யாரும் வராததால் , அடுத்த வாரம் வழக்கை தள்ளுபடி செய்தார் . அரசு வக்கீல் இல்லாமலும் வழக்கை விசாரிக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது . இதனால் வழக்கு மீண்டு விசாரனைக்கு வந்தது . இம்முறை அரசு தரப்பில் பவானிசிங் ஆஜாரானர் .

இறுதியில் வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தார் நீதிபதி . மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கான இந்த வழக்கில் ஒரு போதும் விடுமுறைக்கால நீதிபதி ஜாமீன் வழங்குவதையோ , தீர்ப்பை சஸ்பெண்ட் செய்வதையோ விரும்ப மாட்டார்கள் . எனவே ரத்தினகலா இந்த வழக்கை அடுத்த வாரம் ரெகுலர் பெஞ்சு விசாரிக்கும் விதமாக அடுத்த வாரம் வழக்கை தள்ளுபடி செய்தார் .

" சுத்தமான இந்தியா " திட்டத்தை துவங்கி வைத்தார் மோடி !!


அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை இன்று மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாளான இன்று அவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் .

மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் இன்று சுத்தமான இந்தியாவை அமைக்க உறுதி மொழி ஏற்றுள்ளனர் . இந்த உறுதிமொழி மூலம் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு வருடத்தில் 100 மணி நேரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர் .  இந்தியாவின் பெருவாரியான நகரங்கள் சுத்தமாக இல்லாததால் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர் .

காந்தி ஒரு சகாப்தமா ? அல்லது சாபமா ?

எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. தமிழ் சினிமாவில் வரும் "மாஸ்" திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.

காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்...) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.

ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது.
காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவில் 'மாகாத்மா' காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்: "இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்' என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்.
 
காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, 'பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி' என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்: "Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after." (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.) காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.

தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட. Sarla Devi தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது. ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். ("I am taking service from the girls" என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - "மோகன்தாஸ்" புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி. மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த  பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி? இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக. விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- "அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்." (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.

ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன. மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.

காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது: அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்" (: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.) அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்: "இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும்  பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.''

பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது. எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும்தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.

நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது, "முடிவைவிட முறையே முக்கியம்!" (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)

இனி  நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்ண்டும் காந்தி ஒரு சகாப்தமா ? சாபமா?  என்று .............!

சர்ச்சை போஸ்டரின் டிரான்சிஸ்டரை கீழே போட்டுவிட்டு போஸ் கொடுங்கள் !! அமீர் கானுக்கு ஹிருத்திக் ரோஷன் சவால் ..



அமீர்கானின் அடுத்து வர உள்ள படமான "பிகே" படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது . அந்த போஸ்டரில் அவர் தனது நிர்வாணத்தை ஒரு டிரான்சிஸ்டர் வைத்து மறைப்பது போன்ற படம் இடம் பெற்றி இருந்தது . அந்த படம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது .

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய பேங் பேங் படத்தின் புரோமஷனுக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சில சவால்கள் கொடுத்து கொண்டு இருந்தார் . அந்த சவாலின் ஒரு பகுதியாக அமீர் கானிற்கு சவால் கொடுத்தார் . அந்த போஸ்டரில் இருக்கும் டிரான்சிஸ்டரை கீழேப் போட்டுவிட்டு போஸ் கொடுங்கள் என்பதே சவால் . அமீர் கானும் தைரியமாக சவாலை ஏற்றுக் கொண்டார் . அந்த சவாலை முடித்து விட்டு அதன் வீடியோவை அனுப்புவதாக கூறினார் .

அதேப் போல அவர் அந்த டிரான்சிஸ்டரை கீழேப் போட்டு விட்டார் , ஆனால் இந்த முறை அவர் ஆடையில் இருந்தார் . இவ்வாறு புத்திசாலித் தனமாக ஹிருத்திக்  ரோஷனின் சவாலை முடித்தார் அமீர் கான் .

வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று , இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு மற்றொரு அடி !!



நேற்று ஆசியப் போட்டியில் சரிதா தேவியின் வெற்றி மறுக்கப்பட்டதால் , பதக்கத்தை வாங்காமல் பரிசளிப்பு விழாவை விட்டுச் சென்றார் . ( http://www.satrumun.net/2014/10/saritha-devi-cries-in-ceremony-due-to-false-judgement.html )



இவரின் இந்த மன உளைச்சலை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கும் விதமாக இவருக்கு மற்றுமொரு அடி விழுந்துள்ளது . சர்வதேச பாக்சிங் கூட்டமைப்பு இந்திய வீராங்கனையின் இந்த செயல் அவர்களை அவமதிக்கும் விதமாக இருந்ததாகவும் , கண்டிக்கத்தக்க செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . பாக்சிங் கூட்டமைப்பு அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் . இதனால் இவர் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்படலாம் என தெரிகிறது .

சரிதா தனது எதிர் போட்டியாளரான பார்க் ஜினாவிடம் தனது வெண்கலப் பதக்கத்தை ஒப்படைத்துவிட்டு , " இது உனக்கும் கொரியா நாட்டிற்கும் . நீங்கள் வெண்கலப் பதக்கம் பெற தான் தகுதியானவர் . அந்த பதக்கத்தை அவர் கழுத்தில் போட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது . இது விளையாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான போராட்டம் " என்றார் .

எதிர் போட்டியாளர் ஜினா கூறுகையில் ," என்ன நடந்தது என எண்ணும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . ஆனால் நேற்று அவர் (சரிதா தேவி) தான் உண்மையான வெற்றியாளர் " என்றார் .



இந்தியாவின் 3-ஆவது நேவிகேஷன் செயற்கைக்கோள் அக்.10-இல் விண்ணில் ஏவப்படுகிறது

 இந்தியாவின் 3-ஆவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து அக்டோபர் 10-ஆம் தேதி அதிகாலை 1.56 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் எக்ùஸல் வகை ராக்கெட் இந்த செயற்கைக்கோளை பூமியிலிருந்து அதிகபட்சம் 20,650 கிலோ மீட்டர் தொலைவும், குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளைச் செலுத்தும். அங்கிருந்து செயற்கைக்கோளின் பாதை அதிகரிக்கப்பட்டு திட்டமிட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும்.

ஜி.பி.எஸ். அமைப்பு போன்று இந்தியப் பிராந்தியத்தில் கடல் வழி, தரை வழி, விமானப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் இந்திய நேவிகேஷன் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்குள்ளும், இந்திய எல்லையிலிருந்து 1,500 கிலோமீட்டர் வரையிலும் தாங்கள் இருக்குமிடம் குறித்து இந்த வசதியைப் பயன்படுத்துவோர் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். அதோடு வாகனம் ஓட்டுவோருக்கு காட்சி வழியாகவும், ஒலி வழியாகவும் தகவல் வழங்கப்படும்.

இந்திய நேவிகேஷன் அமைப்புக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, ஐஆர்என்எஸ்எஸ்-1பி ஆகிய செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இப்போது மூன்றாவதாக ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள்: இந்தச் செயற்கைக்கோளில் உள்ள சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட கருவிகளின் மூலம் போக்குவரத்துக்கான சிக்னல்கள் வழங்கப்படும். தரையிலிருந்து ராக்கெட் கிளம்பும்போது செயற்கைக்கோளின் எடை 1,425 கிலோ ஆகும். இந்தச் செயற்கைக்கோள் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும். வாகனப் போக்குவரத்துக்கு உதவுவதோடு, பேரிடர் நிவாரணம், மலையேற்றம், வரைபடம் தயாரித்தல் போன்றவற்றுக்கும் இது உதவும்.

சென்னையில் 5 ஆயிரம் திருட்டு சி.டி. பறிமுதல்

சென்னை முழுவதும் சி.டி. கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் பாரிமுனை பர்மா பஜார், ஈவ்னிங் பஜார், சைனா பஜார், நேதாஜி பஜார், ரத்தன் பஜார் ஆகியப் பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் பெருநகர காவல்துறையின் திருட்டு சி.டி. தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

 இச் சோதனையில் பல கடைகளில் தமிழ் புதிய திரைப்படங்களான அரண்மனை, மெட்ராஸ்,ஜீவா, ஆடாமா ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல படங்களில் திருட்டு சி.டி. விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த சுமார் 5 ஆயிரம் திருட்டு சி.டி.க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 மேலும் இது தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், சேது, முத்துக்குமார், கோபால், முகப்பேரைச் சேர்ந்த கருப்பையா, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகம்மது ஹனிபா, நிஜாம் ஆகிய 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

தமிழ் அகதிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்



தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை  தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடிய இலங்கை அரசை எதிர்த்து புதுக்கோட்டை தோப்புக்கொல்லை முகாமில் இலங்கைத்தமிழர்கள்  கருப்புக்கொடி ஏந்தி புதன்கிழமை  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தமிழக முதலவர்  ஜெயலலிதாவுக்கு கடந்த 27 -ம் தேதி ரூ.100  கோடி அபாரதமும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்  விதிக்கப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இலங்கை தமிழர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், இலங்கை அரசு அண்மையில் சிங்களவர்கள் அதிகமான மாவட்டங்களாக திரிகோணமலை அம்பாறை மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய இடங்களில் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும்  கொண்டாடியதாக செய்திகள் வெளியாது. இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை  ஏற்படுத்தியது.

இலங்கை அகதிகளை பொறுத்தவரைக்கும் 2009 -ல் இலங்கையில் இனப்படுக்கொலை நடந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் இருந்த திமுக அரசும் அப்போது தங்களுக்கு ஏதாவகு உதவிiயும் செய்ய முன் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால், அதை நடக்கவில்லை.  ஆனால், தமிழத்தில்   அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமையை அறிந்து தமிழக மக்களக்கு  வழங்குவதைப் போல பல்வேறு நலத்திட்டங்களை  தமிழ் அகதிகளுக்கும் முதல்வர்  ஜெயலலிதா வழங்கி வருகிறார். இதன் காரணமாக முதல்வர் ஜெயலலிதா அகதிகள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்  என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தோப்புக்கொல்லை முகாம்வாசிகள்  புதன்கிழமை காலையில் ஒன்று திரண்டு கருப்புக்கொடிகளை ஏந்தி, தமிழக முதல்வருக்கு எதிரான  தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இலங்கை அதிபர்  ராஜபக்சேவுக்கு  எதிராக முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  ஏற்பாடுகளை, முகாம் வாசிகள் அ.கணேசன், அல்போன்ஸ்ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இப்போராட்டத்தில் 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media