BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 6 September 2014

செக்ஸ் விஷயத்தில் ஆண்களை பின்னுக்கு தள்ளும் பெண்கள், அதிரடி தகவல்கள்!

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 ஜோடிகளிடம் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 15 வயது ஆன பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து ஆண்களை விட நல்ல அறிவும் புரிதல்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் காதலியிடமும் அதிகம் விரும்புவது தங்கள் துணை தங்களுக்கு அளிக்கும் முத்தங்களையும் அரவணைப்புகளையும் தான், ஆனால் செக்ஸில் இருக்கும் ஆர்வம் மனைவியரை கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் ஆண்களுக்கு இல்லைஎன்ற வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் தங்களை கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக பெண்கள் செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

எவ்வளவுதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் பிடித்துள்ளதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கு தான்  அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக இருவருமே பொதுவான கருத்தாக‌ தெரிவித்துள்ளனர்.

நீண்ட மகிழ்ச்சிக்கும், நிம்மதி யான குடும்ப வாழ்க்கைக்கும் செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் கறிவேப்பிலை !



உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின்A , B, சC, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்தியச சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது . இந்நிறுவனத் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியா, கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

 கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலைய தெரிவித்துள்ளது சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட    ரத்தசம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.   திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையு ம், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ  குழுவினர். அதில் கறிவேப்பிலையும் , கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும் , கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

யுனிசெப் அறிக்கை - 10 சதவீதம் பெண்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள்

உலகம் முழுவது சிறுவர் சிறுமிகளின் நிலமை குறித்தும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஐ.நா.சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) 190 நாடுகளில் எடுத்த புள்ளி விவரங்களின் படி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ள விவரம் வருமாறு:-
 
15 வயதிற்கு முன் பாலியல் வன்முறைக்கு முதல் முறையாக பாதிக்கபட்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.இது போன்ற சம்பவங்கள் லத்தீன் அமெரிக்க,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் 12 கோடி சிறுமிகள் தங்கள் 20 வயதிற்குள் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளனர்.
 
2012 - கணக்குப்படி 20 வயதிற்குள் பாதிக்கபட்டவர்களில் 5-இல் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் இளம் பெண்கள் பெரும்பாலும் குற்றம் புரிபவர் அவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து உள்ளனர். அதுபோல் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பாதுகாவலர்கள், சிறுமிகள் மீது உடல் ரீதியான வன்முறைகள் புரிந்தவர்களாக உள்ளனர்.
 
2012 கணக்கின் படி பாதிக்கபட்ட பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகம் உள்ள 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவிறகு 3 வது இடம் முதலிடத்தில் நைஜிரியாவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.
 
யுனிசெப் அறிக்கைபடி சிறிய குழந்தைகள் மீது இளம் வயதினர் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடுவதாக கூறுகிறது.எடுத்து காட்டாக பனாமாவில் பாலியல் வன்முறை ஒரு வயது குழந்தையை கூட விட்டு வைப்பது இல்லை.
 
* உலகில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொலையில் எல்சல்வடோர்,குவாத்தமாலா, வெனிசுலா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
 
* 2012 இல் 95 ஆயிரம் குழந்தைகள் இளம் வயதினர் கொலை செய்யபட்டு உள்ளனர்.
 
* 10 குழந்தைகளில் 6 பேர் தங்கள் 2 முதல் 14 வயதிற்குள் உடல் நீதியாக துன்புறுத்த்பட்டு உள்ளனர்.
 
* சில நாடுகளில் குழந்தைகள் மீதான வன்முறை சமூதாயத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது.
 
இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் அந்தோணி லேக் கூறியதாவது:-
 
வயது, புவிவியல், மதம் .இனம், மற்றும் வருமானம் என எல்லை கடந்து இந்த வன்முறை நடக்கிறது. வீடுகள் பாட சாலைகள்,சமூகம் எல்லா இடங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இது இணையம் மூலம் அதிக அளவு நடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், பிற குழந்தைகள் என தீங்கு இழைப்பவர்களாக உள்ளனர். என கூறினார்.

தமிழரின் பெருமையும், பேரழிவும்

இயற்கையும் அழகும் அறிவும் ஆற்றலும் மனிதர்களாகிய எமக்கு இன்பத்தை அள்ளிவழங்கும் அமுதசுரபிகளாக இருக்கின்றன. ஆனால் அவையே துன்பத்தையும் கொட்டித் தருகின்றன என்பதே மிகக்கசப்பான உண்மையாகும். இந்த இன்ப துன்ப தராசுத் தட்டுகளிடையே துலாக்கோலின் நாக்குப்போல் இருப்பவன் ஞானியாகின்றான். மற்றவர்களில் பலர் இன்பத்திற்காக ஏங்கி ஏங்கி துன்பப்பட்டு அழிந்து ஒழிந்து போக, சிலரோ இன்பத்தில் திளைத்தும் துன்பத்தில் துவண்டும் போகின்றனர். இவர்கள் இன்பமெனச் சில பொழுதையும் துன்பமெனச் சில பொழுதையும் கழிக்கின்றார்கள். இந்த இன்ப துன்பங்களின் வரைவிலக்கணம் தான் என்ன?

மாங்காயைக் கடித்த ஒருவன் அதன் புளிப்பால் நாக்கூச முகத்தைச் சுழித்து காறி உமிழ்கின்றான். அதே மாங்காயைக் கடித்த மற்றவனோ ரசித்து ருசித்து மகிழ்ந்து உண்கின்றான். ஒரே மாங்காய் ஒருவனுக்கு இன்பத்தையும் மற்றவனுக்கு துன்பத்தையும் கொடுத்தது ஏன்? அது மாங்காயின் குறையா? இல்லையே! அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டையே இன்ப துன்ப அனுபவங்களாக நாம் கண்டோம். எனவே இன்ப துன்பங்களுக்கு மன உணர்வுகளே காரணம் ஆகின்றது.

திருவள்ளுவரும் இன்ப துன்பங்களுக்கு வரைவிலக்கணம் கூறாது நன்மை வரும் பொழுது நல்லவை என்று பார்த்து மகிழ்ந்தவர்கள் தீமை வரும் பொழுது துன்பப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புவதன் மூலமாக விதியே (ஊழே) அதற்கான காரணம் என்கின்றார்.

“நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்”
- திருக்குறள் (379)

திருவள்ளுவரின் இக்கூற்றுப்படி ஆக்கமும் அழிவும் கூட மனித இன்ப துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆக்கமும் அழிவும் மாறி மாறி சுழலும் சக்கரமாக இருப்பதை பல வழிகளில் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒன்றின் ஆக்கத்திற்காக இன்னொன்று அழிக்கப்படுகின்றது. அதாவது ஒன்றை அழித்தே இன்னொன்றை உருவாக்கிக் கொள்கின்றோம்.
இயற்கையாக செழித்து வளர்ந்த மரத்திலிருந்து வீடு, கட்டில், தொட்டில், மேசை, நாற்காலி என எத்தனை பொருட்களை விதவிதமாக மனிதன் உண்டாக்கிக் கொள்கின்றான். ஏன் நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தாள் கூட மரத்தை அழித்து ஆக்கியது தானே! மனிதர்களின் ஆடம்பர வாழ்வுக்காக காடுகள் அழிக்கப்பட்டு உலகம் நகரமயமாக ஆக்கப்படுகின்றது. இதனால் இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் மாபெரும் அனர்த்தங்களை பேரழிவுகளை உலகிற்கு தரவிருக்கின்றது.

எரிமலை, நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, பனி, உருகுபனி, இடி, மின்னல், மழை, வௌ;ளப்பெருக்கு, தொற்றுநோற்கள் என இயற்கையால் ஏற்படும் பேரழிவுகள் எத்தனை? எத்தனை? இந்தப் பேரழிவுகளை எல்லாம் தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ப்படுகின்றன என்பதை உலகோருக்குக் காட்ட என்றே வருடத்தில் ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்தினம் எப்போது வருகின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? காதலர் தினம் எப்போ வரும்? என்றால் உடனே பெப்ரவரி 14 என்று சொல்லத் தெரிந்த எமக்கு உலகப்பேரழிவுத் தடுப்புத்தினம் ஒக்டோபர் 14 என்பது தெரியாது. விஞ்ஞான அறிவில் இயற்கையையும் விஞ்சிவிட்டோம் என இன்றைய மனிதர்களாகிய எம்மால் சொல்லமுடியுமா? முடியாது. ஏனெனில் நாம் இயற்கையின் வட்டத்திற்குள் இருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்றைய மனிதர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஈழத்தின் பேராற்றங்கரையில் நின்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழங்கிய மணிபூங்குன்றனாரே

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
- நற்றிணை 226.1

மனிதர்கள் மருந்துக்காகக் கூட மரம் செத்துப் போகும்படி, மரத்திலிருந்து மருந்திற்கு தேவையான பகுதிகளை எடுக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். தம்மைப்போல மரங்களையும் தமிழர் நேசித்ததை இந்த நற்றிணைப் பாடல் வரி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எம் மூதாதையரிடம் இருந்த இந்த இயற்கை நேயம் எம்மைவிட்டு எங்கே போயிற்று? அதுமட்டுமா போயிற்று?
இன்னும் எத்தனை எத்தனை கண்டுபிடிப்புக்கள் மாற்றார் வீட்டுப் பெட்டகங்களில் உறங்கி புதுப்பெலிவுடன் புதுஉடை உடுத்து அன்னநடை நடந்து எம்முன்னே வலம்வருகின்றன.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே…
- புறநானூறு :30:1-7

சூரியனின் இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும், காற்றுச் சுழலும் திசையும் ஒருவித ஆதாரமுமின்றி தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற இவற்றை எல்லாம் சென்று அளந்து அறிந்தவர் போல எப்பொழுதும் இதுயிது இப்படிப்பட்ட அளவையுடையன என்று சொல்லும் கல்வியறிவுடையோரும் இருக்கின்றனர். எங்கே போயிற்று இந்த வானியல் அறிவு?

தமிழரின் அறுவகை நிலப்பண்புகளுக்கு அமைய மலையிலும் காட்டிலும் வயலிலும் கடலிலும் பாலைவனத்திலும் அந்தந்த மக்களின் பண்பாய் ஒலித்த பண்கள் எங்கே? குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், பாலையாழ், முல்லைக்குழல், ஆம்பற்குழல் என இருந்த யாழ்களும் குழல்களும் எப்படி அழிந்தன?

புரிநரம்பு இன்கொளப் புகல்பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க
- பரிபாடல் 7:77-80

ஆதாரசுருதியாய் குழலிசை அளந்து நிற்க நடந்த அந்த ஆடல் வடிவத்திற்கு என்ன நடந்தது? தமிழரின் ஓவியக்கலையும் சிற்பக்கலையும் எங்கே ஓடி ஒளித்தன? சித்தமருத்துவமும் யோகமும் சிதைந்து போனது ஏன்? இறந்தவனையே தமிழர் எழுப்பினான் என்கின்றது இருக்கு வேதம். அப்படி இருக்க எப்படி எமக்கு முதல்நூல்கள் ஆயின இந்த வேதங்கள்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழர் மத்தியில் சாதிவேறுபாடும் சமயமாறுபாடும் எங்கிருந்து வந்து புகுந்தன? நிறைமொழி மாந்தராய் வாழ்ந்த தமிழர் பிறமொழி மந்திரத்தில் மயங்கியது எப்படி?

இயற்கையும் பெரும் போர்ப்படைகளும் இரசாயன, உயிரியற் குண்டுகளும் செய்யமுடியாத மாபெரும் கலாச்சாரப் பேரழிவை தமிழர் தாமே தமக்குச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். கூலிக்கு மாரடிக்கும் தற்குறிகள் இருக்கும் மட்டும் இதுபோல் பேரழிவுகள் தொடரும் எனச் சொல்லி தப்பிப்பது அழகல்ல. கையில் வெண்ணைய் இருக்க நெய்க்கு அலைபவர் நாம். எமது பெருமை எமக்குத் தெரியாது. வேற்று மொழிக்கார் தமிழைப் படித்து அதனை அவர்களது மொழியில் எழுதிய பின்னர் நாம் அந்த மொழிபெயர்ப்பை படித்து அவர் எப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார் தெரியுமா? என அங்கலாய்ப்போம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டது போல தமிழர்களாகிய நாமே தமிழைப்படிக்காது பேசாது பேரழிவை உண்டாக்கிக் கொண்டோம்.

இந்தியன் இரயில்வே குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ருசிகர தகவல்கள் !!




  1.  இந்தியாவின் முதல் இரயில் 1853 ஆம் ஆண்டு  ஏப்ரல் 16ஆம் தேதி பாம்பே முதல் தானே வரை சென்றது .                                                                                                                                                                                                                                    
  2. இந்திய இரயில்வேயின் மாஸ்காட் பெயர் போலு . அது ஒரு யானை வடிவில் இருக்கும் .                                  
                                                                                                                                                                                                                                           
  3. இந்தியாவில் உள்ள இரயில்வே டிராக்குகள் அனைத்தையும் பூமத்திய ரேகை மீது சுற்றினால் அது பூமத்திய ரேகையை ஒன்றரை தடவை சுற்றி விடும் .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          
  4. மேட்டுப்பாளையம் ஊட்டி பாசெஞ்சர் இரயில் தான் இந்தியாவின் மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரயில் . இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் தான் செல்லும் .                                                                                                                                                                                                                                                                                                                                     
  5. இந்தியாவில் உள்ள அனைத்து இரயில்களும் தினமும்  மூன்றரை தடவை நிலவுக்கு செல்லும் தூரம் பயணிக்கிறது .                                                                                                                                                                                                                                                                                                                                                                        
  6. 16 இலட்சம் பணியாளர்களை கொண்ட இந்தியன் இரயில்வேஸ் தான் உலகில் 9 வது அதிக பணியாளர்களை கொண்ட நிறுவனம் .                                                                                                                                                                                                                                                                                                                                                 
  7. ஹவ்ரா - அம்ரிசர் எஸ்பிரஸ் 115 நிறுத்தங்களைக் கொண்டது . இது தான் அதிக நிறுத்தங்களை கொண்ட எஸ்பிரஸ் இரயில் ஆகும் .                                                                                                                                                                                                                                                                                                                                                      
  8. இந்திய இரயில்கள் அனைத்தும் தினமும் 250 இலட்சம் பயணிகளை கொண்டு செல்கிறது . இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் .            
                                                                                                                                                                                                                                                             
  9. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூரில் தான் உலகில் மீக நீளமான பிளாட்பாரம் உள்ளது .                    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                              
  10. குஹாடி - திருவனந்தபுரம் எஸ்பிரஸ் தான் அதிக நேரம் தாமதாமாக வரும் . இந்த ரயில் சராசரியாக 10 - 12 மணி நேரம் தாமதமாக வரும் .

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து


பழமொழிகள் என்பவை பழைய தலைமுறையினர் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறு உருமாறி இருக்கும் ஒரு பழமொழியை இங்கே அலசலாம்.

                                       " பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"

இன்றையப் பொருள் :
"பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர். 

"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல. 




உண்மைப் பொருள் :
உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி. 

ஆக நாம் எதிராளியிடம் சண்டையிடும் போதும் கூட அதில் ஒரு ஒழுங்கு முறை  இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.

பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை  பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.


கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு 19 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக திருப்பி கொடுக்க உள்ளது !!



பிளே ஸ்டோரை பயன்படுத்தி பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் தனது குழந்தைகள் தெரியாமல் டவுன்லோட் செய்ததற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு 19 மில்லியன் டாலர்களை திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது .

இது போன்று 2011 ஆம் ஆண்டில் இருந்து பல வாடிக்கையாளர்கள் கூகுளிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர் . குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் சில பொருட்கள் விற்கும் விளம்பரம் வரும் . அவர்கள் அதை தெரியாமல் அழுத்திவிட்டால் அவர்களின் பெற்றோர்களின் அனுமதில் இல்லாமல் அவர்களுக்கான பில் வந்திடும் . இது போன்ற விளம்பரங்களின் மூலம் 99 சென்ட் முதல் 200 டாலர்கள் வரை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர் .

கூகுள் நிறுவனம் மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக பல புதிய வசதிகளை கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளது . இதேப் போன்று ஆப்பிள் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 32 மில்லியன் டாலர் இழப்பீடாக தர உள்ளது .


ஏர்டெல் கஸ்டமர்களுக்கு புதிய ஆஃபர் , இலவசமாக 500 எம்.பி. 3 ஜி டேட்டாவை பெற்றிடுங்கள்





ஏர்டெல் நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு புதிய ஆஃபர் ஒன்றை அளித்துள்ளது. இதன் மூலம் எந்த பணமும் செலவு செய்யாமல் 7 நாட்களுக்கு இலவசமாக 500 எம்.பி. 3 ஜி டேட்டா கிடைக்கும். நீங்களும் கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்றி 500 எம்.பி. 3 ஜி டேட்டாவை இலவசாமாக பெறுங்கள்.

* முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.  https://www.airtel.in/myaccount/NavigationApp?num=MobileNo.

* அந்த லிங் அட்ரசில் மொபைல் நம்பர் என்னும் இடத்தில் உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்யுங்கள். இப்போது அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

* அடுத்து உங்கள் மொபைலுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது அதனை அங்கு டைப் செய்யுங்கள். அதன் பிறகு சம்மிட் பட்டனை அழுத்துங்கள். அதன் பிறகு புதிதாக ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளுங்கள்.

* இப்போது புதிய பேஜ் ஒபன் ஆகும். அதில் லிங் அட்ரசில் = க்கு பிறகு ஒரு கோட் இருக்கும் அதனை காப்பி செய்து கொள்ளுங்கள்.

* பிறகு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். https://www.airtel.in/account/3gDongle/quickLink.jsp?msisdn=XXXXXXXXX

* இதில் = க்கு பிறகு இருக்கும் xxxxxxxxxx களை நீக்கி விட்டு, காப்பி செய்த கோடை பேஸ்ட் செய்யுங்கள். இப்போது புதிய பேஜ் ஒன்று ஒப்பன் ஆகும்.

* அதில் இந்த போட்டோ இருக்கும் . அங்கு இருக்கும் கிளிக் ஹியர் (click here ) என்னும் இடத்தில் கிளிக் செய்யுங்கள். இப்போது புதிய பேஜ் ஒன்று ஒப்பன் ஆகும்.


* அந்த பேஜ்ஜில் உங்கள் மொபைல் நம்பரையும் இ மெயில் ஐடி யையும் கிளிக் செய்யுங்கள். அந்த விவரங்களை சமர்பியுங்கள்.

* இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் வரும். அதனை டைப் செய்து சமர்ப்பித்தால் போதும், உங்களூக்கு 500 எம்.பி. 3 ஜி டேட்டா ப்ரியாக கிடைத்து விடும்.

உலகில் உள்ள பல இளைஞர்களை கவர்ந்த 3 அப்ளிகேஷன்கள்

* நாட் ரீச்சபிள்

                          நாம் எங்காவது படத்துக்கோ, பீச்சுக்கோ அல்லது நண்பர்களுடன் வெளியே சென்று விட்டோம். அப்போது பெற்றொர்கள் கால் செய்து அட்டன்ட் செய்தால் அங்கு இருக்கும் சத்தத்தை வைத்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதனை தடுப்பதற்கு நாட் ரீச்சபிள் என்னும் அப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து கொண்டு தேவையான போது ஆன் செய்தால் போதும். அப்போது யார் உங்களுக்கு கால் செய்தாலும் நாட் ரீச்சபிள் என்று தான் வரும். எனவே நீங்கள் தப்பித்து கொள்ளலாம்.



* கிரேட் எஸ்கேப்

                        நீங்கள் போன் பேசி கொண்டு இருக்கிறீர்கள். அப்போது பேசுபவர் அதிகமாக பேசி கொண்டு இருக்கிறார். ரொம்ப மொக்கை போடுகிறார், அதனால் உங்கள் நேரம் வீணாகி வருகிறது. இதனை தடுப்பதற்கு கிரேட் எஸ்கேப் என்னும் அப் இருந்தால் போதும். தேவையான போது அதனை ஆன் செய்தால் நீங்கள் போன் பேசி கொண்டு இருக்கும் போது தொடர்ந்து 30 நொடிகள் உங்கள் மொபைலுக்கு இன்கமிங் கால்கள் வருவதை போல் எதிரில் பேசி கொண்டு இருப்பவருக்கு காட்டும்.


* 143 அப்ளேகஷன்

                                  ஒரு பெண்ணுடன் நாம் நெருங்கி பழகும் போது நமக்கு வரும் சந்தேகம் அவளுடன் நாம் ஒரு நண்பனாக பழகுகிறோமா அல்லது காதலியாக பழகுகிறோமா. இதனை கண்டுபிடிப்பதற்கு என்றே ஒரு அப் வந்துள்ளது. இது தான் 143 அப். இதில் டவுன்லோட் செய்து , அதில் அந்த பெண்ணின் நம்பரை என்கேஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் கேட்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்த பெண் உங்கள் தோழியா அல்லது காதலியா என்று சொல்லும்.



இந்த அப்கள் இளைஞர்களை அதிகம் கவர்ந்து உள்ளது.

படம் வெளிவருவதற்கு முன்பே சாதனை செய்த கத்தி படம்




இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் கத்தி. இதனை துப்பாக்கி படத்தின் வெற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சமந்தா நாயகியாக நடித்துள்ளார். கொலைவெறி நாயகன் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு பல பிரச்சனைகள் வந்துள்ளது. அதையெல்லாம் தாண்டி படம் வெற்றி பெறுமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே புதிய சாதனை படைத்து விட்டது. இந்த படத்தின் இசைக்கான உரிமையை எராஸ் மியூசிக் நிறுவனம் வாங்கி உள்ளது. 5 நாட்களுக்கு முன் தான் இந்த நிறுவனத்துக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின் வாங்கும் முதல் படம் இதுவாகும். ஒரு படத்தின் இசை உரிமையை அதிக தொகைக்கு விற்கபட்டது "கத்தி" படம்  என்று புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளிவரும். இந்த படத்தின் இசை செப்டம்பர் 18 ஆம் தேதி வெளிவர வாய்ப்பு உள்ளது. 

கனியாகுமரியை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி !!



குமரி மாவட்டத்தில் பாஜக சார்பாக பாரளுமன்ற தேர்தலில் வென்ற மற்றும் மத்திய கனரக தொழில் மற்றும் பொது தொழில் இணை துறை அமைச்சரான பொன் . ராதாகிருஷ்ணன் , குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம் என்று நேற்று அளித்த பேட்டியில் கூறினார் .

அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார் . அப்போது அவர் அளித்த பேட்டியில் , " இந்துக்கள் சிறுபான்மையினருடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து இருந்தால் , குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து இருக்காது . திருப்பதியும் தமிழகத்துடனே இணைந்து இருக்கும் . குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க நாங்களே முன் நின்று போராட்டம் நடத்துவோம் . தமிழர் பிரச்சனைகள் பற்றி விவாதம் செய்பவர்களை விட எங்களுக்கு தமிழ் பற்றி அதிகமாகவே உள்ளது . மேலும் இந்திய மீனவர்களை விடுவிக்கவும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது " என்றார் .

பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட்டில் கலக்கிய நடிகைகள் !!



பாலிவுட்டில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது . நாட்டில் பல பகுதிகளில் இருந்து பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்கின்றனர் . இந்த கனவு ஆசை பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை . பாகிஸ்தானில் இருந்தும் பலர் வந்து பாலிவுட்டில் நடித்துள்ளனர் . அதேப் போல  பாகிஸ்தான் , இந்தியா என பாகுபாடு இல்லாமல் அழகு எங்கு இருந்தாலும் ரசிப்போம் என்பதை ரசிகர்களும் நிரூபித்துள்ளனர் .


1 ) ஹுமாய்மா மாலிக் :

இவர் தான் பாலிவுட்டில் லேட்டஸ்டாக அறிமுகமாகியுள்ள நடிகை . இவர் முத்தக் காட்சி ஒன்றில் நடித்ததால் பாகிஸ்தான் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார் .



2 ) சாரா லோரன் :

இவரின் முதல் படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை என்றாலும் , இவரின் லேட்டஸ்ட் படமான மர்டர் - 3 யில் பாலிவுட்டையை ஒரு கலக்கு கலக்கி விட்டார் .


3 ) வீனா மாலிக் :

இவரைப் பற்றி அறிமுகம் பெரியளவில் தேவையில்லை . பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப்பின் காதலியாக முதலில் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனார் . இவர் கன்னடத்தில் நடித்த டர்ட்டி பிக்சர் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது .



4 ) மீரா :

இவர் தனது முதல் படத்தில் அஷ்மித் படேலுடன் நெருக்கமாக நடித்ததால் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையில் சிக்கினார் .



சில மாதங்களாக உலக புகழ் பெற்று வரும் பக்கெட் சாலஞ்சுகள்

இதுவரை நடந்த பக்கெட் சாலஞ்சுகளில் உலக மக்களிடம் இருந்து அதிக ஆதரவை பெற்று வருபவை.

* ஐஸ் பக்கெட் சால்ஞ் 

                    இது ஏ.எல்.எஸ் என்னும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றி கொள்ள வேண்டும் அல்லது ஏ.எல்.எஸ் அமைப்புக்கு 100 $ நிதி உதவி தர வேண்டும். இது போல் தனது மூன்று நண்பர்களை செய்ய சொல்ல வேண்டும்.

     



* ரைஸ் பக்கெட் சாலஞ்

                        இது உணவு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு ஒருவர் ஒரு பக்கெட் அரிசி அல்லது 100 ரூபாய் பணம் தந்து விட்டு , தனது மூன்று  நண்பர்களை இது போல் செய்ய வேண்டும்.



* புக் பக்கெட் சாலஞ்

                         தான் படித்ததில் பிடித்த பத்து புத்தகங்களின் பெயரை சொல்லி அதனை நமது நண்பர்களையும் படிக்க சொல்ல வேண்டும்.



* ரப்புல் பக்கெட் சாலஞ்

                           காசாவில் நடக்கும் கொடுமைகளை உலக மக்களுக்கு தெரிவிப்பதற்காக இது நடந்தது. இதில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்களை தலையில் கொட்டி இதனை செய்ய வேண்டும்.



* வோட்கா பக்கெட் சாலஞ்

                            ஐஸ் பக்கெட் சாலஞ்சை செய்யும் போது ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட் வோட்கா குடித்து கொண்டு செய்தார். அதனால் இது பிரபலமானது.




* இன்ஜின் ஆயில் பக்கெட் சாலஞ்

                                   30 லிட்டர் பழைய இன்ஜின் ஆயிலை தன் மீது ஊத்தி கொண்டு அதற்காக தனது தாயின் பெயரில் உள்ள கேன்சர் அமைப்புக்கு நிதி கொடுக்குமாறு ஒருவர் கேட்டு கொண்டார். 


* நாய் பக்கெட் சால்ஞ்

                          நாய்கள் மீது ஐஸ் வாட்டரை ஊற்றி அதனை ஐஸ் பக்கெட் சால்ஞ் செய்ய வைப்பது.



* பில் தி பக்கெட் சாலஞ்

                                ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு பக்கெட் நீரில் அவர்களுக்கு தேவையான சில பொருட்களை தருவது.


* லேதர் எபோலா பக்கெட் சாலஞ்

                                 எபலோ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சோப்பு நீரை தன் மீது ஊத்தி கொள்வது ஆகும்.


ஏலத்தில் விடப்பட்ட முத்தம் !! நடிகைக்கு முத்தம் கொடுக்க 39 லட்சம் செலவு செய்த வியாபாரி ..



இங்கிலாந்தின் பிரபல மாடல் மற்றும் நடிகை எலிசபெத் ஹர்லி . இவர் கடந்த 4 ஆம் தேதி சர் எல்டன் பாஷ் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் , நடந்த ஏலத்தில் கலந்து கொண்டார் . ஏலம் நடந்து கொண்டு இருந்த போது , இவர் தன்னையை ஏலத்தில் விடுவதாக கூறி முன் வந்தார் . இவர் தனக்கு ஒரு முத்தம் கொடுக்கும் வாய்ப்பை ஏலத்தில் விட்டார் .



அந்த ஏலத்தில் பிரபல பில்லியனர் மற்றும் போபர்ஸ் நாளிதழின் நிறுவனர் ஸ்டான் பாரதி அவர்களின் மகனான ஜுலியன் பாரதி 50,000 யுரோவில் ( 39 லட்ச ரூபாய் ) ஏலத்தில் வெற்றி பெற்றார் . எலிசபெத் ஹர்லியும் சொன்னது போல அனைவரின் முன்னிலையிலும் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தவாறு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தனர் .



அந்த ரூபாயை தொண்டு நிறுவனத்திற்கு அளித்தனர் . எலிசபெத் ஹர்லி பிரபல கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னேவின் முன்னால் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது .




ஆப்பிளின் ஐ போன் 6 யை பார்த்து சாம்சங் பயப்படுவதற்கான 5 காரணங்கள்





ஸ்மார்ட்போன்கள் விற்பதில் முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் பாதிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் வந்தது. ஆப்பிளின் மார்கெட்டை அப்படியே இழுத்து கொண்டது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மொபைல் நல்ல வரவேற்பை பெற்றது. இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்து வந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 6 இந்த மாதம் 9 ஆம் தேதி அன்று வெளிவருகிறது. இந்த மொபைலின் மீது அதிக எதிர்பார்புகள் உள்ளன. இந்த மொபைலை பார்த்து சாம்சங் நிறுவனம் பயப்படுவதற்கு 5 காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

* இந்த மொபைலின் கேமரா 13 மெகா பிக்ஸல் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை இது அதிகம் ஆகும்.

* எப்போதும் சிறிய அளவு ஸ்கிரின் கொண்ட மொபைல்களை வெளியிட்டு வந்த இந்த முறை போட்டியை சமாளிக்க பெரிய அளவு ஸ்கிருனுக்கு மாறி உள்ளது.

* இந்த மொபைலின் அடுத்த தலைமுறைக்கு தேவையான சிப் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்டெர்நெட் வேகம் அதிகமாக இருக்கும்.

* இந்த மொபைலின் ஸ்கிரின் கொரிலா கிளாஸை விட உயர்ந்த தரம் ஆகும்.

* இதில் புதிய என்.எப்.சி சிப் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான பொருட்களை இதில் வாங்கி கொள்ளலாம்.

பரோட்டா சாப்பிடுபவரா நீங்கள் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கத்தின் சார்பில் பரோட்டா எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 6 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்று புது அப்பனேரி கிராமத்தை அடைந்தது. ‘‘மைதா பொருட்களையும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பரோட்டாவையும் தவிர்ப்போம். இயற்கை உணவுப் பொருட்களான கம்பு, சோளம், தினை, காய்கறிகள் மற்றும் பழங்களை உண்போம்’’ என்று மாணவர்களும், ‘‘அபாயமான பரோட்டாவை தங்கள் குழந்தைகளுக்கு இனி கொடுப்பதில்லை’’ என்று பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

பேரணியின்போது, பரோட்டா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எல்லா வீடுகளிலும் ஒட்டப்பட்டது. பேரணியின் இறுதியில், மெகா சைஸில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை குழி தோண்டி மூடினார்கள்.

இந்த பேரணி குறித்து பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் கூறும்போது, ‘‘பரோட்டா என்பது மைதாவினால் செய்யப்படும் ஒரு உணவாகும். 2 ஆம் உலகப் போரின்போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக பயன்படுத்த தொடங்கப்பட்டது.

அதில் இருந்து பரோட்டாவும் பிரபலம் அடைந்தது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ‘பனசாயல் பெரோசிடே’ என்னும் ரசாயனத்தை சேர்த்து வெண்மை நிறமாக்கி செய்யப்படுவதே மைதா எனப்படுகிறது. இது தவிர ‘அலோக்கான்’ என்ற ரசாயனம் கலந்து மைதா மாவு மிருதுவாக்கப்படுகிறது.

கோதுமை தீட்டப்படும் போதே 76 சதவீத வைட்டமின்களும், தாது பொருட்களும் நீக்கப்படுகின்றன. அதோடு 97 சதவீத நார்ச்சத்தும் களையப்படுகிறது. மைதாவில் செய்யும் கேக், இனிப்பு பொருட்கள் மற்றும் பரோட்டா ஜீரணத்திற்கு ஏற்றது அல்ல. இதில் நார்ச்சத்து இல்லை, நார்ச்சத்து இல்லாத உணவுகள் ஜீரணிக்க காலதாமதமாகும்.

மைதாவை சாப்பிடுவதால் இருதய கோளாறுகள், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஏற்படும். கேரளாவில் மைதாவைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும்முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான்  குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும்.


இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu  வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS PacketScheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limitஎன்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…

அழிந்து வரும் இயற்கை வேளாண்மை பணம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்

விவசாயி ஏன் சாகிறான்?இன்று விவசாயம் என்பது தன்னிறைவு கொண்ட தொழிலாக இல்லை. முழுக்க முழுக்க அந்நிய சக்திகளின் கையே ஓங்கி இருக்கிறது ! கிராம பொருளாதாரம் அடியோடு அழியும் சூழல் வேகமாக பரவி வருகிறது. .செல்வம் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு செல்லாமல் கிராங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளிடம் இருந்து பெரும் பணம் படைத்த
நகர்த்தாருக்கே செல்கிறது ! ட்ராக்டர். இன்று விவசாயிகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக புகுதப்பட்டுவிட்டது. விசாயத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு இது மிகப்பெரிய அளவில் உதவும் என்று நவீன விஞ்ஞானிகளால் பெரிதும் போற்றப்பட்ட போற்றப்படும்

இயந்திரம். ஓர் ட்ராக்டரின் விலை சராசரியாக 5 லட்சம் ரூபாய். இதில் 25 பசு மாடுகளை நாம் வாங்க முடியும் ! முதலில் ட்ராக்டரால் ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம். 5 லட்சம் ரூபாய் என்பது இன்றைய விவசாயியை பொறுத்த வரை மிகபெரிய பணம் ! அதையும் மீறி வாங்கினால் அது குடிக்கும்டீசலின் அளவும் அதற்கு ஆகும் பொருட்ச்செலவும் ஒரு விவசாயியை நிச்சயம் நிம்மதி கொள்ள விடாது. . இரும்பு அதிகப்படியான வெப்பத்தை கடத்தும். . வெயிலில் நிலத்தை உழும் போது இந்த அதிகப்படியான வெப்பத்தாலும் நிலம் மலடாகிறது. .ஒரு ட்ராக்டர் 3 டன் எடை கொண்டது. இவ்வளவு பெரிய இயந்திரத்தை விவசாய நிலத்தில் உலவ விடுவதே நிலத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம் ! வருங்காலத்தில் 3.5 கோடி ட்ராக்டர்களை இந்திய விவசாயிகளிடம் விற்க பன்னாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது ! இதன் மூலம் நாம் அறிய வருவது விவசாயி கையில் இருக்க வேண்டிய 12 லட்சம் கோடி பணம் வெளிநாட்டு பண முதலைக்கு சென்று சேரும் ! அரசாங்கமே இதை முழு மூச்சுடன் செய்து முடிக்க ஆயத்தம் ஆகி நிற்கிறது. .விவசாயி வாங்க முடியாவிட்டாலும்  அவனை கடனாளி ஆக்கியாவது இதை முடிவு செய்துவிட்டது ! இயந்திரத்திற்கு இரும்பு, பாக்சைட், நிலக்கரி, மாங்கனீஸ், நிக்கல் , தகரம், செம்பு துத்தநாகம் என பல கனிமங்கள் தேவை படுகிறது. .இதை வெட்டி எடுக் எத்தனை சுரங்கங்கள் தோண்ட பட்டிருக்கும் ? உயிர் சூழல் எவ்வளவு மாசு பட்டிருக்கும் ? எவ்வளவு பெரிய இயற்கை விரோத செயல் இது ? தேவையே இல்லாத ஒரு இயந்திரத்துக்கு இவ்வளவு பாடுபடுவானேன் ? அந்தன் 3.5 கோடி ட்ராக்டர்க்கு போட வேண்டிய டீசலின் அளவையும் அதற்காக நாம் வெளிநாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலையையும் மக்களின் வரிப்பணம் டாலரில் கொள்ளை போவதையும் யோசித்தால் தலை சுற்றல் ஏற்ப்படும் என்பதால் அதற்குள் நாம் செல்லவேண்டாம். 

மூளையுள்ள ஒவ்வரு மனிதனும் இங்கு ஒரு விஷயத்தை பற்றி யோசித்தே முன்னோர்கள் ( 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்தன் ) எப்படி விவசாயம் செய்திருப்பார்கள் ? எப்படி உணவருந்தி இருப்பார்கள் ? அவர்களும் மனித சுகம் அனைத்தையும் அனுபவித்து தானே சென்றிருக்கிறார்கள் அவர்கள் உபயோகபடுத்தியது உயிருள்ள மாடு, மாடு என்றுமே விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறது  ! நம் விவசாயத்தை கைபற்ற நினைத்த வெளிநாட்டு கம்பனிகள் முதலில் அழிக்க நினைத்தது மாட்டைத் தான் என்பதும் அதற்காக திட்டம் தீட்டி களத்தில் இறங்கியதும் வியப்பில் ஆழ்த்துகிறது ! பெயரளவில் மட்டுமே நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.இவர்கள் நம்மை இன்னும் பொருளாதாரஅடிமையாகவே வைத்திருக்கிறார்கள் ! ஒரு ட்ராக்டர் வாங்க செலவு செய்யும் பணத்தில் 25 தரமான பசுக்களை நாம் வாங்க முடியும் ! ட்ராக்டருக்கு ஆகும் டீசல் செலவை கணக்கில் எடுக்காமலேயே பசுக்களை பராமரிக்க முடியும் ! பராமரித்துதானே வாழ்ந்தார்கள் ? பசு மாட்டு சாணத்தை தவிர்த்து எந்த ஒரு உரமும் நிலத்திற்கு தேவையே இல்லை. அதையும் தோட்டத்தில் கிடைக்கும் இலை தலைகளையும் கலந்து உரமாக தயாரித்தால் ஆண்டு கணக்கில் செலவே இல்லாமல் விவசாயம் செய்யலாம் ! ட்ராக்டரை காட்டி நம் மாட்டை பிடுங்கி கொண்டார்கள். அடி நாதமான உரமும் போச்சா ? இனி என்ன ? உரக் கம்பனிகளுக்கு லாபம்தான் ! விலையே இல்லாமல் மாட்டு சாணத்தை வைத்தே முப்போக விளைவித்த விவசாயி இன்று உர விலையை குறைக்க சொல்லி போராட்டம் நடத்துகிறான் ! முடியாவிட்டால் மருந்தை குடித்து சாகிறான் ! ட்ராக்டரும் விற்றாகிவிற்றது உரமும் விற்றாகிவிட்டது. விவசாயியின் கோவணத்தை கூட உருவாமல் விடபோவதில்லை என்கிற விடா முயற்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய அரசையும் அன்னதானம் போடுவதையே சாதனையாக சொல்லி கொள்ளும் மாநில அரசையும் வைத்து கொண்டு விவசாயம் செய்ய நினைப்பதுதான் குற்றம் !

பசுமாட்டை வைத்து எத்தனையோ பயன் எவ்வளவு பெரிய சுமையை வேண்டுமானாலும் சுமந்து மணி கணக்கில் நடக்கும். டீசலும் தேவையில்லை பெட்ரோலும்போட வேண்டாம் ! புல்லை தின்றுவிட்டு பாலை மட்டும உற்ற நண்பனாக விளங்கும் நுண் உயிர்களையும் சாணியால் பெருக்கவும் செய்யும் ! நீர் இறைக்க, நிலத்தை உழுக என பயன்களை அடிக்கி கொண்டே போகலாம் !
பசுக்களை அழிக்க இதற்கு மேலும் ஒரு மிக பெரிய சதி நடந்துள்ளது. இலையில் தாயாராகும் உணவு மூன்றாக பிரிக்கபட்டு ஒரு பங்கு செடியின் வளர்ச்சிக்கும் ஒரு பங்கு தானியதிர்க்கும் ஒரு பங்கு வேருக்கும் அதன் வளர்ச்சிக்கும் பயன்பட்டது. நம் விஞ்ஞானிகள் செய்த மாபெரும் துரோகம் செடியின் வளர்ச்சிக்கும் வேரின் வளர்சிக்கும் சென்று கொண்டிருந்த சக்தியில்
பெரும்பங்கை தானியத்திற்கு மட்டும் செல்லும் படி விதையின்மரபணுக்களை மாற்றி அமைத்தனர். என்ன தவறு ? தானியங்கள்அதிகமாகதானே கிடைக்கிறது ! ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்க வேண்டாம். . செடியின் வளர்ச்சி குறைந்ததால் மாட்டுக்கு கிடைக்க வேண்டிய உணவு அறவே இல்லாமல் போனது. பசு வளர்க்க விரும்பினாலும் அரசு பரிந்துரைக்கும் விதைகளை பயன்படுத்தினால் பசுவிற்கு "உணவில்லாமலேயே" விற்கும் நிலைதான் வரும் ! விளைவு ? உர முதலாளியும் ட்ராக்டர் முதலாளியும் லாபத்தில் திளைப்பர். .இதுவே 'பசுமை புரட்சி'யா நாட்டில் நடந்தது ! இந்த விதைகளை பயன் படுத்துவதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால் கம்பனிகள் தயாரிக்கும் மரபணு மாற்றப்பட்ட அனைத்து விதிகளுமே மலட்டு தன்மை ஒவ்வொரு முறையும் விதைக்க தேவையான மொத்த விதையையும் வெளிநாட்டு கம்பனிகளிடமிருந்தே  வாங்க வேண்டும் ! 

விதையை தயாரிப்பவனும் இயந்திரத்தை தயாரிப்பவனும் உரத்தை தயாரிப்பவனும் மேலும் மேலும் மக்கள் விரோத அரசாங்கத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம்  அடைய நம் விவசாயி காலம் போன கடைசியில் வானத்தை பார்த்து உக்கார்ந்துகொண்டு இருக்கார், பாவம் இப்படி ஒரு கூட்டு சதியை அவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இந்த முதலாளிகெல்லாம் அப்பன்ஒருத்தன் இருக்கான் .அவன்தான் பூச்சி மருந்து வியாபாரி ! ( பூச்சி கொல்லி மருந்தை ஆங்கிலத்தில்PESTICIDE என்று அழைப்பார்கள் இந்த வார்த்தை பிரயோகமே தவறு ! அது BIOCIDE என்றுதான் அழைக்க பட வேண்டும் ! ஆம் அதை உபயோகித்தால் PEST அல்ல BIO சிஸ்டமே அழிந்துதான் போகும் ) இவன் விக்கிற மருந்தை வாங்கி ஒரு முறை தெளித்தா போதும் புதிய புதிய பூச்சிகள் உருவாகி வந்துகொண்டே இருக்கும். .பூச் நல்லது செய்யும் பூச்சி கேட்டது செய்யும் பூச்சி என இரண்டு வகை உண்டு ! இரண்டும் சம அளவில் இருக்கும் பண்ணையில் எந்த பாதிப்பும் வராது. .மருந்தடிக்கிறேன் பேர் வழின்னு எல்லா பூச்சியையும் சேர்த்து கொள்கிற பொழுது மொத்த உயிர் சங்கிலியும் அழிந்துவிடும் ! ( BIO- CYCLE DAMAGE ) இயற்கையாகவே நடக்கும்விவசாயத்தில் பூச்சிகள் முக்கிய பங்குவகிக்கிறது ! அதை அழிக்கும் பொழுது மொத்த விவசாயத்தையும் குழி தோண்டி புதைப்பதாகவே பொருள்கொள்ள முடியும் ?! வண்டு இருந்தால் தானே மகரந்தச்சேர்க்க ை நடக்கும் ? மண் புழு இருந்தால் தானே உரம் கிடைக்கும் ? ஆக உரம்-பூச்சி கொல்லி மருந்து- மரபணு மாற்றப்பட்ட மலட்டு விதை- இயந்திரம் என்ற கூட்டு கொள்ளையில் விவசாயி இன்று கோவணத்துடன் காட்சி அளிக்கிறார் ! இதற்கெல்லாம் ஒரே தீர்வு விவசாயியின் உற்ற நண்பனான பசுவை மீட்டு எடுப்பதே ! பசுவை மீட்டெடுப்பதன் மூலம் நொடிந்து கிடக்கும் விவசாயத்தின் முதுகெலும்பை சரி செய்ய முடியும் ! பாரம்பரிய விதைகளை விதைப்பதும் இங்கு அவசியமாக கருதப்படுகிறது. முதலாளிகளின் கூட்டு சதியை நாம் பசுவை கொண்டும் விதைகளை கொண்டும் இயற்கை சூழலை கொண்டுமே வெற்றி முடியும் ! தீர்வு : ஜீரோ பட்ஜெட் - ஆன்ம வேளாண்மை என்னும் விவசாயத்தை கையில் எடுப்பதுதான் ! நடுவதும் அறுப்பதும் மட்டுமே விவசாயியின் வேலையாக இருக்க வேண்டும் ! மற்ற அனைத்தும் தாமாக நடக்கும் படியான சூழலை உருவாக்குவதே இந்த இயற்கை வேளாண்மையான ஜீரோ பட்ஜெட் வேளான்மையின் கொள்கையாகும் ! விவசாயத்தை மீட்டெடுக்க இதை தவிர வேறு வழி இல்லை ! உடனடியாக அனைத்து விவசாயிகளிடத்து ம் இதை பரப்புதல் வேண்டும் ! மக்களின் வாழ்வின் மீது அக்கறை கொண்ட அரசியல் இயக்கங்களும் படித்த இளைஞர்களும் இதை முனைப்பாக செய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் ! இல்லையேல் விவசாய சீரழிவு மட்டுமல்ல பெரும் உணவுப் பஞ்சமும் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல் படுவோம் !

3 வது பட்டம் வென்றார் சானியா மிர்சா





டென்னிஸில் தற்போது யு.எஸ் ஒபன்  நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா பட்டம் வென்றுள்ளார். அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த ப்ருனோ சோர்ஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த ஜோடி இறுதி சுற்றில் 6-1 ,2-6, 11-9 என்று அமெரிக்க-மெக்ஸிகோ ஜோடியை தோற்கடித்தது. சானியா ப்ருனோ ஜோடி இப்போது தான் முதல் முறையாக ஜோடி சேர்ந்து ஆடுகிறது.

சானியாவுக்கு இது 3 வது கலப்பு இரட்டையர் பட்டம் ஆகும். இதற்கு முன் 2009 ஆஸ்திரேலிய ஒபன், 2012 பிரேஞ்சு ஒபன்களில் வென்றுள்ளார். அப்போது இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

அடுத்த விமான விபத்து நடந்தது





அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் பைலட்டும் அவரது மனைவியும் பயணம் செய்துள்ளார்கள். சில மணி நேரங்கள் கழித்து பைலட்டுனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் ஜமைக்கா அருகே விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக  தகவல்கள் வருகிறது. இந்த விபத்தில் பயணம் செய்த இருவரும் இறந்து இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன. இந்த விமானத்தை தேட ஜமைக்கா அரசு 2 ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media