BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 3 October 2014

கோள்களை பற்றிய தமிழர் அறிவு


 எப்படி அவ்வளவு தொலைவிலுள்ள கிரகத்தின் நிறம் கருப்பு என்று கண்டுபிடித்து அதற்கு காரி என்றும், அதற்கு வளையம் இருக்கிறது என்று கண்டுபிடித்து வளைந்தது என்ற பொருளில் சனி என்று நமது தமிழ் முன்னோர்கள் பெயரிட்டார்கள். காண்க:

  மிகப்பெரியது, விரிந்தது மற்றும் வாயுக்களின் காரணமாய் ஆழமானது என்று கண்டுபிடித்து வி-யாழன் என்று பெயரிட்டார்கள்.

 சிவப்பு நிறமுள்ளது என்று கண்டுபிடித்து செம்மையான வாய், செவ்-வாய் என்று பெயரிட்டார்கள்.
 பூக்கக் கூடியது என்று கண்டுபிடித்து பூ-மி என்று பெயரிட்டார்கள்.

 வெள்ளை நிறமானது என்று கண்டுபிடித்து வெள்ளி என்று பெயரிட்டார்கள்.
புத்தி கூர்மை உள்ளவர்கள்தான் சூரிய வெளிச்சத்திற்கு மிக அருகில் உள்ள கண்ணுக்கு எளிதில் புலப்படாத அந்த மிகச்சிறிய கிரகத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதற்கு புதன் என்று பெயரிட்டார்கள். எப்படி?  அதனால் தான் ஒரு பழமொழியே உண்டு: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று. நாம அப்படியே புதன் கிழமைக்கு அதை மாற்றி விட்டோம்.
    
பொதுவாக  சனி கிரகத்திலிருந்து வரக்கூடிய கதிர் வீச்சுக்கள் மட்டும் நீலம் மற்றும் கருமை நிறம் உடையதாக இருக்கிறது என்று மேலை நாட்டு அறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள சித்தன்னவாசல் குகை ஓவியத்தில் தமிழர் (சமணர்கள்), பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கு கருப்பு வண்ணம் கொடுத்துள்ளனர் அதற்கு ஒரு வளையத்தையும் இட்டுள்ளனர் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘புலிப்பாணி’ தமது பாடலில் சனி ஒரு பனிக்கிரகம் எனப் பாடியுள்ளாரே.

 வியாழன் கிரகத்திற்கு அடுத்து மிகப்பெரிய கிரகமான சனி கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியை பாதிக்கும் என்றும், அதன் பாதிப்பு பூமிக்கு அருகில் வரும்போதும், மிக நெருங்கி இருக்கும்போதும், மற்றும் சற்று விலக ஆரம்பிக்கும்போதும் என்றும்  27 நட்சத்திரக்கூட்டங்களில் சனி கிரகம் 3 நட்சத்திரக்கூட்டங்களைக் கடக்கும் வரை அந்த பாதிப்பு இருக்கும் என்றும், ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்தையும் சனி கிரகம் கடக்க இரண்டரை வருடங்கள் எடுப்பதால் (3 x இரண்டரை – ஆக ஏழரை வருடங்கள்) என்றும் கண்டுபிடித்து ஏழரை சனி என்று கண்டுபிடித்த தமிழர் அறிவு எங்கே?


 கடக ரேகை முதல் மகர ரேகை வரை பூமியின் மேல் சூரியனின் ஒளி படும் வகையில் பூமியின் சுழற்சி உள்ளது என்று கண்டுபிடித்து கடக ரேகை வரை சூரியப்பயணம் போனதும் திரும்புதல் என்று தமிழர்கள் சொன்னதைத்தானே Tropic of Cancer மற்றும் Tropic of Capricorn என்று மேற்கத்தியம் பெயர் மாற்றி இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் லேப்டாப் திருட்டு

சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் லேப்டாப் திருடப்பட்டது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  மும்பை சாந்திநிகேதன் நகர் ஏர் இந்தியா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆசாத்கான் (35). இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை காண்பதற்கு வந்தார்.
 \
இசை நிகழ்ச்சியின்போது, அங்குள்ள ஒரு அறையில் தனது லேப்டாப்பை வைத்துச் சென்றாராம். இந்நிலையில் சிறிது நேரத்துக்கு பின்னர் ஆசாத்கான்,அந்த அறைக்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு வைத்துச் சென்ற லேப்டாப் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 இது குறித்து பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ்க்காக பெண்கள் பார்ட்னரை ஏமாற்றுகிறார்களா? வேறு எதற்கெல்லாம் ஏமாற்றுவார்கள்? ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/10/why-women-cheat-men.html

நாளை தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம் !! கேபிள் டிவி சங்கங்கள், ஜெயலலிதாவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் ..
http://www.satrumun.net/2014/10/cable-tv-operators-protesting-to-release-jayalalitha.html

5 நாட்களுக்குபின் ஜெயலலிதா பெற்ற தண்டனை குறித்து கருத்து தெரிவித்தார் கருணாநிதி
http://www.satrumun.net/2014/10/karunanidhi-commented-about-jeyalalitha.html

ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி வசதி எதுவும் வழங்கப்படவில்லை - ஜெயில் அதிகாரி தகவல் !!
http://www.satrumun.net/2014/10/no-vip-facilities-given-for-jaya-tells-prison-officer.html

எய்ட்ஸ் நோய் முதன் முதலில் எங்கு தொடங்கியது ?? 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் !!
http://www.satrumun.net/2014/10/how-and-where-first-aids-emerged.html

மாணவனை காப்பாற்ற தான் புலி நினைத்ததாம் - அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது
http://www.satrumun.net/2014/10/there-is-no-mistake-with-tiger.html

ஏர்டெல் நிறுவனத்தை கலாய்த்து பேஸ்புக் பதிவர் வெளியிட்டுள்ள நகைச்சுவை கதை
http://www.satrumun.net/2014/10/funny-story-criticizing-airtel.html

சைலண்ட்டாக வெளியான ‘கத்தி’ 3டி மொபைல் கேம் : விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
http://wp.me/p42KLb-tVp

தயாரிப்பாளரே சொல்லியாச்சு… : தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீசாகிறது கத்தி!
http://goo.gl/xJgTCn

பஞ்சாபை அடித்து துவைத்த சென்னை, சிஎஸ்கே க்கு ஆதரவாக பேஸ்புக்கில் குவிந்து கொண்டு இருக்கும் ட்ரோல்கள்
http://www.satrumun.net/2014/10/trolls-in-favour-of-chennai.html

சுத்தமான இந்தியா திட்டத்துக்காக மோடி அழைப்பு விடுத்துள்ள 9 நபர்கள் யார் ?
http://www.satrumun.net/2014/10/9-people-invited-by-modi.html

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கமல் ஹாசன் அளித்த பேட்டி !!
http://www.satrumun.net/2014/10/blog-post_64.html

கபடி ஆடவர் மகளிர் என இரண்டிலும் தங்கம் வென்று சாதித்தது இந்தியா !!
http://www.satrumun.net/2014/10/kabaddi-both-men-nd-women-bags-gold.html

கொய்யாவின் மருத்துவ குணங்கள்
http://www.satrumun.net/2014/10/no-vip-facilities-given-for-jaya-tells-prison-officer.html

வெற்றிலை போடுவது ஏன் ?
http://www.satrumun.net/2014/10/blog-post_3.html

பெண்கள் ஜின்ஸ் பேண்ட் அணிவது குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார் பாடகர் யேசுதாஸ் !!
http://www.satrumun.net/2014/10/yesudass-creates-controversey-with-his-speech.html

சென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் பந்து வீச சுனில் நரேனுக்கு தடை
http://www.satrumun.net/2014/10/sunil-narine-banned-from-bowling-in.html

சுத்தமான இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து மோடி கூறிய 6 கருத்துக்கள்
http://www.satrumun.net/2014/10/subramaniyan-swamy-demands-president-rule-in-tamil-nadu.html

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் !!
http://www.satrumun.net/2014/10/subramaniyan-swamy-demands-president-rule-in-tamil-nadu.html

பேங் பேங் படத்தை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்கள்
http://www.satrumun.net/2014/10/6-reasons-to-watch-bang-bang-film.html

செக்ஸ்க்காக பெண்கள் பார்ட்னரை ஏமாற்றுகிறார்களா? வேறு எதற்கெல்லாம் ஏமாற்றுவார்கள்? ஆய்வு முடிவுகள்

செக்ஸ்
செக்ஸுக்காக ஆண்கள் அதிகமாக தங்களது துணையை ஏமாற்றுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் பெண்களும் கூட தங்களுடைய செக்ஸ் சுகத்திற்காக தங்களது பார்ட்னரை ஏமாற்றுவார்கள் என்பது சர்வேக்களில் தெரியவந்துள்ளது.

பணம்
பணத்திற்காக ஆண்கள் பெரும்பாலும் தங்களது துணையை ஏமாற்றுவதில்லை, அதிகமாக பணம் வைத்திருக்கும் வேறொரு நபரை துணையாக ஏற்றுக்கொள்ள பெண்கள் தங்களுடைய துணையை வெளியேற்றுவது நடக்கிறதாம்.

போரடித்தாலும் கூட ஏமாற்றுவார்களாம்
பெண்களுக்கு தங்கள் பார்ட்னருடன் ஆன உறவு போரடிக்கும் போது ஏமாற்றுவார்களாம், ஆனால் எப்போதும் போர் அடிக்கிறது என்று ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதில்லை.

பழி வாங்குவதற்காக ஏமாற்றுவது
ஆண்களோ பெண்களோ இரண்டு தரப்புமே தன்னுடைய துணை தங்களுக்கு துரோகம் செய்தால் அவர்களை பழி வாங்கும் பொருட்டாக வேறொருவருடன் செக்ஸ் உறவு கொண்டு ஏமாற்ற முனைவார்கள். இரண்டு தரப்புமே இதை செய்தாலும் இதில் முந்துவது ஆண்கள் தான்.

பாசமாக ஏமாற்றுதல்
பெண்கள் ஏமாற்றுவதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, மற்ற அனைத்து ஏமாற்றுதல்களிலும் செக்ஸ் உறவு இருக்கும், ஆனால் இதில் வேறொரு ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள மாட்டார்கள், ஆனால் தனது பார்ட்னர் அல்லாது ஒருவருடன் பார்ட்னரைவிட மிகுந்த நெருக்கமாக, உணர்வுப்பூர்வமாக பாசமாக இருப்பார்கள்.

கள்ளத்தொடர்புக்காக‌
கள்ளக்காதலிக்காக தனது மனைவியை விட்டு செல்லும் கணவர்களே அதிகம், ஆனாலும் தற்போது கள்ளக்காதலனுக்காக பெண்கள் ஆண்களை விட்டு விலகிச் செல்வது பெருகியுள்ளது.

எய்ட்ஸ் நோய் முதன் முதலில் எங்கு தொடங்கியது ?? 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் !!



30 வருடங்களுக்கு முன் தோன்றிய எய்ட்ஸ் நோய் இதுவரை 750 இலட்ச மக்களை தாக்கியுள்ளது . ஆனால் இப்போது தான் ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோய் எங்கு முதன் முதலில் தோன்றி இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .

ஆயிரக்கணக்கான வைரஸ்கள் தனிப்பட்ட மரபணு ஆய்வின் மூலம் எச்.ஐ.வி  நோய் பெல்ஜியன் காங்கோவின் தலைநகரமான கின்ஸாசா என்னும் இடத்தில் தோன்றி இருப்பதை சந்தேகத்தின் அப்பால் உறுதி செய்துள்ளனர் . பின்னர் இந்த நோய் மத்திய ஆப்ரிக்காவிற்கு பரவியது . இந்த நோய் முதன் முதலாக 1920 ஆம் ஆண்டில் தோன்றியதாக தெரிகிறது .

இந்த ஆய்வின்படி இந்த எச்.ஐ.வி நோய் சிம்பன்சிகளை தாக்கும் சிமியன் வைரஸ் மூலம் பரவி இருக்கலாம் . இந்த சிமியன் வைரஸ் தாக்கிய சிம்பன்சிகளை உண்பதன் மூலம் அது கின்ஸாசா நகரத்தில் பரவி இருக்கலாம் என நம்புகின்றனர் . மேலும் பல காரணங்களால் இந்த நோய் வேகமாக பரவியது . பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்ததாலும் , பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாலும் , அப்போது புதிதாக கட்டப்பட்ட ரெயில்வேயினால் இந்த நோய் வேகமாக பரவியது .

இதற்கு முந்தைய ஆராய்சிகள் எய்ட்ஸ் சிம்பன்சிகளிடம் இருந்து நேரடியாக பரவியதாகவும் , அந்த நோய் மத்திய ஆப்ரிக்காவில் தோன்றியதாகவும் கூறி வந்தது .

5 நாட்களுக்குபின் ஜெயலலிதா பெற்ற தண்டனை குறித்து கருத்து தெரிவித்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார், 5 நாட்களாக்கு பின் முதன்முறையாக இது குறித்து பேசியுள்ளார்.

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

பதில் :- இந்தத் தீர்ப்பு பற்றி நான் கூறுவதை விட இந்த வார "ஆனந்த விகடன்" - "தீர்ப்பு தரும் பாடம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.அது வருமாறு :-

"இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், "நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்"என்ற பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள "முதல் முதலமைச்சர்" ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, "கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது" என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்".

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் "ஆனந்த விகடனில்"வெளிவந்த தலையங்கம்தான் இது!

"ஆனந்த விகடன்" மட்டுமல்ல; "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில் 2-10-2014 அன்று எழுதிய தலையங்கத்தில், "தண்டனை நியாயமற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல்முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் நிரம்ப இருக் கின்றன. சட்டத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று கட்சியின் தொண்டர் களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும்" என்றும் விளக்கமாக எழுதியுள்ளது.

நாளை தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம் !! கேபிள் டிவி சங்கங்கள், ஜெயலலிதாவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் ..



அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அஹ்ராஹார சிறையில் இருக்கிறார் . இவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் , 100 கோடி ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது . இவருக்கு ஜாமீன் உடனடியாக கிடைக்கவில்லை . இவரின் ஜாமீன் மனு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது .

கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது . அதற்கு பல துறைகளும் ஆதர்வாக போராட்டம் நடத்தினர் . இப்போது கேபிள் சங்கங்களும் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர் . இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர் .

ஏற்கனவே திரையுலகினர் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .

மாணவனை காப்பாற்ற தான் புலி நினைத்தது - அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது


கடந்த வாரம் +2 படிக்கும் 17 வயது மாணவர் டெல்லியில் உள்ளா "ஜூ"வில் வெள்ளைப்புலி இருந்த ஆழமான கிணறு போன்ற பகுதியில் தவறி விழுந்துவிட்டார், அங்கிருந்த வெள்ளைப்புலி அவரை அடித்து கொன்றது முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது, ஜூ ஊழியர்களால் அந்த மாணவர் இறந்த பின்பு தான் அந்த புலியை பயமுறுத்தி கூண்டில் அடைக்க முடிந்தது. மாணவர் எப்படி அதில் விழுந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, கிணறு போன்ற அந்த கூண்டு தடுப்பு சுவர் சிறியதாக இருந்ததால் தவறி விழுந்ததாகவும், மாணவர் ஆர்வத்தில் மேலே ஏறி பார்த்த போது தவறி விழுந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மாணவர் பெயர் மஸ்கூத் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 


இப்போது அதில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. எல்லாவற்றையும் பதிவு செய்த தடவியல் துறையினரிடம் இருந்து புது தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புலி மாணவனை கொல்ல வேண்டும் என நினைக்கவே இல்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த புலி அந்த மாணவனை பார்த்து கொண்டு தான் இருந்தது. அப்போது புலியை திசை திருப்புவதற்காக அங்கு இருந்தவர்கள் அதன் மீது கல்லை எறிந்தார்கள். அந்த கற்களில் இருந்து மாணவனை காப்பாற்ற நினைத்தது புலி . அதனால் தான் மாணவனை தனது வாயில் கவ்வி கொண்டு ஒடியது. புலி தனது குட்டிகளை வாயில் கவ்வி கொண்டு தான் ஒடும். அப்போது எதிர்பாராத விதமாக புலியின் வாயில் இருந்த மாணவர் காயமடைந்து இறந்தார். அந்த மாணவனின் கழுத்தை தவிர வேறு எங்கும் அடிபட வில்லை. இப்போது இந்த சம்பவத்தில் இது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.


பஞ்சாபை அடித்து துவைத்த சென்னை, சிஎஸ்கே க்கு ஆதரவாக பேஸ்புக்கில் குவிந்து கொண்டு இருக்கும் ட்ரோல்கள்
















ஏர்டெல் நிறுவனத்தை கலாய்த்து பேஸ்புக் பதிவர் வெளியிட்டுள்ள நகைச்சுவை கதை

ஏர்டெல் நிறுவனத்தை கலாய்த்து பேஸ்புக் பதிவர் ஒரு நகைச்சுவை கதையை வெளியிட்டுள்ளார்.
ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்லவேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.
தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர்.

 - பூபதி முருகேஷ்


சுத்தமான இந்தியா திட்டத்துக்காக மோடி அழைப்பு விடுத்துள்ள 9 நபர்கள் யார் ?



அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை நேற்று  மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் .

அது மட்டுமில்லாமல் மோடி இதற்காக இந்தியாவில் 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த 9 நபர்கள் யார் என்று பார்ப்போம்.


* ஆமீர் கான்



* அனில் அம்பானி



* பாபா ராம்தேவ்



* கமல்ஹாசன்




* மிருதுளா சின்ஹா




* பிரியங்கா சோப்ரா




* சச்சின் டெண்டுல்கர்




* சல்மான் கான்




* சசி தரூர்



பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கமல் ஹாசன் அளித்த பேட்டி !!


பிரதமர் மோடி சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை வலுப்படுத்தப்பட்ட 9 நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்தார் . இந்த அழைப்பை ஏற்று நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி இதோ 


 வணக்கம்,

மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது பெரும் ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவோ, வேறு சித்தாந்தங்கள் மூலமாகவோ அனுகாமல் மனிதம் மூலமாக, பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையைய் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய ஒரு கடமையாக நான் நினைக்காமல் செய்த கடமைக்கான ஒரு பாராட்டாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதை மாண்புமிகு பிரதமருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்றிய ஒரு சிறிய ஊக்கியாக நான் இருந்திருக்கிறேன். அந்த பணி தொடரும்.

சுற்றமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன, பணி தொடரும்.பிரதமர் தேர்ந்தெடுத்த
இந்த ஒன்பது பேர் இன்னும் ஒன்பது பேரை தேர்ந்தெடுக்க அவர் பணித்திருக்கிறார், பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும்
தொன்னூறு லட்சம் பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய இயலும் கடமையாக நான் நினைக்கிறேன். ஒரு பில்லியன் ஜனத்தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்ச்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் பரவும் என்று நான் நம்புகிறேன்.



வணக்கம். நன்றி.

#CleanIndiaCampaign

#PMO

கபடி ஆடவர் மகளிர் என இரண்டிலும் தங்கம் வென்று சாதித்தது இந்தியா !!



நேற்று ஹாக்கி ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி , இன்று கபடிப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் விளையாடியது .

இந்திய மகளிர் அணி ஈரான் அணியை எதிர்த்து விளையாடியது . தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 15 - 11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது . பின்னர் இதே முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணி 31 - 21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது . இது ஆசியப் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெல்லும் இரண்டாவது தங்கம் .





இதேப் போன்று இந்திய ஆடவர் அணி ஈரானை எதிர்த்து விளையாடியது . முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஈரான் இந்தியாவை 13 - 21 என்று முன்னிலை பெற்றது . பின்னர் துடிப்பாக ஆடிய இந்திய அணி 25 - 24 என்று வெற்றி பெற்றது . இதன் மூலம் கபடிப் போட்டியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைத்த 1990 ஆம் ஆண்டில் இருந்து , இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .


கொய்யாவின் மருத்துவ குணங்கள்

 பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

*   கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு சாப்பிடவேண்டும்

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்

ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி வசதி எதுவும் வழங்கப்படவில்லை - ஜெயில் அதிகாரி தகவல் !!



அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு எந்த வி.ஐ.பி வசதியும் வழங்கப்படவில்லை என்றும் பார்ப்பன அக்ராஹாரத்தில் மற்ற கைதிகளுக்கு எந்த வசதி வழங்கப்படுமோ அதே வசதிகள் தான் வழங்கப்பட்டு வருகிறது என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . 

இது குறித்து சிறைத்துறை அதிகாரி கூறுகையில் , " மேடமுக்கு எந்த வி.ஐ.பி வசதியும் வழங்கப்படவில்லை . அவர் மற்ற சாதாரண கைதிகள் போலவே நடத்தப்படுகிறார் , வேறு சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை . அவர் சிறை அதிகாரிகளுடன் அமைதியாகவே நடந்து கொள்கிறார் . அவருக்கு இரும்புக் கட்டிலைத் தவிர வேறு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை . அதுவும் மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் இந்த வசதி செய்து தரப்பட்டது . ஜெயலலிதா தொலைக்காட்சிப் பேட்டி கூட கேட்கவில்லை . ஆனால் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி கூட அவர் கேட்கவில்லை . அவர் பிரட் , பால் , பழங்கள் ஆகியவற்றை அருந்தி வருகிறார் . அதுவும் அவர் விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கப்படுகிறது . தினமும் தவறாமல் மூன்று ஆங்கில பேப்பர்களை படித்து வருகிறார்  " என்று தெரிவித்தார் . 

வெற்றிலை போடுவது ஏன் ?


பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைபிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது

பிரதமர் மோடி இன்று வானொலியில் உரையாற்றுகிறார்

 பிரதமர் நரேந்திர மோடி இன்று அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையை அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்கின்றன. ஆலிண்டிய ரேடியோவின் எஃஎம் பண்பலை வரிசைகள் உள்ளிட்ட அனைத்து சேனல்களிலும் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் உரையைக் கேட்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மன் கி பாத் - மனதில் உள்ளதை பேசுகிறேன் என்ற தலைப்பில் அவரது உரை இன்று ஒலிபரப்பாகிறது.

பெண்கள் ஜின்ஸ் பேண்ட் அணிவது குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார் பாடகர் யேசுதாஸ் !!



பிரபல பிண்ணனி பாடகரான கே.ஜெ.யேசுதாஸ் பெண்கள் ஜின்ஸ் அணிவது குறித்து தனது கருத்தை தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளார் .

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட வருகை தந்த கே.ஜெ.யேசுதாஸ் அளித்த பேட்டியில் , " பெண்கள் ஜின்ஸ் அணிவதனால் அது அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு தொல்லை தரக் கூடாது . எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைந்தே இருக்க வேண்டும் . எளிமையும் , அன்பையும் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு இது போன்ற ஆடைகள் எதிரானது " என்றார் .

இவரின் கருத்திற்கு ,இது பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரானது இதனை ஒரு போதும் ஏற்ற்க் கொள்ள முடியாது என மகிளா காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது .

சென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் பந்து வீச சுனில் நரேனுக்கு தடை

மேற்கிந்திய தீவுகளின் சுழற் மன்னன் சுனில் நரேன் தான் இப்போது உலகின் சிறந்த ஸ்பின்னராக வலம் வருகிறார். டி20 போட்டியில் கூட இவரது பந்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இவர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி பட்டம் வெல்வதற்கு இவர் தான் முக்கிய காரணம். இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் அவர் அந்த அணிக்காக தான் ஆடி வருகிறார். அந்த அணி இறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது. இறுதி போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதுகிறது.

லீக் சுற்றில் டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரேனின் பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது. அடுத்த போட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை. இப்போது அவர் பந்துவீச்சு முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அணியில் விளையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. அடுத்த ஐபிஎல் லிலும் அவர் பந்து வீச தடை உள்ளது. அதற்குள் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க வேண்டும்.



பேங் பேங் படத்தை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்கள்

ஹிருத்திக் ரோஷன் கத்ரினா கைஃப் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் பேங் பேங் படம் ஆகும். இந்த படம் வருவதற்கு முன்பே இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த படம் நேற்று வெளிவந்தது. இந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும் என 6 காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

* இது ஒரு கமர்சியல் பேமிலி என்டெர்டெய்னர் படம் ஆகும். எனவே இந்த படத்துக்கு குடும்பத்தோடு சென்று மகிழலாம்.

* இந்த படத்தில் வரும் ஆக் ஷன் காட்சிகளை இதற்கு முன் எந்த இந்திய படத்திலும் பார்த்து இருக்க முடியாது.

* ஹிருத்திக்குக்கும் கத்ரினாவுக்குமான ஜோடி பொருத்தம் நன்றாக பொருந்தியுள்ளது.

* இந்த படத்தின் இசையும் பாடல்களும் அதிர வைக்கின்றது.

* வழக்கம் போல் ஹிருத்திக்கின் நடனம் இந்தியாவில் அவர் தான் சிறந்த நடனம் ஆடும் நடிகர் என்பதை காட்டுகிறது.

* இந்த படத்தில் வேலை செய்துள்ளவர்கள் சிறந்த படங்கள் உருவாக காரணமாக இருந்தவர்கள். அவர்கள் கூட்டணியில் உருவாகி உள்ளது இந்த படம்.


சுத்தமான இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து மோடி கூறிய 6 கருத்துக்கள்





அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை நேற்று  மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் . மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் சுத்தமான இந்தியாவை அமைக்க உறுதி மொழி ஏற்றுள்ளனர் . இந்த உறுதிமொழி மூலம் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு வருடத்தில் 100 மணி நேரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர் .  இந்தியாவின் பெருவாரியான நகரங்கள் சுத்தமாக இல்லாததால் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர் .

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மோடி முக்கியமான 7 செய்திகளை கூறியுள்ளார்.

* இந்தியாவை சுத்தமாக வைத்து இருக்க நான் அதிக நேரம் செலவிடுவேன். இனி நாம் இப்போதும் பொது இடங்களில் துப்ப மாட்டேன் யாரையும் துப்ப விட மாட்டேன்.

* இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தியா மீது நான் கொண்டுள்ள அன்பால் இந்த திட்டம் வந்துள்ளது.

* நான் இதற்காக 9 பேரை அழைத்துள்ளேன். அவர்களை இந்தியாவை சுத்தம் செய்ய சொல்லியுள்ளேன். அவர்கள் மேலும் 9 பேர்களை அழைத்து கொண்டே இருப்பார்கள்.

* இந்தியர்களால் முடியும் என்றால் இந்தியாவாலும் முடியும்.

* எல்லார் மனநிலையையும் மாற்றுவது எளிதல்ல , இது கடினமான காரியம். ஆனாலும் நமக்கு இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது.

* இது மோடிக்கான திட்டம் அல்ல. 120 கோடி மக்கள் தொகையில் மோடியும் ஒரு சாதாரண மனிதன் தான். இது மக்களுக்கான திட்டம்.


தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் !!



பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் பதற்றமான சுழ்நிலை நிலவி வருவதாகவும் , அதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சுழ்நிலை நிலவி வருவதாக தெரிவித்தார் . அவர் அளித்த அறிக்கையில் , " தமிழகத்தில் ஜெயலலிதா கைதான பிறகு இழிவான மற்றும் வெட்கக்கேடான செயல்கள் நடந்து வருவதாகவும் , இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்கியை ஒரு வருடத்திற்கு அமல் படுத்தி , பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் " என்றார் . மேலும் வன்முறையில் ஈடுபடுவோர்களையும் , தேசத் துரோக சக்திகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media