BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 22 August 2014

டீ கொடுப்பதற்கு லேட் ஆனதால் மனைவியைக் கொன்ற கணவன் !!!



ஒரிசாவில் தனது மனைவி டீ கொடுக்க லேட் ஆக்கியதால் அவரைக் கொன்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது .

இந்த சம்பவம் குஹாலிப்பால் என்னும் கிராமத்தில் புதன்கிழமை நடந்தது . 56 வயதான மஹாலியா நாயக் தனது மனைவி ஜானாவிடம் டீ போட்டுக் கொடுக்க கேட்டுள்ளார் . டீ கொடுக்க கால தாமதம் ஆனதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது .

இந்த விவாதம் புதன்கிழமை அன்று மீண்டும் வெடித்தது . இதனால் கோவமடைந்த நாயக் தனது மனைவியை கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார் . இதனால் அவரது மனைவி பரிதாபமாக இறந்தார் .

நாயக் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


ஏர்டெல் கஸ்டமர் கேரில் நடக்கும் ஏமாற்றுத்தனம்
http://www.satrumun.net/2014/08/airtel-customer-cares-new-cheating.html

சந்தையைக் கலக்கி வரும் டாப் பட்ஜெட் மொபைல்கள் !!
http://www.satrumun.net/2014/08/top-5-budget-mobiles-trending-now.html

பேஸ்புக்கை கலக்கி வரும் ஐஸ் பக்கெட் சாலஞ் தெரிந்து கொள்ளுங்கள்
http://www.satrumun.net/2014/08/what-is-meant-by-ice-bucket-challenge.html

ஜி-மெயில், யூடியூபில் வர இருக்கும் புதிய மாற்றம்
http://www.satrumun.net/2014/08/google-to-announce-new-scheme.html

ஜெயலலிதா பேனர்களை தூக்க கோர்ட் உத்தரவு
http://www.satrumun.net/2014/08/blog-post_36.html

தமிழக குடிகாரர்களுக்கு ஒரே நேரத்தில் மகிழ்ச்சி மற்றும் கவலை தரும் செய்தி
http://www.satrumun.net/2014/08/happy-news-for-tamil-nadu-drinkers.html

ஒரு பாடலுக்கு நடனம் ஆட 75 லட்சம் கேட்கும் நடிகை
http://www.satrumun.net/2014/08/shruthi-haasan-to-be-paid-with-75-lakhs.html

மோடியின் ஒரே டார்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
http://www.satrumun.net/2014/08/rajni-to-enter-politics.html

தோனிக்கு கங்குலி தந்த முக்கியமான அட்வைஸ்
http://www.satrumun.net/2014/08/gangulys-advice-to-dhoni.html

சமந்தாவை தாக்கும் மகேஷ்பாபு ரசிகர்கள் !! அஞ்சான் பிகினியால் வந்த சலசலப்பு !!
http://www.satrumun.net/2014/08/mahesh-babu-fans-again-attacking-samantha.html

ஆவின் பால் அறிமுகம் செய்துள்ள லாங் குல்பி
http://www.satrumun.net/2014/08/long-gulfi-to-be-introduced-in-tamil.html

375 வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வரும் சென்னை !!
http://www.satrumun.net/2014/08/chennai-getting-ready-to-celebrate-its-375-birthday.html

கத்தி படத்தை தடை செய்ய கோரிய வழக்கில் அதிரடி தீர்ப்பு
http://www.satrumun.net/2014/08/judgement-came-in-kaththi-movie-ban-case.html

ஏர்டெல் கஸ்டமர் கேரில் நடக்கும் ஏமாற்றுத்தனம்





ஏர்டெல் என்றாலே அதற்கு மறுபெயர் ஏமாற்றுத்தனம் என்று ஆகி விடும் போல. பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தான் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. வாட்ஸ் அப்புக்கு 500 மில்லியன் யூசர்கள் உள்ளார்கள். அதில் 50 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள். எனவே அவர்கள் மூலம் ஏர்டெல் நிறுவனம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தது. ஏர்டெல்லும் வாட்ஸ் ஆப்பும் கூட்டு சேர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் பேக் என்னும் புதிய திட்டத்தை  கடந்த மே மாதம் கொண்டு வந்தார்கள்.

இதன் விலை 36 ரூபாயில் இருந்து 49 வரை உள்ளது. இது நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்பதை பொருத்து மாறும். இவர்கள் கூறியது என்னவென்றால் வாட்ஸ் ஆப் மட்டும் பயன்படுத்தி கொள்ள மாதம் 200 எம்.பி. இலவசமாக வழங்கப்படும் என்று . ஆனால் அந்த பேக்கை பயன்படுத்திய பலர் கூறும் புகார் என்னவென்றால் அந்த 200 எம்.பி.யில் இருந்து டேட்டா குறைவது இல்லை. நமது மெயின் பேலன்சில் இருந்து தான் பணம் குறைகிறது.

இது போல் பாதிக்கப்பட்ட ஒரு வாடிக்கையாளர் ஏர்டெல் கஸ்டமர் கேரை நாடியுள்ளார். முதலில் பேசிய ஒருவர் , அந்த பேக்குக்கான தொகையான 41 ரூபாயை திரும்ப தந்துவிடுவதாக கூறியுள்ளார். அந்த தொகை 4 மணி நேரத்தில் அவரது மொபைல் பேலன்சுக்கு வந்து விடும் என கூறியுள்ளார். ஆனால் 2 நாட்கள் ஆகியும், அந்த பணம் வரவில்லை. இது தொடர்பாக மேலும் 3 அதிகார்களுடன் பேசியுள்ளார். அவர்களும் 4 மணி நேரத்தில் பணம் வந்துவிடும் என்று தான் கூறுகிறார்கள் . ஆனால் பணமோ வந்த பாடு இல்லை.

அடுத்த நாளும் ஒருவருடன் பேசியுள்ளார். அந்த கஸ்டமர் கேர் ஊழியர் இவருக்கு சரியான பதில்களை தரவில்லை. கஸ்டமர் என்னும் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். அவர்கள் திருடிய தொகையை இப்போது தர மறுக்கிறார்கள். அவ்வாறெனில் எதற்காக முதலில் பேசிய 3 ஊழியர்கள் பணத்தை தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். கஸ்டமர் கேரில் கூட ஏமாற்றுகிறார்கள். இதனால் அந்த வாடிக்கையாளர் மனமுடைந்து உள்ளார். அவர் இழந்த 41 ரூபாய் பெரிய தொகை இல்லை என்றாலும் அவரை போல் எத்தனை பேர் இது போல் ஏமாந்துள்ளார்கள் என எண்ணி கவலைபடுகிறார். எனவே அந்த கஸ்டமர் கேர் உயர் அதிகாரிகளுடன் பேச முடிவு செய்துள்ளார்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு செயல்படுத்தி இருக்கும் புதிய திட்டம்




கேரளாவில் நடக்கும் 700 மதுபான பார்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஞாயிற்றுகிழமை மதுபான கடைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.  சில்லறை மதுபான கடைகளைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் மூடப்படும்.

மாதத்தின் முதல் நாள், மதுவுக்கு விடுமுறை நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் மது விடுமுறை நாட்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 52 நாட்களுக்கு மேல், மது விடுமுறை நாட்களாக இருக்கும். மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யும் திட்டமும் வைத்துள்ளார்கள்.

இதே போல் தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யலாம்.

ஐஸ் பக்கெட் சாலஞ் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் உயிரிழந்தார்




இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் தெரியும் வார்த்தை, போட்டோ மற்றும் வீடியோ எது என்று பார்த்தால் அது ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ் பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.  இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில்  ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள். இது தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

அந்த நபர் பெயர் கோரி க்ரிப்பின், 27 வயது ஆகிறது. இவர் தான் ஐஸ் பக்கெட் சாலஞ் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். ஒரு டைவிங் ஸ்பாட்டில் குதிக்கும் போது தனது உயிரை இழந்தார். தனது நண்பர் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர் இதனை தொடங்கினார்.

ஐபோன் 6 இன் போட்டோக்கள் இணையத்தில் வெளிவந்தது



அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள ஐபோன் 6 அடுத்த மாதம் வர உள்ளது. இழந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக சிந்தித்து வெளியிடும் போன் இது. இந்த மொபைலின் போட்டோக்கள் இணையத்தில் கசிய தொடங்கி விட்டன.





பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழக ஒயின் ஷாப்கள்




தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பதை பார்ப்பதற்கு ஒடிசா மாநில அதிகாரிகள் நேற்று வந்து வருகை புரிந்தனர். தமிழகத்தில் இப்போது 6,823 கடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது மதுபானங்கள் விலை உயர்ந்து உள்ளதால், கூடுதலாக 3000 கோடி வருமானம் வர உள்ளது.

எந்த முறையில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்கிறார்கள்? எத்தனை விதமான மதுபான ரகங்களை விற்பனை செய்கிறார்கள்? அந்த மதுபானங்களை கடைகளில் எப்படி விநியோகம் செய்கிறார்கள்? எவ்வளவு நேரம்? எந்த வகையில் விற்பனை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் வருகை புரிந்தனர். தமிழக அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் வந்து குடிகாரர்களிடம் டாஸ்மாக் குறித்து விசாரித்தனர்.

லஞ்சம் பற்றி மோடியின் பேச்சு






நாக்பூர் மாவட்டம் ராம்டெக் தாலுகாவில் உள்ள மவுடாவில் தேசிய அனல் மின்சார கழகம் சார்பில் சூப்பர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்து 459 கோடி மதிப்பீட்டில் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு மின் உற்பத்தி பிரிவுகள் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இந்த முதல்கட்ட மின் உற்பத்தி பிரிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மராட்டியம் மட்டுமின்றி குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு– காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த அனல் மின் திட்டத்தை நாட்டுக்கு தந்து மோடி பேசினார். லஞ்சம் இந்த நாட்டை அழித்துவிடும். சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. இந்த நோய் ஒழிக்கப்பட வேண்டும். இந்த பாவ காரியத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media