BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

பிணத்துடன் உறவு வைத்த அசிங்கமான தாத்தா !!


இங்கிலாந்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் , ஜிம்மி சேவில் . இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார் . இவர் இறப்பதற்கு முன்பு குழந்தைகளுடன் செக்ஸ் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இதனால் இவரை போலிசார் விசாரித்து வந்தனர் . விசாரனையில் 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர்கள் வரை உறவு வைத்துக் கொண்டது தெரிய வந்தது . ஆனால் விசாரணையின் பாதியில் இறந்தார் .

இப்போது இவரைப் பற்றி இன்னொரு அருவருப்பான தகவல் வெளியானது . இவர் பிணவறையில் இருக்கும் குழந்தைகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக இப்போது தகவல் வெளியானது . இந்த செய்தியைக் கேட்ட சுகாதார துறை செயலர் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார் ..

அமைச்சர்கள் யாரும் கார் வாங்க கூடாது - மோடி அரசு உத்தரவு !!!



"ஊபதேசம் ஊருக்கு மட்டும் தான்" என்றொரு பழமொழி உண்டு . அது போல பல தலைவர்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து கொண்டு தங்கள் செயல்களில் காட்டமாட்டார்கள் . ஆனால் மோடி இந்த விதத்தில் வித்தியாசமாக உள்ளார் .

பணவீக்கத்தை கட்டுபடுத்த தனது அமைச்சரவை அமைச்சர்களையும் சிக்கனமாக செலவு செய்ய வலியுறுத்தி உள்ளார் . இது தொடர்பாக தனது அமைச்சர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

அந்த அறிக்கையின் படி 1 லட்சத்திற்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்ற பின்னரே வாங்க வேண்டும் . இப்போது உள்ள நிலையில் டாட்டா நானோ கார் கூட ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைப்பதில்லை .

இந்த நிலையில் இந்த அறிக்கை பல அமைச்சர்களின் வயிற்றில் கண்டிப்பாக புளியைக் கரைத்து இருக்கும் ..

தமிழக ஆளுநர் , கர்நாடகாவிற்கும் ஆளுநர் ஆகிறார் !!


தமிழக ஆளுநராக இருப்பவர் ரோசய்யா . கர்நாடகத்தில் ஆளுநராக இருப்பவர் ஹம்சராஜ் பரத்வாஜ் . இவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது . . இதனால் தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு கூடுதல் பொறுப்பாக அந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் கூறியுள்ளார் .

ஏற்கனவே மத்திய அரசு மற்ற மாநிலங்களின் ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தி வந்த நிலையில் , இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதைப்போல திரிப்புரா மாநில ஆளுநரும் நாளை ஓய்வு பெற உள்ளார் . அந்த மாநிலத்தின் பொறுப்பு மிசோரா மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது . 

டிராஸ்பர் வாங்கி சென்ற ஆசிரியரே வேண்டும் என சாலை மறியல் செய்த மக்கள் - ஆச்சரிய சம்பவம்



டிரான்ஸ்பர் வாங்கி சென்ற ஆசிரியரே தான் வேண்டும் என்று சாலைமறியல் செய்த மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது . இப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக நாராயணன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இப்பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டி வந்தவர். பல மாணவர்களை கல்வி பயில தூண்டுகோலாய் இருந்தவர், இதனால் இவர் கிராம மக்களிடம் பெரிய மரியாதையை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கில் வேறொரு பள்ளிக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டார் , நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நாராயணன் மாறுதல் ஆகி சென்றதை அறிந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் செய்தனர். மீண்டும் அந்த ஆசிரியரே இந்த பள்ளிக்கு வேண்டும் என்று போராடினர்.

தாசில்தார் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும் , நாராயணனை மீண்டும் இப்பள்ளிக்கே வருவதற்கு அவரிடம் பேசுவதாகவும் உறுதியளித்த பின்னரே போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது

ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இதை போல இருந்து விட்டால் போதும் நாடே செழித்துவிடும்.

சிறந்த அரசு அமைய அரசு அதிகாரிகளின் துணை வேண்டும் என்பதை மெய்பித்து காட்டி சிறந்த ஆசிரியராக திகழும் திரு.நாராயணன் அவர்களை ஒரு லைக் போட்டு வாழ்த்துவோம்

நான் பிறந்தவுடன் என்னை சுமையென்று சொன்னார்கள் - ஸ்மிருதி இராணி உருக்கமான பேச்சு !!


புதியதாக அமைந்துள்ள மத்திய அரசில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஸ்மிருதி இராணி . இன்றைக்கு நடந்த பத்திரிக்கை சந்திப்பில் உருக்கமாக பேசினார் .

அவர் கூறுகையில் , " நான் இதை இதுவரை யாரிடமும் பகிர்ந்தது இல்லை , ஆனால் இப்போது கூறுகிறேன் . நான் பெண் குழந்தையாக பிறந்ததால் சிலர் என் தாயாரிடம் என்னை சுமை என்று கூறினர் . ஆனால் என் தாய் அதைஎல்லாம் கண்டு கொள்ளாமல் என்னை திடமாக வளர்த்தார் . அவர் என்னைக் கொல்லவில்லை அதனால் இன்று உங்கள் முன்னால் நான் இப்போது இப்படி நிற்கிறேன் . பெண் கரு அழிப்பு நடப்பதை தடுக்க வேண்டும் . ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் அது அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல , ஒரு குடும்பத்தையே காக்கும் என்றார் .

தேசிய அளவில் ஒரே கல்வி முறை என்பதை பற்றி கேட்ட கேள்விக்கு , " இந்த பிரச்சனைகள் தேசிய கல்வி கொள்கை மூலம் தீர்க்கப்படும் . மத்திய அரசு கல்வி மட்டும் அன்றி திறன் மேம்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்த இருக்கிறது . தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநில அளவு , தேசிய அளவு , வட்டார அளவில் உள்ள பிரச்சனைகளை பார்த்த பின் வகுக்கப்படும் என்றார் .

மேலும் அனைத்து மாணவர்களும் தங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்ள விரைவில் தேசிய அளவில் இணைய நூலகம் அமைக்கப்படும் என்றார் .

சாய்னா வெற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார் , சிந்து தோல்வி !!


ஆஸ்திரேலியன் சூப்பர் தொடர் நடந்து வருகிறது .

இந்த தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பானின் எரிக்கோ ஹிரோசியை தோற்கடித்து தேர்வானார் . சாய்னா நேவால் ரேங்கிங்கில் 6 வது இடத்தில் உள்ளார் .



இந்தியாவின் வளர்ந்து வரும் வீராங்கனையான பி.வி.சிந்து காலியிறுதிப் போட்டியில் தோற்று தொடரை விட்டு வெளியேறினார் . இவர் ரேங்கிங்கில் 8 வது இடத்தில் உள்ளார் .



சாய்னா நேவால் அரையிறுதியில் ரேங்கிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் சீஷ்யன் வாங்கை எதிர்கொள்கிறார் .

இனிமேல் மாவொயிஸ்ட் தாக்குதல் நடத்தினால் , நாங்கள் திருப்பி அடிப்போம் - ராஜ்நாத் சிங் !!



இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , நக்சலைட்டுகள் மிகுதி உள்ள மாநிலத்தின் தலைமைச் செயலர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார் .

இந்த கூட்டம் முடிந்த பின் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில்," மவோய்ஸ்ட் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு சமமான அனுகுமுறையை மேற்கொள்ளும் . இனிமேல் அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை . அவர்கள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார் .

இதற்கு முந்தைய அரசு மாவோய்ஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையே தங்கள் நடவடிக்கையாக வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி !!!

இன்று காலை நடந்த இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர் 18 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நாகராம் என்னும் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது . கேயில் ஆலையில் எண்ணெய் சுத்திகரிப்புக்கு செல்லும் குழாய் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது . எரிவாயு குழாய் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது . அருகில் தென்னந்தோப்பு இருந்ததால் தீ வேகமாக பரவியது .

அதிகாலையில் மக்கள் வீட்டில் உறங்கி கொண்டு இருந்ததால் , பலர் தீயில் கருகி உயிரிழந்தனர் ,

டிவிட்டரில் மோடி 4 ஆவது இடம் !!



இந்தியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி , டிவிட்டரில் அதிகம் மக்களால் கவனிக்கப்படுகின்ற தலைவர்களின் பட்டியலில் 4 வது இடத்தைப் பெற்றுள்ளார் .

சமூக வலைதளங்கள் மீது தனி அக்கறை காட்டுபவர் மோடி . இவரது டிவிட்டர் பக்கத்தை 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் தொடர்கின்றனர் . எந்தவொரு முடிவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி மக்களுடன் பகிருவார் .

மோடியை தொடரும் மக்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது . இதனால் அதிக மக்கள் தொடரும் தலைவர்களில் மோடி 4 வது இடத்தைப் பிடித்தார் . முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா 5 கோடி பின் தொடர்பாளர்களுடன் உள்ளார் . இரண்டாவது இடத்தில் போப் ஆண்டவர் உள்ளார் . மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவின் அதிபர் சுசிலோ பாம்பாங் உள்ளார் ...

எங்களது தேனிலவு காலம் 100 மணி நேரம் கூட இல்லை : மனம் திறக்கிறார் மோடி !!





மோடி அரசு பதவியேற்று நேற்றுடன் ஒரு மாத காலம் முடிந்தது . ஆனால் இது தங்களுக்கு தேனிலவு  போல் இல்லை. ஒரு புதிய அரசு பதவியேற்றதும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தேனிலவு போல் இருக்கும் என்பார்கள். ஆனால் தங்களுக்கு 100 மணி நேரம் கூட தேனிலவு காலம் கிடைக்கவில்லை என்றார் மோடி.இதற்கு முந்தைய அரசு 100 நாள் தேனிலவை அனுபவித்தது என்றார். தங்கள் அரசு பதவியேற்றதும் தங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளும் , குற்றச்சாட்டுகளும்  வைக்கப்பட்டன. அதனால்  நாங்கள் அதனை நோக்கி உழைக்க தொடங்கி விட்டோம் என்றார்.




 இந்தியாவை மிக பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் . அதற்கான முயற்சியில் நம்பிகையுடனும், உறுதியுடனும் செயல்படுவோம் . முந்தைய அரசின் 67 ஆண்டு கால ஆட்சியை தங்களின் அரசின்  ஒரு மாத ஆட்சியுடன் ஒப்பிட வேண்டாம் . மத்திய அரசை சிறப்பாக செயல்பட வைக்க 2 ஆண்டுகள் ஆகும் என அனைவரும் கூறினார்கள், தானும் அதனை நம்பினார் .ஆனால் இப்போது அந்த கணக்கு தேவையில்லை என்றார்.  பலமான ஆதரவையும்  நல்லாசியையும் வழங்கிய மக்களுக்கு நன்றி என்றார்.

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 21 வது முறையாக இடிந்து விழுந்தது !!



நேற்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்து கண்ணாடி நொறுங்கி கீழே விழுந்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது . பயணிகளின் உடைமைகளை சரி செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்தது .

விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் இதை பார்த்தவுடன் அச்சத்தில் ஓடினர் . விமான நிலையம் கட்டிய காலத்தில் இருந்து இது போன்ற விபத்து நடப்பது இரு 21 வது முறையகும் .

இதை சரிபடுத்தி , மீண்டும் இதே போன்ற விபத்து நடக்காமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்குவதாக தெரியவில்லை . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .

சிறுமிகளை விட்டுவிடுங்கள் , என்னுடைய கன்னித் தன்மையை எடுத்துக் கொள்ளுங்கள் , பாப் பாடகி வேண்டுகோள் !!


போக்கோ ஹாரம் என்னும் தீவிரவாத அமைப்பினர் நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைகளை அமல்படுத்துவதை எதிர்த்து போராடி வருகின்றனர் .

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் இருந்து 200 சிறுமிகளை கடத்தி சென்றனர் . அந்த சிறுமிகளை மீட்க அரசு செய்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை . அந்த சிறுமிகளின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை . தீவிரவாதிகள் வெளீயிட்ட வீடியோவில் அந்த சிறுமிகள் வேலை செய்வதைப் போல இருந்தனர் .

இந்நிலையில் நைஜீரியாவின் பாப் பாடகி அடொய்க்கி
அந்த சிறுமிகளுக்காக தன்னுடைய கன்னித் தன்மையை தருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

அவரது பக்கத்தில் , அந்த சிறுமிகள் மிகவும் குறைந்த வயது உடையவர்கள் . அவர்களை பிடித்து வைத்து இருப்பது அநியாயம் . அவர்களுக்கு பதில் என்னை எடுத்துக் கொள்ளட்டும் . நான் அவர்களை விட அனுபவசாலி . ஒரு இரவுக்கு என்னை 10 முதல் 12 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம் , எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை , ஆனால் சிறுமிகளை விட்டு விட வேண்டும் . சிறுமிகள் பெற்றோரிடம் சேர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் .

இவரின் இந்த கருத்துக்கு சிலர் இவரை பாராட்டியும் சிலர இவரை கலாய்த்தும் எழுதி இருந்தனர் .. 

ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு தர புதிய வலைதளத்தை தொடங்கினார் பிரபல நடிகர் !!






பாலிவுட் திரையுலகில்  பிரபலமான நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையெ கொண்டு உள்ளார். அவர்களுக்காக ஏதாவது செய்ய்ய வேண்டும் என்கிற ஒரு முயற்சியில்  ஈடுபட்டு உள்ளார்.




அதற்காக பீயிங் ஹுமன் என்னும் தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இப்போது அதற்கான இணையதளம் ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் அவரது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கி தர உள்ளார். இதற்காக அவரது பேஸ்புக் நண்பர்களின்  உதவியையும் நாடியுள்ளார். பேஸ்புக்கில் உள்ள அவரது பக்கதில் வீணாக பொழுதை கழிக்கும் அவரது ரசிகர்களுக்கு நல்ல வழ்கையை ஏற்படுத்தி தருவதாக வாக்குற்தி கொடுத்தார். சல்மான் கானின் இந்த முயற்சிக்கு நமது பாரட்டுகள்.


அந்த இணையதளத்தின் முகவரி  http://beinghumanworkshop.com/

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு !!




இன்று தொடங்குவதாக இருந்த  பொறியியல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு உச்ச நீதிமனற தீர்ப்பால் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது . பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வேலையை இந்த வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜுன் 30 ஆம் தேதிக்குள் முடிய வேண்டிய முதல் சுற்று கலந்தாய்வு ஜுலை 15 ஆம் தேதியும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு 22 ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜுலை 29 ஆம் தேதியும் நிறைவடைகிறது.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media